episode 5

Rani Govindh | 04 Nov 2025

Epi 5

இளமதிக்கு ஸ்டேஷனில் இருந்து மானத்தோடு தப்பிக்க
முடியாதோ என்கிற பயம் மனதை ஆட்கொண்டது. சாகவாவது அங்கு ஏதாவது கிடைக்குமா என்று
அவள் கண்கள் தேடியது
, அவள்
தேடலுக்கு பலன் கிடைத்தது போல் அங்கு மூலையில் கிடந்த சுத்தியலை அவள் கண்கள்
பார்த்து விட்டது. அடுத்த நொடி அவள் உடலில் எப்படி அவ்வளவு சக்தி வந்ததோ
, மின்னல் வேகத்தில்
பாய்ந்து போய் அந்த சுத்தியலை கையில் எடுத்தாள். அதை இறுக பற்றி கொண்டவள்
si திவாவை கொலை வெறியோடு
முறைத்து பார்த்தாள். அந்த பார்வையின் வீரியத்தில் அவனே ஒரு நொடி ஆடி தான் போய்
விட்டான்.

“இன்னும் ஒரு அடி என்கிட்ட நெருங்கி வந்த, நான் என்ன பண்ணுவேன்னு
எனக்கே தெரியாது”

அவள் கத்திய கத்தில் திவா ஒரு அடி பின்னால் நகர்ந்து
நின்றான்.

“ஏய், ஒழுங்கா சுத்தியல கீழ போட்டுடு, இல்ல நீ நினச்சி பார்க்க முடியாத கொடுமைலாம் நீ அனுபவிக்க வேண்டியது
வரும்” அவன் மனதிற்குள் பயம் இருந்தாலும் இது அவன் இடம் என்கிற தைரியத்தில் அவளை
வார்த்தையால் மிரட்டி கொண்டிருந்தான்.

“இதுக்கு மேல நீ சொல்றத எல்லாம் நான் எதுக்கு கேட்கணும், மிஞ்சி மிஞ்சி போனா
என்ன பண்ணிடுவிங்க
, சுட்டு
கொல்லுவிங்களா
, நான்
ஏற்கனவே சாக துணிஞ்சிட்டேன்”

என்ன தான் வீரமாக அவள் பேசி கொண்டிருந்தாலும்
சிங்கத்தின் குகையில் மாட்டி கொண்ட புள்ளி மான் அவள் என்று அவளுக்கு புரியவில்லை.
அதுவும் இந்த
si
வெறித்தனமான நரி என்று அவளுக்கு உரைக்காமல் போய் விட்டது.

“டேய் அவள பிடிங்கடா” என்று அவன் பின்னால் பார்த்து கூற, தனக்கு பின்னால் யாரும்
இல்லை என்பது தெரிந்திருந்தாலும் ஒரு நொடி இளமதியின் கவனம் சிதறியது
, எப்பொழுதும் அலெர்ட்டாக
இருக்க அவள் போலீசோ
, இல்லை போர்
ட்வென்டியோ இல்லையே.

அவள் கவனம் சிதறிய அடுத்த கணம் அவள் வயிற்றில் அவன்
எட்டி உதைத்தான்
, அதில் அவள்
அலறி அடித்து கீழே விழ
, அவள்
கையில் இருந்த சுத்தியல் ஒன்றுக்கும் உதவாதது போல் தூரத்தில் போய் விழுந்தது.

“என்னடீ, ப்லிம் காட்டிட்டு இருக்க, இப்போ பாக்கறையா, நான் உன்ன
வச்சி ப்ளூ பில்மே எடுத்து காட்டறேன்”

அவள் தலை முடியை பிடித்து அவளை தூக்கி நிறுத்தினான்.
அவளோ வயிற்றில் பட்ட உதையால் வலி தாங்க முடியாமல் பலமிழந்து அவன் கை பிடிக்குள்
மாட்டி கொண்டிருந்தாள்.

“மயிலே மயிலே இறகு போடுன்னா வேலைக்காகாது.. மொத்தமா
பிச்சி எறிஞ்சா தான் நான் நினச்சது நடக்கும்னு புரிய வச்சிட்ட”

பேசி கொண்டே அவள் புடவை முந்தானையை பிடித்தான்.

“ப்ளீஸ் வேண்டாம்” அவள் சத்தமாக கத்த கூட முடியாமல்
முணுமுணுத்தபடி கையெடுத்து கும்பிட்டாள்.

“இப்போ தான சீனே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள கும்பிட்டா
எப்படி
, எல்லாம்
முடிஞ்ச பிறகு நீயே இன்னொரு ரவுண்டு போலாம்னு சொல்லுவ, என் பெர்பார்மென்ஸ் அந்த
அளவுக்கு இருக்கும்”

அவன் முந்தானையை இழுத்ததில் அவள் தோளில் போட்டிருந்த
பின் கழண்டது. அவன் கையோடு முந்தானை போகும் நிலையில், அவள் தன் கைகளை மார்புக்கு
குறுக்காக கட்டி கொண்டு முந்தானையை போக விடாமல் தடுத்து கொண்டிருந்தாள்.

“ஏய் விடுடீ, ஒழுங்கா விட்டா இதே துணிய போகும் போது
போட்டுட்டு போவ
, இல்லைன்னா
எல்லாத்தையும் கிழிச்சி எரிஞ்சிடுவேன்”

அவள் முடியாது என்பது போல கண்ணீரோடு தலையை ஆட்ட அவனின்
கோபம் அதிகமானது.

“உன்ன” என்று கத்தியபடி அவன் வலுக்கட்டாயமாக புடவையை
இழுக்க போகும் சமயத்தில் இன்ஸ்பெக்டர் திவா என்று கத்தும் சத்தும் கேட்டு அவன்
டைவர்ட் ஆனான்.

“யோவ், இங்க வாயா” என்று இன்ஸ்பெக்டர்  அடுத்தடுத்து அவனை அழைத்து கொண்டே இருக்கவும்
அவனுக்கு கடுப்பானது.

“இவரு வேற நேரம் கெட்ட நேரத்துல தான் கூப்ட்டுட்டு
இருப்பாரு” என்று கோபமாக முணுமுணுத்துக் கொண்டவன் அவள் புடவையை விடுவித்தான்.

“ரொம்ப சந்தோஷபட்டுக்காத, நான் வரதுக்குள்ள நீயா எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு
ரெடியா இருக்கணும்
, புரிதா”
என்று மிரட்டியவன் அங்கிருந்து போக ஒரு அடி எடுத்து வைத்து விட்டு எதோ நினைவுக்கு
வந்தவனாக திரும்பி வந்து மூலையில் கிடந்த சுத்தியலை எடுத்து கொண்டு போய் விட்டான்.

இளமதிக்கோ இருந்த ஒரு நம்பிக்கையும் போய் விட்டது போல்
ஆகி விட்டது. அந்த லாக்கப்பின் மூலையில் உட்கார்ந்து விரக்தியாக விட்டத்தை
பார்த்து கடவுளிடம் பேசி கொண்டிருந்தாள்.

“ஏன் கடவுளே, ஏன்.. ஏன் இப்படிலாம் என்ன சோதிக்கற, அப்படி என்ன நான் பாவம் செஞ்சிட்டேன், எனக்கு சாவ  கொடுக்க கூட உனக்கு மனசு வரலையா, அவ்ளோ இறக்கமில்லாத
கல்லா மாறிட்டியா, திரும்ப அவன் வர போறான்
, வந்து.. அவன் வந்தா என்ன நடக்கும்னு உனக்கே தெரியுமே, எனக்கு என்ன பதில்
சொல்ல போற
, என்
கண்ணீருக்கு அர்த்தமே இல்லையா
, இந்த மிருகத்துகிட்ட மாட்டி என்னோட உடம்பு சிதஞ்சி போறத நீ ரசிக்க போறியா,  என்ன சந்தோஷமா வாழ வைன்னு கூட நான் கேட்கலயே, என்ன இந்த நொடி நீ
எடுத்திக்கிட்டா அதுவே எனக்கு போதும்
, இந்த நரகத்துல இருந்து விமோச்சனம் கிடச்சாலே போதும்னு தானே கேட்கறேன்,
சொல்லு என்ன எடுத்திப்பியா
, எனக்கு சாவ
கொடுப்பியா
?” என்று
மரணத்திற்காக கடவுளிடம் பிச்சை கேட்டு கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கு ஓட்டமும் நடையுமாக வந்த ஏட்டு வேக
வேகமாக லாக்கபை திறந்து உள்ளே வந்தார். அவர் வந்தால் மட்டும் என்ன நடக்க போகிறது
என்கிற மனநிலையில் அவள் உட்கார்ந்திருக்க அவர் அவசர குரலில்  “சீக்கிரம் எழுந்து வாம்மா” என கூறவும் அவள்
புரியாமல் அவரை பார்த்தார்.

“உண்மையாவே கடவுள் உன் கூட உனக்கு துணையா இருக்காரும்மா, அதனால தான் இந்த
பாவிங்க போட்ட திட்டத்துலருந்து உன்ன காப்பாத்திட்டாரு”

அப்பொழுதும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல்
இளமதி பார்க்க அவரே சுருக்கமாக அவள் இவர்களிடம் இருந்து தப்பித்த கதையை கூறினார்.

“இவனுங்க சொன்ன ஆளுகிட்ட மாடலா போய் மாட்டிக்காம எப்படியோ
தப்பிச்சிட்ட
, இப்போ
அவனுங்க கைல உன் வீடியோவும் இல்ல
, ஒன்னும் இல்ல.. அந்த ஆத்திரத்துல தான் உனக்கு யாரு உதவி செஞ்சதுன்னு இவ்ளோ
டார்ச்சர் பண்ணாணுங்க
,
விட்டிருந்தா இங்க வச்சே அவனுங்களுக்கு தேவையான வீடியோவ எடுத்துருப்பானுங்க
, ஆனா நல்லவேளையா வேற ஒரு
முக்கியமான கேஸ் விசயமா கமிஷ்னர்  இங்க
வரதா தகவல் வந்திருக்கு
, அவர் வர
நேரத்துல
fir இல்லாம, அதுவும் இந்நேரத்துல
ஒரு பொண்ண லாக்கப்ல வச்சிருக்க விசயம் வெளிய போச்சி இன்ஸ்பெக்டர் வேலையே காலி
ஆகிடும்
, அதான் உன்ன
இப்போ விட சொல்லிட்டாரு.. ஆனா இது நிரந்தரம் இல்லம்மா
, எப்படி இருந்தாலும் இவனுங்களால உனக்கு பிரச்சனை வரும், இன்னைக்கு
இல்லாட்டியும் நாளைக்கே ஏதாவது திரும்ப பண்ணுவானுங்க
, அதனால ஒன்னு இந்த ஊர விட்டே ஓடிரு, இல்லாட்டி இவனுங்க
பயப்படற மாதிரி பெரிய ஆளுங்ககிட்ட உதவி கேளு.. வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரில
, திரும்ப அவனுங்க ஏதாவது
பண்றதுக்குள்ள நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு”

அவர் சொல்லி கொண்டிருந்ததில் அவளுக்கு புரிந்தது எல்லாம்
இப்போதைக்கு அவள் தப்பித்து விட்டால் என்பது தான். ஏட்டு பேசி முடிக்க
இன்ஸ்பெக்டர் குரல் கேட்டது.

“என்னையா அங்க கத அடிச்சிட்டு இருக்க, சீக்கிரம் அவள கிளம்ப
சொல்லு”

இன்ஸ்பெக்டர் குரல் கேட்டதும் போம்மா என்பது போல் ஏட்டு
ஜாடை காட்ட அவள் முந்தானையை உடலில் போத்தியபடி லாக்கப்பில் இருந்து வெளியே
வந்தாள். இன்ஸ்பெக்டர் அருகில் நின்று கொண்டிருந்த
si முகத்தில் அப்படி ஒரு ஆத்திரம். கைக்கு கிடைத்தது
வாய்க்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

“எதோ உன் நல்ல நேரம் இப்போ தப்பிச்சிட்ட, உன் நம்பர்
என்கிட்டே இருக்கு
, திரும்ப
எப்போ கூப்ட்டாலும் நீ வந்தாகணும்
, என்கிட்ட இருந்து தப்பிக்க நினச்ச உன் தங்கச்சிய தூக்கிருவேன்”

இன்ஸ்பெக்டர் மிரட்டி அனுப்ப தட்டு தடுமாறி  ஸ்டேஷனில் இருந்து மெல்ல நடந்து வந்தாள். இளமதி
எப்பொழுது வருவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த வெண்ணிலாவிற்கு அவள் வந்த
கோலத்தை பார்த்து அதிர்ச்சியானது. பதறி போய் அவளிடம் ஓடி வந்தாள்.

“என்னக்கா ஆச்சி, நெத்தில ரத்தம் வேற வருது, சொல்லுக்கா என்ன ஆச்சி”

ஆட்டோ டிரைவருக்கு உள்ளே என்ன நடந்திருக்கும் என்பது
புரிந்தது.

“ரெண்டு பேரும் முதல்ல ஆட்டோல இருங்க, இங்க நிக்கறது நல்லது
இல்ல
, எதுவா
இருந்தாலும் இங்க இருந்து தூரமா போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம்”

அவர் சொன்னது சரி என்று இருவருக்கும் புரிந்ததால்
ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ தூரமாக சென்று நின்றது. மணி கிட்டத்தட்ட பத்து ஆகி
இருந்தது. ஆட்டோகாரர் சைக்கிளில் டீ விற்று கொண்டிருந்தவரிடம் இரண்டு டீ வாங்கி
இருவருக்கும் கொடுத்து குடிக்க சொன்னார். இளமதி பேயறைந்தது போல் உட்கார்ந்திருக்க ஆட்டோகாரர்
 பொறுமையாக விசாரித்தார். இளமதி வெண்ணிலாவை
பார்க்க
, அவர் அவளை
ஆட்டோவில் உட்கார்ந்து டீ குடிக்க சொல்லி விட்டு
, இளமதியை தனியாக அழைத்து போய் கேட்க அவள் நடந்ததை
எல்லாம் கூறினாள். இந்த அநியாயத்தை கேட்டதும் அவருக்கு கண்கள் கலங்கியது.

“என்ன கொடுமை இதெல்லாம்? இவனுங்கலாம் மனுஷ பிறவிங்களா? ஆமா இதெல்லாம் யார் தான் பண்றது, இப்படி ஒரு அப்பாவி
பொண்ணுக்கு யாரு இவ்ளோ கொடுமைய பண்றது”

அவர் கேள்விக்கு அவள் உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று
சைகை செய்தாள்.

“சரிம்மா, இப்போ என்ன தான் பண்ண போற, உன் நிலமைய பார்த்தா எனக்கே கஸ்டமா இருக்கு, உன்ன இப்படியே விட்டுட்டு போக மனசு வரல, எனக்கு ஒரு
லாயர தெரியும்
, அவரு
அடிக்கடி என் ஆட்டோல வருவாரு, அவரு இந்த மாதிரி கஷ்டபடறவங்களுக்கு உதவி பண்ற நல்ல
மனுஷன்
, அவர்
அட்ரெஸ் தரேன்
, அவர
நாளைக்கு போய் பாரு
, நானும்
அவர்கிட்ட பேசறேன்
, நிச்சயமா
அவரு உனக்கு ஏதாவது வகைல உதவி செய்வாரு. நாலு கெட்டவங்க இருக்காங்கன்னா
, ரெண்டு நல்லவங்க கூட
இருக்காமலா போய்டுவாங்க” என்றவர் வேகமாக அவர் போனை எடுத்து லாயருக்கு கால் செய்து
பேசினார்.

எல்லா விவரத்தையும் கேட்ட லாயர் நாளை நேரில் வந்து
பார்க்க சொல்ல, அவருக்கு நன்றி சொல்லி விட்டு காலை கட் செய்த ஆட்டோகாரர்  இளமதியை பார்த்தார்.

“நான் சொன்னேன்லம்மா, அவரு ரொம்ப நல்லவரு, அவரு கண்டிப்பா உனக்கு உதவி செய்வாரு, நாளைக்கு அவர இந்த
அட்ரெஸ்ல நேர்ல போய் பாரு
, நடந்தத
சொல்லு
, அவரு
அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லுவாரு
, இதோ இது என்னோட நம்பரு, உனக்கு ஏதாவது உதவி தேவைன்னாலும் எனக்கு கூப்டும்மா, என்னோட பேர சொல்லலையே, என் பேரு மாணிக்கம், ஆமா உன் பேரு என்னம்மா”

“இளமதி”

“எவ்ளோ நல்ல பேரு, என்ன பண்றது, உனக்கு இப்படி ஒரு கஷ்டம், சரிம்மா வா, நேரம் ஆச்சி, உங்க வீட்டுல இறக்கி விட்டுடறேன்

அவர் ஆட்டோவை நோக்கி நடக்க இளமதி அவரை அழைத்தாள்.

“அண்ணா ஒரு நிமிஷம், இந்த விஷயம் எதுவும் என் தங்கச்சிக்கு தெரிய வேண்டாம்

அவள் கூறியதை கேட்டு அவரின் பார்வை அவள் மேல் பரிதாமாக
விழுந்தது. அவர் மனதின் வேதனை அவர் பெருமூச்சில் வெளிப்பட்டது. அவர் சரி என்பது
போல்  தலையாட்டி விட்டு ஆட்டோவிற்கு செல்ல
அவர் பின்னாலேயே அவளும் சென்றாள்.

]“என்னக்கா
ஆச்சி
, வீட்டுக்கு
போலாமா”

“ம்” என்று இளமதி கூற ஆட்டோ அவர்களின் வீட்டை நோக்கி
போய் கொண்டிருந்தது.

மாணிக்கம் கூறியது போல் இளமதி லாயரை பார்க்க போகிறாளா? இல்லை ஏட்டு கூறியது
போல் ஊரை விட்டு போக போகிறாளா
? இளமதி எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

    No comments yet.