episode 8

Rani Govindh | 04 Nov 2025

Epi 8

இளமதியை பார்த்ததும் விக்ரமன் பதறி போனான்.

“ஏய், யூ.. நீ எப்படி இங்க வந்த, உனக்கு இந்த அட்ரெஸ் எப்படி கிடைச்சது”

அவன் கோபமும் குழப்பமுமாக கேட்க இளமதியோ “மாணிக்கம்
அண்ணா தான் உங்கள பார்க்க சொல்லி அனுப்பி வச்சாரு” என அப்பாவியாக பதில் கூறினாள்.

“மாணிக்கம், அவனுக்கு எப்படி? மை காட், இன்னும் யாருக்கெல்லாம்
நீ இத பத்தி சொல்லி வச்சிருக்க
, யாரு அந்த மாணிக்கம்”

“அது அவரு, நேத்து போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வரும் போது அவரு தான்”

“போலீஸ் ஸ்டேஷனா, ஆர் யூ மேட், எல்லாம் பேசி தான உன்ன அனுப்பி வச்சாங்க, தென் எதுக்கு ஸ்டேஷன்க்கு போன, விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டியது தான”

அவன் இப்படி வேறு எதையோ நினைத்து கொண்டு பேசி
கொண்டிருக்க
, இளமதியோ
அவள் எதற்காக வந்தாலோ அதை நினைத்து பதில் கூறி கொண்டிருந்தாள்
, ஆக மொத்தம் இருவருமே
விஷயம் தெரியாமல் தான் குழப்பி கொண்டிருந்தனர்.

“நீ தானம்மா மாணிக்கம் சொன்ன இளமதி”

கேட்டு கொண்டே அங்கே மூன்றாவது நபராக ராமமூர்த்தி  மாடியில் இருந்து இறங்கி வரவும் இருவரும் இப்படி
புரியாமல் பேசி கொண்டிருந்த உரையாடல் தடைபட்டது. இளமதி அவரை பார்த்து ஆம் என்று
தலை அசைத்தாள்.

“உனக்காக தான்மா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” அவர் அங்கே
வந்த பிறகு விக்ரமனின் டென்ஷன் இன்னும் அதிகமானது.

“அங்கிள், இந்த பொண்ணு”

“ஒரு ஹெல்ப் கேட்டு வந்திருக்காங்க மாப்பிள்ளை, சரி உங்களுக்கு லேட்
ஆச்சின்னு சொன்னிங்கள்ள
, நீங்க
கிளம்புங்க, என் சைட்ல ஆல்மோஸ்ட் எல்லாருக்கும் இன்விட்டேஷன் கொடுத்தாச்சி
, அப்பாக்கிட்ட
சொல்லிருங்க”

“ஓகே அங்கிள்”

இப்படி அவர்கள் பேசி கொண்டிருக்க அப்பொழுது தான்
இளமதிக்கு தான் பார்க்க வந்தது இவ்வளவு நேரம் பேசி கொண்டிருந்தவன் இல்லை
, இப்பொழுது வந்தவர்
என்பது தெளிவானது
, ஆனால்
இவ்வளவு நேரம் தன்னிடம் பேசி கொண்டிருந்தவன் ஏதேதோ பேசினானே என்று அவளுக்கு
குழப்பமாக இருந்தாலும் அதை பற்றி யோசிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.
எப்படியோ  இவர் தனக்கு உதவி செய்தாலே
போதும் என்று நின்றிருந்தாள். அதே நேரம் விக்ரமன் அங்கிருந்து கிளம்புவதற்கு
முன்பு இளமதியை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான். அந்த பார்வையை அவளால் சமாளிக்க
முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.

“ச்சே, உலகத்துல இருக்க எல்லா ஆம்பளைங்களும் இப்படி தானா, இல்ல.. இல்ல.. இளமதி அப்படி நினைக்க கூடாது, ஏன்னா இந்த லாயர் கூட
ஒரு ஆண் தான்
, அதனால இவன்
இப்படின்னு சொல்லு
, அது தான்
சரி”

ஒரு நொடி அவன் பார்த்த பார்வையை வைத்தே அவனை பொறுக்கி
ரேஞ்சுக்கு அவள் முடிவு கட்டி விட அவனோ அதற்கு மேல் அங்கு நிற்க காரணம் இல்லாமல்
கிளம்பி சென்றான். அவன் போனதும் “சோமு
, ஒரு காபி எடுத்துட்டு வா” என்று அவர் குரல் கொடுக்க கிச்சனில் இருந்து
ஒருவர் எட்டி பார்த்து சரிங்க ஐயா என்று பதிலுக்கு குரல் கொடுத்தார்.

பிறகு அங்கு ஒரு மூலையில் இருந்த அறைக்குள் அவளை அழைத்து
சென்றார்
, அது அவரின்
ஆபிஸ் ரூம் போல.

“வாம்மா, வந்து இப்படி உட்காரு”

சேரை அவர் கை காட்ட அவள் பயபக்தியோடு பட்டும் படாமலும்
அமர்ந்தாள்.

“சொல்லும்மா, என்ன நடந்ததுன்னு டீட்டைலா சொல்லு”

இளமதிக்கு நடந்ததை சொல்லவே அவமானமாக இருந்தது, கண்களில் கண்ணீர் தேங்க, தயங்கி தயங்கி பாதி
வார்த்தைகள் முடித்தும் முடிக்காமலும் எப்படியோ தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லி
முடித்தாள். அதில் மாடலிங்கிற்கு அவள் போன கதையும் அடக்கம்
, அதனால் தன்னை அவர்
தவறாக நினைத்து விடுவாரோ என்று அவளுக்கு பயமாகவே இருந்தது. அவள் கண்களில் இருந்து
கண்ணீர் வழிவதை பார்த்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க
, அதற்குள் காபி வந்து
விடவும் காபியை குடி என்பது போல் சைகை காட்டினார். காபியை கொடுத்து விட்டு சோமு
அங்கேயே நிற்க “இங்க என்ன வேடிக்கை
, க்ளைண்ட் இருக்கும் போது இப்படி நிக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல” என
கடிந்து கொண்டார்.

க்ளைண்ட்டின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கபட வேண்டியவை, தன்னை நம்பி வரும்
க்ளைண்ட்க்கு தன்னால் எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
அதை அறிந்தும் நடுத்தர வயதுள்ள சோமுவுக்கு இளமதியின் கதையை கேட்க வந்த ஆர்வத்தால்
இப்படி வாங்கி கட்டி கொண்டு கிளம்பி போனான்.

இளமதி காபியை குடித்து முடிக்கும் வரை அமைதி காத்தார்.

“இங்க பாரும்மா, உன்னோட பிரச்சனைய லீகலா மூவ் பண்றது சரியா இருக்காது, ஏன்னா உன் தங்கச்சி
பார்ட்டி பண்ண இடத்துல ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க
, அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க, நீ எதோ ஒருத்தன நம்பி
ஹோட்டல் வரை போயிருக்க
, நீ
இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுத்ததுக்கு எந்த ஆதாரமும் இல்ல
, இதெல்லாத்துக்கும் மேல உங்க ரெண்டு பேரையும் எந்த
கேசும் போடாம வெளில விட்டுட்டாங்க
, இப்படி நடந்து முடிஞ்ச விசயத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு, அதுவும் இல்லாம
இதெல்லாம் பண்றது யாரு
, எதுக்கு
இப்படி பண்றாங்கன்னு தெரியாம நாம என்ன பண்ணாலும் நமக்கு தான் அது பிரச்சனையா
முடியும்” அவர் இப்படி பேசவும் இளமதிக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்து கொண்டே போனது.

“அப்போ எதுவும் பண்ண முடியாதா சார்”

அவளின் குரலில் அப்படி ஒரு வேதனை, அதை அவரால் உணரவே
முடிந்தது
, அவரும் பெண்ணை
பெத்தவர் ஆயிற்றே
, ஒரு
பெண்ணின் வேதனையை உணர முடியாமல் போகுமா
?

“இல்லம்மா, நான் அப்படி சொல்லல, ஆனா நடந்து முடிஞ்ச விசயத்த கேசாக்கினா இதுல  உன் வாழ்க்கை உன் தங்கச்சி வாழ்க்கை ரெண்டு
பேரோட வாழ்க்கையும் பேரும் கெட்டு போகும்
, அதுக்காக இத அப்படியே விட்டுடலாம்னு சொல்லல, முதல்ல உன்ன யார்
இப்படி பழி வாங்க துடிக்கறாங்கன்னு கண்டுபிடிக்கணும்
, அதுவரை உனக்கு தேவையானது பாதுகாப்பு, அத ஏற்பாடு பண்ணி
குடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு
, என்ன நம்பி வந்திருக்க, இனி உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன்”

அவர் வார்த்தைகள் அவள் மனதில் புது தெம்பை கொடுத்தது.

சடாரென்று எழுந்தவள் அவர் காலில் விழுந்தாள்

“ரொம்ப தேங்க்ஸ் சார், என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு, நீங்க தான் என்ன இந்த
பிரச்சனைல இருந்து காப்பாத்தணும்”

“எழுந்திரிம்மா, எழுந்திரி, என்ன இது, கால்லலாம்
விழுந்துட்டு “ அவளை எழுப்பி நிற்க வைத்தார்.

“இல்ல சார், நீங்க எனக்கு பண்றதா சொல்ற உதவி ரொம்ப பெருசு, இப்போ இருக்க நிலைமைல என்னால சாகவும் முடில, வாழவும் முடில”

அழ ஆரம்பித்து விட்டாள்.

“அப்படிலாம் சொல்ல கூடாது, எவனோ பண்ற தப்புக்கு நீ பலிகடா ஆகலாமா? இனி சாகனும்னு
எப்போவும் உனக்கு தோண கூடாது
, ஆமா நீ இப்போ எங்க வேலை பார்க்கற”

“கார்மென்ட்ஸ்ல அக்கவுன்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேலை
பார்க்கறேன் சார்”

“பரவால்லையே, எவ்ளோ படிச்சிருக்க”

அவர் அப்படி கேட்கவும் திரும்பவும் அவள் கண்கள் கலங்க
ஆரம்பித்தது
,
பண்ணிரண்டாவது முடித்தவளை கட்டாயபடுத்தி கல்யாணம் செய்த கதையும்
, அடுத்த வருடமே டிவோர்ஸ்
கொடுத்து அனுப்பி வைத்த கதையும் கூறி முடித்தாள்.

“உனக்கு ஏன்ம்மா இவ்ளோ சோதனை, ஆமா உன்னோட எக்ஸ் ஹஸ்பன்ட் இத பண்ணிருக்க வாய்ப்பு
இருக்கா”

அவர் அப்படி கேட்கவும் பதறி அடித்து அவள் அதை மறுத்தாள்.

“இல்ல சார், அவரு இப்படிலாம் பண்ற ஆளு இல்ல, ரொம்ப நல்லவரு, அவரால
குடும்ப வாழ்க்கைல ஈடுபட முடியாதுன்னு தெரிஞ்சதும் அவரால என் வாழ்க்கை கெட்டுட
கூடாதுன்னு அவரே டிவோர்ஸ் கொடுத்துட்டாரு
, அப்போ அவரு கொடுத்த பணத்த வச்சி தான் என் அப்பா வாங்கி
வச்ச கடன் எல்லாம் அடைச்சோம்
, இப்போ அவரு பாரின்ல இருக்காருன்னு கேள்விபட்டேன், இத அவர் பண்ண வாய்ப்பே இல்ல சார்”

தன் வாழ்க்கையை கெடுத்த அந்த முதல் கணவனுக்கு சப்போர்ட்
பண்ணி இளமதி பேசியதை கேட்டு லாயர் பெருமூச்சி விட்டு கொண்டார்.

“நீ உலகம் தெரியாத பொண்ணா இருக்கம்மா, கூடிய சீக்கிரமே
இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு கண்டுபிடிச்சிரலாம்
, அவன கண்டுபிடிச்சா தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு
கிடைக்கும்
, சரிம்மா, இதுக்கு மேல ஸ்டேஷன்ல
இருந்து உன்ன வர சொன்னாங்கன்னா உடனே எனக்கு கால் பண்ணு
, மீதிய நான் பார்த்துக்கறேன், அப்புறம் உன்னையோ உன் தங்கச்சிங்களையோ யாராவது பாலோ
பண்ற மாதிரி இருந்தாலும் எனக்கு தகவல் கொடுக்கணும் சரியா
, இதெல்லாத்துக்கும் மேல நீ தைரியமா இருக்கணும், பொண்ணுங்க தைரியமா
இருந்தா தான் இந்த காலத்துல வாழ முடியும்”

அவர் கூறியதை எல்லாம் கேட்டு அவள் தலை அசைத்தாள்.

“இன்னும் பத்து நாள்ல வீட்ல கல்யாணம் வச்சிருக்கேன், அது விசயமா நான்
கொஞ்சம் பிசியா இருப்பேன்
, உனக்கு
எப்போ உதவி தேவைன்னாலும் இதோ இந்த நம்பருக்கு கால் பண்ணு
, இது என் அசிஸ்டெண்ட் நம்பர் தான், உடனே உனக்கு தேவையானது
செஞ்சி கொடுப்பான்
, பேரு
விஷ்வா, அவன நாளைக்கு உன்ன வந்து பார்க்க சொல்றேன்”

அவர் விஷ்வா நம்பரை ஒரு பேப்பரில் எழுதி கொடுக்க இளமதி
அதை வாங்கி கொண்டாள்.

“ஆமா நீ எப்படி வந்த”

“பஸ்ல தான் சார்”

“கார்ல உன்ன டிராப் பண்ண சொல்றேன், நீ வா”

அவர் ஹாலுக்கு வந்து ட்ரைவரை அழைத்தார்.

“சொல்லுங்கய்யா”

“இந்த பொண்ண வீட்ல கொண்டு போய் பத்திரமா விட்டுட்டு வா”

“அது ஐயா, சின்னம்மா வெளில போகணும்னு சொன்னாங்க”

“தாரா கிட்ட நான் பேசிக்கறேன், நீ இந்த பொண்ண டிராப் பண்ணிட்டு வா”

டிரைவர் தயங்கியபடி நிற்பதை பார்த்த இளமதிக்கு தன்னால்
எதற்கு அவர் சங்கடபட வேண்டும் என்று தோன்றியது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார், நான் பஸ்லயே
போய்க்கறேன்
, அதுவும்
இல்லாம இப்போ கம்பெனிக்கு தான் போகணும்
, இங்க இருந்து பஸ் பிடிச்சு போய்டுவேன்”

வேகமாக அவள் பதில் கூற அவர் எதோ யோசித்தார்.

“சரி, அப்போ பஸ் ஸ்டேன்ட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துடு” என கூறவும் அவளாலும்
எதுவும் சொல்ல முடியவில்லை
,
ட்ரைவராலும் எதுவும் கூற முடியவில்லை.

அவர் தயக்கத்தோடு காருக்கு செல்ல, இளமதி இவருக்கு எப்படி
நன்றி சொல்வது என்கிற தவிப்போடு அவரை பார்த்து கை கூப்பி புன்னகைத்து விட்டு
கிளம்பினாள்.

காரில் போய் கொண்டிருக்கும் போது டிரைவர் டென்ஷனாகவே
இருந்தார். அந்த நேரம் பார்த்து சிக்னல் விழவும் 
டென்ஷனில் புலம்பவே ஆரம்பித்து விட்டார்.

“இப்போ தான் இவனுங்க சிக்னல் போடுவானுங்க, போச்சி என்ன நடக்க
போகுதோ”

அவர் புலம்புவதை கேட்டவள் “என்ன ஆச்சின்னா, ஏதாவது பிரச்சனையா?” என விசாரித்தாள்.

“பிரச்சனை தான்மா, சின்னம்மா வேற வெளில போகணும்னு சொன்னாங்க, அவங்க வர நேரத்துக்கு
கார் இல்லன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்
, என்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க”

“அப்போ நீங்க இங்கயே என்ன இறக்கி விட்டுடுங்க, இன்னும் கொஞ்ச தூரம்
தானே பஸ் ஸ்டாண்ட்
, நான்
போய்க்கறேன்”

“ஐயையோ, நீ வேற ஏன்ம்மா, உன்ன பாதில
விட்டுட்டு வந்தேன்னு தெரிஞ்சா ஐயா என் சீட்ட கிழிச்சிருவாரு”

அவர் இப்படி எதற்கும் ஒத்து வராமல் புலம்பி கொண்டே வர
இளமதிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை
, அவள் தன் பிரச்சனை எப்பொழுது தீரும் என்கிற நினைப்பில்
மூழ்க ஆரம்பித்து விட்டாள்.

அதே நேரம் ராமமூர்த்தி வீட்டில் இருந்து கிளம்பிய
விக்ரமனோ, தன் ஆபிஸ் ரூமில் உட்கார்ந்து கொண்டு இளமதி எப்படி அங்கு வந்தால்
, எதற்காக வந்திருப்பாள்
என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான்.

அவன் கேள்விக்கு பதில் கிடைக்குமா? அடுத்து என்ன நடக்க
போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    No comments yet.