என் வசம் நானில்லை என் உயிரே…….
வசம் -16
என்னடி….. நிஷா கிட்ட பேசனீயா?….. என்று கால் செய்தான் தினேஷ்.
ஹலோ அண்ணா….. இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல…..
என்னடி…..
ஃபோனை எடுத்தா முதல்ல “ஹலோ” தான் சொல்லனும்….. அது தெரியுமா தெரியாதா?
ஏய்…. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு டி…. ஓவரா பேசாதே….
பேசிட்டேன் அண்ணா உன் ஆள் கிட்ட….. போதுமா…..
என்ன சொன்னாங்க?
என்னது சொன்னாங்களா?……
ஏய் சொல்லுடி…..
பயப்படாதீங்க….. அண்ணன் சைடு தான் நான் ன்னு சொன்னேன்….. அதுக்கு…..
அதுக்கு?
சிரித்தாள் தன்ஷிகா.
சொல்லுடி….. எனக்கு ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு…..
அப்போ போய் உன் வேலையை பாரு…..
ஏய்….. வெறுப்பேத்தாத டி….. சொல்லு…
ஓகே தேங்க்ஸ்….. ன்னு சொன்னாங்க…
அவ்வளவுதானா?
வேற எதுவும் என் கிட்ட சொல்லல…..
ஓ…. ஓகே….. பை டி.
பை அண்ணா….. என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் தன்ஷிகா.
ஏனோ தினேஷ் ஏக்கமாக பேசியது உறுத்தலாகவே இருந்தது தன்ஷிகாவிற்கு.
மறுபடியும் சூப்பர் மார்க்கெட் சென்றாள்.
பில்லிங் கவுண்டரில் நிஷா இல்லை……
எங்கே என்று கேட்டாள் தன்ஷிகா.
அவங்க சாப்பிட போயிருக்காங்க…..
ஓ…. ஓகே….
நான் அங்கு போய் பார்க்கலாமா?….. என்றாள் தன்ஷிகா சுமதியிடம்.
கஸ்டமர்ஸ் அங்கு போகக் கூடாது மேடம்.
நான் அவங்க கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.
ஓ…..
ஓகே….. நீங்க வெளியே பார்க்கிங்ல வெயிட் பண்ணுங்க…. நான் அவளை வரச் சொல்றேன்.
…… என்றாள் சுமதி.
ஓகே தேங்க் யூ….. என்று சொல்லி விட்டு அந்த ஜூஸை பில் போட்டு கொண்டு வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று கொண்டு இருந்தாள் தன்ஷிகா.
வெளியே வந்தாள் நிஷா.
ஹாய் நிஷா…..
ஹாய்….. சொல்லுங்க தன்ஷி…..
நான் சுத்தி வளைச்சு பேச மாட்டேன் நிஷா….. என்னோட அண்ணன் உங்களை லவ் பண்றாரு ன்னு நினைக்கிறேன்….. உங்க அபிப்பிராயம் என்ன?….. முதலிலேயே தெரிஞ்சிக்கிட்டா வீணா அவன் ஆசையை வளர்த்துக்க மாட்டான் இல்ல?
தன்ஷி….. உங்களை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும்….. ஏன் உங்க அப்பா அம்மா எல்லாரையுமே தெரியும்….. நீங்க வசதியானவங்க….. நான் அப்படி இல்ல….. ஆசை படறதுக்கும் ஒரு தகுதி வேணும்….. உங்க எல்லாரையும் எனக்கு பிடிக்கும்….. அதே போல தான் உங்க அண்ணனையும்….. அதுக்காக அவர் மேல லவ் ன்னு எப்படி சொல்றது….. அவர் கூட ஃபிரெண்டா இருக்க நினைக்கிறேன்…..
அவ்வளவுதானா….. உண்மையாகவேவா…..
அமைதியாக இருந்தாள் நிஷா.
ஓகே….. நான் போய் என் அண்ணன் கிட்ட சொல்லிடறேன்….. வீணா காதல் ஆசையை வளர்த்துக்காத ன்னு…..
அதற்கும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள் நிஷா.
பை நிஷா….
பை அண்ணி ன்னு சொல்ல ஆசைப்பட்டேன்….. என்றாள் தன்ஷிகா.
கண்கள் கலங்கியது நிஷாவிற்கு.
அந்த அளவுக்கு எனக்கு தகுதி இல்லம்மா என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் நிஷா.
அதை கவனிக்க தவறவில்லை தன்ஷிகா.
மனசுக்குள் ரெண்டு பேரும் காதலை வெச்சுக்கிட்டு ஃபிரெண்டு ன்னு சொல்லிக்கிறாங்க….. ரெண்டு பேரையும் அவங்க அவங்க லவ்வை அவங்க வாயாலேயே சொல்ல வைக்கப் போறேன்….. என்று நினைத்து கொண்டாள் தன்ஷிகா.
அப்போது யோகிஷிடம் இருந்து கால் வந்தது தன்ஷிகாவிற்கு.
ஹலோ தன்ஷிகா…..
சொல்லு யோகேஷ்….. நீ கால் பண்ணுவ ன்னு நினைச்சுக் கூட பார்க்கல…..
இன்னைக்கு நீ காலேஜூக்கு வரலீயா…..
ஆமாம்….. ஒரு பிராஜெக்ட் முடிக்கல….. அதான்…..
ஓ…. ஓகே….. உடம்பு எதாவது சரியில்லையோ ன்னு நினைச்சேன்…..
இல்ல அதெல்லாம் ஒண்ணும் இல்லை யோகேஷ்…..
தேங்க்ஸ்….. கால் பண்ணதுக்கு…..
இன்னொரு விஷயம்…… என்றான் யோகேஷ்.
என்ன?
ஆக்சுவலா நாளைக்கு என்னோட பர்த் டே…..
தெரியும்…..
தெரியுமா?….. எப்படி……
முதல் வருஷம் நீ காலேஜ் கேண்டீன்ல உன்னோட ஃபிரெண்ட்ஸ் க்கு டிரீட் கொடுத்த இல்ல….. அப்போதிலிருந்து தெரியும்.
ஓ….. ஓகே……
நாளைக்கு என் ஃபிரெண்ட்ஸோட பாண்டிச்சேரி போறேன்….. டிரீட் கேட்டிருக்காங்க….. என்னோட டிபார்ட்மெண்ட்டில் இருந்து நாலு கேர்ல்ஸ் வராங்க….. அதான் நீயும் வரீயா ன்னு நேரா பார்த்து கேட்கலாம் ன்னு நினைச்சேன்…..
வேற யாராவது என்னோட டிபார்ட்மெண்ட்டில் இருந்து வராங்களா?
நீ சொன்னா கூப்பிடறேன்….. எனக்கு நீ வரணும்….. அவ்வளவு தான்…..
நீ தப்பா நினைக்கல ன்னா நான் ஒண்ணு சொல்லவா?
சொல்லு…..
என் கிளோஸ் ஃபிரெண்டு புவனேஸ்வரியை மட்டும் கூப்பிடு….. நானும் அவளும் வரோம்…..
நான் கூப்பிட்டா அவ வருவாளா?
நீ கூப்பிட மாட்டியா ன்னு ஏங்குற பொண்ணுங்களில் அவளும் ஒருத்தி….. என்று சொல்லி சிரித்தாள் தன்ஷிகா.
தன்ஷி….. எனக்கு யார் மேலேயும் அந்த மாதிரி எண்ணம் இல்ல…..
தெரியும்…..
எப்படி….
தோணுச்சு…..
ஓ….. ஓகே….. ஆனா ஒருத்தி மேல இருக்கு…..
ஓ… ஓ…..
என்ன ஓ…. ன்னு சொல்ற….. யாருன்னு கேட்க மாட்டியா…..
உனக்கு சொல்லனும் ன்னு தோணுச்சு ன்னா சொல்லு…..
நாளைக்கு சொல்றேன்………..
யார் கிட்ட?….. அந்த பொண்ணு கிட்டேயா?….. இல்ல யாருன்னு என் கிட்டேயா?…..
ரெண்டும் தான்……
ஓகே….. பை யோகேஷ்….. என்றாள் தன்ஷிகா.
பை தன்ஷிகா….. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு சிரித்தான் யோகேஷ்.
டேய்….. யார்கிட்டேயாவது புவனேஷ்வரி நம்பர் இருக்கா…..
இல்லையே டா…..
மறுபடியும் தன்ஷிகாவிற்கு கால் செய்தான் யோகேஷ்.
ஹாங்….. சொல்லு யோகேஷ்…..
உன் ஃபிரெண்டு நம்பர் அனுப்பறீயா?
ஓகே….. பை….. என்று சொல்லி விட்டு தன் வாட்ஸ் அப்பில் இருந்து புவனேஷ்வரி நம்பரை யோகேஷூக்கு அனுப்பினாள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக யோகேஷூக்கு அவள் வாங்கி வைத்த கிஃப்டுகளையும் இப்போது அவனுக்காக வாங்கி வைத்த வாட்ச் எல்லாத்தையும் பேக் செய்து கொண்டாள் தன்ஷிகா.
வருடாவருடம் அவனுடைய பர்த் டேவிற்கு அவன் பர்பில் நிறத்தில் டி.சர்ட் அல்லது சர்ட் போடுவதை பார்த்திருக்கிறாள். ஆகையால் அவளும் இந்த முறை அவனுக்கு மேட்சாக பர்பில் போட்டு கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டாள் தன்ஷிகா.
**************
இரவு வீட்டிற்கு செல்லும் போது சுமதியிடம் அனைத்தையும் சொன்னாள் நிஷா.
ஹூம்….. நானும் சொல்றேன் அந்த பொண்ணும் சொல்றா உனக்கு வந்திருப்பது லவ் தான் ன்னு….. அது ஏன் உனக்கு புரியல…… என்றாள் சுமதி.
இல்ல சுமதி….. வசதியான பொண்ணு ஏழையா இருக்கும் பையனை கூட காதலிக்கலாம்….. ஆனா ஏழையா இருக்கும் பொண்ணு பணக்கார பையனை காதலிக்கவோ இல்ல கல்யாணம் பண்ணிக்கவோ கூடாது……
ஏன்….. கண்டிப்பா பிரச்சனை வரும்…..
யாரால?
எல்லாராலையுமே…..
உன் கூட பேசவே முடியாது டி……
சரி அப்பா வர வரைக்கும் உன் வீட்டில் இருக்கிறேன் டி…..
நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இல்ல எவ்வளவு நாள் வேணும்னாலும் இரு…… என்றாள் சுமதி.
இல்லடி….. அப்பா அம்மா ரொம்ப பயப்படுறாங்க……
ஹூம்…… புரியுது….. அவங்க இடத்தில் இருந்தா….. இதுக்கு அப்புறம் பொண்ணை வேலைக்கே அனுப்ப மாட்டாங்க……
ஹூம்….. அப்பா சொன்னார்….. போக வேண்டாம் ன்னு….. நான் தான் பிரச்சினை இல்லைன்னு சொல்லி வந்தேன்.
ஹூம்……
அப்போது நிஷாவின் ஃபோன் அடித்தது.
ஹலோ….. நான் தினேஷ் பேசறேன்.
சொல்லுங்க…..
காலைல சரியா பேச முடியல….. என் தங்கச்சி வந்து குழப்பி விட்டுட்டா…..
இல்ல பரவாயில்லை….. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை…..
காஃபி சூப்பரா இருந்தது…..
அதான் காலையிலேயே சொன்னீங்களே…..
ஹாங்….. சொன்னேன் இல்ல….. மறந்திட்டேன்……
அப்புறம்…..
வேற எதுவும் இல்லை…..
ஹாங்….. உங்க தங்கச்சி முன்னாடி சொன்னதுபோல நீங்க ஒண்ணும் சிடுமூஞ்சி இல்ல….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.
சிரித்துக் கொண்டே…..
தேங்க்ஸ்….. என்றான் தினேஷ்.
நாளைக்கு வருவீங்களா?
எங்கே?
சூப்பர் மார்க்கெட்டிற்கு…..
ஹாங் வருவேன்…..
நாளைக்கு ஆஃபீஸ் போகிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு….. நான் வருவேன்…..
ஓ…. ஓகே….
வாங்க…..
நாளைக்கு மீட் பண்ணலாம்…… என்றான் தினேஷ்.
வேறு எதுவும் இல்லையே….. ஃபோனை வச்சிடவா?…. என்றாள் நிஷா.
அதுக்குள்ளேயேவா….. என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் தினேஷ்.
ஓகே…. பை…. டேக் கேர்…..
பை….. தேங்க்ஸ்….. குட் நைட்டு…. என்றாள் நிஷா.
குட் நைட்டு…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு சிரித்தான் தினேஷ்.
ஏய்….. இப்போதாவது ஒத்துக்கோ டி….. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது லவ் தான் ன்னு…..
இல்லை….. என்பது போல தலை ஆட்டிக் கொண்டே ஸ்மைல் செய்தாள் நிஷா.
மிச்…. சரி வா….. எங்க அம்மா பருப்பு அடை வச்சிருக்காங்க….. ஒண்ணு சாப்பிட்டு விட்டு போ…..
இல்ல…..
ரொம்ப சீன் போடாத…. வாடி…..
ஏய்….. ஒண்ணு இல்ல மூணு அடை வேணும்னு சொல்லு வந்தேன்….. நீ சீக்கிரமா உள்ள வா…. இல்லன்னா உன்னோடதையும் சேர்த்து நானே சாப்பிட்டு விடுவேன்…. என்று சொல்லி கொண்டே சுமதியின் வீட்டிற்குள் சென்றாள் நிஷா.
அடிப்பாவி….. இருடி….. என்று சொல்லி கொண்டே சுமதியும் உள்ளே ஓடினாள்.
############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே…….
வசம் -17
சார்….. சொல்லிடறேன் சார்….. என்னை விட்டிடுங்க….. என்றான் பிரமோத்.
உண்மையை மட்டும் தான் சொல்லனும்…..
ஓகே சார்….. என்று ஆரம்பித்து அன்று ராகினி ரெக்கார்டு பண்ணியவற்றை முழுவதும் சொன்னான்.
இதான் லாஸ்ட் வார்னிங்….. இனிமே அந்த ரெண்டு பொண்ணுங்க விஷயத்திலும் தலையிட்ட….. ஈவ் டீஸிங் கேஸ்ல பிடிச்சு உள்ள போட்டிடுவேன்…. ஞாபகம் வச்சிக்கோ….. என்று மிரட்டினார் எஸ் ஐ அருள்செல்வன்.
ஓகே சார்…. என்றான் பிரமோத்.
ரைட்டர் கிட்ட எழுதி சைன் போட்டு கொடுத்துவிட்டு போ…..
என்ன எழுதி கொடுக்கனும் சார்…..
இனிமே அந்த ரெண்டு பொண்ணுங்க விஷயத்திலும் தலையிட மாட்டேன்….. ன்னு……
ஓகே சார்….. என்றான் பவ்யமாக.
ரைட்டரிடம் வந்து நின்றான் பிரமோத்.
உட்காருங்க…. என்று சொல்லி அவர் முன்னால் இருந்த சேரை காண்பித்தார் ரைட்டர்.
தேங்க்ஸ் சார்……
இந்தாங்க பேப்பர் எழுதுங்க….. அந்த பொண்ணுங்க பெயரை கண்டிப்பா எழுதுங்க…..
ஓகே சார்……
ஏதோ அந்த பொண்ணு சொல்லியதால கேஸ் போட்டு உள்ள தள்ளாம உங்களை சும்மா விட்டிட்டாரு அருள் சார்…..
யாரு?….. யாமினியா?
இல்ல நிஷா….. பாவம் அந்த பொண்ணு உன்னால தான் பிரச்சனைன்னு தெரிஞ்சும் உன் ஃபேமிலிக்கு தெரிஞ்சா அவங்க எல்லாம் கஷ்டப் படுவாங்க ன்னு சொல்லுச்சு….. அதனால கேஸ் கொடுக்கல அந்த பொண்ணு….. இந்த காலத்தில இப்படியும் ஒரு பொண்ணு….. என்றார் ரைட்டர்.
பிரமோத்திற்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.
எழுதி சைன் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.
அந்த ரைட்டர் நிஷாவை பற்றி சொன்னது அவனுக்கு சங்கடமாகவும் உறுத்தலாகவும் இருந்தது.
அவன் காரில் செல்லும் போது அவனுடைய மனைவி மோனிகா கால் செய்தாள்.
ஏங்க….
சொல்லு…..
ஆஃபீஸ் போயிட்டீங்களா?
இன்னும் இல்லை…… ஏன்….. என்ன விஷயம் சொல்லு….
உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்….. வீட்டிற்கு வரீங்களா?
இல்ல ஆஃபீஸ்ல வேலை இருக்கு….. சாயந்தரம் சீக்கிரமா வரேன்….. அப்போது பேசிக்கலாம்…..பை….. என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் பிரமோத்.
இவ வேற ஒருத்தி….. என்று சலித்து கொண்டான்.
மோனிகா தன் அம்மாவிற்கு கால் செய்தாள்.
அம்மா….. நம்ம பிரார்த்தனை வீண் போகல மா….. இப்போ தான் டெஸ்ட் பண்ணேன்… பிரெக்னன்சி பாசிடிவ்….. கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தை இல்லைன்னு சொன்னவங்க எல்லார் கிட்டேயும் சொல்லனும் மா….. என்றாள் கண்கள் கலங்க.
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா…… மாப்பிள கிட்ட சொன்னீயா?
இல்லம்மா….. ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் சொல்லப்போறேன்……
ஓகே மா….. டாக்டர் கிட்ட எப்போ போகப்போறீங்க?
நாளைக்கு மா……
சரிம்மா நானும் அப்பாவும் வரோம்…..
சரிம்மா….. அப்பா கிட்ட சொல்லிடுங்க…..
சரிம்மா….. பை…..
பை அம்மா……
******************
அப்பா அம்மா….. இன்னைக்கு என் ஃபிரெண்டு பர்த் டே பார்ட்டி….. முடிச்சிட்டு வருவேன்….. லேட்டா ஆயிடிச்சு ன்னு பயப்பட வேண்டாம்….. புவனேஸ்வரி என் கூட வருவா…..
ஓகே….. ஆனா ரொம்ப லேட்டா வரக்கூடாது….. என்றார் சுவாமிநாதன்.
ஓகே அப்பா……
ஏய், அந்த பொண்ணு பேரு என்ன?…. என்றார் திலகவதி.
புவனேஷ்வரி மா….
அவ பேரு எனக்கு தெரியாதா?
உன் ஃபிரெண்டு பர்த் டே ன்னு சொன்னீயே அவ பேர் என்ன?
அவ இல்ல அவன்…..
யோகேஷ்…..
யோகேஷா….. பிரின்ஸ்பாலோட பையன் யோகேஷா…..
ஆமாம்……
அவன் வேற டிபார்ட்மெண்ட் நீ வேற டிபார்ட்மெண்ட் ஆச்சே……
அதனால என்ன….. ஃபிரெண்ட்ஸ் வேற டிபார்ட்மெண்ட்டில் இருக்கக்கூடாதா?
வேண்டாம்….. நீ போகாதே…..
அம்மா…..
அப்பா பாருங்க அப்பா……
என்ன திலகா நீ….. என்றார் சுவாமிநாதன்.
என்னங்க நீங்க சும்மா இருங்க….. உங்களுக்கு தெரியாது…..
என்ன தெரியாது……
ஏங்க….. சும்மா இருங்க பசங்க பார்ட்டி ன்னா சரக்கு அடிப்பானுங்க….. அந்த இடத்துக்கு நம்ம பொண்ண அனுப்ப முடியுமா….. என்று அவரருகில் சென்று கிசுகிசுத்தார் திலகவதி.
அம்மா….. நீங்க நினைக்கிற மாதிரி டிரிங்க்ஸ் பார்ட்டி இல்ல….. நார்மல் பர்த் டே பார்ட்டி தான். அவனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் இருப்பாங்க….. தாத்தா பாட்டி முதல் கொண்டு….. அவ்வளவு பயமா இருந்தா நீங்களும் வாங்க….. என்று சொல்லி சிரித்தாள் தன்ஷிகா.
சிரித்தார் சுவாமிநாதன்.
என்ன அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என்னை பார்த்தா கிண்டலா இருக்கா……
சரி….. பார்ட்டி எங்கே?
பாண்டிச்சேரில…..
வாட்…..
கேட்டீங்களா….. இப்போ நான் சொன்னது சரியா போச்சா…..
அம்மா….. நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க…..
அவனோட வீட்ல தான் மா பார்ட்டி….. அங்கே அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு……
பாண்டிச்சேரி போயிட்டு நைட்டு எப்படி வரமுடியும்….. அவ்வளவு தூரமா இருக்கு இல்ல…… இங்கே இருந்து…..
அம்மா நாங்க போகிறதுக்கு 2 ஹவர்ஸ் வர 2 ஹவர்ஸ் அப்புறம் அங்கே 2 ஹவர்ஸ்……மதியம் 3 மணிக்கு கிளம்பி 5 மணிக்கு போயிட்டு திரும்ப அங்கே 8 மணிக்கு கிளம்பினா கூட 10 இல்ல 10.30 மணிக்குள்ள வந்திடுவோம்…..
என்னங்க இவ…..
போயிட்டு வரட்டும் விடு…..
அதுக்கில்ல….. அவ்வளவு தூரம்….. தனியா…..
அம்மா….. யோகேஷ் கிளாஸ்ல அஞ்சு பொண்ணுங்க வராங்க….. அப்புறம் நானும் புவியும்….. அவனோட ஃபிரெண்ட்ஸ் நாலு பையனுங்க தான் வராங்க…..போதுமா……
எப்படி போறீங்க….. அவனோட இன்னோவா கார்லேயும் அப்புறம் அவனோட பி. எம்.டபில்யூ கார்லேயும்….. வேறு என்ன டீடெயில்ஸ் தெரியனும்…..
அவனோட வீட்டு அட்ரஸ்…..
அம்மா…. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா…..
பிளீஸ் டி….. என்னோட சேட்டிஸ்ஃபேக்ஷனுக்கு…..
அட்ரஸ் மட்டும் போதுமா?
இல்ல என்னோட லைவ் லொகேஷன் ஷேர் பண்ணனுமா?
இது சூப்பர் ஐடியா தன்ஷி….. அப்படியே பண்ணு…..
அம்மா….. சும்மா சொன்னேன்….. நீங்க என்ன உண்மையிலேயே கேட்கறீங்க…..
விடு திலகா…..அவ போலீஸ்காரன் பொண்ணு…..நீ தைரியமா போயிட்டு வா மா……
தேங்க்ஸ் பா….. என் செல்ல அப்பா….. என்று சொல்லி விட்டு அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு…. பை பை…. என்று இருவருக்கும் சொல்லிவிட்டு தன் காலேஜ் பேகுடன் இன்னொரு பேகையும் எடுத்து கொண்டு சென்றாள் தன்ஷிகா.
ஏய்….. என்ன பேக் டி அது…..
பின்ன இந்த டிரெஸ்லேயேவா பர்த் டே பார்ட்டிக்கு போறது…. அதான் நேத்து ராத்திரியே எடுத்து வச்சிட்டேன்.
அப்போ இப்போ எங்க ரெண்டு பேருக்கும் நீ இன்ஃபர்மேஷன் தான் சொல்றீயா? பர்மிஷன் கேட்கலீயா?
அம்மா…. அடிக்கடி மேத்ஸ் டீச்சர் ன்னு ஞாபகப் படுத்தாதீங்க….. ரொம்ப ஸ்டிரிக்டா இருக்கீங்க…..
என்னங்க நீங்க….. எதுவுமே சொல்ல மாட்றீங்க…..
டோண்ட் ஒரி….. ஷீ நோஸ் ஹௌ டூ டேக் கேர் ஆஃப் ஹர்…… என்றார் சாமிநாதன்.
மிச்….. என்றார் திலகவதி.
கதவு வரை சென்றவள் திரும்ப வந்து அவளுடைய அம்மா கன்னத்தில் முத்தமிட்டாள்.
பை அம்மா….. என்றாள்.
சிரித்துக் கொண்டே பை…. டேக் கேர்
…. அங்கே ரீச் ஆனதும் திரும்ப அங்கிருந்து கிளம்பும் போதும் எனக்கு கால் பண்ணு…..
ஓகே ஓகே மா….. பை….. என்று சொல்லி விட்டு காலேஜூக்கு சென்றாள் தன்ஷிகா.
****************
நிஷாவை அவளுடைய அப்பா சங்கர் வந்து அழைத்து சென்றார்.
அப்பா….. நான் தான் சூப்பர் மார்க்கெட்டிற்கு பின்னால் இருக்கும் வழியா வீட்டுக்கு வந்திடறேன் ன்னு சொன்னேன் இல்ல……
இந்த வாரம் எப்படி இருந்தாலும் நான் இந்த டியூட்டிக்கு
தான் மா போகனும்….. அதுக்கு அப்புறம் நீ அப்படி பண்ணு…. நான் நைட் டியூட்டிக்கு போகும் போது.
ஓகே அப்பா……
நாளைக்கு மறுநாள் ஷாலினி பர்த் டே பா…..
அன்னைக்கு மட்டும் பர்மிஷன் கேட்டு சீக்கிரமா வரீங்களா?
தெரியல மா பர்மிஷன் கிடைக்குமா ன்னு…. சிஈஓ ரொம்ப ஸ்டிரிக்டா இருப்பாரு ன்னு சொன்னாங்க…..
அவர் பேரு என்ன பா……
தெரியலையே மா……
என்னப்பா நீங்க….. உங்க முதலாளி பேர் கூட தெரியாமல் இருக்கீங்க….. அதெல்லாம் கேட்டு வச்சிக்கனும் இல்ல…..
சரி மா…. நாளைக்கு கேட்டு சொல்றேன்…..
ஓகே அப்பா….. என்றாள் நிஷா.
வீட்டிற்கு சென்றதும்…..
அம்மா….. என்று சொல்லி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் நிஷா.
இப்போ வலி எப்படி மா இருக்கு…..
பரவாயில்லை மா……
அப்பா….. இப்போ புரியுதா….. உங்களை விட அம்மாவை எனக்கு ஏன் பிடிக்கும் ன்னு…… பார்த்தீங்க இல்ல….. வந்ததுமே வலி எப்படி இருக்கு ன்னு கேட்கிறாங்க….. நான் உங்க கூட பைக்ல உட்கார்ந்து வந்தேன் வீடு வரைக்கும்….. ஏறக்குறைய பதினைஞ்சு
நிமிஷமா….. நீங்க கேட்டீங்களா?…… என்றாள் நிஷா.
என் பொண்ணு ஸ்ட்ராங் ன்னு எனக்கு தெரியும்….. அதான் நான் கேட்கல….. என்று சொல்லி சிரித்தார் சங்கர்.
பாருங்க அம்மா எப்படி சமாளிக்கிறார்…… என்றாள் நிஷா.
சாந்தியும் சிரித்தார்.
############
தொடரும்…….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.