அத்தியாயம் -10

Chellammal Bharathi | 21 Nov 2025 | Share

          உலகை வென்ற கர்வத்தில் பெருமிதத்துடன் இளாவை பார்த்து நின்றிருந்தாள் நிலா. அன்று அவனின் அடையாள அட்டையை கண்டு வியந்த நிலாவின் விழிகள்…இன்று அளவில்லா பூரிப்பை சிந்தியது.

         அன்று இளாவிடம் ,”நீங்க போலீஸா? “என்று கேட்டதற்கு பதிலாக அவன் தனது அடையாள அட்டையை தர…அதில் அவன் ACP என்றிருக்க…..அதில் திகைத்தாள் நிலா. அன்று திகைத்தவள் இன்று இளாவின் வாயில் இருந்து வாய்மொழியாக வரவும்… பெருமிதமாக உணர்ந்தாள் நிலா.

         இளா கூறிய வார்த்தைகளில் எதிர்த்த வீட்டுக்காரன் பயந்து நிற்க, “என்ன? பேச்சையே காணோம்? நான் யாரு னு கேட்ட ல… இப்ப பேசு… “என கூறி கொண்டே அவனின் மறுகன்னத்தையும் பதம் பார்த்தான் இளா.

          “ஸார்… எனக்கு மினிஸ்ட்டர தெரியும்… “என வலியில் கத்தினான் நிலாவின் எதிர் வீட்டுக்காரன்.

          ” இதே வாயி தான என் நிலாவ அசிங்கமா பேசுனுச்சு… ” என்றெண்ணிக்கொண்டு, “எனக்கும் தான் டா மினிஸ்ட்டர தெரியும் ….ப்ரைம் மினிஸ்ட்டர தெரியும்…. அவங்களுக்கு உன்னைய தெரியுமா? ” எனக் கூறி கொண்டு அவன் வாயில் ஒரு குத்து விட்டான் இளா.

         வாயில் இருந்து ரத்தம் கொட்ட… இளா கேட்ட கேள்வியின் தாக்கத்தால், திரு திரு வென முழித்தான் அவன்.

          அவன் முழிப்பதை கண்ட இளா, “அப்ப உனக்கு யாரையும் தெரியாதா? ச்சீ… அவங்களுக்கு உன்னைய தெரியாதா? “என கேலி புன்னகையுடன் கேட்டான் இளா.

            இளா கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த நிலா, அவன் கூறிய ஒற்றை வார்த்தையில் மனம் தன் செயல்பாட்டை நிறுத்த… இதுவரை தன் மனதினுள் அரித்துக்கொண்டிருந்த கேள்வி முன்னே வர… விரைவாக தனது அறையை நோக்கி உள்ளே ஓடினாள் .

            ஓடிச்சென்று தன் அறையில் பத்திரப்படுத்தி இருந்த ஒரு பழைய செய்தித்தாளை அவசர அவசரமாக விரித்துப்பார்த்தாள் நிலா. அதில் அனைத்தும் தெளிவாகி விட… கையில் வைத்திருந்த செய்தித்தாளோடு மீண்டும் வெளியே வந்தாள். சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து கொண்டிருந்த இளா, தன்னவள் பேப்பரும் கையுமாக ஒரு வித வியப்புடன் வந்து நிற்பதை பார்த்தவன், “என்னைய கண்டுபிடிச்சுட்டா போலயே… “என நினைத்துக்கொண்டு மெல்லிய புன்னைகையை சிந்தினான்.

           அப்பொழுது, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வந்து இளாவிடம், “என்ன ஸார்? இதுக்குலாம் போய் நீங்க டைரக்ட்டா ஸ்பாட்டுக்கு வரனுமா ஸார்? “என சங்கடப்பட….”இது எனக்கு பர்ஸனலா வந்த சாவால் ஸார்…..அதான் களத்துல இறங்கிட்டேன்…. “என இன்ஸ்பெக்டரின் தோளை தட்டி புன்னகை புரிந்தான்.

          அனைத்து சரக்குகளும் பறிமுதல் செய்த பிறகு கண கம்பீர குரலில், “அரெஸ்ட் ஹிம்… “என தன் ஆட்களுக்கு ஆணையிட்டான் இளா.

        அந்த கம்பீர குரலில் நிலாவின் மனம் சற்று ஆட்டம் கண்டது. அந்த சாராயக்காரனை ஜீப்பில் கைது செய்து கொண்டு… தன்னவளை பார்வையால் கைது செய்து கொண்டு தன் பைக்கில் ஏறி புறப்பட்டான் இளா.

          இளா சென்ற பிறகு அந்த இடம் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அந்த அமைதி நிலாவின் மனதிற்குள் மணி அடிக்க….வேக வேகமாக குளித்து கிளம்பி அந்த பழைய செய்தித்தாளை எடுத்துக் கொண்டு இசையை காண சைக்கிளில் புறப்பட்டாள் நிலா.

         நிலா, அவசரமாக செல்வதை கண்ட அலமேலு…..,”இவ அடங்க மாட்டா….இவ சரியான தான்தோன்றி….”என கூறி கொண்டு பாக்கை உரலில் வைத்து இடிக்க ஆரம்பித்தார்.

           “சே… மாப்ள பெரிய வேலை செஞ்சு இருக்காருல….”கதிர்வேல்.

           “ஆமாங்க….அந்த சாராய வீட்டுனால எத்தனை இம்சை… கண்டவன் லாம் நம்ம வீட்ட தட்டி சரக்கு கேக்குறான்….குடிக்க வந்த தறுதலைங்க நம்ம வீட்ல உள்ள சாமானலாம் திருடிட்டு ல போய்ட்டானுக… இந்த சாராய வீட்டுனால பகல்ல கூட வீட்ட பூட்டி வைக்கிற மாதிரி ல இருக்கு…. இப்பத்தான் நிம்மதியா இருக்கு….பரவாயில்லை… இந்த குட்டக்கழுதையும் நல்ல மனுஷனுக்குத்தான் வாக்கப்பட போறா….எப்பிடியோ தரித்திரம் நம்மள விட்டு போனா சரி… ஜோசியர் கூட அதான் சொன்னாரு.. இவள கல்லியாணம் பண்ணி வீட்ட விட்டு போனதும் நம்ம வீட்ட புடிச்ச பீடை லாம் அவளோடவே போயிருமாம்… ” வள்ளி.

          இருவர் பேசுவதையும் கேட்ட அபி, பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் எரிச்சலுடன் ,”குட்டச்சி ….”என மனதுள் வன்மமாக கூறிக்கொண்டு, நகத்தை கடித்துக்கொண்டிருந்தான்.

                 💞💞💞💞💞💞

         தான் கொண்டு வந்த செய்தித்தாளை நிலா, இசையிடம் காட்ட…. அவள் அதை பார்த்ததும், “நிஜமாவாடி? ” என முழி பிதுங்கி தெறித்து விழும் அளவு விழிகளை விரித்து நின்றாள் இசை.

         “இது எப்பிடியும் உன் ஆளுக்கு தெரிஞ்சு இருக்கும் தான? உன் கிட்ட ஏதாவது சொன்னாரா டி? “நிலா.

          “யாரு? அந்த ஆளா? அது சரியான அமுக்குணி… அந்த ஆள் வாயில இருந்து ஒத்த வார்த்தைய வர வைக்கிறதுக்குள்ள நான் படுற பாடு எனக்குத்தான தெரியும்? “இசை.

          “போய் அவர் கிட்ட கேட்டு பார்ப்போமா? “நிலா.

          “வாடி போய் கேக்கலாம்… சேது இன்னக்கி நிஜ சேது ஆக போறான்….”என தாவணியை இழுத்து செருகி கொண்டு சைக்கிளில் ஏறினாள் இசை.

          தோழிகள் இருவரும் தத்தமது சைக்கிளில் சேதுவின் கடையை நோக்கி பயணித்தார்கள். கடையின் வெளியே சைக்கிளை நிறுத்தியவர்கள் வெளியில் இருந்தபடியே சைக்கிள் மணியை அழுத்தினாள் இசை.

        அச்சத்தத்தில் வெளி வந்த கடைக்காரப்பையன், “வாங்க க்கா… அண்ணே கஸ்டமர கவனிச்சுட்டு இருக்காரு… நீங்க உள்ள போங்க… நான் அண்ணன அனுப்பி வைக்கிறேன்…”என்றான்.

        கடைக்காரப்பையனை உறுத்து விழித்த இசை, “நேத்து உங்க நொண்ணே என்ன வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணாரு உன்னைய? “என்றாள்.

         “ஈஈஈஈ… நாலு ஐஸ் கிரீம் க்கா…..பட்டர் ஸ்காட்ச் ரெண்டு… ப்ளாக் கரண்ட் ரெண்டு க்கா… செமயா இருந்துச்சு… அப்புறம் அண்ணாவும் எடுத்து சொன்னாரு.. அது எதார்த்தமா நடந்த விபத்தாம் க்கா….நீங்களும் அண்ணன தப்பா நினைக்காதீங்க….” கடைக்காரப்பையன்.

           “நாலு ஐஸ்கிரீம் ல எங்கள கவுத்துட்டியேடா துரோகி…..”என இசை அவனை அடிக்க கை ஓங்க… “நான் வேலை பாக்க போறேன்க்கா… நாம அப்புறமா விளையாடலாம் இசை அக்கா… இல்ல …அண்ணி… “என்றபடி ஓடி மறைந்தான் கடைக்காரப்பையன்.

        “எதேய்…விளையாட்டா? இருடா….உங்க நொண்ணன நசுக்கிட்டு வந்து அடுத்து உன்னைய நசுக்குறேன்… இதுல அக்கா இல்லையாம்….அண்ணியாம்….உனக்கு இருக்கு டா… “என திட்டிக்கொண்டு நின்றிருந்தாள் இசை.

         “வந்த வேலைய பாப்போமா? “என நிலா, இசையை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.

        அவர்கள் இருவரும் உள்ளே சென்று காத்திருந்த சிறிது நேரத்தில் சேது உள்ளே வந்தான். இருவரையும் ஒன்றாக பார்த்தவன், “அய்யையோ….குட்டிச்சாத்தான் ரெண்டும் ஒன்னா சேந்து வந்து இருக்கே….டேய் சேது…ஏதோ பெரிய வில்லங்கம் போல….உடம்ப இரும்பாக்கிக்கடா…..”என மனதிற்குள் பேசிக்கொண்டு, “என்ன… பூஞ்சோலை தேவதைகள் ரெண்டு பேரும் ஒன்னா என்னைய தேடி வந்து இருக்கீங்க? என்ன விசயம்? “என்றான்.

         “அடச்சீ…கேவலமா சமாளிக்காத.. உன் மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு….”இசை.

          “அதான் கேட்டுருச்சு ல… என்ன வேணும் னு சொல்லுறது…”என கெத்தாக கூறினான் சேது.

           “ஓகோ….சரி நோட் பண்ணிக்கோ….ரெண்டு கல்லியாண மாலை… ரெண்டு பட்டு வேட்டி சட்டை… ஒரு தாலி….”இசை.

         “மச்சி… மெட்டி… “நிலா.

          “ஆங்… ஆமா… மெட்டி யும் வேணும்…”இசை.

          இசையும் நிலாவும் கூறியதில் குழப்பமான சேது, “கல்லியாணத்துக்கு எதுக்கு ரெண்டு வேட்டி சட்டை? அப்ப சேலை வேண்டாமா? அப்பிடியே இருந்தாலும் இது டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்… இங்க வந்து இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? ஆமா….யாருக்கு கல்லியாணம்? “என்றான்.

         “என்ன ஸார் இப்பிடி கேக்குறீங்க? கல்லியாண மாப்ளையே இப்பிடி கேக்கலாமா? நேத்து பேசுனோமே… உங்களுக்கும் உங்க ப்ரண்ட் இளஞ்சேரன் IPS க்கும் கல்லியாணம் னு….உங்கள இப்பிடியே விட்டா ஊரு கெட்டு போயிரும்… ஸோ….சட்டுபுட்டு னு உங்க கல்லியாணத்த முடிக்கனும்….”இசை.

          இசை, அந்த இளஞ்சேரன் IPS என்பதில் குடுத்த அழுத்தத்திலேயே இளாவை பற்றி இருவரும் அறிந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொண்ட சேது, யோசிப்பது போல் நடித்தான்.

        “என்ன ஸார் யோசிக்கிறீங்க? “நிலா.

         “ஒன்னுல்ல… ஹனிமூன எங்க வச்சுக்கலாம் னு தான்… ஏதாவது நல்ல ப்ளேஸா சொல்லுடி அரசி… “என்று கூறி சேது வாய் மூடுவதற்குள் அவனின் வாயில் விளக்கமாறு பறந்து வந்து விழுந்தது.

         விளக்கமாற்றை எறிந்த இசையை பார்த்து, “நோ… நோ டா செல்லம்.. மீ பாவம்… க்ரீன் சாண்ட்… “என்றான் சேது.

         “அடிங்க… அவதார் குட்டி… “என்று கூறி கொண்டே சேதுவின் தலைமுடியை பிடித்து உலுக்கி கொண்டே, “எதுக்கு டா எங்க கிட்ட மறைச்சீங்க? ” என்றாள் இசை.

          “நான் என்னத்தடி மறைச்சேன்? “என வலி தாங்க முடியாமல் கத்தினான் சேது.

           “இதத்தான்… “என்றவாறு சேதுவின் முகத்துக்கு எதிரே அந்த செய்தித்தாளை காட்டினாள் நிலா.

           “இது எனக்கே தெரியாது… “என சேது பொய் கூற… “பொய்… பொய் சொல்லுவியா டா… “என அவனின் வாயிலேயே நாலு அடி போட்டாள் இசை.

           “மச்சி…. இவன அடிச்சு நான் டயர்ட் ஆகிட்டேன்… உன் கையால நாலு போடு…. நீ போட்டா தான் இவன் சரி வருவான்… “என மூச்சு வாங்கி கொண்டே நிலாவிடம் கூறினாள் இசை.

       அதை கேட்ட நிலா, கையை முறுக்கி கொண்டு முன்னே வர… அதை கண்ட சேது, “அய்யையோ… என்னைய விட்டுருங்க தெய்வங்களா…. நிலாம்மா… நீ அடிக்கிற ஒத்த அடிய கூட இந்த பாடி தாங்காது…. கொஞ்சம் கருணை காட்டுமா…. “என கெஞ்சினான் சேது.

         “இது உன் ப்ரண்ட் தானா? “என இசை செய்தித்தாளை காட்டி வினவ… “ஆமாம்… அந்த கடங்காரன் தான்… “என்றான் சேது.

           “இதை ஏன் மறைச்சீங்க? அப்ப இதுக்காக தான் அவங்க முகத்தை மறைச்சுட்டு ஊருக்குள்ள வந்தாங்களா?” நிலா.

            “யம்மா… தெய்வமே…. அவன பத்தி என்ன கேக்குறதா இருந்தாலும் அவன் கிட்ட நேரா கேளுங்க…. இடையில என்னை இழுக்காதீங்க…. வலி தாங்க முடியல….”சேது.

            “கேக்குறோம்… கேக்குறோம்….உனக்கு இந்த விசயம் தெரியுமா னு க்ராஸ் செக் பண்ண தான் வந்தோம்… ” இசை.

          “ஆத்தி… க்ராஸ் செக் பண்ணுனதுக்கே இந்த நிலைமையா? அப்ப நாளைக்கி அவனுக்கு????” சேது.

        “மர்க்கையாதான்… “நிலா.

         “தக்காளி சட்னி தான்….”இசை.

         “என் ப்ரண்ட்ட உயிரோட விட்டுருங்க தெய்வங்களா….”சேது.

         “ட்ரை பண்றோம்…ஆங்… அப்புறம்….இப்ப நடந்த விசயம் உன் ப்ரண்ட் காதுக்கு போனுச்சு….விளைவு பயங்கரமா இருக்கும்…”என நிலா, சேதுவை மிரட்டிவிட்டு இசையை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

          “இளா…..நாளைக்கி இந்த குட்டி பிசாசுக கிட்ட இருந்து உன்னைய யாருடா காப்பாத்த போறா? “என புலம்பிக்கொண்டே அடி வாங்கிய இடத்தில் மருந்தை தடவினான் சேது.

          அதை பார்த்த கடைக்காரப்பையன், “என்ன அண்ணே….அடி பலமோ? ” என்றான்.

          “விசப்பூச்சி…..போய் வேலைய பாருடா….என்னைய வேவு பாக்காத….”என அவனை அடித்து துரத்தி விட்டு வேலையை கவனித்தான் சேது.

               💞💞💞💞💞💞💞💞

           நிலாவும் இசையும் பேசிக்கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருக்கையில் அவர்களை குரோத விழிகளுடன் வழி மறித்தான் அபி.

        அபியை கண்டதும், “என்னடி….உன் தொம்பி….நம்ம வழில குறுக்க வர்றான்….தூக்கிறலாமா? “என்றாள் இசை, நிலாவிடம்.

          “இவன் என் கிட்ட பேசவே மாட்டானே….இரு… என்ன னு கேப்போம்….அப்பிடியே பெரிய ரௌடி மாதிரி பேச வேண்டியது…”நிலா.

         “ஹி ஹி ஹி ஹி….நான்லாம் டெரர் பீஸ் டி….”இசை.

          “தூ…..”நிலா.

           “சரி…விடுடி… உண்மைய பப்ளிக்குட்டி பண்ணாத…..உன் தம்பிக்கிட்ட என்ன னு கேளு….எதுக்கும் நாலு அடி பின்னாலயே நில்லு…அவன் முழியே சரி இல்லை…”இசை.

                “இரு… கேக்குறேன்… “என்றபடி அபியை நோக்கினாள் நிலா…..

                             (சேரநிலா மிளிர்வாள்….)
        
                        -செல்லம்மாள்பாரதி

    No comments yet.