Bn – 1
அழகான விடியல்… குளிரான காற்று… மேகம் மூடிய வானம்… முகம் காட்ட துடிக்கும் சூரியன்…. அந்த சூரியனுக்குள் தன்னை புதைந்து கொண்டிருக்கும் வெண்ணிலா என இயற்க்கை அழகு தாண்டவம் ஆட ரம்மியமாக காட்சியளித்தது ஊட்டி…
பல அடுக்குமாடிகளை கொண்ட அந்த “ SS castle “அப்பார்மெண்ட்டில் குடி இருந்தவர்கள் எல்லாரும் காலில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டு இருக்க ஒரு பிளாட்டில் இருந்து மட்டும் அந்த இனிமையான பாட்டு சத்தம் கேட்டது.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக..
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக.
கண்களில் கண்ணீருடன் சஷ்டி கவசத்தை பாடி முடித்த பிருந்தா விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டவள் முருகன் படத்தையே பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
பூஜையை முடித்து சாமி கும்பிட்டு வெளியே வந்தவள் தலைக்கு குளித்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தவள் முடியை உலர்த்தி அந்த அடர்ந்த நேர்த்தியான முடியை கிளிப்பில் அடக்கியவள் அடுத்து இயந்திரம் போல் ஒவ்வொரு வேலையாய் செய்து முடித்தாள்.
நேரம் ஆவதை உணர்ந்தவள், “ டைம் என்ன ஆகுது.. இன்னும் எழுந்திரிக்கல.. லேட்டா எழுந்திரிக்க வேண்டியுது.. அப்புறம் அவசரம் அவசரமா கிளம்ப வேண்டுயது.. அம்மு… அம்மு… “ என பிருந்தா கத்த எந்த பதிலும் வராததை உணர்ந்தவள் வேகமாய் பெட்ரூமுக்கு சென்றாள்.
பொம்மைகளுக்கு இடையில் ஒரு பொம்மை போல் தூங்கும் தன் மகளை எப்பொழுதும் போல் ரசித்து பார்த்தவள் நேரம் ஆவதை உணர்ந்து அவள் அருகே அமர்ந்தாள்.
“ அம்மு.. அம்மு.. எழுந்துருடா.. “ என பிருந்தா அவளது முதுகில் மெல்ல தட்ட மெல்ல அசைந்து கொடுத்தவள் எழுந்திரிக்கவில்லை.
“ என் தங்கம்ல.. அம்முக்குட்டில்ல.. என்னோட வைரக்கட்டில்ல.. எழுந்திரிடா.. “ என பிருந்தா கெஞ்ச,
“ அம்மா.. ப்ளீஸ்மா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேனே.. “ என சிணுங்கினாள் ஆறு வயது வெண்பா.
“ என்ன இன்னும் கொஞ்ச நேரமா.. டைம் ஆச்சுடா.. ஸ்கூல் வேன் வந்துரும்.. உன்னை அனுப்பிட்டு அம்மா ஒர்க் போகணும்லடா.. இன்னிக்கு வேற சீக்கிரமே கிளம்பனும்டா.. ப்ளீஸ் குட்டிம்மா.. “ என பிருந்தா கெஞ்ச அவ்வளவு தான் உடனே எழுந்து கொண்டாள் அவளின் அம்மு.
“ சாரிம்மா.. நானும் சீக்கிரம் எழனுன்னு நினச்சுதான் நைட் படுக்கறேன்.. ஆனா தூக்கம் தூக்கமா வருதும்மா.. சாரி.. “ என வெண்பா அரை தூக்கத்தில் சொல்ல அவளது நெற்றியில் முத்தமிட்ட பிருந்தா அவளை பார்த்து சிரித்தாள்.
“ என் தங்கம்.. பரவாயில்லடா.. சரி ஓகே சீக்கிரம் பிரெஷப்பாகிட்டு வெளியே வா.. அம்மா உனக்கு குடிக்க பால் எடுத்து வைக்கிறேன்.. ம்ம்.. “ என்ற பிருந்தா எழுந்து வெளியே செல்ல வெண்பா பெட்டில் இருந்து கீழே இறங்கியவள் நேராக பாத்ரூம் சென்றாள். ஆறு வயது தான் என்றாலும் அவளது வேலை அனைத்தையும் அவளையே செய்ய பழக்கி இருந்தாள் பிருந்தா.
காலிங் பெல் அடிக்வும் கையை கழுவிக்கொண்டு அவள் வேகமாய் சென்று கதவை திறந்தாள். வெளியே சிரித்த முகத்துடன் நின்றிருந்த வசந்தாவை பார்த்ததும் அவளது முகத்திலும் அந்த சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
“ வாங்கம்மா.. உள்ள வாங்க.. “ என்ற பிருந்தா உள்ளே செல்ல வசந்தாவும் கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் உள்ளே சென்றார்.
“ காபி போடட்டுமா.. “
“ இல்லம்மா.. அதெல்லாம் வேண்டாம்.. வீட்ல இன்னும் வேலை முடியல.. இதை உன்கிட்ட கொடுத்துட்டு போலாம்னு தான் வந்தேன்.. “
“ என்னமா இது.. “
“ அது நேத்து வெண்பா குட்டி பால் கொல்கட்டை கேட்ருந்தா.. நான் இன்னிக்கு செஞ்சு கொடுக்கறேன்னு சொல்லிருந்தேன்.. அதான் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்மா.. “
“ ஐயோ என்னமா.. உங்களுக்கு எதுக்கு சிரமம்.. வெண்பா உங்கள ரொம்ப சிரமப்படுத்தறா.. சாரிம்மா.. “ என பிருந்தா சொல்ல விரக்தியுடன் சிரித்தார் வசந்தா.
அவரின் மனநிலை அறிந்த பிருந்தா, “ சரிம்மா.. நீங்க கொடுங்க.. நான் கொடுத்தறேன்.. நான் பூரி செஞ்சேன்.. உங்களுக்கும் அப்பாவுக்கும் சேர்த்து தான் செஞ்சேன்.. நானே கொண்டு வரலாம்னு இருந்தேன்.. நீங்களே வந்துட்டீங்க.. இருங்கம்மா.. “ என்றவள் அவரின் பதிலை கூட கேக்காமல் கிட்சன் செல்ல வசந்தாவும் உரிமையுடன் கிட்சன் சென்றார்.
ஏற்கனவே பேக் செய்திருந்த ஹாட் பேக்கை எடுத்தவள், “ இந்தாங்கம்மா.. சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. “ என கொடுக்க அதை வாங்கிய வசந்தா,
“ உன்னோட சமையல் எப்படி இருக்குனு சொல்லவா வேணும்.. உங்க அப்பா உன்னோட சமையல எப்பவும் புகழ்ந்துட்டே தான் இருப்பாரு.. “ என சிரிக்க பிருந்தாவும் சிரித்தாள்.
“ குட் மார்னிங்ம்மா.. குட் மார்னிங் பாட்டி.. “ என சொல்லிக்கொண்டே வெண்பா அங்கு வர இருவரும் அவளை பார்த்து சிரித்தனர்.
“ என்ன பாட்டி.. இன்னிக்கு எனக்கு பால் கொல்கட்டை செஞ்சு தரேன்னு சொல்லி இருந்திங்க.. உங்களுக்கு அது நியாபகம் இருக்கா.. “ என பெரிய மனுஷி போல் இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்க,
“ நீ கேட்டு இந்த பாட்டி செய்யாம இருப்பேனா.. அதெல்லாம் செஞ்சு எடுத்துட்டு வந்து உன் அம்மாகிட்ட கொடுத்துட்டேன்.. நீ சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லு.. “ என்றார் வசந்தா.
“ அம்மு.. என்னது இது.. பாட்டிய எதுக்கு கஷ்டப்படுத்தற.. உனக்கு எதாவது வேணும்னா என்னை கேக்க வேண்டியது தான.. “ என பிருந்தா கடிந்துகொள்ள,
“ பால் கொல்கட்டை செஞ்சு தர சொன்னா நீ செஞ்சே தரமாட்ட.. அதான் நான் பாட்டிகிட்ட கேட்டேன்.. “ என்றாள் அவள்.
““ நீ செய்யற இந்த பால் கொல்கட்டைக்கு என் வாழ்க்கை பூராவும் உனக்கு நான் உனக்கு அடிமையா இருப்பேன்.. “”
பிருந்தா காதருகே அந்த குரல் கேட்கவும் சட்டென அவளது கண்கள் கலங்கியது. வெண்பாவின் குரலில் தன்னிலை அடைந்தவள் கலங்கிய கண்களை யாரும் பார்க்காதவாரு அதை துடைத்துக்கொண்டாள்.
“ சரிம்மா.. அப்பாவுக்கு நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. வரேன் குட்டிம்மா.. “ என்ற வசந்தா அங்கிருந்து செல்ல வெண்பா பால் கொல்கட்டையை ருசி பார்க்க ஆரம்பித்தாள்.
“ அம்மா கொல்கட்டை சூப்பரா இருக்கும்மா.. நீ சாப்பிட்டு பாரு.. “ என்ற வெண்பா அவளுக்கு ஊட்டிவிட போக,
“ இல்ல வெண்பா.. எனக்கு வேண்டாம்.. எனக்கு இது பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா என்ன.. அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க.. “ என கோபமாய் கேட்டாள் பிருந்தா.
அவள் கோபத்தை பார்த்ததும் வெண்பாவின் முகம் உடனே வாடிப்போக அதை பார்த்த பிருந்தாவுக்கு அவள் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது. உடனே வெண்பாவை பார்த்து சிரித்தவள்,
“ சாரிடா தங்கம்.. அம்மா வேற ஏதோ ஒரு டென்ஷன்ல இப்படி எல்லாம் பேசிட்டேன்.. சாரிடா.. “ என சொல்ல,
“ நானும் சாரிம்மா.. உனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நான் ஊட்ட வந்தது தப்புதான.. சாரிம்மா.. “ என வெண்பா சொல்ல உடனே அவளை அணைத்துக்கொண்டு அழுதாள் பிருந்தா.
அவளின் கண்ணீரை துடைத்த வெண்பா, “ நீ அழாதம்மா.. இனி நீ கஷ்டப்படற மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன்.. “ என அவளின் கழுத்தை கட்டிக்கொள்ள பிருந்தாவும் தன் ஆருயிர் மகளை அணைத்துக் கொண்டாள்.
“ சரிடா.. நீ அதிகம் சாப்பிட வேண்டாம்.. நான் உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம் வா.. இன்ஜெக்ஷன் போடணும்ல.. “ என்ற பிருந்தா அவளை சாப்பிட அழைத்து சென்றாள். வெண்பா சாப்பிட்டு முடித்ததும் கையோடு அவளுக்கு அந்த இன்ஜெக்ஷனை போட்டு விட்ட பிருந்தா அடுத்து அவள் சென்று ரெடியாகி வந்தாள்.
நேர்த்தியாக கட்டிய காட்டன் புடவை.. நெற்றியில் ஒரு சிறிய கருப்பு பொட்டு.. கழுத்தில் மெல்லிய தங்க செயின் ஒரு கையில் வாட்ச் ஒரு கையில் மெல்லிய பிரேஸ்லெட்.. என எளிமையான அலங்காரத்தில் தேவதையாக கிளம்பி வந்தாள் பிருந்தா.
வீட்டை பூட்டிவிட்டு வெண்பாவை அழைத்துக்கொண்டு பிருந்தா அங்கிருந்து கிளம்ப வசந்தா எப்பொழுதும் போல் கையசைத்து
அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தார்.
பிருந்தா 27 வயது மங்கை.. பிறை நெற்றி.. வில் போன்ற புருவம்.. சுண்டி இழுக்கும் நிறம்.. அவளை கடந்து செல்பவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் முக அமைப்பு.. இந்த 27 வயதிற்குள்ளேயே அவள் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் அனுப்பவித்து இருந்தாள்..
ஒரு கட்டத்தில் தனக்காக யாரும் இல்லை என வாழ்க்கையை வெறுத்து உயிரை மாயித்துக்கொள்ள நினைக்கும் பொழுது நான் இருக்கேன் என வரமாய் உதித்தவள் தான் வெண்பா. யாருமே இல்லை என நினைத்தவளுக்கு எல்லாமாவாக ஆனாள் வெண்பா.. அதேபோல் வெண்பாவுக்கும் எல்லா உறவுமாக இருந்தாள் பிருந்தா..
பிருந்தா வாழ்க்கையில் நடந்தது என்ன..?? அவளது இந்த நிலைக்கு யார் காரணம்..?? விதி இனி அவளுக்கு என்ன செய்ய காத்திருக்கிறது.?? என்பதை கதையில் காணலாம்.
No comments yet.