Series: 'கதம்பம்' சிறுகதை போட்டி- ஏப்ரல் 2022

அப்பா என்ற ஆகாசம் (போட்டி கதை எண்- 01)

அப்பா என்ற ஆகாசம் சிறு கதை எழுதியவர் திருமதி ராணிபாலகிருஷ்ணன். அப்பா என்ற ஆகாசம் காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா . அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது .அவள் அருகில் ஏழு வயது  தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள் . முன் சீட்டில் டிரைவர்  மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான் . அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து…

காதல் கவிதைகள் சிறுகதை- போட்டி கதை எண்- 02

‘காதல் கவிதைகள்’ என்ற சிறுகதை எழுதியவர் எஸ் வீ ராகவன் காதல் கவிதைகள் என் பெயர் ரவி. அரசு வங்கியில் பணி. சொந்த ஊர் தென்காசி. பெற்றோர் தம்பி அங்கே உள்ளனர். சென்னையில் இடைகால பணி.‌ ஒரு வருடம் பிறகு தென் காசி கிளையில் ஒரு பணியிடம் காலியாகும் என சொன்னதால் தற்காலிக   பயிற்சி இடம் இது. இங்கு‌ தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளேன். ஊரில் அப்படியே இருந்து பழகி விட்டது. எனக்கு தனிமை பிடிக்கும்.…

தலையெழுத்தை மாற்றிய ஜாமீன் கையெழுத்து- போட்டி கதை எண் – 03

‘தலையெழுத்தை மாற்றிய ஜாமீன் கையெழுத்து’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு பாரதிராஜன் என்கிற ரங்கராஜன். தலையெழுத்தை மாற்றிய ஜாமீன் கையெழுத்து  மனோஜ் ஒரு அரசு ஊழியர். அளவானகுடும்பம். மனோஜ்.மனோஜ் மனைவி ஒரு தனியார் கம்பனியில் பணி புரிந்து வந்தார். ஒரே மகள் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவி. மனோஜ் அரசு ஊழியர் என்பதால் அலுவலகத்தில் அனுமதி பெற்று பத்திரிகைகளில் கதை , கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். அதற்கு கிடைக்கும் தொகையை அனாதை இல்லத்துக்கு…

அடுத்த பிறவி – போட்டி கதை எண்- 04

‘அடுத்த பிறவி ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு பாலசாண்டில்யன். அடுத்த பிறவி ரமாவிற்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழிந்து போனது. ரமாவின் தாத்தா சீதாராமன் ரமாவையும்  கோகுலையும்  பார்க்கும் போதெல்லாம் “சீக்கிரம் ஒரு சிங்கத்தைப்  பெற்றுக் கொடு, அவனைப் பார்த்து விட்டுத் தான் கண் மூடுவேன்” என்பார். கொள்ளுப்பேரன் கனவில் தாத்தா என்பதால் அவர்கள் அழகானதொரு புன்னகையை அவருக்கு பதிலாகத் தந்து விட்டு நகருவது வழக்கம். அவரும் அந்த பல்செட் புன்னகையை பரிசாகத் திருப்பித் தருவார். குழந்தை பாக்கியம்…

எப்போதும் பெண் – போட்டி கதை எண் – 05

‘எப்போதும் பெண் ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ராம்பிரசாத். எப்போதும் பெண் “நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண்ணுடன் அந்தரங்க உறவில் இருந்த எண்ணமே இல்லை இப்போது எனக்கு” என்றபடியே கலைந்து கிடந்த ஆடைகளை அணிந்தபடி சலித்தான் செல்வம். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் திணறி, அவன் அறையை விட்டு வெளியேறிவிட்ட பிறகு எழுந்து நிலைக்கண்ணாடி முன்  நிர்வாணமாய் நின்று தன் மென்னுடலை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை அவதானித்தாள்…

புதிய இந்தியா – போட்டி கதை எண் – 06

‘புதிய இந்தியா ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு கார்த்திக் சங்கர். புதிய இந்தியா காட்சி-1 ————- செல்வி சரியாக காலை 9 மணிக்கெல்லாம் வியாபாரத்தை தொடங்கி விட்டாள். ஒரு தள்ளு வண்டியில் நீர் மோர் , கம்பு கூழ் , அருகம்புல் சாறு மற்றும் சில பழங்கள் – இவைதான் அவள் மூல தானம். அந்த இடம் நகரின் மையத்தில் அமைந்திருந்ததாலும், அருகிலேயே ஒரு கல்லூரி இருந்ததாலும் ஓரளவுக்கு சுமாரான வருமானம் வந்தது. இருந்தாலும், இரண்டு…

தண்ணீரின் அருமை -போட்டி கதை எண் – 07

‘தண்ணீரின் அருமை’ என்ற சிறுகதையை எழுதியவர் N. சிவபிரியா ஒரு நாள், ஒரு சிறுவன் குழாயில் தண்ணீர் பிடித்தக்கொண்டிருந்தான். அந்தக் குழாயை சரியாக அடைக்காமல் விட்டுவிட்டான். மறுநாளும் இதே தவறைச் செய்தான். அது சரியான மழைக்காலம் என்பதால் அவனுக்கு தண்ணிர் எளிதாக கிடைத்தது. காலம் ஓடிக்கொண்டே இருந்தது. வானம் பொய்த்தது. மழையைக்காணவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. ஆனாலும் அவன் செய்த தவறை உணரவில்லை. தண்ணீரை வீணாக்கிக்கொண்டே இருந்தான் . திடீரென அவன் எதிர்ப்பாக்காத நிலமைக்கு தள்ளப்பட்டான் .…

தந்தை என்னும் தெய்வம் – போட்டி கதை எண் – 08

‘தந்தை என்னும் தெய்வம்’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி ராணி பாலகிருஷ்ணன். தந்தை என்னும் தெய்வம்                     அர்ச்சனா கூறியதைக் கேட்ட அவள் தந்தை தட்சிணாமூர்த்தி திக்பிரமை அடைந்து போனார் . அவள் அம்மா சுசீலா அலறியே விட்டாள்   ஆனால் அர்ச்சனா பெற்றோர்களின் சம்மதத்தை  அசோகனை மணம் செய்து வைக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டாள் அசோகன் பெற்றோருக்கு ஒரே மகன் . பெரும் செல்வந்தன்  . உயர்கல்வி பெற்றவன் .…

தெய்வத்தாய்- போட்டி கதை எண் – 09

‘தெய்வத்தாய்’ என்ற சிறுகதையை எழுதியவர் சியாமளா வெங்கட் ராமன். தெய்வத்தாய் அன்று சுகன்யாவிற்கு 40வது கல்யாண நாள். உடனே தன் சினேகிதி பத்மாவின் பெண் ஜனனிக்கு கல்யாண நாள் என்பது நினைவிற்கு வந்தது. உடனே பத்மாவின் ஆன்லைனுக்கு போன் செய்தாள் ஆனால் ரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை .சரி நாள் கிழமை என்பதால் கோவிலுக்கு போய் இருப்பாள் என்று நினைத்தாள். மாலையில் சுகன்யாவின் போனுக்கு பத்மாவிடம் இருந்து போன் கால் வந்தது உடனே காலையில் ஆன்லைனுக்கு போன் செய்ததையும்…

வன்மம் – போட்டி கதை எண் – 10

‘வன்மம்’ என்ற சிறுகதையை எழுதியவர் அன்புக்கரசி ராஜ்குமார்.                                                 வன்மம் விரலிடுக்கில் பற்ற வைத்த ஆறு சென்டிமீட்டர் அரக்கனை பாதியிலேயே கீழே போட்டு மிதித்துவிட்டு,அது கொடுத்த கடைசித் துளி நச்சையும் காற்றில் கலக்கவிட்டபடியே எதிரிலிருந்தவரைப் பார்த்தார் நல்லசாமி.சதாசிவம் இன்னும் தன் ஆழ்ந்த யோசனையிலிருந்து வெளிவந்தபாடில்லை.தன்…

Contact Us

error: Content is protected !!