அன்பு ஒன்றே..
வழக்கமாக ஜன்னல் இருக்கை கிடைக்காது, பெரிதாக ஆசைப்படுவதுமில்லை….அவ்வப்போது அமையும் ரயில் பயணங்களில் புத்தகத்தை அலசி ஆராயவே நேரம் போதுமானதாக இருக்கும்…பெரும்பாலும் தனித்த பயணங்களாகவே அமைவதால் கையில் ஒரு புத்தகம், ஒரு பாட்டில் தண்ணீர்…இருக்கையில் அமர்ந்ததும் வாசிப்பு ஆரம்பமாகிவிடும், சிறிது நேரத்தில் கண்களை மூடி மனதை வாசிக்க தொடங்கிவிடுவேன்…. இந்த முறை ஜன்னல் இருக்கை காத்திருந்தது, நண்பர் முன்பதிவு செய்துகொடுத்ததால் அமைந்திருக்குமோ, மனதுக்குள் ஒளிந்துகொண்டிருந்த குட்டிப்பையனுக்கு சின்னதாக சந்தோசம் போல, மெல்ல துள்ளி குதித்தான்….வழக்கம்போல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்….…