அத்தியாயம் -05

Chellammal Bharathi | 19 Nov 2025 | Share

      கல்லூரி சென்றவர்களை வழி மறித்து நிலாவிடம் இளஞ்சேரன் காதல் வசனம் பேசி செல்ல, அவன் கூறிய மற்ற வார்த்தைகளை மறந்து அவன் போலீஸ் என்ற ஒற்றை வார்த்தையிலேயே நிலைத்தது நிலாவின் மனம்.

       “இவன் அன்னைக்கி ப்ளேயர் னு சொன்னான்…. இப்ப போலீஸ் னு சொல்லிட்டு போறான்…. இவன் மூஞ்சியும் எங்கேயோ பாத்த மூஞ்சி மாதிரி தான் இருக்கு… ஆனா எங்க னு தான் ஞாபகம் வர மாட்டேன்ங்குது…. ஒரு வேளை இவன் உண்மையிலே போலீஸா இருந்தா ….அப்போ…. ” என நினைத்த நிலாவின் மனம் எதிர்த்த வீட்டை நினைத்து பல மனக்கணக்கை போட்டது .

         தன் நினைவலையில் இருந்து வெளிவந்த நிலா, தன் தோழி இசை யை பார்க்க…..அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்.

      “ஹே….என்னடி…க்ளாஸ்க்கு டைம் ஆச்சு…சைக்கிள எடு…கிளம்பலாம்…” என நிலா இசையை அதட்டினாள்.

      இளஞ்சேரன் நிலாவிடம் பேசி சென்ற பொண்டாட்டி என்ற வார்த்தையில் உறைந்த நின்ற இசை, அவனின் வார்த்தையை கேட்டும் அமைதியாக சாதரணமாக இருக்கும் நிலாவை பார்த்தவள் இன்னும் அதிர்ச்சியானாள் இசை.

        அசையாமல் நகராமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த இசையை கண்ட நிலா, “ஹே… அரமெண்டல்… என்ன ஆச்சு? என் மூஞ்சில ஏதாவது ஒளிவட்டம் தெரியுதா என்ன? “என்றாள்.

         “ஆங்… ஒன்னும் இல்லை… அந்த ஆளு அந்த பேச்சு பேசிட்டு போறான்… நீ இப்படி அமைதியா இருக்க? ” இசை.

         “அந்த ஆளா? மரியாதை… மரியாதை… அப்படி அவரு என்ன பேசிட்டு போறாரு? ” நிலா.

          “அடி ஆத்தி… நிலாவா இது… என்ன பேசுனாரா? அவரு அசால்ட்டா பொண்டாட்டி னு சொல்லிட்டு போறாரு… நீ இப்படி அமைதியா நிக்கிறா? இந்நேரம் நிலா பொங்கி இருக்கனுமே? ” இசை.

          ” அவரு அப்பிடியா சொன்னாரு? நாம அவர நாளைக்கி தூக்கி போட்டு புரட்டி எடுத்துறலாம் ….இப்ப, நீ வாடி தங்கம் நாம க்ளாஸ்க்கு போலாம்… ” நிலா.

            “இது சரியில்லை… பாத்துக்கிறேன்டி…. ம்ம்… சரி… சைக்கிள எடு….ஃபேன் காத்துல, தாலாட்டு பாட்டோட தூங்கலாம்… கிளம்பு… கிளம்பு…. ” இசை.

           “தாலாட்டு பாட்டா?  உனக்கு மட்டும் யாரு பாடுறது? ” நிலா.

           “வேற யாரு…. உன் பேவரைட் புரபஸர் தான்…. பாடமா எடுக்குறாரு? அவரு பத்து அம்மாக்கு சமம்… என் அம்மா கூட சின்ன வயசுல இப்பிடி என்னைய சுகமா தூங்க வச்சது இல்ல…. வார்ரே வாவ்… இன்பமடா அது… ”  என்று கூறிய இசை , அடுத்த நொடி தன் சைக்கிளில் பறந்தாள்…. அதற்கு பிறகும் அங்கு நின்றால் நிலாவிடம் இருந்து தனக்கு அடி உதை நிச்சயம் என்பதை நன்கு தெரிந்தவளாயிற்றே இசை.

         “கழுதை…. ஏய் நில்லுடி….. இரு வர்றேன்… ” என கூறியவாறு இசையை தன் சைக்கிளில் துரத்தினாள்.

          “ஈ கூட உன் கையில சிக்கும்… இந்த இசை சிக்க மாட்டா டி தி க்ரேட் கிரிக்கெட்டர் நிலா…. ” என கலகலவென நகைத்தவாறு இசை கண்சிமிட்டும் நேரத்தில் நிலாவின் கண்ணில் இருந்து மறைந்தாள்.

        இருவரும் துரத்தி விளையாடி கொண்டு ஒரு வழியாக கல்லூரியை அடைந்தனர்.

        இருவரும் ஒன்றாக பேசி கொண்டே வகுப்பிற்குள் நுழைவதை கண்ட மற்ற மாணவர்கள் சற்று ஒதுங்கி கொண்டனர் .நிலாவிடம் இருந்து எப்போதும் அனைவரும் சற்று ஒதுங்கியே இருப்பர். அவளின் புன்னகை இல்லாத சிடுமூஞ்சியும்.. குட்டையான உருவமும் …அவளின் முரட்டுத்தனமும் அனைவரையும் நிலாவிடம் இருந்து சற்று தள்ளியே நிறுத்தி இருந்தது இசை ஒருத்தியை தவிர …

          சற்று நேரத்தில் வகுப்பும் ஆரம்பிக்க… வழக்கம் போல இசை சொர்க்க லோகத்தில் பயணிக்க ஆரம்பித்தாள். சொர்க்கலோகத்தில் இருந்து சற்று தடுமாறி பாதாள லோகத்தில் விழுந்ததின் விளைவாக கண் முழித்து தன்னை யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தாள். எவரும் தன்னை கவனிக்கவில்லை என உறுதி படுத்தி கொண்டவள், மீண்டும் சொர்க்க லோகத்தை நோக்கி பயணிக்க கண்ணை மூட போனவள் நிலாவின் யோசனை படிந்த முகத்தை கண்டு அவளின் தோளை தட்டினாள் இசை.

        இசை,  இரண்டு முறை தட்டிய பிறகு தான் சுய நினைவிற்கு வந்தாள் நிலா.

         “என்ன? ” என சைகையாலயே நிலா வினவ… “உனக்கு என்ன ஆச்சு? “என சைகையாலயே இசை ,நிலாவிடம் கேட்டாள்.

       “ஒன்றுமில்லை ” என தலையை ஆட்டி விட்டு வகுப்பை கவனிக்க ஆரம்பித்தாள் நிலா.

        “இவள….. இருடி…. இந்த தாத்தா வெளில போகட்டும்…. தாத்தா… சீக்கிரம் க்ளாஸ முடி… “என மனதிற்குள் தன் புரபஸரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் இசை.

       சிறிது நேரத்தில் புரபஸர் தன் வகுப்பை முடித்து விட்டு வெளியே சென்றதும் நிலாவை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் இசை.

        “என்னடி? நாளைக்கழிச்சு நடக்கப்போற மேட்ச்ச பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? “என நிலாவை முறைத்துக்கொண்டு கேட்டாள் இசை.

        “ப்ச்… அதெல்லாம் ஒன்னுமில்லை… “நிலா.

         “வீட்ல உள்ளவங்கள பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? ” இசை.

          “நான் ஏன்டி அவங்கள பத்தி யோசிக்க போறேன் ” நிலா.

           “அப்புறம் எத தான் இந்த மூளை இல்லாத மண்டைக்குள்ள போட்டு உருட்டிட்டு இருக்க? ” இசை.

         அதை கேட்ட நிலா, இசையை தீயாய் முறைத்தாள். “முறைக்காதடி… உன் மூஞ்சியே சரி இல்லை…..என்ன பிரச்னை இப்ப? ” இசை.

          “அது…..என் எதிர்த்த வீட்ட பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்…” நிலா.

          ” எது…அந்த சாராய கடைய பத்தியா? அத பத்தி நீ ஏன் யோசிக்கிற பக்கி? நமக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…இங்க உன் வீட்டு பிரச்சனையே டேங்கர் லாரி ல அள்ளுற மாதிரி இருக்கு….இதுல ஊருல நடக்குறத பத்திலாம் நீ யோசிக்காத…..அடுத்த வாரம் மாவட்ட அளவுல நடக்குற கிரிக்கெட் செலக்சன் இருக்கு… ஞாபகம் இருக்கு ல உனக்கு? ” இசை.

        “அதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு….ஏன்டி எல்லாரும் இப்பிடி நினைச்சா இந்த ஊரு என்னடி ஆகுறது? தினம் தினம் எதிர்த்த வீட்டில இருந்து பாத்துட்டு இருக்கேன்….ஸ்கூல் படிக்கிற பசங்க கூட வர்றாங்க டி… இதுல அது பொண்ணுங்களுக்கும் சப்ளை ஆகுது னு கேள்விபட்டேன்.. எப்பிடி என்னய சும்மா இருக்க சொல்லுற? ” நிலா.

         “என்ன மச்சி சொல்லுற? பொண்ணுங்களுக்குமா? ” இசை.

         “ஆமா டி…..ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்களுக்கு….” நிலா.

         “உன்னால என்ன பண்ண முடியும் சொல்லு? ஏற்கனவே போலீஸ் கிட்ட போய் தான் அரெஸ்ட் ஆன 24 மணி நேரத்துக்குள்ள வெளில வந்து…..அந்த வீட்டுக்காரன் உன்னைய அசிங்க அசிங்கமா கேட்டு பிரச்சினை பண்ணுனானே…. அதுல உன் வீட்ல உள்ள பிசாசுக ஒரு கதகளியே ஆடுச்சுகளே…..இப்ப திரும்பவும் அத பத்தியே யோசிக்கிற….” இசை.

         ” அதான் அவரு போலீஸ் ல… அவர் கிட்ட சொல்லி பாப்போம்….” நிலா.

          “எவரு?  யாருகிட்ட? ” இசை.

         “அதான்டி….என்னைய பாக்க வந்த மாப்ள….அவரு பேரு கூட இளஞ்சேரன்….உன் ஆளோட ப்ரண்ட்….அவரு தான சொல்லிட்டு போனாரு….போலீஸ்காரன் னு…” நிலா.

         “அதெல்லாம் ஓகே…அவரு போலீஸ்காரன் னு மட்டும் சொல்ல ல… நீ போலீஸ்காரன் பொண்டாட்டி னு சொன்னாரு….அதுக்கு என்ன பதில்? ” இசை.

          “ப்ச்….இப்ப பிரச்சினை அது இல்ல… அந்த எதிர்த்த வீடு தான்…..பர்ஸ்ட் அத பாப்போம்….” நிலா.

          ” இது சரியில்லை…..” இசை .

           “அதெல்லாம்…எல்லாம் சரி தான்… ஏன்டி… அவரு உன் ஆளோட ப்ரண்ட் தான? அவரோட ஃபோன் நம்பர் உன் ஆளுக்கிட்ட இருக்கும் தான? “நிலா.

          ” ம்ம்…இருக்கும் தான்…”இசை.

          ” அப்ப உன் ஆளு கிட்ட சொல்லி நான் அவரு கிட்ட பேசனும் னு சொல்ல சொல்லுறியா? ” நிலா.

          “சரி……சொல்லுறேன்….நேரம் ஆச்சு… வீட்டுக்கு கிளம்பலாமா? ” இசை.

          “ஆமா ஆமா…கிளம்பலாம்….இன்னக்கி க்ளாஸ் ரொம்ப அமோகமா போச்சு… ” என்று கூறி கொண்டே இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

        வழியில் வழக்கம் போல் இசை பாதி வழியில் நிலாவிடம் விடைபெற்றுக்கொள்ள…நிலா தனது வீட்டை நோக்கி பயணித்தாள்.

          தன் வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திய நிலா, எதிர்த்த வீட்டை பார்த்தாள் .அந்த வீட்டின் வாசலில் இருந்து  தள்ளாடியபடி தன் தம்பி அபிஷேக் வெளிவருவதை கண்டவள் அதிர்ச்சி ஆகி தான் எடுத்த முடிவில் உறுதியானாள் நிலா.

        தனது அக்கா நிலா தன்னை கண்டுகொண்டதை பார்த்தவன் முதலில் அதிர்ந்து பின் அசால்ட்டாக தோளை குலுக்கி கொண்டு நிலாவை அலட்சியபடுத்திவிட்டு வீட்டினுள் சென்றான் அபி.

        அதை கண்ட நிலா உள்ளூர வேதனையோடு அமைதியாக உள் நுழைந்தாள் நிலா. பசி வயிற்றைக் கிள்ள சமையலறையில் எட்டி பார்த்தாள் நிலா. மீதம் இருந்தவற்றை உண்டுவிட்டு அமைதியாக தன் அறையில் படுத்தாள். படுத்தவுடன் தான் நிலாவிற்கு உடல் வலி உணர்வுக்கு வந்தது.

      என்ன தான் வெளியே எதுவும் தன்னை பாதிக்கவில்லை என காட்டி கொண்டாலும்…கிரிக்கெட் விளையாடியதாலும் விளக்கமாற்று அடி வாங்கியதாலும் உடல் வலி உயிரை வதைக்க தனிமையின் போர்வையில் கண்ணீர் சிந்தினாள் நிலா.

         ” ஸ்ஸ்ஆ …ம்மா… ” என முனங்கி கொண்டே உடல் வலி தந்த அசதியில் வலியுடனே கண்ணயர்ந்தாள் நிலா.

        நிலாவிடம் இருந்து சீரான மூச்சு சத்தம் வருவதை உறுதி செய்து கொண்ட ஒரு உருவம் மெல்ல மெல்ல நிலாவின் அறைக்குள் நுழைந்தது.

         நுழைந்த அவ்வுருவம் நிலாவின் கால்களை இதமாக பிடித்து விட ஆரம்பித்தது. தூக்கத்தில் இருந்த நிலா, அந்த இதத்தை உணர்ந்து கால் பிடித்து விட ஏதுவாக திரும்பி படுத்தாள்.

          நிலாவிடம் அசைவு தெரிந்ததும் பதறிய இளஞ்சேரன், அவள் நன்றாக திரும்பி படுத்ததும் நிம்மதியாக மூச்சு விட்டவன்… நன்றாக நிலாவிற்கு கை கால்களை அமுக்கி விட்டான்.

           தூக்க கலக்கத்தில் “தேங்க்யூ… ” என மெல்லிய புன்னகையை சிந்தினாள் நிலா.

         அதை ஜன்னல் வழி வந்த நிலவொளியில் கண்ட இளஞ்சேரனின் மனம் துள்ளி குதித்தது… “அச்சோ… என் வெல்லக்கட்டி… சிரிக்கிறியேடி… என் பொண்டாட்டி ஸோ க்யூட்…. ” என செல்லம் கொஞ்சினான்.

          இளஞ்சேரன் நிலாவை கொஞ்சி கொண்டிருப்பதை இரு விழிகள் குரோதத்துடன் கவனித்து கொண்டிருந்தது…..

                               (சேரநிலா மிளிர்வாள்….)

                        -செல்லம்மாள்பாரதி

    No comments yet.