அத்தியாயம்:2
பார்வை பரிமாற்றம்:
அவளுக்கு திருவிழா கடைகளில் வளையல், நெயில் பாலிஷ், பொட்டு என அனைத்து அவள் தந்தை அவளது விருப்பத்திற்கு ஏற்ப அவளுக்கு வாங்கி கொடுத்தார்.
அவள் திருடி கிடையாது, ஆனால் அவள் தந்தையை தாண்டி திருட்டு பார்வை யால் அவனை திருடிக்கொண்டு நடந்தாள். சில சமயங்களில் காதோரம் மூடியை திருத்துவது போலவும், வானவேடிக்கை போன்ற வெடிகளை பார்ப்பது போலவும் அவனை திருடி கொண்டே வந்தாள்.
அவனோ சிறிது தூரம். தள்ளி நின்று அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கொண்டே பின் தொடர்ந்தான்.
காதலி அருகில் நின்று கைப் பிடிப்பதை விட, துறமாக நின்று அவள் பார்வையை பேறுவது என்பதின் சுகமே அவனை இந்த உலகத்தின் மகிழ்ச்சியானவனாக மாற்றியது!.
சிறிது நேரத்தில் அவள் தந்தையிடம் இருப்பது ரூபாய் வாங்கிக் கொண்டு தலை கூந்தலுக்கு ரப்பர் பேண்ட் வாங்கி வருவதாக சென்றாள் தனியாக, அவள் அவனை நோக்கியே சென்றாள்.அவனோ அந்த அளவு மகிழ்ச்சியாக இருந்தவன் , அவள் அருகில் வருவதை பார்த்து பயந்து, எதாவது அடி வழுமோ, திட்டுவிழுமோ என்று தமது கண்களில் பயத்தை வெளிகொணர்ந்தான்.
அவன் நின்று கொண்டிருந்த கடை அருகே வந்து ரப்பர் பேண்ட் வாங்கி அவனது முகத்தை பார்த்தாள், அவனது முகத்திலோ வியர்வை கொட்டியது, கையும் காலும் நடுங்க தொடங்கியது!
அவளுடைய தந்தை அவளை நோக்கி வருவதை பார்த்தவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்,ஆனால் அவளோ அதை தவறாக புரிந்து கொண்டு என்னை பிடிக்காமல் தான் நடந்து சென்று விட்டான் என்று ரோஜா இதழ் வாடியதைப் போன்று அவளும் வாடினாள் .அன்று இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை ஏனென்று கேள்வியும் தன்னை அவனுக்கு பிடிக்கவில்லை என்ற பதிலும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது .ஆனால் அவன்,அவள் சிரித்ததை எண்ணி சந்தோஷமாக உறங்கினான் .
பதின்ம வயது காதலில் பொறுமை என்பது குறைவாகவே இருக்கும்.ஆனால் காதல் அதிகமாகவே இருக்கும் மறுநாள் காலை எப்போதும் போல செய்தித்தாள் போடும் வேலையில் அவளை அந்த படிக்கட்டில் காணவில்லை தனது மிதிவண்டி பெல்லை அடித்தான்,அப்போதும் வெளியே வரவில்லை.நேற்றைய சந்தோஷத்தை காட்டிலும் இரு மடங்கு மன வேதனை அடைந்தான் சில நாட்கள் அவளை அவன் பார்க்கவில்லை ஆனால் அவளோ அவனை மறைந்திருந்து பார்த்திருந்தாள் சில சமயங்களில் அவன் அவளை பார்த்தாலும் அவள் அவனை கண்டு கொள்ளவில்லை.
அந்த சந்தோஷத்தை தந்தவள்,அந்த சோகத்தையும் தருகிறாள் என்பதை உணராத வயது,காதல் என்பதையும் புரியாத வயது.பன்னிரண்டு ஆம் வகுப்பு தேர்வுக்காக அவன் ஒரு மாத காலம் தன் பணியில் இருந்து தனது ஓனரிடம் முன்னாடியே அனுமதி பெற்று விடுப்பு எடுத்தான்.
அந்த பெண்ணிடம் அவன் சென்று பேசாததற்கு பல காரணங்கள் உண்டு. உளவியலாக அவன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தான் .அதிகமாக அவன் இளம் குழந்தை பருவத்தில் நேரம் செலவழித்தது ஆண் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே .15 வயதுக்கு மேலாக வரக்கூடிய மாற்றங்கள் யாவும் அவனை இன்னும் ஆழமாக கொண்டு சென்றது தன் எதிர் பாலினரை விட்டு.
தேர்வு நேரம் என்பதால் இரவு பகல் பாராமல் கண்விழித்து படித்தான். சில நேரங்களில் திடீரென்று அவளது ஞாபகம் அவனை வந்து கடற்கரை மீது மோதும் அலையைப் போல மோதும்.ஆனால் குடும்ப சூழ்நிலை கண்டு அவன் தனது பொது தேர்வுக்கு ஆயத்தமானான்.
பொது தேர்வு முடிவதற்குள் அவளை ஒருமுறை எனும் பாத்திடமாட்டோமோ என்ற எண்ணம். அவனுக்கு ஒரு நாளில் இரண்டு மூன்று முறை மிதிவண்டியில் அவளின் வீட்டு அருகே சென்று வருவான் இருபினும் ஏமாற்றுமே.
தேர்வு முடிந்து அவன் மீண்டும் அவன் பணியை தொடர்ந்தான். காலங்கள் யாவும் நாம் அன்பு கொண்டவர்மீது கொண்டுள்ள கோபத்தையும் அவர்களால் நாம் பெற்ற காயத்தை மறக்க வைக்க கூடிய சக்தி காலத்திற்கு உண்டு. ஆனால் அவளும் அதை மறக்கவில்லை,ஆனால் அவனைப் பார்த்த பின்பு அந்த கோபம் காணாமல் போனது .ஏனெனில் அவள் அவனைப் பார்த்து ஐந்து வாரங்களுக்கு மேல் ஆகிறது .
அவனுடைய ஏக்கம் போன்றே அவளது ஏக்கமும் காத்து கிடந்தது .தினமும் நாம் பார்க்கும் அன்பானவர்களை சில காலம் பார்க்காமல் இருந்தால் அவர்கள் மீதான அன்பு பல மடங்கு உயரும் ,காதலித்தவர்கள் என்றால் பல்லாயிரம் மடங்காக உயிரும் .
அவன் மீண்டும் அவள் இருக்கக்கூடிய தெருவில் செய்தித்தாள் போடும்போது மீண்டும் இருவரும் தங்களது கண்களாலே பேசிக்கொண்டனர்,அவர்களது காதல் ஒரு வாய் பேச தெரியாத குழந்தை போன்றது எல்லாவற்றையும் குழந்தை எவ்வாறு அழுது பெறுகின்றதோ,அவர்கள் இருவரும் கண்களாலேயே பேசிக் பெறுகின்றனர் .அவனது தேர்வு நடைபெற்ற வேலையிலேயே அவளுக்கும் தேர்வு தொடங்கியது அவள் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள்.இருவரும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை,ஆனால் இருவர் மனதுக்குள்ளும் இருவரும் அவ்வளவு நெருக்கமானவர்கள் பல நாட்கள் சேர்ந்து சுற்றிய நண்பர்கள் போன்று ,ஜோடி புறாக்களை போன்ற ஆழமான அன்பை இருவரும் பெற்றிருந்தனர்.
எல்லார் வாழ்க்கையிலும் எப்போதுமே வசந்த காலமாக இருக்காது. ஏனென்றால் காலங்களும் மாறும் சூழ்நிலைகளும் மாறும். அவள் தேர்வு முடிந்து கோடைகால விடுமுறைக்காக ஒரு தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று விட்டாள். சில தமிழ் பாடங்களில் நான் படித்த ஞாபகம் வருகிறது தலைவனை காணாத தலைவி தமிழ் மொழியிலேயே தூதாக தனது வலிகளை கூறி தூதாக தலைவனுக்கு அனுப்புவார் என்று .
ஆனால் இங்கு அவன் அவளை எண்ணி தனக்குள் தானே பேசிக்கொள்கிறான். சாலையில் ஏதேனும் பெண்ணைப் பார்த்தாலும் அவளது
ஞாபகம்,அவன் மண்டையில் பிறக்க செய்கிறது கட்டுப்படுத்த முடியாத வழியாக மாறுகிறது .அவனுக்குள் அவளது ஞாபகம் இருப்பினும் தனது வேலையை விருப்பமே இல்லாதவன் போல செய்ய தொடங்கினான் சில நாட்கள் கழித்து கோடைகாலத்தின் விடுமுறை நாள் பதினான்கு நாட்கள் கழிந்திருக்கும் பதினைந்து வது நாள் காலை அவன் செய்தித்தாள் போடும்போது அவன் காண்ண துடித்து சந்தோஷம் அவள் அவன் கண்முன்னே நின்றாள்.
இனிப்புகளை பார்த்த குழந்தை போல தனது மனதின் சந்தோஷம் அவன் உணர்ந்தான் அவனது ஏக்கம் போலவே அவளுக்கும் அங்கு ,அவன் மீதான ஏக்கம் அவளை இங்கே கட்டி இழுத்து வந்துள்ளது.
விருப்பப்பட்டு அவள் ஒன்றும் உறவினர் வீட்டுக்கு செல்லவில்லை. அவளுடைய தாயாரின் வற்புறுத்தலின் பேரில் அவள் சென்றால் .சென்ற நாள் முதல் இருந்தே இவனது ஞாபகங்கள் அவளை தூங்கவிடவில்லை,தன் தந்தையை பார்க்க வேண்டும் என்று பாசாங்கு காட்டி அவள் தன்னுடைய வீட்டிற்கு வந்தாள்
இன்னும் சில வாரங்கள் கண்களால் காதல் செய்து கொண்டே காலத்தை கழித்தார்கள் .
அந்த மாணவி பனிரெண்டாம் வகுப்பு செல்வதால் அவளுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கப்பட்டன .இதனை அறிந்தவன் அவளை பின் தொடர்ந்தான்.
காலை பத்து மணி முதல் இரண்டு மணி வரை சிறப்பு வகுப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளி .இதனை நன்கு அறிந்தவன் காலை வேலையில் அவளை பின்தொடர்ந்தான். அவனுக்குள் பயம் இருக்கா அவளை நீண்ட இடைவெளி விட்டே பின் தொடர்ந்தான்.அவள் அறியாமல் அவன் அவளை ரசித்ததை தனது மகிழ்ச்சியான தருணமாக உணர்ந்தான் அவள் பள்ளி செல்லுகையில் அவளது தோழிகளுடனே செல்வாள் .அவன் பின் தொடர்கிறான் என்பது அவள் அறியவே இல்லை
“ஒரு திருடன் திருடுவதற்கு நோட்டமிடுவதைப் போல பின் தொடர்ந்தான்”.
No comments yet.