விளையாடும் வயதில் பொம்மைகள் என் கையில் அல்லாது
நீ என்மேல் வைத்தஅன்பினால்…….!
என் அம்மாவிற்கு உதவ என் கைகளில் தவழும் நூல் கோர்த்து வைத்த சட்டை ரவிகைகள்…… !
பள்ளி செல்லும் நேரம் என் நண்பர்கள் கையில் தவழும் நொறுக்குத்தீனி ….. !
நீ என் மேல் வைத்த அன்பினால் …!
என் கையில் தவழும் புளிப்பு மிட்டாய்…!
சிறுபிள்ளை வயதில் அனுபவிக்கும்
ஆசைகள் எண்ணில் ஆயிரம் போதும் உன் அதிக அன்பு !
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே…. !
உன் அன்பும் இங்கு எனக்கு
அப்படித்தான்……!
போதுமே.. உன் அன்பு.
இப்படிக்கு என் வறுமைக்கு,,,
No comments yet.