இளஞ்சேரன், தன் கனவில் நிகழ்ந்ததை வாய் மொழியாக கூற… அதை கேட்ட நிலா அதிர்ச்சியில் உறைந்தாள்.
தன் நண்பன் கூறியதை கேட்ட சேதுவிற்கு உலகமே சுழல்வது போல் தெரிய… இசை மயங்கியே விழுந்தாள்.
“அடியேய்… அரசி… எந்திரிடி….. இவனுக ஓவர் ஸ்பீடா போறானுக…. எனக்கும் மயக்கம் வரும் போல… நானும் உன் மேல மயங்கி விழுறேன்…. “என கூறியவாறு இசை மீது மயங்கி விழ சேது முயற்சிக்க… “சாத்தானே…. என் மேல விழுந்த செத்த டா… “என அவனை மிரட்டியவாறு எழுந்து நின்றாள் இசை.
“ம்க்ஹூம்…. நாம கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம் னு நினைச்சா விடுறாளா ராட்சசி… சரியான மடச்சாம்ராணி… ” என இசையை மனதிற்குள் வறுத்து எடுத்தான்.
“என்ன அங்க முனுமுனுப்பு? “என இசை புருவத்தை உயர்த்த… “அதான் வெளில கேட்டுருச்சுல… அப்புறம் என்ன கேள்வி? “என்றான் சேது.
சேதுவை முறைத்துக்கொண்டு இசை, நிலாவை பார்க்க… அவள் நின்ற நிலையில் இருந்து மாறாமல் இளாவை இமை அசைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள்.
நிலாவின் நிலையை உணர்ந்த இளா, அவனின் சேரநிலாவை பார்த்து கண்ணடிக்க, அதில் சுய உணர்வு பெற்றவள், “உங்களுக்கு எப்படி தெரியும்? ” என பூவினும் மெல்லிய குரலில் கேட்டாள் நிலா.
“அப்ப நான், நைட் உன் கனவுல வந்தேனா பொண்டாட்டி? ” என கண்கள் மின்ன இளா கேட்க, நிலா வாயடைத்துப்போனாள்.
“இல்லை…. அதெல்லாம் ஒன்னுமில்லை…நீங்க வரல….” என நிலா கேவலமாக சமாளிக்க, ” அப்புறம் எப்படி பொண்டாட்டி, உங்களுக்கு எப்படி தெரியும் னு கேட்ட….” என குறும்பு கொப்பளிக்க கேட்டான் இளா.
“ஜஸ்ட்…ஷட் அப்…..நான் ப்ராக்டிஸ் பண்ண போறேன்….” என நிலா, தன் படபடப்பை மறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
“நைட் நான் உங்க வீட்டுக்கு வந்தேன் டி…செம க்யூட்டா தூங்குன….தூக்கத்துல கூட என் பேர தான்…அதுவும் சேரா னு செல்ல பேரு வேற வச்சு கூப்பிடுற…. “என சென்று கொண்டிருந்த நிலாவை நோக்கி உற்சாக குரல் கொடுத்தான் இளா.
இளா கூறியது காதில் விழுந்ததும் இதயத்தின் ஒரு ஓரத்தில் புன்னகை ததும்பினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பி நின்று இளாவை முறைத்தாள் நிலா.
“நீ முறைச்சாலும் எனக்கு ப்ளையிங் கிஸ் குடுக்குற மாதிரி தான் இருக்கு மை டியர் பொண்டாட்டி… ” இளா.
” ம்ம்….கண்ணுல காலாரா வந்துருக்க போகுதுடா கபோதி….”என மெல்லிய குரலில் சேது முனுமுனுக்க….” ஹி ஹி….மச்சான்…நீ பேசுறது கேட்டுருச்சு… உன்னைய அப்புறம் வச்சுக்கிறேன்….”என சேதுவின் தோளை அமுக்கியவாறு அவனிடம் கூறிவிட்டு ,”நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே….இந்த பிரச்சனைய நான் முடிச்சுட்டா… நான் என்ன சொன்னாலும் செய்வியா நிலா…”என இளா, நிலாவை நோக்கி கூறினான்.
“நீங்க ஏன் நைட் என் வீட்டுக்கு வந்தீங்க? ” என கண்களில் அனலை கொண்டு வர முயற்சித்து அதில் தோல்வியுற்று சாதாரணமாக கேட்டாள் நிலா.
” அது ஒன்னுல்ல பொண்டாட்டி….நான் பாட்டுக்கும் உன்னைய பொண்டாட்டி னு சொல்லிட்டு வந்துட்டேன்… உன்னோட ரிப்ளக்ஷன நான் பாக்கனும்ல….அதான் நைட் உன் ரூம்க்கும் வெளில நின்னு ஜன்னல் வழியா உன்னைய பாத்தேன்….பாத்தா… மேடம் தூக்கத்துல தேங்க்யூ சொல்லுறீங்க… சிரிக்கிறீங்க…தூக்கத்துல கூட சேரா னு என் பேரு தான் சொல்லுறீங்க… அப்பவே கன்பார்ம் பண்ணிட்டேன்….இந்த இன்பநிலா ,சேரநிலா ஆகிட்டா னு…. உன் கிட்ட போட்டு வாங்கலாம் னு தான் சும்மா சொல்லி பாத்தேன்… அது எப்படி உங்களுக்கு தெரியும் னு கேட்டு நீயே கன்பார்ம் பண்ணிட்ட….” என கண்களில் குறும்பு மிளிர நிலாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் அவளின் அருகில் சென்று கூறினான் இளா.
அவன் கூறிய செய்தியும் அவனின் அருகாமையும் உள்ளுக்குள் ஏதோ செய்ய, “நான்….நான்… ப்ராக்டிஸ் பண்ண போறேன்…..”என திக்கி திணறி கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் நிலா.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஓடுற….வேலைய முடிச்சுட்டு உன் கிட்ட வந்து கேக்குறேன்…..நல்லா ப்ராக்டிஸ் பண்ணு பொண்டாட்டி… நாளைக்கி மேட்ச் பாக்க மாமன் வருவேன்….ஆல் தி பெஸ்ட்… ” என இளா உரக்க கத்தி சொல்ல…நிலா அவன் கண்களில் இருந்து ஓடி மறைந்தாள்.
“என்ன அண்ணா… என் நிலாவ ஒரே நாளுல இப்பிடி மாத்திட்டீங்க…” என ஆச்சரியத்துடன் இசை, இளாவிடம் வினவினாள்.
“எல்லாம் காதல் செய்யும் மாயம் தங்கச்சிமா…. அவள வாய் விட்டு சிரிக்க வைக்கிறேன் பாரு….அப்புறம்…..அவ என் நிலா தங்கச்சிமா… எனக்கு மட்டும் தான்… சரியா? இல்ல…..???” இளா.
” எதேய்… உன் நிலாவா? உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவேன்… என்ன பயமுறுத்திறியா? நீ போலீஸ் னா… இந்த இசையரசி பயந்துருவாளா? பிச்சுப்புடுவேன் பிச்சு….என்கிட்ட வம்பு இழுத்த….அப்புறம் உன் காதல்ல ரெண்டு லாரி மண் அள்ளி போட்டுருவேன் பாத்துக்க… ” என இசை, இளா விடம் சண்டைக்கு போனாள்.
“நீயா பேசியது….என் அன்பே…நீயா பேசியது….” என நெஞ்சில் கை வைத்து கொண்டு இளா நடிக்க… ” அட கண்ணு தெரியாத குருட்டு பயலே… நான் தான் டா பேசுனேன்… உங்க காதோல் கண்ண மறைச்சுருச்சோ? ” இசை.
“என்னமா இப்பிடி பேசுற? அண்ணன் மா… ” இளா.
“அண்ணனாவது ஆட்டுக்குட்டியாவது… ஸ்நாக்ஸ் வாங்கி தராத எந்த அண்ண காதலையும் ஜெயிக்க விட மாட்டா இந்த இசையரசி….” இசை.
“ப்பூ… ஸ்நாக்ஸ் தான? எவ்ளோ வேணும் என்ன வேணும் னு சொல்லு… அண்ண நாளைக்கி மேட்ச் பாக்க வர்றப்ப வாங்கிட்டு வர்றேன்… நாம ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே மேட்ச் பாக்கலாம்….இதுக்காக அண்ண வாழ்க்கைல லாம் விளையாட கூடாது…சரியா? “இளா.
அதுவரை அவர்களது உரையாடலை தலையில் கை வைத்து அமர்ந்து கவனித்து கொண்டிருந்த சேது, “டேய் மாப்ள…வீணா வார்த்தைய விடாத…..இவளுக்கு எவ்வளவு வாங்கி குடுத்தாலும் பத்தாது….அனுபவசாலி சொல்லுறேன்… பொழச்சுக்க… ” என்றான்.
“அந்த ஆள் கிடக்குறான்….நீங்க வாங்கிட்டு வாங்க அண்ணா….என் நிலாவ நான் உங்களுக்கு தாரேன்…..”இசை.
“எதேய்….அந்த ஆளா???? உலகத்துலயே ஸ்நாக்ஸ்க்கு ப்ரண்ட விக்கிறவ நீ ஒருத்தியா தான்டி இருப்ப… “சேது.
அதை கேட்ட இசை, சேதுவை தீயாய் முறைக்க…” அவன் கிடக்குறான் பொறாமை புடிச்சவன்…உனக்கு மட்டும் ஸ்நாக்ஸ் வாங்கி தாரேன் …அவனுக்கு வாங்கி குடுக்குறேன் னு சொல்ல ல ங்கிற வயித்தெறிச்சல்ல பேசுறான் மா… நாளைக்கி ஸ்நாக்ஸோட வாரேன்….மேட்ச் பாக்குறோம்…நாளைக்கி ஊருக்குள்ள நிறைய வேலை இருக்கு… நான் கிளம்புறேன் தங்கச்சிமா….மறைகலண்ட மச்சான்… வாடா கிளம்பலாம்….” இளா.
அதை கேட்ட இசை, சேதுவை பார்த்து “தூ….” என துப்பிவிட்டு இளாவிற்கு டாட்டா காட்டினாள்.
“அச்சோ….மாப்ள, மைண்ட் வாய்ஸ கரெக்ட்டா கண்டுபுடிச்சுட்டானே…”என நினைத்துக்கொண்டு வெளியே, துப்பிய இசையை பார்த்து அசடு வழிய இளாவின் பைக்கில் ஏறி புறப்பட்டான் சேது.
அவர்கள் சென்றதும் இசையும் தன் இல்லத்தை நோக்கி தன் சைக்கிளை உருட்டி கொண்டு புறப்பட்டாள்.
நிலா ஒரு வழியாக ப்ராக்டிஸ் முடித்துவிட்டு அப்பிடியே கல்லூரிக்கும் சென்று விட்டு உடல் அயர்ச்சியுடன் வந்து வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.
“வாடி… அல்லிராணி… உன் ஆத்தா காலையில என்ன சொன்னா? அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்…. அடங்கி வீட்ல இரு னு தான சொன்னா? நீ என்னமோ அவுத்து விட்ட காளை கணக்கா சுத்திட்டு வர்ற? ” என அலமேலு நிலாவை வரவேற்றார்.
எதுவும் கூறாமல் அமைதியாக உள்ளே நுழைய முயன்ற நிலாவை வள்ளி பிடித்து நிறுத்தினாள். “என்னடி… உன் பாட்டி தொண்டை வலிக்க கத்திட்டு இருக்கு… எவனுக்கோ விருந்துங்கிற மாதிரி நீ பாட்டுக்கும் உள்ள போற? உன் கிட்ட பேசுற நாங்க என்ன கிருக்கச்சிளா? “வள்ளி.
நிலா அப்பொழுதும் வாயை திறக்காமல் இருக்க… “டேய் அபி… அத எடுத்துட்டு வாடா… சூடு போட்டா தான் இவளுக்கு நம்ம மேல பயம் இருக்கும்… சொல்லுறதையும் கேப்பா.. “அலமேலு.
நெருப்பில் காய்ச்சிய இரும்பு கம்பியை அபி எடுத்து வந்து அலமேலு விடம் அளிக்க…..,” இனி ஒழுங்கா அடங்கி வீட்லயே கிடக்கனும்….இல்ல….இதான் கதி….” என கூறியவாறு அலமேலு நிலாவின் கையில் சூடு வைத்தார்.
பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த போதும், ஆடாமல் …அசையாமல் …ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாமல் …முகத்தில் சிறு சுணக்கம் கூட காட்டாமல்…. எப்பொழுதும் போல் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு நின்றாள் நிலா.
அவளின் அந்த இறுகிய நிலையை கண்டு அவளின் குடும்பமே அதிர்ந்து நின்றது.
எல்லாரையும் பார்த்தவள், மெதுவாக தன் திருவாய் மலர்ந்தருளினாள்…. ” என்ன பாக்குறீங்க….சாதிக்கனும் ங்கிற என் வெறிக்கு முன்னாடி இந்த இரும்பு கம்பியோட சூடு லாம் இந்த சேரநிலாக்கு சாதாரணம் தான்….அத்தோட உங்க வார்த்தைகளோட அனல விட இது கம்மியா தான் இருக்கு…..இந்தாங்க…..இந்த கையிலயும் சூடு வைங்க….உங்க வெறி தணியிற வரைக்கும்….” என நிமிர்வுடன் கூறியபடி நிலா மறுகையையும் நீட்டினாள்.
நிலாவின் உறுதியை கண்டு அனைவரும் எச்சில் கூட விழுங்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அனைவரும் அமைதியாக நிற்கவும், நிலா மெதுவாக அங்கிருந்து தனது அறைக்கு நிமிர்ந்த நடையுடன் சென்றாள்……
அகிலமே எதிர்த்தாலும்
அணு அளவும் சிதறமாட்டாள்
அவளவன்
அவளுடன்
அவளுக்கென இருக்கையில்….
மாவலியையும் தாங்கும்
மாசக்தியை பெறுவாள் தன்
மன்னவனின் ஒற்றை பார்வையில்…
தன்னவனின் ஒற்றை நினைவு போதும்
தணலிலும் முக்குளிப்பாள் பேதை…
(சேரநிலா மிளிர்வாள்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.