மிருகத்தின் மனிதம்
ராமசாமி என்ற விவசாயி வாழ்ந்து வந்தார் அவருக்கு அரசலகை நிலத்தில் நெல்மணி போட்டு அதில் விவசாயம் செய்து கொண்டு வந்தார்..!
ஒரு நாள் செம மழை அங்கு பக்கத்தில் மலை ஒன்று இருந்தது..!
அதே மலையில் புட்டி என்று எலி வாழ்ந்து வசித்து வந்தது ..!
பெய்த மழையில் இடி மின்னல் இட்டதால் மலை சரிந்து அழிந்துவிட்டது ..!
அந்த புட்டி எலி சாகப் பிழைச்சு ஒரு வழியா பக்கத்துல இருக்கிற வயல்ல போய் சேர்ந்தது அங்க ஒரு மூலையில் குழிப்பறிச்சு கொஞ்ச நாள் வாழ்ந்து வந்தது ..!
ராமசாமி :
அவருடைய வயலில் அறுவடையை தொடங்க ஆரம்பிச்சு ஐந்து மூட்டை நெல் சாகுபடி செய்து அவர் குடிசையில் நெல் மூட்டையை வைத்துக்கொண்டு நெல் மூட்டையை விற்பதற்காக வியாபாரியை தேடிச் சென்று விட்டார்..!
புட்டி எலி :
அதற்கு சரியான பசி அந்த பொந்தில் இருந்து கொண்டு வெளியே உணவு தேட சென்று விட்டது ஒரு வழியாக நெல் இருக்கும் மூட்டையை சென்று அடைந்தது தினமும் ஒவ்வொரு மூட்டையை சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தது ..!
ராமசாமி :
அவருக்கு பெரும் கஷ்டம் அந்த எலி தொல்லை தாங்க முடியவில்லையே..!
என்னோட ஐந்து மூட்டையில் நான்கு மூட்டை நெல்லை ஒரே எலி சாப்பிட்டு விட்டது என் பசிக்கு நான் என்ன செய்வேன் ..!
இன்னும் அறுவடையாக ஆறு மாதம் நான் காத்திருக்க வேண்டும் கவலையுடன் தினமும் இருந்தார் எப்படியாவது என் ஐந்தாவது மூட்டையை காப்பாற்ற வேண்டும்
ஒரு யோசனை வந்தது அந்த நெல் மூட்டையை மறைத்துக் கொண்டு சிறு கைப்பிடி நெல்லை விஷம் கலந்து கொண்டு வெறும் கோணிப்பையில் நெல் அளவாக இருப்பதைப் போல அந்த எலிக்கு தெரியாமல் விஷம் கலந்து வைத்துவிட்டார் ..!
புட்டி எலி :
உள்ளே வருகிறது
என்ன நான் சாப்பிட்டு விட்டு ஒரு மூட்டை மிச்சம் இருந்தது எங்கே போனது என் பசியால் அதைத் தின்று விட்டேனா .?
முட்டாள் எலி பசியில் சாப்பிட்டாலும் சாப்பிட்டு இருந்திருப்பேன் என்று ஐந்தாவது மூட்டைக்குள் ஒரு கைப்பிடி நெல்லை சாப்பிட தொடங்கியது சாப்பிட்டு முடித்து நடக்க தொடங்கியது..!
அதற்கு சிறிது நேரம் ஆனதும் சோம்பல் ஏற்பட்டது மயக்கத்தில் தள்ளாடி கீழே விழுந்தது
ராமசாமி :
அங்கே வந்துவிட்டார் அந்த எலியால் ஓட முடியவில்லை நடக்கவும் முடியவில்லை..!
ராமசாமி :
அந்த எலியிடம் பல நாள் திருடன் ஒரு நாள் மாற்றுவான் போல் இன்று நீ மாட்டிக் கொண்டாய் என்னிடம்..! ஹா ஹா ஹா
என் உணவை சாப்பிட்டு உன் உடலை வளர்த்தாய் என்னுடைய நான்கு மூட்டை நெல்லையும் நீயே சாப்பிட்டு விட்டாய் நான் என் பசிக்கு என்ன செய்வேன் ஒவ்வொரு மூட்டையை தினமும் சாப்பிட்டுக் கொண்டு சந்தோசமாக இருந்தாய் இப்பொழுது ஐந்தாவது மூட்டையை சாப்பிட வந்து இந்த ஒரு கைப்பிடி அளவு நெல்லை சாப்பிட்டு சாகக் கிடைக்கிறாய்
அடுத்தவர் உழைப்பை சுறண்டுவதும் தவறு ..?
அதிகமாக இருக்கிறது என்று என்ன வேணாலும் எப்படி வேணாலும் வேண்டாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்று வாழ்வதும் தவறு..?
இருப்பதை இழக்கக்கூடாது..?
நம்மிடம் எதுவும் இல்லை என்று வருந்தவும் கூடாது..?
உன் தவறை மாற்றிக்கொள் என்று அந்த எலிக்கு நீர் வைத்து காப்பாற்றிவிட்டார் .!
அந்த ஐந்தாவது மூட்டையை வைத்துக்கொண்டு அவர் பசிக்கும் அந்த எலிப் பசிக்கும் ஆறு மாதம் வரை கடந்து சென்று அடுத்த வருடம் நெல் விலையை விதைத்து இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர் அவர்கள் தவறை எண்ணி. !
எவன் ஒருவன் தன் தவறை எண்ணி வாழ்கிறானோ அவனை சிறந்த மனிதன்
கு.கிருஷ்ணன்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா
9585152416
…