வசம் 14,15

Vaishnavi Vijayaraghavan | 07 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே……


வசம் -14

நடந்து செல்லும் போது அவளுக்கு நடந்தவற்றை கூறினாள் நிஷா.


என்னடி நீ….. அப்பவே சொன்னேன் கேட்டியா….. தேவையில்லாத விஷயத்தில தலை இடாத ன்னு….. பாரு….. இப்போ எவ்வளவு தூரம் கூட்டிவந்து விட்டிருக்கு ன்னு……


நான் மட்டும் அவளுக்கு ஹெல்ப் பண்ணலன்னா அவ செத்து போயிருப்பா டி……


அதெல்லாம் சும்மா….. அவ அவன் கூட படுத்திட்டு வந்திருப்பா…. அவளைப் பார்த்தா எனக்கு இன்னும் கூட நம்பிக்கை வரல…..


என்ன ன்னு?


அவ திருந்தி ஒழுங்கா கஸ்டமர் அட்டென்டு பண்ணுவா ன்னு…..கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் எதாவது பிரச்சனையை இழுத்துக்கொண்டு வருவா…

அப்பவும் நீ போய் அவ கூட நில்லு….. அவ பிரச்சனையை எல்லாம் உன் தலைமேல போட்டுக்கோ…..


இல்லடி….. அவ எனக்கு தேங்க்ஸ் சொல்லும் போது அவ கண்ணை பார்த்தேன். அவ உண்மையிலேயே தான் சொன்னா…..


என்னவோ போ….. நீ எல்லாரையும் நம்பு….. 

சரி உன் ஆளு கதை என்னாச்சு…..


ஹூம்….. அதை சொல்ல மறந்திட்டேனே….. இப்போ நாங்க ரெண்டு பேரும் அப்பார்ட்மெண்ட் பார்க்ல மீட் பண்ணப் போறோம்.


என்னடி சொல்றே?


என்னடா இது எப்பவும் இல்லாம ஃபிளாஸ்க்ல காஃபி எடுத்துக் கொண்டு வரீயே ன்னு நினைச்சேன்…… அவருக்கு தானா?


ஆமாம்….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


எனக்கு டி…..


மிச்சம் இருந்தா எடுத்துக் கொண்டு வரேன்.


ஏய்….. இது டூ மச்….. என்றாள்.

சரி சரி போ…… அதான் வந்திட்டோமே சூப்பர் மார்க்கெட் பார்க்கிங்கிற்கு.


ஓகே டி…. பை…..


பை யா?

அவர் கூட ஓடிப் போகப் போறீயா என்ன?


ஏய்…. நான் தான் சொன்னேன் இல்ல….. நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் ன்னு…..


ஓகே ஓகே….. எவ்வளவு நாளைக்கு ன்னு நானும் பார்க்கிறேன்….. என்றாள் சுமதி.


சீ போடி…. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


பார்க்கிங் பின்னால் இருந்த பார்க் பெஞ்சில் போய் அமர்ந்தாள் நிஷா.


அவன் வருகைக்காக ஆவளாக காத்திருந்தாள்.


அப்போது ஒரு ஆன்டி வந்து…..


ஹாய்….. நீ இந்த சூப்பர் மார்க்கெட்டில் தான வேலை பார்க்கிற?


ஆமாம் மேடம்…..


நான் உன்னை பார்த்திருக்கிறேன்……


ஓ…. ஓகே மேடம்…..ஆனா உங்களை எனக்கு ஞாபகம் இல்லை….. தப்பா நினைக்காதீங்க…


அச்சோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா….. நீ ஒருநாளைக்கு எவ்வளோ பேரை பார்ப்ப….. எல்லாரையும் உன்னால ஞாபகம் வச்சிக்க முடியுமா?…..


சிரித்தாள் நிஷா…..


உன் பேர் என்ன மா?


நிஷா…. நிஷாந்தி…..


ஓகே மா……


உங்க பேர் என்ன மேடம்?


வாசுகி…..


இனிமே மறக்க மாட்டேன் மேடம்….. என்று சொல்லி சிரித்தாள் நிஷா.


இங்கு எதுக்கு வெயிட் பண்ற மா?


இல்ல என் ஃபிரெண்டு வருவாங்க….. அதான்…..


ஓ…. ஓகே மா….. பை…. என்று சொல்லி விட்டு அவர் சென்றார்.


பை மேடம்….. என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து ஃபிரண்ட் கேமரா ஓப்பன் செய்து தன் முகத்தை ஒரு முறை பார்த்து கொண்டாள்.


ஹாய் நிஷா….

 எப்படி இருக்கீங்க….. என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.


ஹாய்….. எப்படி இருக்கீங்க மேடம்…..


அய்யோ நிஷா …… நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன்…… நான் உங்களை விட சின்னவ….

 என் பெயர் சொல்லியே கூப்பிடுங்க ன்னு…..


ஓகே தன்ஷிகா…..


ஹாங்….. இது ஓகே….. என்று சொல்லி சிரித்தாள் தினேஷின் தங்கை தன்ஷிகா.


தினேஷ் தன் தங்கை நிஷாவிடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு அந்த காரிடர் பின்னாலேயே ஃபோன் பேசுவது போல நின்று கொண்டு இருந்தான்.


இன்னைக்கு காலேஜ் போகலையா?…… என்றாள் நிஷா தன்ஷிகாவிடம்.


இல்ல….. பீரியட்ஸ்….. ஸ்டொமக் பெயின் ன்னு சொல்லி லீவு போட்டு விட்டேன்.


அச்சச்சோ….. ரொம்ப பெயினா?


அதெல்லாம் ஒண்ணும் இல்லை….. நான் பிராஜெக்ட் முடிக்கல….. போனா அந்த பிரொஃபசர் காட்டு கத்தல் கத்துவாரு….. இன்னைக்கு வீட்டிலேயே உட்கார்ந்து முடிச்சிட்டு அப்புறமா போகலாம் ன்னு…..


ஓ….. ஓகே….. என்று சொல்லி ஸ்மைல் செய்தாள் நிஷா.


அப்புறம்….. யாருக்கு வெயிட்டிங்….. என்று கேட்டாள்.


ஃபிரெண்டு க்கு…..


ஃபிரெண்டா….. யாரு?….. பேரு என்ன?…..


அது வந்து…..


அச்சச்சோ….. சொல்லாதீங்க நிஷா….. இவ ஒன்றை ஒன்பதா ஆக்குவா….. தயவு செஞ்சு அவ கிட்ட சொல்லிடாதீங்க…… என்று நினைத்து கொண்டான் தினேஷ்.


ஓகே….. புரிஞ்சிடிச்சு….. நான் எதுவும் கேட்கல…..


இல்ல அவர் ஃபிரெண்டு தான்….. மத்தபடி எதுவுமில்லை…..


இட்ஸ் ஓகே நிஷா….. நான் எதுவும் சொல்லலையே……


இல்ல….. நீங்க தப்பா நினைக்க வேண்டாம்……


தப்பா நினைக்க என்ன இருக்கு நிஷா…..


நீங்க என்ன என் அண்ணனனை லவ் பண்றேன் ன்னா என் கிட்ட சொல்லப் போறீங்க?……

அப்படியே லவ் பண்ணினாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…… என்று சொல்லி சிரித்தாள்.


என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் நிஷா.


ஓகே….. பை….. நான் கிளம்பறேன்….. பிராஜெக்ட் ஒர்க் இருக்கு…. என்று சொல்லி விட்டு கிளம்பினாள் தன்ஷிகா.


அவள் மாடி ஏறுவதை பார்த்த பிறகு வந்தான் தினேஷ்.


ஹாய் நிஷா…..


ஹாய் தினேஷ்….

 என்று சொல்லி எழுந்து நின்றாள்.


சிட் டவுன்….. என்று சொல்லி அவனும் அந்த பார்க் பெஞ்சில் சற்று தள்ளி அமர்ந்தான்.


அவ என்ன சொன்னா?….. என்றான் தினேஷ்.


ஓ…. அவங்களா….. அவங்க ஃபேமிலியே எங்க சூப்பர் மார்க்கெட்டோட ரெகுலர் கஸ்டமர்ஸ்….. அவங்க எல்லாரையும் எனக்கு தெரியும்.


அப்படியா?……


ஆமாம்……


யாரெல்லாம் அவங்க வீட்ல இருக்காங்க ன்னு தெரியுமா?


ஹாங்….. தெரியுமே…..

இப்போ போனாங்களே அவங்க பேரு தன்ஷிகா காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறாங்க….. அவங்க அம்மா பேரு திலகவதி….. மேத்ஸ் டீச்சர், 

அவங்க செம ஸ்வீட் தெரியுமா….. ரொம்ப நல்லா பேசி பழகுவாங்க…… எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்….. தன்ஷிகாவோட அப்பா பேரு – சுவாமிநாதன்….. போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள்…… அவர் கூட என் கிட்ட பேசி இருக்காரு….. அவரை பார்த்து யாரும் அவரை போலீஸ்ன்னே நம்ப மாட்டாங்க….


ஏன்?


அவரு அவ்வளவு ஸாஃப்ட்….. போலீஸ் ன்னா ஸ்டிரிக்டா இருக்கனும் இல்ல…. 


ஓ….. அவங்க ஃபேமிலில எல்லாரையுமே தெரியுமா?


தன்ஷிகாவோட அண்ணன் பத்தி மட்டும் தெரியாது…..


ஏன்?


அவரு கடைக்கு வந்ததில்லை….. அதுவும் இல்லாம அவரு சரியான சிடுமூஞ்சியாம்….. லொல்லாம்…..


அப்படின்னு யாரு சொன்னது?


தன்ஷிகா தான்……


ஓ….. ஓ……இருக்கு அவளுக்கு என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் தினேஷ்.


அவர் பேரு கூட என்னவோ சொன்னாங்களே தன்ஷிகா மேடம்…… மறந்திட்டேன்……


இனிமே மறக்கமாட்டீங்க….


ஏன்…..


அந்த சிடுமூஞ்சி வேற யாரும் இல்ல….. நான் தான்…..

என்றான் தினேஷ்.


சட்டென்று எழுந்து நின்றாள் நிஷா.


என்னாச்சு….. உட்காருங்க நிஷா….


இல்ல….. எனக்கு தெரியாது….. சாரி..


இட்ஸ் ஓகே….. தன்ஷி உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்திட்டு வெயிட் பண்ணி அவ போன பிறகு வந்தேன்.


நீங்க தான அப்பார்ட்மெண்ட்ல யாரு பார்த்தாலும் பரவாயில்லை….. பார்க் பெஞ்சில் மீட் பண்ணலாம் ன்னு சொன்னீங்க…..


சொன்னேன்….. அதுக்காக….. என் ஃபேமிலில இருக்கிறவங்களே பார்த்தா தப்பா ஆயிடும் இல்ல…..

ஃபிரெண்டா இருந்தாலும் வீட்டில சொல்லாம தனியா பார்த்து பேசறது தப்பு தானே?


நான் போயிடறேன்…. வேற யாராவது வந்து பார்த்திடப் போறாங்க…..


எப்பவுமே என்னோட ஃபேமிலி காலைல பிஸியா இருப்பாங்க…. அதனால இதுக்கு மேல யாரும் வர மாட்டாங்க……


ஓகே இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு…..

சூப்பர் மார்க்கெட் போய் சைன் பண்ணனும்.


ஓகே….. தேங்க்ஸ் ஃபார் கம்மிங்…..


ஹாங்….. மறந்திட்டேன்….. நானே உங்களுக்காக காஃபி போட்டு கொண்டு வந்தேன்…..


நீங்க குடிக்க மாட்டீங்க இல்ல?


ஆமாம்….. நான் காஃபி டீ குடிக்க மாட்டேன்….. ஆனா சூப்பரா போடுவேன்…… இந்தாங்க….. என்று சொல்லி தன் பேகில் இருந்து ஒரு டம்ளர் எடுத்து ஃபிளாஸ்கில் இருந்த காஃபியை ஊற்றி அவனிடம் நீட்டினாள்.


நிஷா…. தப்பா நினைக்காதீங்க….. நானும் காஃபி குடிக்க மாட்டேன்….. கிரீன் டீ தான்…… என்றான் தினேஷ்.


ஓ…. ஓகே….. என்று சொல்லி வருத்தமாக அந்த ஃபிளாஸ்கிலேயே ஊற்றச் சென்றாள்.


ஒரு நிமிஷம்….. என்று சொல்லி அவளிடம் இருந்து அந்த காஃபியை வாங்கி குடித்தான்.


உண்மையிலேயே காஃபி மிகவும் நன்றாக இருந்தது.


நைஸ் காஃபி….. என்றான் தினேஷ்.


இவை அனைத்தையும் சுவற்றின் பின்னால் இருந்து பார்த்த தன்ஷிகா அவர்கள் அருகில் வந்து…..


இருக்கும் டா இருக்கும் டா….. இரு அம்மா கிட்ட போய் சொல்றேன் என்று சொல்லி விட்டு ஓடினாள்.


ஏய் நில்லுடி….. என்று சொல்லி அவள் பின்னால் ஓடினான் தினேஷ்.


நிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை….. டைம் ஆகிவிட்டதால் அவள் அங்கிருந்து கிளம்பி சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றாள்.


##############


தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

 

என் வசம் நானில்லை என் உயிரே…….


வசம் -15


தினேஷ் தன் தங்கை தன்ஷிகாவை படியேறும் முன் பிடித்து நிறுத்தினான்.


ஏய்….. நில்லுடி……


அந்த பொண்ணை லவ் பண்றீயா டா……


இல்லடி….. மூணு நாலு நாள் கூட ஆகல அவளை பார்த்து….. அதுக்குள்ள எப்படி லவ்….. அவளை பத்தி முழுசா கூடத் தெரியாது….. அப்புறம்…..


ஏய்….. லவ் பண்றீயா இல்லையா ன்னு தான் கேட்டேன்…. அதுக்கு எதுக்கு கதை சொல்ற அண்ணா…..


உண்மையிலேயே தான் டி சொல்றேன்…… அன்னைக்கு நல்ல டீல் கிடைச்சுது ன்னு உங்க எல்லாருக்கும் டிரீட் கோடுத்தேனே…..


அதெல்லாம் விடு அண்ணா….. நிஷாவை லவ் பண்றீயா?


தெரியல டி….. ஆனா அவளை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு….. 


சரி….. அதை நாம லவ்வுன்னே நினைச்சிக்கலாம்…..


ஏய்….. என்னடி சொல்றே……


ஆமாம்….. உனக்கு அவளை பிடிச்சிருக்க மாதிரி அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்கா இல்ல ஃபிரெண்டா தான் நினைக்கிறாளா ன்னு நான் கேட்டு சொல்றேன்…..


நானே கேட்டுக்கிறேன்….. நீ இதுல வராத….. 


சரி சொல்லு….. எதனால நிஷாவை உனக்கு பிடிச்சிருக்கு……


முதல் முறையா அவளை பார்த்து நான் திட்டினேன்…… 

அவ கோபப் படாம சாரி சொன்னா……


அதனால உனக்கு லவ் வந்துச்சா…..


தன்ஷி….. இப்போ கூட எனக்கு அவளை பிடிச்சிருக்கு…. ஆனா இது தான் லவ்ன்னு என்னால டிஸ்கிரைப் பண்ண முடியல……


சரி….. நீ திட்டும் போது அவ அமைதியாக இருந்ததால அவளை பிடிச்சிருக்கா……


இல்லடி….. நெக்ஸ்ட் டைம் அம்மாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருந்த போது அவளை பார்த்தேன்….. அப்போது அவ என்னை திட்டினா…..


வாட்…..


ஆமாம் டி….. அவளுக்கு அடி பட்டிருந்தது….. அதனால உங்களுக்கு சீக்கிரமா சரியாகனும் ன்னு நான் பிரே பண்ணிக்கிறேன் ன்னு சொன்னேன்…..


இதுல திட்டுவதற்கு எதுவும் தப்பா சொல்லலையே நீ……


முதல்ல உங்க அம்மாவுக்கு சரி ஆகனும் ன்னு பிரே பண்ணுங்க….. ன்னு சொல்லிட்டா….. என்றான் தினேஷ்.


ஹா ஹாஹாஹா….. ஹாஹாஹா……


ஏய் சும்மா இருடி…… 


நல்லா மொக்கை வாங்கினியா? ஹாஹாஹா…..


ஷட் அப்….. என்றான் தினேஷ் சற்றே கோபமாக.


ஓகே ஓகே….. கோச்சிக்காத என்றாள் தன்ஷிகா அவன் முதுகை தடவிக் கொண்டே.


சரி அப்பா அம்மா கிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம். முதல்ல அவ மேல எனக்கு இருக்கிறது என்ன ன்னு நான் தெளிவா புரிஞ்சிக்கிறேன்….. அப்புறம் நானே சொல்லிக்கிறேன்….. என்றான் தினேஷ்.


ஓகே அண்ணா….. 

சரி….. நானும் உன் கிட்ட ஒன்று சொல்லனும்…..


என்னடி…..


நானும் ஒருத்தனை லவ் பண்றேன்…..


வாட்….. என்னடி சொல்றே…


ஆமாம் அண்ணா…..


யாரு?


உன்னை மாதிரி தான்….ஆனா உன்னை மாதிரி இல்ல….. நானும் இன்னும் லவ்வை சொல்லல….. சொன்னா அவன் என்ன சொல்லுவான் ன்னு தெரியல…… அதான் தயக்கமா இருக்கு….. அதுக்கு அப்புறம் பெயரை சொல்றேன்…


அடிப்பாவி….. ஒண்ணும் தெரியாத பூனை மாதிரி இருந்துக்கிட்டு….. என்ன வேலை எல்லாம் செஞ்சிருக்க……சரி அது என்ன?..

 உன்னை மாதிரி தான்…. ஆனா உன்னை மாதிரி இல்ல?….


உனக்கு நிஷாவை புடிச்ச மாதிரி எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்….. ஆனா நீ சொல்ற இல்ல இது லவ்வா ன்னு தெரியல ன்னு…… அப்படி நான் சொல்ல மாட்டேன்….. கன்ஃபார்மா இது லவ் தான்…..


ஹூம்….. சரி….. சீக்கிரமா அவன் யாருன்னு சொல்லு.


ஓகே அண்ணா…… என்று சொல்லி சிரித்தாள் தன்ஷிகா.


சரி….. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா?


சொல்லு அண்ணா…… 


எனக்கு ஆஃபீஸூக்கு டைம் ஆகுது……. நீ போய் அவ கிட்ட ஒரு பிரச்சனையும் இல்லை…. பயப்படாத ன்னு சொல்றீயா.


ஏன்…. நீயே கால் பண்ணி சொல்ல வேண்டியது தானே….


இல்லடி….. அவ வேலையில் இருப்பா….. ஃபோன் எடுப்பாளா ன்னு தெரியல…..


மிஸ்டர் அண்ணா….. அவ ஒண்ணும் சீஈஓ கிடையாது உன்னை போல….. ஆஃபீஸ் போன பிஸியா இருப்பதற்கு….. பில்லிங்ல தான் இருக்கா…..


தெரியும் டி….. நான் அந்த மாதிரி வேலை நேரத்தில தேவையில்லாமல் பேசமாட்டேன்.


சரி….ஓகே… நான் இன்னைக்கு காலேஜ் லீவு தான்…. பிராஜெக்ட் ஒர்க் பண்றதுக்கு சில திங்க்ஸ் வாங்க போறேன்……அப்போ அவ கிட்ட சொல்லிடறேன்….. போதுமா…..


தேங்க்ஸ் டி….. பை….. மீட்டிங் டைம் ஆயிடிச்சு….. நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு மாடிக்கு ஏறிச் சென்றான்.


தன்ஷிகா சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றாள். சில பொருட்களை வாங்கிக் கொண்டு நிஷா இருக்கும் பில்லிங் கவுண்டரில் நின்றாள்.


ஹாய் நிஷா….. எப்படி இருக்கீங்க….. என்றாள் தன்ஷிகா.


நல்லா இருக்கேன் மேடம்….. என்றாள் சற்று பயந்தவாறே.


நீங்க என்னை தன்ஷிகா ன்னே கூப்பிடுங்க….. நான் தான் உங்களை எப்படி கூப்பிடறது ன்னு தெரியல…..


இல்ல பரவாயில்லை மேடம்….. சூப்பர் மார்க்கெட் உள்ளே நாங்க எல்லா கஸ்டமரையும் சார் மேடம் தான் கூப்பிடனும் ன்னு ரூல்ஸ் இருக்கு….. நீங்க நிஷா ன்னு கூப்பிடலாம் மேடம்.


அப்படியா….. வேறு எப்படியும் கூப்பிட வேண்டாமா?


என்ன சொல்றீங்க ன்னு புரியல மேடம்…..


ஓகே ஓகே….. அதை விடுங்க….. காலைல எங்க வீட்ல எதாவது பிரச்சனை ஆச்சோ ன்னு நினைச்சு நீங்க கவலைப் படுவீங்களாம்….. எங்க அண்ணாவுக்கு ஒரே கவலை…… அதான் ஒரு பிரச்சனையும் இல்லை…. நான் எங்க அண்ணன் பக்கம் தான் ன்னு சொல்ல வந்தேன்.


தேங்க்ஸ் மேடம்….புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ் மேடம்……


போதும் நிஷா…. ரொம்ப மேடம் மேடம் சொல்லிட்டீங்க….. பை….. டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்…..


தேங்க்ஸ்…. தேங்க்ஸ் ஒன்ஸ் அகெயின் தன்ஷி….. என்றாள் மெதுவாக.


சிரித்துக் கொண்டே கையால் சைகை செய்து பை என்றாள் தன்ஷிகா.


############


ஹலோ பிரமோதா?


ஆமாம் நீங்க யார்?


நாங்க இ1 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம்.


சொல்லுங்க சார்….. என்றான் பிரமோத்.


கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?


சார்….. ஆஃபீஸ் கிளப்பிக்கொண்டு இருக்கேன்….. என்ன விஷயம் ன்னு ஃபோன்லையே சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்…..


அப்படியா….. அப்போ சரி நானே உங்க வீட்டுக்கு வரேன்….. இல்லன்னா உங்க ஆஃபீஸூக்கு வரேன்.


இல்ல சார் வேண்டாம்….. நானே வரேன்…. ஆஃபீஸ் போகும் போது அப்படியே வரேன்….


ஹூம் ஓகே….. அரைமணி நேரத்தில இங்கு இருக்கனும்….. இல்லைன்னா நாங்க வந்திடுவோம் நியாபகம் இருக்கட்டும்…..


இல்ல சார் கண்டிப்பா வரேன் என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தவன்……


அவ மயக்கத்தில தான இருந்தா….. அவளுக்கு நான் ன்னு தெரிய வாய்ப்பில்லையே….. பிறகு எப்படி போலீஸ் என்னை கண்டுபிடிச்சாங்க….. அவங்க லைட் அடிக்கும் போது கூட முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி வந்திட்டேனே…… என்று யோசித்து கொண்டு இருந்தான் பிரமோத்.


என்னங்க….. ஆஃபீஸூக்கு லேட் ஆயிடுச்சு ன்னு சொன்னீங்களே கிளம்பலீயா?….. என்றாள் பிரமோத்தின் மனைவி மோனிகா.


இதோ கிளம்பிட்டேன் டியர்…. என்று சொல்லி அவளை ஹக் செய்து விட்டு பை….. என்று சொல்லி விட்டு தன் காரில் ஏறி போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றான்.


சார்….. நான் தான் பிரமோத்….. எனக்கு கால் பண்ணிருந்தாங்க இ1 ஸ்டேஷனில் இருந்து.


ஆமாம்….. நீங்க தானா…. உட்காருங்க….. என்றார் ரைட்டர்.


பின்னர் எஸ். ஐ க்கு கால் செய்தார்.


அவர் அனுமதி கொடுத்த பின்…..


போங்க…. ஸார் உள்ளே இருக்கார்….. என்றார் ரைட்டர்.


எஸ்.ஐ. அருள்செல்வன் என்று நேம் போர்டு இருந்தது.


சார்….. என்றான் பிரமோத்.


வா….. என்றார் எஸ். ஐ. அருள்.


வரச்சொன்னீங்க….. என்ன விஷயம் ன்னு தெரிஞ்சா….. எனக்கு ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு……


உட்காரு….. என்றார்.


ஒருமைலையே பேசறானே….. என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் பிரமோத்.


நிஷாந்தியை தெரியுமா…..


யாரு….. தெரியலையே சார்…..


அடிங்….. என்று சொல்லி தன் லத்தியால் டேபிளை தட்டினார்.


சார்…. சார்…. தெரியும்….. என்றான் பயந்துக்கொண்டே.


உண்மையை மொத்தம் சொல்லிடு….. இல்ல….. அவ்வளவு தான் சொல்லிட்டேன்…..


அவருடைய உருவம் தோரணை அணைத்தையும் பார்த்து பயந்துவிட்டான் பிரமோத்.


சார்….. அந்த சூப்பர் மார்க்கெட்ல வேலை செய்யும் ஒரு பொண்ணு என் கிட்ட ரொம்ப சிரிச்சு சிரிச்சு பேசினா….. அவளுக்கு என் மேல விருப்பம் இருக்கு ன்னு நினைச்சு கூப்பிட்டேன்…..


யாரு அந்த பொண்ணு?

நிஷாவா?


இல்ல சார்….. அந்த பொண்ணு பேரு யாமினி.


அவ என்ன சொன்னா?


ஃபர்ஸ்ட் டைம் ன்னு பயந்தா….. ஆனா அவ வந்திருப்பா இந்த நிஷா உள்ள புகுந்து அவளை குழப்பி விட்டுட்டா….. நான் பேசினதை எனக்கே தெரியாம ரேக்கார்டு பண்ணி என்னை மிரட்டினா….


அப்படி என்ன பேசின?


அது வந்து….. அது வந்து…..


எங்களுக்கு எல்லாம் தெரியும்….. ஒழுங்கா உண்மையை சொன்னா உன்னை விட்டிடறேன்…..


#############


தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன் .



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.