அத்தியாயம் – 1

Udhaya Novel's | 17 Mar 2026 | Share

E-1 

பிருந்தாவனம்..

சென்னையில்  இருந்து சற்று தள்ளி இயற்கையான சூழ்நிலையில் பிரம்பண்டாமாக காட்சி அளித்தது அந்த வீடு.. அரண்மனை என்று சொன்னாலும் தப்பில்லை.. பல ஏக்கர்களை முழுங்கி இருந்தது அந்த வீடு.. வீட்டை சுற்றிலும் பல ஏக்கர் கணக்கில் பூ தோட்டம், கனி தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது..

ஆயிரக்கணக்கானோர் வந்தும் போயும் இருந்தனர்… எத்தனை பேர் வந்தாலும் வயிறார சாப்பிட எந்நேரமும் சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தது..

வந்தவர்களை காத்திருக்க வைக்காமல் தொடர்ந்து பந்தி நடந்து கொண்டே இருந்தது….

” இன்னிக்கு என்ன விசேஷம்.. பெரிய வீட்ல தடபுடலா விருந்து நடந்துட்டு இருக்கு.. ” ஒரு புதியதாக அந்த ஊருக்கு வந்த ஒரு வாலிபன் கேட்க,

” அதுவா.. இந்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் நிச்சியம் ஆக போகுது.. அதனால இந்த ஒரு வாரமும் ஊருல இருக்க எல்லாருக்கும் மூணு வேளையும் இங்கதான் சாப்பாடு.. ” என்றார் அந்த ஊர்காரர்.

” என்னங்க இது.. நிச்சியத்துக்கே ஒரு வாரம் சாப்பாடா.. அதுவும் மூணு வேளையும்.. ” என அவர் வியந்து போய் கேட்க,

” ஆமாப்பா.. இது பெரிய குடும்பத்தோட வழக்கம்.. இங்க யாருக்கு கல்யாணம் நடந்தாலும் இப்படி தான் நடக்கும்.. பரம்பரை பரம்பரையா இவங்க இப்படி தான் செய்யறாங்க.. ” என்றார் ஊரக்காரர்.

” ரொம்ப பெரிய விசியம்ங்க இது.. மூத்தவர்கள் செய்யறதை இன்னமும் கடைபிடிச்சு இன்னும் அதே வழிமுறையை கடைபிடிக்கறது எல்லாம் ரொம்ப பெரிய விசியம்ங்க.. இந்த மாதிரி நியூஸ் எல்லாம் வெளியில எல்லாருக்கும் தெரியணும்.. அப்பதான் இதை பார்த்து நாளு பேர் அதை கடைபிடிப்பாங்க.. ” என அந்த வாலிபன்  யோசிக்க,

” ஆமா தம்பி.. என்ன பண்ண போறீங்க.. ” என்றார் அவனை பார்த்தப்படி.

” நான் பத்திரிக்கைகாரங்க.. இங்க நடக்கறதை பேட்டி எடுத்து அதை பத்திரிக்கையில போட போறேன்.. ” என அவன் சொல்ல,

” ரொம்ப சந்தோசம் தம்பி.. உங்கனால எங்க பெரிய ஐயா வீட்டு பத்தி  எல்லாருக்கும் தெரிஞ்சா ரொம்ப சந்தோசம்.” என்றபடி அவர் அங்கிருந்து செல்ல அந்த வாலிபன் அங்கிருந்த ஓரிரெண்டு பேருடன் தனக்கு தேவையான தகவல்களை சேகரித்தவன் வீட்டில் உள்ளவர்களை சந்திக்க உள்ளே சென்றான்.

உள்ளே வீட்டில் அனைவரும் பரபரப்புடன் இருக்க யாரிடம் பேசுவது என தெரியாமல் அவன் முழித்து கொண்டு இருக்க,

” யாருங்க… ” என குரல் கேட்க பின்னால் திரும்பி பார்த்தான் அந்த வாலிபன்.

” யாருப்பா நீ.. உனக்கு என்ன வேணும்.. ” என கேட்டார் அந்த வீட்டின் மூத்த மருமகள் பார்வதி.

பார்க்கவே மங்களகரமாக இருந்த அவரை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டுவன்,

” வணக்கம் அம்மா.. என் பேரு செல்வா.. நான் ஒரு பத்திரிக்கையாளன்.. இந்த ஊரை பத்தி எழுதலானு இங்க வந்தேன்.. இங்க வந்ததும் எல்லோரும் உங்க வீட்டை பத்தி தான் அதிகமா சொன்னாங்க..

இந்த காலத்துலயும் நீங்க பழைய வழக்கங்களை கடைபிடிக்கறத பத்தி சொன்னாங்க..அதுவும் இல்லாம நீங்க எல்லாரும் ஒன்னா கூட்டு குடும்பமா இருக்கறதா எல்லாரும் சொன்னாங்க.. அதான் உங்க வீட்டை பத்தி எழுதுலானு இங்க வந்தேன்.. ” என அவன் சொல்ல அதற்கு சிரித்த அவர்,

” நீ சொல்றது எல்லாம் சரிப்பா.. எங்க குடும்பத்தை பத்தி நீ பத்திரிக்கையில எழுதறன்னு சொன்னது சந்தோசமான விசியம் தான்.. எங்க மாமாகிட்ட இதை பத்தி சொல்லி அவரு சரினு சொன்னா அப்புறம் உனக்கு வேணுங்கறதை செய்.. ” என்ற பார்வதி உள்ளே சென்றவர் சில நிமிடங்களில் வெளியே வந்தவர்,

” மாமா அனுமதி கொடுத்துட்டாருப்பா.. இரு.. ” என்ற பார்வதி,

” சந்தோஷ்.. ” என அங்கு போய் கொண்டிருந்த ஒருவனை அழைக்க,

” சொல்லுங்க பெரியம்மா.. ” என்றபடி வந்தான் அவன்.

அவனிடம் விசயத்தை சொன்னவர், ” இந்த பையனை சாப்பிட வச்சு அனுப்பு.. எனக்கு உள்ள வேலை இருக்கு.. ” என்றுவிட்டு அங்கிருந்து அவசரம் அவசரமாக செல்ல செல்ல அவனை பார்த்து புன்னகைத்த சந்தோஷ்,

” ஹலோ.. ஐம் சந்தோஷ் .. ” என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

” ஹாய் சார்.. ஐம் செல்வா.. எனக்கு இந்த வீட்ல உள்ளவங்கள பத்தி சொல்றிங்களா.. ” என அவன் கேட்க,

“ம்ம் சொல்றேன்.. நீங்க முதல்ல உட்காருங்க.. ” என்றவன் வேலை ஆளிடம் காபி கொண்டு வர சொல்ல இருவருக்கும் காபி வந்தது.

அதை குடித்து முடித்ததும், ” நான் நான் ஆன் பண்ணிக்கறேன் சார்… ” என்றவன் ஆன் செய்ய சந்தோஷ் சொல்ல ஆரம்பித்தான்.

” இந்த வீட்டோட பெரியவர் எங்க தாத்தா தணிகாச்சலம்.. பாட்டி கஸ்தூரி.. எங்க தாத்தாக்கு ரெண்டு பசங்க.. ஒரு பொண்ணு.. முதல்ல எங்க அத்தை.. அவங்க பேர் கமலம்.. அவங்க சில காரணங்களால கல்யாணம் செய்துக்கல.. இங்க எங்க கூட தான் இருக்காங்க.. 

அடுத்து எங்க பெரியப்பா பேர்  சிவராம் பெரியம்மா  பார்வதி. அவங்க பையன் கார்த்திக் மனைவி பிரியா. அவங்க பையன் தீர்த்தகிரி.

பெரியப்பாவோட பொண்ணு ஆதினி..டாக்டரா இருக்கா.. அவளுக்கு தான் இப்ப கல்யாணம் நிச்சியம் பண்ண போறோம்.. “

அடுத்து எங்க அப்பா ஈஸ்வரன். அம்மா கல்யாணி..அவங்களோட மகன் நான்  சந்தோஷ்.. எனக்கு ஒரு தங்கச்சி கீர்த்தி.

என குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி எல்லா சொல்ல அதை ரெகார்ட் செய்து கொண்டவன் வீட்டை சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டவன் அங்கிருந்த புகைப்படத்தில் மாலை போட்டு பொட்டு வைத்து அதன் முன் விளக்கு வைத்து இருப்பதை பார்த்தவன்,

” இதுல இருக்கறது யாருங்க.. ” என கேட்க,

” அது அது… ” என தயங்கியவன்,

” எங்க அக்கா மஹா.. ” என சொல்லியவன் அந்த புகைப்படத்தை பார்க்க அழகாக சிரித்து கொண்டு இருந்தாள் மஹா.

போட்டோவில் இருந்த மஹாவை பார்த்தவன்,” இவங்க.. ” என செல்வா ஏதோ கேட்க வர,

” டேய் முருகா.. ” என தணிகாச்சலம் கத்தும் குரல் கேட்க மொத்த குடும்பமும் அரக்க பறக்க ஹாலுக்கு வந்தது.

இனி என்ன நடக்கும் என ஊகித்த சந்தோஷ் செல்வாவை அங்கிருந்து அனுப்ப அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் செல்வா.

சிங்கத்திற்கு முன் நடுங்கி நிற்கும் முயல் குட்டி போல் முருகன் நடுங்கி கொண்டு இருக்க அவனை எரிக்கும் பார்வை பார்த்த தணிகாச்சலம்,

” என்னது இது.. இதை யார் இங்க வச்சது.. ” என போட்டோவை பார்த்து கேட்க,

” ஐயா அது.. அது.. ” என நடுங்கினான் முருகன்.

” இந்த போட்டோவை இங்க  மாற்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சா.. இதை யார் செஞ்சது.. ” என அனைவரையும் பார்த்து கேட்க,

” நான் தாங்க.. ” என்றார் கஸ்தூரி பயத்தை மறைத்து கொண்டு.

அவரின் அருகில் சென்ற தணிகாச்சலம், ” நீதான் வச்சியா.. ” என மறுபடியும் கேட்க,

” ஆமாங்… ” என அவர் சொல்லி முடிப்பதற்குள் தணிகாச்சலம் அவரை ஓங்கி அறைய அனைவரும் அதிர்ந்து போயினர்.

” அப்பா.. ” என சிவராம் அவரை தடுக்க போக,

“என்னை விடுடா.. யாரும் பேச கூடாது.. ” என அவரை எச்சரித்தவர்,

” நீ சொல்லு.. எதுக்கு இந்த போட்டோவ இங்க மாட்டுன.. இவள பத்தியோ.. இல்ல இவ சம்பம்தப்பட்ட விசயமோ எதுவுமே என் கண்ணுல படக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல.. அப்படி இருக்கப்ப இதை ஏன் செஞ்ச.. சொல்லு..” என கஸ்தூரியை முறைத்தபடி கேட்க,

” இன்னிக்கு மஹாவோட நினைவு நாளுங்க.. அவ இறந்து இன்னியோட வருஷம் ஆகுது.. அதான்.. ” என்றார் கண்கள் கலங்க.

” அதுக்கு.. அவ எப்ப என் பேச்சை மீறி இங்க இருந்து போனாளோ அப்பவே அவ செத்து போயிட்டா.. என்னை பொறுத்த வரைக்கும் செத்து போயி பல வருஷம் ஆகுது.. எனக்கு பண்ணுன நம்பிக்கை துரோகதுக்கு தான் கடவுள் இந்த தண்டனைய கொடுத்திருக்காரு.. ” என துளியும் இரக்கம் இல்லாமல் தணிகாச்சலம் பேச,

” ஏங்க இப்படி எல்லாம் சொல்றிங்க.. அவ நாம பெத்த பொண்ணுங்க.. அவளை இப்படி சொல்லாதீங்க.. ” என கதறி அழுத கஸ்தூரி அப்படியே மயங்கி சரிய மொத்த குடும்பமும் அதிர்ந்து போய் நின்றது

    No comments yet.