K 14
மித்ரா கோபமாய் சென்றதும் தனியாக கத்தி புலம்பிய ஆர்யன் அடுத்து என்ன செய்வது என யோசித்தவன் தன் போனை எடுத்து மித்ராவுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என வரவும் மேலும் கோபமானான் ஆர்யன்.
மறுபடியும் போன் செய்து பார்க்க இந்த முறையும் சுவிட்ச் ஆப் என வரவும் கடுப்பான ஆர்யன் சத்தம் போட்டு கவினை கூப்பிட தலை தெறிக்க ஓடி வந்தான் கவின். அவனை பார்த்த ஆர்யன்,
” நான் கொஞ்சம் வெளியே போறேன்.. நீ இங்க இருந்து பார்த்துக்கோ.. எதாவதுன்னா எனக்கு கால் பண்ணு.. சப்போஸ் மித்ரா இங்க மறுபடியும் வந்தான்னா உடனே எனக்கு கால் பண்ணி சொல்லு சரியா.. ” என கேட்க வேகமாய் தலை ஆட்டினான் அவன்.
மொபைல் போனையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு ஆர்யன் வேகமாய் வெளியே வந்தவனின் பார்வை தானாக ஆதிராவின் இடத்தை நோக்கி திரும்ப அங்கு அழுது கொண்டிருந்தவளை பார்த்ததும் அப்படியே சிலையென நின்றான்.
அவள் எதற்கு அழுகிறாள் என புரியாமல் பிரியா அவளை சமாதானம் செய்ய பார்க்க அவளோ அழுதுகொண்டே இருந்தாள். அழுது கொண்டிருக்கும் ஆதிராவை பார்த்த ஆர்யனுக்கு அவன் மேலேயே கோபம் வர,
” வேண்டாம்டா.. பொறுமைய இழந்தறாத.. ஆதிராவை எப்போ வேணுனாலும் சமாதானம் செஞ்சுக்கலாம்.. இப்போ நீ போய் உடனே மித்ராவை பார்க்கணும்.. மித்ராவ எப்படியாவது சமாதானம் பண்ணனும்.. இல்லனா இவ்ளோ நாளும் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிரும்.. எல்லாம் கைக்கூடி வரப்ப நானே அதை கெடுத்தற கூடாது.. ஆர்யன் யோசிச்சுட்டு இருக்காதடா.. உடனே கிளம்பு.. ” என தனக்கு தானே சொல்லி கொண்டவன் அங்கிருந்து செல்ல அப்பொழுது தான் அவனை கவனித்தாள் ஆதிரா.
ஆர்யன் கண்டு கொள்ளாமல் போவதை பார்த்து அவளின் அழுகை மேலும் அதிகம் ஆக அவளை பார்த்த பிரியா,
” ஹேய்.. என்னாச்சுடி.. எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க.. ஆர்யன் ரூமுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தான் நீ இப்படி அழுதுட்டு இருக்க.. என்னாச்சு.. ஆர்யன் எதுவும் சொன்னாரா.. எதுவும் பிரச்சனையா என்ன.. ” என கேட்க அவளோ பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருக்க பிரியாவுக்கு கடுப்பானது.
” ஏய் என்னடி.. எதுக்கு அழறன்னு சொல்லிட்டு அழு.. இப்படி எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. நான் என்னனு நினைக்கறதுடி.. ஒழுங்கா என்னனு சொல்லுடி.. ” என பிரியா கோபமாய் கேட்க அழுதுகொண்டே அவளை பார்த்தாள் ஆதிரா.
” அழாத.. முதல்ல கண்ணை துடை.. கண்ணை துடைச்சுட்டு அழாம என்னனு சொல்லு.. ” என பிரியா சொல்ல கண்களை துடைத்துக்கொண்டு அவளை பார்த்த ஆதிரா உள்ளே நடந்ததை ஒன்று விடாமல் சொல்ல அனைத்தையும் பொறுமையாக கேட்ட பிரியாவுக்கு அவளை பார்த்து சிரிப்பாக வர சிரிப்பை அடக்கி கொண்டு அவளை பார்த்தாள்.
” இதுக்கு ஏன் நீ இப்படி அழற.. ஆர்யன் யாரையோ கல்யாணம் பண்ணுனா உனக்கு என்ன.. நீ அவரை லவ் பண்ணுலன்னு என்கிட்ட சொன்ன தான.. அப்புறம் எதுக்குடி நீ இப்படி அழுதுட்டு இருக்க.. ” என பிரியா கேட்க,
” தெரியலடி.. செல்வா மாதிரி ஆர்யன் இருக்கறதுனால என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடியல.. நான் ஆர்யனை ஆர்யனா பார்க்கல.. செல்வாவா தான் பார்க்கறேன்.. அதனால தான் இது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ” என்றாள் ஆதிரா.
” செல்வாவா நினச்சா கஷ்டமா இருக்கு அப்படினா என்ன அர்த்தம்.. அப்போ நீ செல்வாவை லவ் பண்றனு தான அர்த்தம்.. ” என பிரியா கேட்க ஆதிரா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.
” என்னடி பார்க்கற.. நீ இப்படி அழறதுக்கு அது மட்டும் தான் காரணமா இருக்க முடியும்.. இல்ல இல்லன்னு நீ என்னை ஏமாத்துனா பரவாயில்ல ஆனா நீ உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்கற.. அதை முதல்ல புருஞ்சுக்கோடி.. நீ இப்படி கஷ்டப்படறத என்னால பார்க்க முடியல.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி.. ” என பிரியா சொல்ல,
” நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுதுடி.. நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என் மனசுல என்ன இருக்குன்னே எனக்கு புரியுது.. ஆமாடி நான் செல்வாவை லவ் பண்றேன்.. எப்போ அவரை என்னை அந்த நிலைமையில காப்பாத்துனாரோ அப்பவே நான் அவருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆனா அதை இப்போதான் நான் மனசார உணருறேன்.. நான் இப்போ ஒத்துக்கறேன்டி.. ஐ லவ் செல்வா.. ” என ஆதிரா சொல்ல அவள் சொன்னதை கேட்ட பிரியாவால் சந்தோசப்பட முடியவில்லை.
” எல்லாம் சரிதான்டி.. ஆனா செல்வா இப்போ எங்க இருக்காருன்னு எதுவும் தெரியல.. அவருக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சா என்னனு கூட இப்போ உனக்கு தெரியாது.. ஒருவேளை அவருக்கு கல்யாணமாகி இருந்தா நீ என்னடி பண்ணுவ.. ” என பிரியா கேட்க அதை கேட்ட ஆதிரா அதிர்ச்சியாகாமல் அவளை பார்த்து சிரிக்க பிரியா அவளை புரியாமல் பார்த்தாள்.
” என்னாச்சுடி.. எதுக்கு நீ இப்போ சிரிக்கிற.. நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்.. நீ இப்படி சிரிச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்.. ”
” செல்வாவுக்கு கண்டிப்பா கல்யாணமாகி இருக்காது.. நான் அவரை நினைச்சுட்டு இருக்கற மாதிரி அவரும் என்னையே தான் நினைச்சுட்டு இருப்பாரு.. கண்டிப்பா அவரு என்னை தேடிட்டு தான் இருப்பாரு… “
” என்னடி உளறிட்டு இருக்க.. உன்னை தேடிட்டு இருப்பாரா.. என்ன 2 வருஷமா தேடிட்டு இருப்பாருன்னு சொல்றியா.. அப்படி 2 வருஷம் உன்னை தேடி இருந்தா இந்நேரம் உன்னை அவரு கண்டுபிடிச்சிருக்கணும்ல.. ”
” நீ சொல்றது சரிதான்.. ஆனா நான்தான் அப்பவே மும்பையில இருந்து கிளம்பிட்டேனே.. செல்வா ஒருவேளை மும்பையிலயே என்னை தேடிட்டு இருந்தா.. அதனால தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்.. ” என ஆதிரா அவளது முடிவை சொல்ல அதை கேட்ட பிரியா அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.
” என்னடி சொல்ற… நீ உண்மையாலுமே தான் சொல்றியா.. ” என பிரியா நம்ப முடியாமல் கேட்க,
” ஆமாடி.. நான் மறுபடியும் மும்பைக்கே டிரான்ஸ்பர் வாங்கிட்டு போக போறேன்.. அங்க போய் எப்படியாவது என் செல்வாவை தேடி கண்டுபிடிக்க போறேன்.. ” என ஆதிரா சொல்ல கவலையுடன் அவளை பார்த்தாள் பிரியா.
” ஏய் வேண்டாம்டி.. ஏற்கனவே ஒரு தடவை பிரச்சனையில மாட்டி எப்படியோ தப்பிச்சு வந்துட்ட.. இப்போ மறுபடியும் அங்க போய் எதாவது பிரச்சனை அப்படினா என்னடி பண்றது.. ஒழுங்கா நான் சொல்றதை கேளு.. இங்கையே இரு.. ”
” இல்லடி.. என்னால இனி இங்க இருக்க முடியாது.. எனக்கு உடனே செல்வாவை தேடி கண்டுபிடிக்கணும்.. நான் அவரை பார்த்தே ஆகணும்.. என்னை போர்ஸ் பண்ணாத ப்ளீஸ்.. நீயாவது என்னை புருஞ்சுக்கோடி.. ” என ஆதிரா சொல்ல பிரியா அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக ஆதிரா சந்தோசமாய் அவளை அணைத்து கொண்டாள்.
மித்ராவை ஏதேதோ பேசி சமாதானம் செய்துவிட்டு அவசரம் அவசரமாய் ஆர்யன் கம்பெனிக்கு வந்தவன் முதலில் தேடியது ஆதிராவைத்தான். இன்னும் அழுதுகொண்டு இருப்பாளோ என நினைத்து வந்தவன் அவள் சிரித்தப்படி வேலை செய்துகொண்டு இருப்பதை பார்த்தவன் முகம் மலர அவனது கேபினுக்கு சென்றான்.
சேரில் போய் உட்கார்ந்தவன் லேப்டாப்பை ஆன் செய்ய ஆதிராவிடம் இருந்து வந்திருந்த மெயிலை பார்த்து அதிர்ந்து போய் கோபமாய் எழுந்து நின்றான்.
” என்ன இது.. எதுக்கு இப்போ இந்த முடிவை எடுத்திருக்கா.. மித்ரா விஷயம் தெரிஞ்சு கோபத்துல இந்த முடிவை எடுத்திருப்பாளோ.. ” என நினைத்தவன் கவினை அழைத்து ஆதிராவை வர சொல்லி அனுப்ப கவின் சென்று ஆதிராவிடம் விஷியத்தை சொன்னான்.
பிரியாவிடம் சொல்லிவிட்டு ஆதிரா எழுந்து ஆர்யன் அறைக்கு வந்தவள் வெளியவே நின்று கதவை தட்ட,
” எஸ் கம் இன்.. ” என்றான் ஆர்யான்.
ஆதிரா கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல அவளை பார்த்தவன், ” என்னாச்சு ஆதிரா.. எதுக்கு இப்போ டிரான்ஸ்பர் கேட்டு மெயில் அனுப்பி இருக்கீங்க.. அதுவும் மும்பைக்கு டிரான்ஸ்பர் கேட்டு மெயில் அனுப்பிருக்கீங்க.. “ என கேட்க,
“ ஆமா சார்… எனக்கு உடனே டிரான்ஸ்பர் வேணும்.. ப்ளீஸ் எப்படியாவது அரேஞ் பண்ணி கொடுங்க.. “ என்றாள் ஆதிரா.
“ அதான் எதுக்குன்னு கேக்கறேன்.. எதுக்கு இப்போ நீங்க திடிர்னு மும்பை போகனுன்னு சொல்லிட்டு இருக்கீங்க.. அதுக்கு இப்போ என்ன அவசியம்.. “
“ சாரி சார்.. அது என் பர்சனல்.. என்னால அதைப்பத்தி இப்போ எதுவும் உங்ககிட்ட சொல்ல முடியாது.. நான் கேட்ட டிரான்ஸ்பர் மட்டும் எனக்கு கொடுத்திருங்க ப்ளீஸ்..” என ஆதிரா கையெடுத்து கும்பிட்ட கேட்க,
“ ஐம் சாரி ஆதிரா.. உங்களுக்கு எதுக்கு டிரான்ஸ்பர் வேணுங்கற காரணம் தெரியாம என்னால உங்களுக்கு டிரான்ஸ்பர் கொடுக்க முடியாது.. “ என ஆர்யன் சொல்ல அவனையே பார்த்தாள் ஆதிரா.
“ காரணம் என்னனு சொன்னா எனக்கு டிரான்ஸ்பர் கொடுப்பீங்களா.. “ என ஆதிரா கேட்க ம்ம் என தலை ஆட்டினான் ஆர்யன்.
“ நான் செல்வாவை தேடி போக போறேன்.. அவர் கண்டிப்பா மும்பையில தான் இருப்பாரு.. அதான் எனக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கேட்டேன்.. நீங்க அடுத்து என்ன கேட்பிங்கன்னு எனக்கு தெரியும்.. செல்வாவை எதுக்கு நீங்க தேடி போகணும் அப்படினு தான கேக்க போறீங்க.. அதையும் நானே சொல்லிறேன்.. ஐ லவ் செல்வா சார்.. அதான் அவரை தேடி போக போறேன்.. “ என ஆதிரா சிரித்துக்கொண்டே சொல்ல அதை கேட்ட ஆர்யன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.
No comments yet.