பாகம் 7

Vaishnavi Vijayaraghavan | 05 Sep 2026 | Share

பாகம்-7

ரூமுக்கு சென்ற வைஷாலி ராகவிற்கு அவளுடைய அப்பா சொன்ன அனைத்தையும் மெஸேஜ் செய்தாள்.

அவனும் அதை படித்து விட்டு…. ஆம் அவர் சொல்வது சரிதான்… என்றான். கோபாலகிருஷ்ணன் இதற்கு முன்னால் வேலை செய்த கம்பெனிக்கு கால் செய்து பார்க்கிறேன்… என்னோட கம்பெனி என்னை தான் முழு பொறுப்பு ஏத்துக்க சொல்லியிருக்காங்க…. என்றான் ராகவ்.

டோன்ட் ஒரி ராகவ். லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்….

ஓகே வைஷாலி…. பை…. குட் நைட் என்றான்.

யா… பை…. குட் நைட் ராகவ்…. என்று ஃபோனை வைத்தாள் வைஷாலி.

வீட்டிற்கு வந்த‌ விஷ்வா….

அவனுடைய பெட்டில் இருந்த ரேஷ்மி யின் பிரின்ட் அவுட் காணாததை கண்டு திடுக்கிட்டான்.

ரங்கா அங்கிள்…ரங்கா அங்கிள்…. என்று கத்தினான்.(ரங்கா- M.S.பாஸ்கர்)



என்ன தம்பி என்று அவனுடைய வீட்டு வேலையாள் ரங்கன் ஓடிவந்தார்.

என் ரூமுக்கு யார் வந்தது? என்று கோபமாக கேட்டான்.

தம்பி… அம்சா தான் கிளீன் பண்ணினா…. என்னாச்சு தம்பி?(அம்சா- ஜாங்கிரி மதுமிதா)



என் பெட் மேல ஒரு சில முக்கியமான பேப்பர்ஸ் வச்சிருந்தேன், அதை இப்போ காணோம்….

இருப்பா… நான் அவள கூப்பிட்டு கேக்குறேன்… அம்சா…. அம்சா…. என்றவர் அழைக்க….

வேகமாக ஓடிவந்தாள் அம்சா…என்ன மாமா? என்றாள்.

ரங்காவுடைய அக்கா பெண் தான் அம்சா….

தம்பி ரூம் நீ தான கிளீன் பண்ண?

ஆமாம் மாமா…. ஏன் என்னாச்சு? என்று பயந்தவாறு கேட்டாள்.

கட்டில் மேல சில பேப்பருங்க வச்சிருந்தேன்…. ஒரு ஃபோன் கூட வச்சிருந்தேன்…. அதெல்லாம் எங்கே? என்றான் விஷ்வா.

அதெல்லாம் அந்த டிராயர்ல பத்திரமா வச்சகருக்கேன்…. என்றாள்.

எடுத்துகிட்டு வந்து கொடு…. என்று சொல்லி அங்கேயே நின்றிருந்தான்.

அவள் உள்ளே சென்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

எல்லாம் சரியாக தான் இருந்தது….

பதில் எதுவும் சொல்லாமல் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்று கதவை பலமாக அடித்து சாத்தினான்… அவனுடைய கோபம் அதில் தெரிந்தது.

மாமா…. என்றாள் பாவமாக சற்றே கண்கள் கலங்கியிருந்தது.

விடும்மா…தம்பி கொஞ்சம் கோவக்காறன்… ஆனா நல்ல பையன்….அம்சா இதுக்கு மேல தம்பி ரூம்ல எதுவும் மாத்தி வைக்காத….

சரி மாமா….

சரி சரி போய் வேலையை பாரு….

ஹூம்…. என்று கூறி உள்ளே சென்றாள் அம்சா…

                            *******

அம்மா…. எனக்கு பர்த்டேக்கு டிரெஸ் வாங்க காசு தரேன்னு சொன்னியே…. இன்னைக்கு ஃப்ரைடே…. ஈவினிங் என் பிரெண்ட்ஸ் கூட போய் வாங்கிட்டு வந்திடறேன்…

நாளைக்கு உன் அண்ணனை கூட்டிக்கிட்டு போயேன் டி… இல்லன்னா சன்டே நான் வரேன்….

இல்லம்மா…. அண்ணா நாளைக்கு வேலைக்கு போவான் அப்புறம் ஈவினிங் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லுவான்… அப்புறம் டிரெஸ் வாங்கி எனக்கு ஆல்ட்ரேஷன் எதாவது இருந்தா… சன்டே பண்ண முடியாது…. அகிலா அக்கா டெய்லர் கடை லீவு…. மன்டே என் பர்த் டே…. நான் என்ன போடுவேன்… உன் கூட ஷாப்பிங் பண்ணனும்னா எனக்கு டிரெஸ்ஸே வேணாம்…

ஏய்… ஓவரா பேசுன…. பிச்சிபுடுவேன்….யம்மா… இந்தா டி…. புடி…. இதுக்கு இவ்வளவு பெரிசா டைலாக் பேசுற…. பாவம் உனக்கு வர போறவன்….

அம்மா…. போம்மா…. எப்போ பார்த்தாலும் இப்படியே பேசிகிட்டு…. என்னம்மா இரண்டாயிரம் ருபாய் தான் இருக்கு…. 

இன்னும் எவ்வளவு வேணும் மகாராணிக்கு….

இன்னொரு தவுஸண்டு கொடும்மா…. இரண்டு டிரெஸ் எடுக்க போறேன். 

இந்தா…. ஐநூறு ரூபாய் தான் இருக்கு…. புடி எனக்கு டைம் ஆகுது ஆஸ்பிட்டல் போக…. என்று சொல்லி அவள் கையில் திணித்து விட்டு வேகமாக சென்றாள் கனகவள்ளி.

அம்மா… அம்மா… என்று அவள் கூப்பிட்டு கொண்டே இருக்க அதை கவனிக்காமல் வேகமாக சென்று விட்டார். 

ரேஷ்மி சீக்கிரம் வாடி…. என்றான் ராகவ்.

வரேன் அண்ணா….

என்னாச்சு… என்ன வாக்குவாதம் உனக்கும் அம்மாவுக்கும்?

பர்த்டே டிரெஸ் எடுக்க காசு கேட்டேன் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் தான் கொடுத்தாங்க….

இந்த அம்மாவுக்கு அறிவே இல்லை…. இப்படியா பண்ணுவாங்க…. என்றான் ராகவ்.

ஹூம்… பாரு அண்ணா….

எதுக்கு அவ்ளோ பணம் கொடுத்தாங்க? என்றான் சிரித்தபடியே…

அண்ணா…. என்று செல்லமாக அவனை இரண்டு கைகளாலும் அடிக்கத் தொடங்கினாள்.

சரி சரி வா…. எனக்கு ஆஃபீஸூக்கு டைம் ஆகுது என்று சொல்லி அவளை காலேஜூக்கு அழைத்து சென்றான்.

அவளை இறக்கிவிட்டு அவளிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து…. இந்தா… உனக்கு புடிச்ச டிரெஸ் வாங்கிக்கோ….

தேங்க்ஸ்…. தேங்க் யூ சோ மச் அண்ணா… என்று கட்டி அணைத்து பை சொல்லி விட்டு சென்றாள்.

ஃபோன் அடித்தது…

எடுத்து பார்த்தான். அவனுடைய அப்பா ராஜசேகர்.

சொல்லுங்க அப்பா….

தம்பி… நான் பைக் ஷோ ரூம்ல இருக்கேன். உங்க அம்மா இன்னைக்கு நாள் நல்லா இருக்கு வண்டியை வாங்கிட சொன்னா….வரீயா பா?

இதோ வரேன் பா….

அடுத்த பதினைந்து நிமிடத்தில் பைக் ஷோ ரூமில் இருந்தான் ராகவ்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதாக தீர்மானித்து போன மாதமே டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணியிருந்தார்கள். எல்லா பார்மாலிட்டிஸூம் முடித்து…. இ.எம்.ஐ ஃபார்ம்ஸ் எல்லாம் சப்மிட் செய்து ராகவ் பெயரில் வாங்கினான்.

சார் மன்டே ஈவினிங் நான் சொல்ற அட்ரஸூக்கு எடுத்துக்கிட்டு வாங்க…. யெல்லோ கலர் தான் வேணும்…. என்றான் ராகவ்.

ஓகே சார்…. கண்டிப்பா….என்றார் அங்கிருந்த ஊழியர்.

அப்பா…. நான் கிளம்பவா? நீங்க உங்க பைக்கில போயிடுவீங்க இல்ல?

ஆமாம் பா… நீ கிளம்பு…. நான் ராமகிருஷ்ணன் சாரோட மீட்டிங் போகனும்.

சரிப்பா…. பை….என்று சொல்லி ராகவ் கிளம்பி விட்டான்.

ராஜசேகரும் தன் பைக்கில் அவருடைய கம்பெனிக்கு சென்றார்.

                       *********

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு தன் நண்பர்களுக்கு துணிகள் வாங்கி தருவான் விஷ்வா.

பிரபல துணிக்கடையில் அவர்கள் வாங்கி கொண்டு இருக்க…. விஷ்வா மட்டும் பில்லிங் பக்கத்தில் இருந்த சொபாவில் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.

வழக்கமாக அவனே தான்…. டேய் உனக்கு இது நல்லா இருக்கும்… டேய் உனக்கு இது என்று பார்த்து பார்த்து வாங்கி தருபவன்…. இன்று நீங்க வாங்கிட்டு வாங்க டா… நான் வெயிட் பண்றேன் என்று சொல்லி விட்டு அமர்ந்து இருந்தான்.

விஷ்வா….. என்று கூப்பிட்டு மூவரும் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

என்னடா வாங்கிட்டீங்களா? 

வாங்கிட்டோம் டா…. 

இந்தா மச்சி என்று தன் பாக்கெட்டில் இருந்து கார்டு ஒன்றை எடுத்து ஜானியிடம் கொடுத்தான்.

அது ஒய்ஃவை(WiFi card) கார்டு என்பது அவனுக்கு தெரியும் அதனால் அவன் பே பண்ண பில்லிங் கவுண்டருக்கு சென்றான்.

கடமைக்கு எடுத்து கொடுத்தியா மச்சி?

சீ… ஏன்டா இப்படி சொல்ற?

பின்ன என்ன டா? எப்பவுமே நீ தான டா டிரெஸ் ஸெலக்ட் பண்ணி தருவ எங்களுக்கு?

இல்லடா…. தலை வலி… உடம்பு சரியில்லை….

பொய் சொல்லாதே டா…. உனக்கு மனசு சரியில்லை.

ஆமாம் மச்சி…. நீ சொல்றது சரிதான் என்றான் விமல்.

மச்சானுக்கு அந்த பொண்ணு ஞாபகம் போல…. என்றான் ஜானி பைகளை பக்கத்தில் வைத்தபடி.

மூவரையும் திரும்பி முறைத்தான் விஷ்வா.

முறைச்சா…. நாங்க சொல்றது பொய்ன்னு ஆயிடுமா? … என்றான் விமல்

அந்த பொண்ணு யாரு? பேரு கூட தெரியாது? அவ முகம் கூட உனக்கே மறந்திருக்கும்…. ஏறக்குறைய ஒரு மாசம் ஆகப் போகுது…. என்றான் ஜானி.

அவ பேரு ரேஷ்மி…. அவ முகத்தை நான் மறக்க மாட்டேன். கரெக்டா இருபத்தி மூணு நாள் ஆகுது இன்னைக்கு…. என்றான் விஷ்வா.

ஒன்றும் புரியாமல் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து கொண்டனர்.

என்னடா… இவன் இவ்வளோ சீரியஸ்ஸா இருக்கான்.

மச்சி…. என்னடா….அப்போ நீ அந்த பொண்ண? என்றான் கணேஷ்.

ஆமாம் டா…. நான் அவளை லவ் பண்றேன்…. என்றான் விஷ்வா. இதோ அவ ஃபோட்டோ என்று மூவரிடமும் காட்டினான்.

மச்சி… பார்த்தவுடனே லவ் ன்னா… அதெல்லாம் சினிமாவுக்கு சரி…. நிஜ வாழ்க்கையில் எப்படி டா…. என்றான் ஜானி.

டேய் மச்சி, உன் ஸ்டேட்டஸ் என்ன? இந்த பொண்ணு பஸ்ல காலேஜ் போறா டா…. உங்க அம்மா அப்பா சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா? என்றான் விமல்.

எனக்கு எதை பத்தியும் யாரை பத்தியும் கவலை இல்லை……..

ஆமாம் டா…. சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணினா? என்னடா பண்ணுவ?… என்றான் கணேஷ்.

அவனுடைய சட்டை பிடித்து….அவனை(அந்த பையனை) கொன்னுடுவேன்…. என்று சொல்லி விட்டு வெளியே வேகமாக சென்றான்.

என்ன நடக்க போகிறதோ என்று நினைத்து மூவரும் திகைத்து நின்றனர்.

காரில் ஏறி அமர்ந்து தன் நண்பர்களுக்காக காத்திருந்தான்.

                     ********

ரேஷ்மி தன்னுடைய பிரெண்ட்ஸ் விஜி மற்றும் நிவியுடன் ஷாப்பிங் செய்தாள் அதே பிரபல துணிக்கடையில்.

இரண்டு நல்ல பிராண்டட் ஜீன்ஸ் மற்றும் மூன்று குர்த்திகளை எடுத்தாள். 

பைக் பார்க்கிங்கிலிருந்து வண்டியை எடுத்து கொண்டுவர நிவி சென்றாள். கடையின் வாசலில் விஜியும் ரேஷ்மியும் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது நிவி தெரியாமல் அங்கிருந்த ஆடி காரில் இடித்து விட்டாள். 

அச்சச்சோ… என்று சொல்லி வண்டியை நிறுத்தினாள்.

உள்ளே இருந்து வெளியே வந்த விஷ்வா நிவியை பார்த்து….

உனக்கு அறிவில்லையா? இப்படி தான் வண்டியை ஓட்டுவியா? இந்த வண்டில ஒரு ஸ்கிராட்ச் ஆச்சுன்னா எவ்ளோ செலவாகும் தெரியுமா?

சாரி சார்…. ஸ்கிராட்ச் எதுவும் ஆகல…. தெரியாம பட்டிருச்சு…. சாரி சார் என்றாள் மறுபடியும்.

போ…. இங்க நிக்காத…. என்று திட்டினான்.

உள்ளே நடந்த விஷயத்தில் இருந்த கோபத்தை அவளிடம் காட்டினான்.

கண் கலங்கியவாறே வெளியே வந்தாள் நிவி…

அவள் அழுதுகொண்டே செல்வதை பார்த்துகொண்டே விஷ்வா விடம் வந்து என்ன டா? யாரு அந்த பொண்ணு எதுக்கு நீ திட்டின? என்றனர் அவனுடைய நண்பர்கள்.

ம்ச்சு…. நீங்க வாங்கிட்டீங்க இல்ல? ஏறுங்க வண்டியில என்றான் சற்றே கடுப்பாக….

வெளியே வந்த நிவியிடம்…

என்னடி ஆச்சு என்று இருவரும் கேட்க…. அங்கே நடந்ததை கூறினாள்.

வாடி…. அவன இன்னான்னு கேக்கலாம் என்றாள் விஜி.

வேணாம் டி… என் மேல தான் தப்பு…

அதுக்காக அப்படி‌ திட்டுவானா?

வேணாம் ன்னு அவளே சொல்றா இல்ல….வாடி போலாம்…. என்றாள் ரேஷ்மி.

ஏன் தான் இப்படி பயந்து சாகறீங்களோ…. சரி வாங்க என்று சொல்லி மூவரும் ஒரே வண்டியில் ஏறினார்கள்.

அவர்கள் கடையை கடக்கும் போது ரேஷ்மியை பார்த்தான் விஷ்வா….

வேகமாக காரை ஓட்டி கொண்டு பின்னாலேயே சென்றான். 

டேய் என்னடா ஆச்சு? ஏன் இந்த பக்கம் போற? 

எதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக வண்டியை ஓட்டினான்.

அடுத்து வந்த சிக்னலில் அவர்கள் சென்று விட இவன் அவர்களை தவறவிட்டான்.

ச்சே…என்று ஸ்டியரிங்கை அடித்தான்.

மச்சி…. என்னடா இவன்? என்று மூவரும் கலக்கமாக பேசிக்கொண்டனர்.

                        *******

வீட்டிற்கு சென்று தன் டிரெஸ்ஸை தன் அம்மாவிடம் காண்பித்தாள்.

அடியேய்…. ஒரு புடவை எடுத்துக்கலாம் இல்ல?

மா…. போம்மா…. அதான் உன்னை நான் ஷாப்பிங்க்கு கூட்டிகிட்டு போறது இல்ல….

சரி போய் டிரெஸ் மாத்திட்டு வா தோசை தரேன்….

சரிம்மா என்று சொல்லி விட்டு…. தன் ரூமுக்கு சென்று பெட்டில் தன் டிரெஸ்களை விரித்து வைத்து ஃபோட்டோ எடுத்து அனுப்பினாள்…

டேய்…. என் டிரெஸ் எப்படி இருக்கு?

என் ஏன்ஜலுக்கு எது போட்டாலும் அழகு தான்…. போடலைன்னா இன்னும் அழகு என்று கண் அடிக்கும் எமோஜியை அனுப்பினான் அவன்…

சீ போடா எரும… அடி வாங்க போற என் கிட்ட…. 

அடி வாங்கவும் ரெடி…. முத்தம் வாங்கவும் ரெடி….

என்ன சாரு ஒரே ரொமாண்டிக் மூடுல இருக்கீங்க போல?

உன் ஃபோட்டோவை பார்த்தவுடனே நான் மன்மதனா மாறிடறேன்….

எனக்கு மன்மதன் வேண்டாம்…. வெறும் மதனே(மதன்) போதும்…. என்று சில எமோஜிகளை போட்டு கொண்டு இருந்தவள்…. (மதன்- துருவ் விக்ரம்)



சரி சரி அம்மா கூப்பிடறாங்க…. பை… என்று சொல்லி மெசேஜூகளை டெலீட் செய்தாள்.

அவனுடைய ஃபோட்டோவை பார்த்து முத்தமிட்டு “ஐ லவ் யூ மதன்” என்றாள்.

தொடரும்.

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

★ ★ ★ ★ ★

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.