Rani Govindh | 04 Nov 2025
Epi 9
விக்ரமனின் ஆபிஸ் ரூமிற்குள் அவனின் ஆருயிர் நண்பனும்
பார்ட்னருமான அஜய் வந்திருப்பதை கூட கவனிக்காமல் தீவிரமாக எதை பற்றியோ அவன்
யோசித்து கொண்டிருக்க, அதை
கவனித்தவன் விக்ரமன் அருகில் வந்து முகத்துக்கு நேராக கையசைத்தான்.
அவன் கையசைக்கவும் சடனாக சுயநினைவுக்கு வந்தவனாக அவன்
கையை தட்டி விட்டான் விக்ரம்.
“என்னடா பண்ற”
“அத நான் கேட்கணும், நீ தீவிரமா யோசிக்கறத பார்த்தா இதே மாதிரி
இன்னொரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு ஐடியால இருக்கற மாதிரி தெரியுது, அப்படி
ஏதாவது இருந்தா அந்த கம்பெனிலயும் என்ன பார்ட்னரா சேர்த்துக்கோடா” என கிண்டலாக
கூறி அவனே சிரித்து கொண்டான்.
அவன் சிரிப்பதை பார்த்து காண்டானவன் “ஷட் அப் அஜய், நானே டென்ஷன்ல
இருக்கேன், இந்த
நேரத்துல காமெடி பண்ணாத” என எரிச்சலாக கூறினான்.
“இப்போ உனக்கு என்ன டென்ஷன் சொன்னா தான தெரியும்”
“எல்லாத்துக்கும் காரணம் நீ தான், நீ தான் என்
டென்ஷனுக்கே காரணம்”
“அதானே பார்த்தேன், எப்போவும் கடைசியா தான என் மேல பழி போடுவ, பரவால்ல இப்போ பர்ஸ்டே
ஆரம்பிச்சிட்டியா, சரி
இன்னைக்கு நான் என்ன பண்ணேன், எனக்கு தெரியல நீயே சொல்லு பார்ப்போம்”
கேட்டு கொண்டே சாவுகாசமாக ஒரு சேரை இழுத்து விக்ரம்
அருகில் போட்டு அமர்ந்தான்.
“எதுக்குடா இப்படி நெருக்கமா உட்கார்ந்திருக்க, யாராவது பார்த்தா என்ன
நினைப்பாங்க?”
“இது நம்ப கம்பெனிடா, அதுவும் நம்ப ப்ரைவேட் ஆபிஸ் ரூம், இதெல்லாத்துக்கும் மேல
நாம ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ்” என கைகளை விரித்து தோள்பட்டயை அசைத்தான்.
“அது கம்பெனில மட்டும் தாண்டா, லைப்ல இல்ல” என கூறிய விக்ரமன் சேரை ஒரு உதை உதைக்க
அஜயோடு அந்த ரோலிங் சேர் தூரமாக சென்றது. விக்ரம் இப்படி செய்வதெல்லாம் அஜய்க்கு
ஒன்றும் புதிதில்லையே, அதனால்
சேரை திரும்பவும் அவனுக்கு கொஞ்சம் தள்ளி நகர்த்தி அமர்ந்தவன் “சரி இந்த டாபிக்க
விடு, உன்
டென்ஷனுக்கு நான் காரணம்னு சொன்னயே, நான் என்ன பண்ணேன், அத முதல்ல சொல்லு” என
விசயத்துக்கு வந்தான்.
“தெரியாத மாதிரி கேட்காத, நீ தான அந்த பொண்ண அரேஞ் பண்ண, அவ என் பேரையே
கெடுத்துருவா போல இருக்கு” என எரிச்சலாக கூறினான்.
“எந்த பொண்ணு, என்ன ஆச்சி, தெளிவா
சொல்லுடா”
அஜய் ஒன்றும் தெரியாதவன் போல் பேசவும் விக்ரமன் மேலும் டென்ஷன்
ஆனான். விக்ரமன் தன்னை பார்த்து முறைக்கவும் அஜய்க்கு இப்பொழுது டென்ஷன் ஆனது.
“எனக்கு நிஜமாவே புரியலடா, அடிக்கறதுன்னு முடிவாயிருச்சு, எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லிட்டு அடி”
“நேத்து ஹோட்டலுக்கு அனுப்பி வச்சியே, அவள பத்தி தான்
சொல்றேன், இன்னும்
விளக்கமா சொல்லனுமா?”
கடுப்பாக அவன் கூற இந்த முறை அஜய் டென்ஷன் ஆனான்.
“என்னடா சொல்ற, எந்த பொண்ணு”
“அஜய் என்ன டென்ஷன் பண்ணாத”
“சீரியஸா எனக்கு நீ என்ன சொல்றன்னே புரியல, நேத்து நான் அரேஞ் பண்ண
பொண்ணு லாஸ்ட் மினிட்ல வர முடியாம போச்சு, நான் கூட உனக்கு மெசேஜ் பண்ணேனே, கால் கூட பண்ணேன் நீ
தான் அட்டென்ட் பண்ணல”
அஜய் அப்படி கூறவும் வேகமாக போனை எடுத்து பார்த்தவன்
அஜயின் மெசேஜ் இருப்பதை பார்த்து டென்ஷனாக தலையில் கை வைத்தான். விக்ரமின்
நடவடிக்கை வைத்தே எதோ பிரச்சனை என்பது அஜய்க்கு புரிந்தது.
“ஏன் விக்ரம், நேத்து ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சா”
“நேத்து நீ அனுப்பினதா சொல்லி ஒருத்தி ரூமுக்கு வந்தா,
நீ எய்ட் லேக்ஸ் டீல் பேசினதா கூட சொன்னா”
“வாட்? எய்ட் லேக்சா, பணத்த
கொடுத்திட்டியா”
“டேய் இடியட், பணம் விஷயம் இல்ல, அவள
இன்னைக்கு எங்க பார்த்தேன் தெரியுமா?”
“எங்க?”
“ராமமூர்த்தி அங்கிள் வீட்டுல”
இதை கேட்டதும் அஜய் ஷாக்கில் அப்படியே உட்கார்ந்து
விட்டான்.
“மை காட்” என தலையில் கை வைத்து கொண்டவனுக்கு
பிரச்சனை பெரிதென்று புரிந்து விட்டது.
“அவ எதுக்கு அங்க வந்தா? ஒருவேள அவர்கிட்ட ஏதாவது சொல்லிருப்பாளா, அவ எதுக்கு வந்தான்னு
விசாரிச்சியா?”
“அவர்கிட்ட எதோ ஹெல்ப் கேட்க வந்தான்னு சொன்னாரு, ஒருவேள அவருக்கு
தெரிஞ்ச பொண்ணா இருந்தா, என்னோட
டார்க் லைப் பத்தி அவருக்கு தெரிஞ்சா இந்த கல்யாணமே நின்னுடும்”
விக்ரமனின் டென்ஷன் நொடிக்கு நொடி அதிகமாகி கொண்டே போனதை
பார்த்து அஜய் பதறி போனான்.
“ஹே கூல், இவ்ளோ டென்ஷன் ஆனா என்ன ஆகும்னு உனக்கே தெரியும்ல, டென்ஷன குறை, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம், ஆமா எப்போவும் போல லைட் ஆப் பண்ணிட்டு தானே பிசிக்கல்
காண்டேக்ட் வச்சிக்கிட்ட, அந்த
பொண்ணுக்கிட்ட ரொம்ப ரூடா நடந்துக்கலையே, இல்ல வழக்கம் போல ஏதாவது பண்ணிட்டியா?”
தயக்கமாக அஜய் கேட்க விக்ரம் அவனை முறைத்தான்.
“அதிக்கில்லடா, வழக்கமா நான் அனுப்பற பொண்ணுங்கள டீடைல்ஸ் சொல்லி, உனக்கு ஏத்த மாதிரி பிரிப்பர் பண்ணி அனுப்புவேன், அந்த பொண்ணு யாருன்னே
தெரியல, ஒருவேள நீ மூர்க்கத்தனமா
நடந்துக்கிட்டு அத பத்தி கம்ப்ளைன்ட் பண்ண அங்கிள்கிட்ட போயிருந்தா, அதுக்கு தான்
கேட்டேன்”
தான் பார்ப்பது ஒரு பக்கா மாமா வேலை என்று தெரிந்தும்
தன் உயிர் நண்பனின் உயிரை காக்க இப்படி ஒரு தியாகத்தை செய்து கொண்டிருக்கும்
தியாகி அஜய் என்று கூட பாராமல் திரும்பவும் அவனை எரிப்பது போல் விக்ரமன்
முறைத்தான்.
“நீயே போதும்டா, என்ன மாட்டி விடறதுக்கு, நீ நினைக்கற மாதிரி நேத்து
எதுவும் நடக்கல, இன்பேக்ட்
அவள நாலு அடி டிஸ்டன்ஸ்ல நிக்க வச்சி, ஜஸ்ட் பார்த்துட்டு அனுப்பி விட்டுட்டேன், என் விரல் கூட அவ மேல படல”
இதை கேட்டதும் அஜய் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி
ஏற்பட்டது.
“என்ன சொல்றடா, ஒன்னுமே நடக்கலையா, எப்படி, எப்படி இது பாசிபிள், இது வரைக்கும் இந்த
மாதிரி நடந்தது இல்லையே”
“அதாண்டா எனக்கும் புரியல, அவள அந்த மாதிரி பார்த்த பிறகும் கூட நான் காமா
இருந்தேன், எதோ
மிராக்குள் நடந்த மாதிரி இருந்தது, ஒருவேள அவ தான் என் பிரச்சனைக்கான சொல்யூஷனா இருப்பாளோன்னு கூட பீல் ஆச்சி, ஆனா இப்போ அவ தான்
என்னோட பிரச்சனையா இருப்பான்னு தோணுது”
விக்ரமன் கூறியதை எல்லாம் கேட்டு அஜயின் மனதிற்குள்
ஒன்று தெளிவானது.
“நீயா ஏன் ஓவர் இமேஜின் பண்ற, எப்படியும் வழக்கம் போல டார்ச் லைட் வெளிச்சத்துல நீ
அவள பார்த்திருப்ப, அவளுக்கு
உன் பேஸ கூட காட்டிருக்க மாட்ட, இதுல நாலு அடி
டிஸ்டன்ஸ்ல தான் இருந்தான்னு சொல்ற, சோ டே டைம்ல உன்ன பார்த்தா கூட அவளால
உன்ன அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, அது மட்டும் சுயர், ஆமா நீயா எதுவும் உளறி வைக்கலையே”
“உளற பார்த்தேன், ஜஸ்ட் மிஸ், அங்கிள் வந்து காப்பாத்திட்டாரு, ஆனா அவ எதுக்கு அங்கிள பார்க்க வந்தான்னு தான் தெரியல”
இப்படி இருவரும் தீவிரமாக யோசித்து கொண்டிருக்க, இளமதி பஸ்ஸை பிடித்து
கம்பெனிக்கே வந்திருந்தாள்.
அவள் கம்பெனிக்குள் நுழையும் போதே மணி பண்ணிரண்டு ஆகி
இருந்தது,
நல்லவேளையாக அவள் ஏற்கனவே பெர்மிஷன் போட்டதால் அவளுக்கு எந்த பிரச்சனையும்
இல்லாமல் போய் விட்டது. அவள் தன் சீட்டில் போய் உட்கார்ந்ததும் அவளிடம் வேகமாக
வந்த சுமதி “என்ன இளமதி, இன்னைக்கு
ஏன் இவ்ளோ லேட், சார்கிட்ட
பெர்மிஷன் சொல்லிட்ட தான” என அக்கறையாக விசாரித்தாள்.
“சொல்லிட்டேன்க்கா, ஆமா என்ன கம்பெனியே இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கு, வாசல்ல கூட சிலர்
க்ரூப் க்ரூப்பா நின்னு பேசிட்டு இருந்தாங்க” என ஹேன்ட் பேக்கில் இருந்த போனை
டேபிள் ட்ராயரில் வைத்தபடி கேட்டாள்.
அவள் எப்பொழுது இதை கேட்பாள் என காத்திருந்தது போல் அவள்
அருகில் வந்த சுமதி “நீ இன்னைக்கு லேட்டா வந்ததால ஒரு அரிய காட்சிய மிஸ் பண்ணிட்ட, எனக்கு வருத்தம் போ” என
மெல்லிய குரலில் கூறவும் இளமதிக்கு கம்பெனியில் என்னவோ நடந்திருக்கிறது என்பது
புரிந்தது.
“என்னக்கா, என்ன ஆச்சி”
“எல்லாம் நாம ரொம்ப நாளா எதுக்கு காத்திருந்தோமோ அது
தான் நடந்திருக்கு, அதான் அந்த
பொறம்போக்கு இருக்கானே, ஜெகன் அவன்
வழக்கம் போல புதுசா வந்த பொண்ணுக்கிட்ட சில்மிஷம் பண்ணிருக்கான், அந்த பொண்ணு விஜயசாந்தி
பரம்பரை போல,
செருப்பெடுத்து சப்பு சப்புன்னு நல்லா நாலு கொடுத்திருக்கா, அதோட நிக்கல, நேரா போய் மேனேஜர்
கிட்டயே கம்பளைன்ட் பண்ணிட்டா” என சுமதி சொன்னதுமே கதை கேட்கும் ஆர்வமே இளமதிக்கு
போய் விட்டது.
“என்னக்கா நீ, திருடன் கைல சாவி கொடுத்த கதையவா இவ்ளோ ஆர்வமா சொல்லிட்டு இருக்க, நானே தலைவலில
வந்திருக்கேன்” என சலித்து கொண்டாள்.
“இங்க தான் நீ ஒரு தப்பு பண்ற, அந்த மேனேஜர் நாயி ஒரு பொம்பள பொறுக்கின்னு எனக்கும்
தெரியும், அவன் உன்னயும்
என்னையும் கூப்ட்டதோட நிக்கல, காலேஜ் போற வயசுல புள்ளைங்கள வச்சிருக்க கோமதி அக்காவையே கூப்ட்டானே, அப்படிப்பட்ட வெறி
பிடிச்ச நாயி, அவன்கிட்ட அந்த பொண்ணு கம்ப்ளைன்ட் பண்ணி என்ன ஆகிட போகுதுன்னு நீ
யோசிக்கிறது புரியுது. ஆனா அந்த பொண்ணு நல்ல நேரத்துல அங்க போச்சோ, இல்ல இவனுங்களுக்கு அது
எமகண்ட நேரமோ என்னவோ, நம்ப சின்ன ஓனர் சுபாஷ் சார் அங்க வந்தது தான் தளபதியும்
தலயும் ஒண்ணா சேர்ந்து வில்லன பந்தாடுற சீனாகிடுச்சி” என முகமெல்லாம் பல்லாக அவர்
கூறியதை கேட்டு இளமதியின் முகம் பிரகாசமானது.
“என்னக்கா சொல்றீங்க, சுபாஷ் சார் வந்தாரா? ரொம்ப நல்லவருன்னு சொல்லிட்டே இருப்பீங்களே, அவரு தான”
“ஆமா, அவரே தான், அவரு வந்து
அந்த காமவெறி பிடிச்சவன லெப்ட் அண்ட் ரைட் வாங்கி கம்பெனிய விட்டே துரத்தி
விட்டுட்டாரு, இன்னைக்கு
நம்ப கம்பெனிக்கே விமோச்சனம் வந்த மாதிரி ஆகிடுச்சி” என சந்தோசம் தாங்காமல் அவர்
கூறி கொண்டிருக்க, தனக்கு இருக்கும் பல பிரச்சனைக்கு நடுவிலும் இந்த விசயம்
இளமதிக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. பின் என்ன, அந்த ஜெகனால் பாதிக்கப்பட்ட லிஸ்டில் அவளும்
இருக்கிறாளே.
அந்த நாள் அவன் கண் முன் வந்து போனது.
“நீ புதுசா வேலைக்கு சேர்ந்தவ தான, ஆமா குடோன்ல என்ன
பண்ணிட்டு இருக்க?”
“அது ஸ்டாக் பார்த்துட்டு வர சொன்னாங்கண்ணா, அதான்” என இளமதி
வெள்ளந்தியாக கூறினாள்.
“அண்ணனா, ஆமா நீ என் அப்பனுக்கா பொறந்த, இல்ல என் ஆத்தாகாரிய உன் அப்பன் வச்சிருக்கானா, எத வச்சி என்ன அண்ணனு கூப்டற”
அவன் இப்படி பேசியதும் இளமதிக்கு அதிர்ச்சியில் கருவிழி
கூட அசையவில்லை, இப்படி ஒரு
கேவலமான வார்த்தையை இவ்வளவு லேசில் பேசி கொண்டிருக்கிறானே, அதுவும் வேலை செய்யும்
இடத்தில் வைத்து கொண்டு. அதற்கும் மேல், எவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்திருக்கிருக்கிறான், இவன் இப்படி பேசுவான்
என்று ஒரு வினாடிக்கு முன் யாராவது சொல்லி இருந்தால் கூட அவள் நம்பி இருக்க
மாட்டாள், அப்படி
இருக்க இப்படி பேசி விட்டானே என்னும் அதிர்ச்சியில் அவள் நின்று கொண்டிருக்க, அவளின் அதிர்ச்சி
அடங்குவதற்குள் அவன் அடுத்து செய்த காரியம் இருக்கிறதே..
No comments yet.