அத்தியாயம் -13

Chellammal Bharathi | 24 Nov 2025 | Share

      யாருமில்லா தனிமையில் நிலாவும் சேரனும் நெருங்கி நிற்க….அவர்களின் நெருக்கத்தை கண்ட இலைதழைகள் ஒன்றுடன் ஒன்று உரசி கொண்டு தங்களுள் ரகசியம் பேசி சிரித்துக்கொண்டிருந்தன. காற்றும் காதலர்கள் இருவரின் அணுக்கத்தை கண்டு கூச்சம் கொண்டு அவர்களை அண்டாமல் தாண்டி சென்றது .

          அவளின் கரம் அவனது மேலாடையை பற்றுகோலாக்கி இறுக பற்றி இருக்க….அவனது கரம் அவளது மெல்லிடையை அழுந்த பற்றி அழுத்தம் கொடுக்க…. பெண்ணவளின் கருமணிகள் ,ஆடவனின் அழுத்தத்தை உணர்ந்து இங்கும் அங்கும் சென்று அவனிற்கு வலை விரித்தது. 

        ஆடவன் அவன்…தன்னவளின் வெட்கபயத்தை உணர்ந்து ,தெரிந்தே சிக்கினான் பெண்ணவளின் கருமணிகள் விரித்த மோகம் எனும் மாயவலையில். மெது மெதுவாய் ஆடவன் அவ்வலையில் சிக்கி புதைந்து கொண்டிருக்க… பெண்ணவளும் தன்னவனை மெதுவாக தன்னுள் புதைத்து கொண்டிருந்தாள். 

          இருவரின் மன இணக்கத்தில் இருவரின் இதழ்களும் இணைந்து கொள்ள ஆவல் கொண்டு நெருங்க…..”ம்க்ஹூம்…”என்ற தொண்டை செருமலை கேட்டு காதலர் இருவரின் மோன மாயவலை அறுபட… விதிர்விதிர்த்து உடலை மட்டும் பிரித்து குரல் வந்த திசையை நோக்கினர். 

         பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டுக்கொண்டு மனித கரடியாய் தன் நண்பனை பார்வையால் பஸ்பமாக்கி கொண்டு நின்றிருந்தான் சேது. 

          “இவன் ஒரு லூசு… எத்தனை தடவ நானும் சொல்லுறது? உனக்குத்தான் ரொமான்ஸ் பண்ண வராதுனா… ரொமான்ஸ் பண்றவங்கள ஏன்டா தொல்லை பண்ணுற? வாவ்… எவ்ளோ அழகான ரொமான்ஸ்…. லைப் ல பர்ஸ்ட் டைம்… லைவ்வா லிப் லாக் கிஸ்ஸ பாத்துறலாம் னு பாத்தா… நாறப்பய கெடுத்து விட்டுட்டான்…. எனக்குனு வந்து வாச்சு இருக்கியே… டேய் அண்ணா… பொஸிசன் போடா… அடியேய் அண்ணி… பேந்த பேந்த முழிக்காம என் அண்ணன லவாங்கியோட லுக் விடு பாப்போம்…. “என தன் வாயில் லாலிபப்பை வைத்துக்கொண்டு பொறிந்தாள் இசை. 

           இசையின் பேச்சை கேட்ட சேது, குனிந்து ரகசியமாக இசையின் காதில்… “இன்ஸ்டன்ட்டா நான் தாரேன்டி… அப்ப எப்பிடி இவ்ளோ வாய் பேசுற னு பாக்குறேன்… “என்றான். 

            “டேய் அண்ணா… உன் ப்ரண்ட் எனக்கு இன்ஸ்டன்ட்டா கிஸ் தர்றானாம்… நான் அப்பிடிக்கா போய் வாங்கிட்டு வந்துர்றேன்…. இந்தா… இந்த லாலிபப்பை பத்திரமா வச்சுக்க…. திருப்பி வந்து கேப்பேன்… லாலிபப் பத்திரம்… “இசை. 

           இசையின் பேச்சை கேட்ட இளா விழுந்து விழுந்து சிரிக்க…. நிலா, பாவமாக சேதுவை நோக்கினாள். 

            “அடியேய்… உனக்கு இந்த வெக்கம்லாம் வராதா டி… “என எரிச்சலுடன் கேட்டான் சேது. 

            “அது என் பரம்பரைக்கே இல்லடா மச்சான்… தேவை இல்லாம ட்ரை பண்ணாத… “இசை. 

           “சை… உன் கிட்ட பேசுறதுக்கு போய் சுவத்துல முட்டிக்கலாம்….”என நொந்து கொண்டான் சேது. 

            “மச்சான்….இங்க மரம் தான்டா இருக்கு….ஆங்… இந்த மரம் நல்லா இருக்கு….இங்க முட்டிக்கிறியா? “என இளா தன் முத்தத்தை கெடுத்த எரிச்சலில் கேட்க…”அண்ணன் டா….”என இசை இளாவிற்கு ஹைபை குடுக்க… இளாவும் இசைக்கு, “தங்கச்சி டா…”என ஹைபை குடுத்தான். 

           “நீ பேசாத… நான் வர்றதுக்கு முன்னாடி என் தங்கச்சிய நீ என்னடா பண்ணிட்டு இருந்த? “சேது. 

           “உன் தங்கச்சியா? யாரு மச்சான் அது? “இளா. 

           “நிலா தான்….தங்கச்சி மா… நீ இந்த பக்கம் வா… “சேது. 

            சேதுவின் தங்கச்சி என்ற அழைப்பில் மனம் விதிர்விதிர்க்க படபடப்புடன், “நானா? “எனக்கேட்டாள் நிலா .

             “ஏன்? நான் உனக்கு அண்ணனா இருக்க கூடாதாடா? “என ஏக்க குரலில் வினவ….”அப்பிடிலாம் ஒன்னும் இல்ல… “என தடுமாறினாள் நிலா. 

             நிலாவின் தடுமாற்றத்திற்கான காரணத்தை அறிந்த இசை, “விடுங்க….அவ இன்னும் அதுல இருந்து வெளில வரல…அவள கட்டாயப்படுத்தாத….”என நிலாவின் தோளை ஆதரவாக பற்றிக்கொண்டாள் 

        “ஏன்? சேதுவ அண்ணா னு சொல்லுறதுல உனக்கு என்ன பிரச்னை? நீ யாரையும் அண்ணா னு சொல்லி நான் பாத்தது இல்லையே… யூஸ்வலா….பொண்ணுங்க டக்கு டக்கு னு அண்ணா ங்கிற வார்த்தைய யூஸ் பண்ணுவாங்க… நீ ஏன் சொல்ல மாட்டேன் ங்குற? ” என கைகட்டிக்கொண்டு பதில் தெரிந்தும் கூர்மையாக தன்னவளை நோக்கினான் இளா. 

          “அண்ணா ங்கிற வார்த்தை ஒன்னும் சாதாரணமானது இல்ல…அது ஒரு வரம்… இப்பலாம் அந்த வார்த்தைக்கே மதிப்பு இல்ல… என் பெரியப்பா மகன் தான னு சின்ன வயசுல பஸ்ல அவன் பக்கத்துல உக்காந்ததுக்கு என் இடுப்புலயும் தொடையிலயும் கை வச்சு தடவுனான்…அந்த வயசுல அதுக்கான அர்த்தம் தெரியல… ஆனா அது என் மனசுக்கு தப்பா பட்டு அதுக்கு அப்புறம் அவன பாக்குறதயே விட்டுட்டேன்……அதுல இருந்து அண்ணா ங்கிற வார்த்தையில இருந்த புனிதமே எனக்கு அழிஞ்சு போச்சு… ஒரு தடவ அழிஞ்சத திரும்ப உருவாக்குறது ரொம்ப கஷ்ட்டம்… அம்மா அப்பா கூட இருந்து என்னைய ஆறுதல் படுத்தி இருந்தா ஒருவேளை நான் இந்த அளவுக்கு இறுகி போயிருக்க மாட்டேனோ என்னவோ? “என கசந்த முறுவலுடன் கூறினாள் நிலா. 

            அதை கேட்ட இளா, உள்ளம் உடைந்து தன்னவளை ஆரத்தழுவிக்கொண்டான் ஆதரவுடன். 

           “அடச்சீ… என் தங்கச்சிய தொடாதடா… நிலா என்னைய அண்ணா னு சொல்ல லனா பரவாயில்லை… அவ என்னோட தங்கச்சி… “என விழிகள் தழும்ப கூறினான் சேது. 

          “அடேங்கப்பா… ஒரே சென்டிமெண்ட் ஸீனா இருக்கு… அச்சீ… நார்மல் மோடுக்கு வாங்க… “இசை. 

          “ஹே… ஆமா… நீங்க அவார்ட் வாங்குன விசயத்தை ஏன் என் கிட்ட சொல்லல? “என இளாவை முறைத்தாள் நிலா. 

          “லூசு… அசோகா சக்ரா அவார்ட் தானடி வாங்குனேன்… அது என்னோட சின்ஸியாரிட்டிக்கு கிடைச்ச மரியாதை…அவ்ளோதான்… அத இப்பிடி பெருசாக்கிட்டு இருக்கீங்க… “இளா. 

         “அதெப்படி சாதாரணமா விட முடியும்? எங்களுக்கு ட்ரீட் வேணும்… “இசை. 

          “ஆமா ஆமா… என் அண்ணனுக்கும் சேத்து ட்ரீட் வேணும்….”என சேதுவை அண்ணா என நிலா கூற… உள்ள தத்தளிப்புடன் …”தங்கச்சிமா… “என நிலாவை அணைத்து உச்சி முகர்ந்தான் சேது. சேதுவின் நீண்ட நெடுநாளைய ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கண்ணீர் வர….அதை கண்ட இளாவும் இசையும், “மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்…. அண்ணன்….வாழவைப்பான் என்றே அமைதி கொண்டாள்… “என தங்கள் உள்ளத்து நெகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு பாடி அவர்களை கிண்டலடித்தனர். 

         அதை உணர்ந்த நிலா வும் சேதுவும் மனம் நிறைந்த புன்னகையுடன் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டனர் .

           “சரி… கேஸ் என்ன ஆச்சு மாப்ள? “என சேது இளாவிடம் வினவினான். 

            “ஹே.. .ஆமா… அத சொல்ல தான் முக்கியமா வந்தேன்….அதுக்குள்ளயும்….”என பார்வையால் தன் பாவையை வருடி விட்டு, “அவன் சாராயத்துல போதை மருந்த கலந்து வித்து இருக்கான் டா…..அத ஒரு தடவ டேஸ்ட் பண்ணிட்டா அதோட போதைக்கு நாம அடிமை ஆகிருவோம்….எனக்கு தெரிஞ்சு அபி அதுல நல்லா சிக்கிட்டான்…..அவனோட ஸ்கூல்ல ரெய்டு நடத்த போறோம்….அந்த போதையோட தாக்கத்துல தான் அபி இப்பிடி யார்கிட்டையும் ஒட்டாம இருக்கான்…..ஸ்கூல்ல இமிடியட்டா ப்ளட் டெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் போட்டு இருக்கேன்… அடுத்த வாரத்துல அபியோட நிலைமை என்ன னு தெரிஞ்சுரும்….அதுவரைக்கும் அவன கொஞ்சம் பாத்து ஹேண்டில் பண்ணுங்க…”இளா. 

       இளா கூறியதை கேட்ட இசையும் நிலாவும் நேற்று காலையிலும் வீட்டில் மாலையிலும் நடந்ததை விரிவாக கூற… இளா டென்ஷனில் நெற்றியை அழுந்த தேய்த்துக்கொண்டான். 

          நிலா, வீட்டில் நடந்த அத்தனையும் கூறியதை கேட்ட இசை… விறு விறு என சென்று நிலாவின் சைக்கிளில் இருந்த டிபன்பாக்ஸை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பாட்டில் பங்கு கேட்டு சேதுவும் வர… இசையும் சேதுவும் இணைந்து நிலா வின் அம்மா குடுத்திருந்த உணவை முற்றிலுமாக உண்டு தீர்த்தனர். 

        ” இங்க என்ன பிரச்னை போய்ட்டு இருக்க… நீங்க ரெண்டு பேரும் திங்குறதுல இருங்க….”நிலா. 

         “ஹே போடி….உன் வீட்டு சாப்பாட்ட சாப்பிடனும் னு எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா? இன்னக்கி தான் சான்ஸ் கிடைச்சு இருக்கு…”இசை. 

          வாய்க்குள் சோற்றை அமுக்கி கொண்டே, “தங்கச்சிமா…..சாப்பாடு செம போ….”என பேச முடியாமல் சேது பேச…..அதை கண்ட நிலா வும் இளாவும் சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டனர்.

           “சரி நிலா… அடுத்த வாரம் ப்ளட் டெஸ்ட் பண்ணி பாத்துறலாம்….அதுவரைக்கும் அபி கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதை யா இரு….போதை கிடைக்கலங்கிற வெறில இருப்பான்…..”இளா. 

          “அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்….டிஸ்ட்டிக் லெவல் செலக்சன் இருக்கு….”என மெல்லிய குரலில் கூறினாள் நிலா. 

         “இந்த ஸாப்ட் வாய்ஸ்லாம் சேரநிலாக்கு செட் ஆகல…..ஹா ஹா ஹா….நிச்சயதார்த்தத்த முடிச்சுட்டு டிஸ்ட்டிக் செலக்சன் ல கலக்குறோம்….அபி பிரச்சினை ய இந்த மாமன் பாத்துக்கிறேன்….சரியா? “

          அதை கேட்ட நிலா, தன்னவனை முறைத்துக்கொண்டே…”ஆமா நீங்க என்ன ப்ளேயர்? அத மட்டும் சொல்ல மாட்டேன் ங்குறீங்க? “என்றாள். 

             “ஹே.. உங்க ரெண்டு பேருக்கும் காலேஜ்க்கு நேரம் ஆச்சு பாரு…கிளம்புங்க…”என இசையையும் நிலாவையும் கல்லூரி செல்ல அவசரபடுத்தினான் இளா. 

               “இந்த அவார்ட் மேட்டர் மாதிரி அதையும் ஒரு நாள் கண்டுபிடிக்கிறேன்… “என்று கூறியபடி இசையை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள் நிலா. 

             பொய் கோபத்துடன் செல்லும் தன்னவளை ரசித்தபடி, “டேய் மச்சான்….எனக்கு என்னமோ சரியா படல…..ரெண்டு பேரையும் பாலோ பண்ணு…நான் ஸ்கூல்ல ஒரு தடவ போய் பாத்துட்டு வர்றேன்…..”என்று தீவிரத்துடன் கூறினான் இளா. 

           “என்ன ஆச்சு மாப்ள? “சேது 

           “இல்லடா.. ஏதோ தப்பா நடக்க போற மாதிரி தோனுது….அவங்களுக்கு தெரியாம பாலோ பண்ணு….”என கூறி விட்டு தன் பைக்கில் ஸ்கூல் நோக்கி பறந்தான் இளஞ்சேரன். 

            சேதுவும் தன் நண்பனின் ஆணையை ஏற்று நிலாவையும் இசையையும் பின்தொடர்ந்து சென்றான். 

            இளாவின் உள்ளுணர்வுக்கு ஏற்ப நிலாவை வஞ்சம் தீர்க்க ஒரு ஜீவன் தீவிர யோசனையில் மூழ்கி இருந்தது……

                            (சேரநிலா மிளிர்வாள்… )

                         -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.