ஊளை

PANAIYAN VELMURUGAN | 02 Jan 2026 | Share

ஊளை

மார்கழி பனி

எலும்பும் தோலும் 

உடலான பின் 

மார்கழி கடந்தது 

எத்தனையோ 

இன்னும் இருப்பது 

எத்தனையோ 

எண்ண மறந்தவர்கள் 

கணத்தை எண்ணி

கடக்க

தூரத்தில் ஊளை

எமனின் வருகையை 

எல்லோருக்கும் 

எடுத்து தூவுகிறது

திசையை பார்த்து 

திகைப்பு நீங்கிய

கண்கள் பல

திசையில் சிக்கியவை 

சிந்தனை சிறையில் 

இருப்பதில் எதுவோ

கலக்கம் 

கல் நெஞ்சிலும் 

காலடி தடமில்லாமல்

கரைக்கிறது 

காலனின் வருகையை 

ஊளை இன்னும் 

நீள்கிறது 

நெருங்கி வரவில்லை 

உயிரணுக்களில் 

உதறல் தொடர்கிறது 

கத்தை போர்வை 

சுமந்தவன் 

சத்தம் ஒரு பக்கம் 

ஆள்காட்டி குருவி 

இங்கில்லை 

ஊளையோடு

குரைப்பு அதிகமானது

சத்தம் தூரத்தில் 

இருந்து நெருங்கி

குடுகுடுப்பை 

சத்தமும் சேர்ந்தே

இன்னும் தெரிந்த 

பாடில்லை 

ஊளையின் ரகசியம் 

தை கடைசியில் 

எல்லோரும் 

மூக்கை 

மூடிச்சென்றனர் 

அழுகிய நாயின் 

உடலைத் தாண்டி.

பனையன் 

02.01.26

    

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.