episode 4

Rani Govindh | 04 Nov 2025

Epi 4

சைன் போட சென்ற இளமதி இன்னும் வராமல் போகவே
வெண்ணிலாவிற்கு பதட்டமானது. அவள் ஆட்டோவில் இருந்து இறங்க போவதை பார்த்த ஆட்டோ
டிரைவர் அவளை விசாரித்தார்.

“என்னமா, என்ன ஆச்சி.. ஏன் இறங்குற”

“இல்லண்ணா, அக்காவ இன்னும் காணோம், பயமா இருக்குண்ணா, நாம உள்ள
போய் அக்காவ கூட்டிட்டு வந்துருவோமா
?” பரிதாபமாக கேட்டவளை ஆட்டோ டிரைவர் பாவமாக பார்த்தார்.

“இங்க பாரும்மா, உன்ன அவனுங்க விட்டதே எனக்கென்னவோ பெரிய விசயமா படுது, இதுல திரும்ப போய் நீ
மாட்டிக்க போறியா
? எப்படியும்
உன் மேல தான் கம்ப்ளைன்ட் எழுதி வச்சிருப்பானுங்க
, திரும்ப நீ உள்ள போன வெளிய வரது ரொம்ப கஷ்டமாகிடும், உன் அக்கா தான்
போயிருக்காங்கள்ள
, உள்ள என்ன
ஆனாலும் அவங்க பாத்துப்பாங்க… தேவை இல்லாம, சூழ்நிலை தெரியாம நீ உள்ள போய் இருக்கற
பிரச்சனைய மேலும் பெருசாக்கி விட்டுடாத
, இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம், அப்படியும் வரலைன்னா அப்புறம் உள்ள என்ன நடக்குதுன்னு நானே போய்
பார்த்துட்டு வரேன்
,
அதுக்குள்ளே அவசரப்பட்டு நீ பாட்டுக்கு போய்டாத
, என்ன நம்பி தான் உன் அக்கா உன்ன விட்டுட்டு
போயிருக்காங்க. புரிதா” அக்கறையோடு அவர் கூற அதற்கு மேல் அவர் வார்த்தையை மீற
முடியாமல் வெண்ணிலா அமைதியாக ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டாள்.

ஆனால் ஸ்டேஷனிலோ இளமதி அடுத்து நடக்க போகும் விபரீதம்
அறியாமல் அழுது கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தான்.

“என்னடீ, உன் மூஞ்ச பார்த்தா எதுக்கும் நீ பயப்பட மாட்ட போலருக்கு, ஆமா உன்ன  மாதிரி பொம்பளைங்க வேற எதுக்கு பயப்பட போறீங்க, போன ரெண்டு மணி
நேரத்துல எட்டு லட்சம் பணம் உன் கைல வந்திருக்குன்னா
, சும்மாவா வந்திருக்கும், ஆமா ஒருத்தனுக்கா இல்ல ஒரே நேரத்துல பல செர்வீஸ்
பண்றவளா
? எட்டு
லட்சம் கொடுத்தா தான் பண்ணுவியா
, இல்ல எனக்கு டிஸ்கவுன்ட் ஏதாவது இருக்கா?” என்று வாய்க்கு வந்த மாதிரி அசிங்க அசிங்கமாக அவன் பேச
இளமதியால் அதை எல்லாம் காது கொடுத்து கேட்க முடியவில்லை
, ஆனாலும் அவளுக்கு கெஞ்சுவதை தவிர வேறு என்ன வழி
இருக்கிறது
, கெஞ்ச
ஆரம்பித்தாள்.

“சார், ப்ளீஸ் சார் என்ன விட்டுடுங்க, அந்த மாதிரி பொண்ணு நான் இல்ல சார்”

“அப்படியா, அப்புறம் எவன்டீ உனக்கு இவ்ளோ பணம் கொடுத்தது, அந்த உண்மைய மட்டும் சொல்லிடு, அடுத்த செகண்டே நீ வீட்டுக்கு கிளம்பலாம்”

இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது, இவர்கள் ப்ளான் தானே
இதெல்லாமே
, அப்புறம்
எதற்கு திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள்
, ஒருவேளை அவர்கள்
ப்ளானில் இதுவும் ஒன்றோ என்று அவள் குழம்பி போனாள்.

“ஏய், என்னடி யோசிக்கற, என்ன பொய்
சொல்லலாம்னு யோசிக்கிறியா
, என்ன
பார்த்தா உனக்கு கேனயன் மாதிரி தெரியுதா
, இதுக்கு மேல பொய் சொன்ன ஒட்டு துணி இல்லாம தான் உன்ன விசாரிக்க வேண்டியது
வரும்
, உண்மைய
சொல்றியா
, இல்ல”
என்று அவன் முட்ட கண்களை உருட்டி அவளை பயமுறுத்த முயற்சி செய்தான்.

அதற்கு மேலும் இளமதியால் அவனின் அசிங்கம் பிடித்த
வார்த்தைகளை கேட்க முடியவில்லை. இன்னும் எவ்வளவு கேவலத்தை தான் அவள் தாங்குவாள்.

“சார் இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்? எப்படி பணம்
கிடைச்சதுன்னு தானே
? நீங்க இப்போ
சொன்னீங்களே, அந்த மாதிரி ஒரு கோலத்துல மாடலா நின்னு தான் இந்த பணத்த வாங்கிட்டு
வந்தேன் போதுமா
?” என்று
அழுதபடி கத்தினாள்.

அதை கேட்டு அவன் அவளை விட்டு விடுவான் என்று நினைத்தால்
அதற்கு பிறகு தான் அவனின் கோபம் இன்னும் அதிகமானது.

“யாருகிட்டடீ கத விடற, எங்க மாடலுக்கு நின்ன, யாரு உனக்கு பணம் கொடுத்தா”

அவனின் கேள்வியில் அவளுக்கு தலையே சுற்றுவது போல் ஆகி
விட்டது. தன்னை சித்திரவதை செய்ய முடிவு செய்து விட்டார்கள் என்று தெரியும்
, ஆனால் அவர்கள் செய்த
அந்த கேவலமான வேலையை தன் வாயால் சொல்ல வைக்க எதற்கு முயற்சி செய்கிறார்கள்
, அது மட்டும் அவளுக்கு
புரியவே இல்லை.

“அது.. அது.. இன்னும் என்ன தான் நான் சொல்லனும்னு
எதிர்பார்க்கறீங்க
, எல்லாம்
உங்களுக்கு தெரிஞ்சது தான
, நீங்க
ஏற்பாடு செஞ்ச அந்த ப்ரோக்கர் தான் என்ன அந்த ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனான்
, அவன் சொன்ன மாதிரி நான்
நின்னதுக்கு தான் பணம் கிடச்சது
, இது தான் நடந்தது, இத எத்தன
முறை தான் கேட்பீங்க” என்று கோபத்தில் கத்தினாள்.

அவள் கத்திய அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று
அறை விழுந்தது.  ஏற்கனவே அவன் அடித்த
அடியில் அவள் தலையில் அடிபட்டு ரத்தம் வந்திருக்க இவ்வளவு நேரம் அடங்கி போயிருந்த
வலி இந்த அறையால் அதிகமாகி இருந்தது.. அவள் தலையை பிடித்து கொண்டு கதிகலங்கி
நின்றாள்.

“என்னடி நாடகம் போடறயா, நீ சொன்ன மாதிரி நாங்க ப்ளான் பண்ண மாதிரி நீ எல்லாம்
பண்ணிருந்தா அப்புறம் எதுக்கு உன்ன இப்படி லாக்கப்ல வச்சி விசாரிச்சிட்டு இருக்க
போறேன்
, அந்த
ப்ரோக்கர் கூட ஹோட்டலுக்கு போன வரைக்கும் எல்லாம் சரி தான்
, ஆனா உன்ன ரூம்ல வெயிட்
பண்ண சொல்லிட்டு அந்தாளு வெளிய போயிட்டு வரதுக்குள்ள நீ எங்க போன
, அது தான் இப்போ
கேள்வியே
, இந்த பணம்
உனக்கு எவன் கொடுத்தான், இதுக்கு மட்டும் ஒழுக்கமா பதில் சொல்லு”

அவன் தெளிவாக கேட்ட கேள்வியால் அவள் திடுக்கிட்டு
போனாள்.

“எ.. என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல, அந்த ப்ரோக்கர் சொன்ன
மாதிரி தானே எல்லாம் நடந்தது
, நான் அதே ஹோட்டல்ல தான் இருந்தேன், அந்தாளு சொன்ன ரூமுக்கு தான் போனேன், மாடலா நின்னேன், பணம் கொடுத்தாங்க, வாங்கிட்டு வந்து அந்த
பணத்த முழுசா உங்ககிட்ட கொடுத்துட்டேன்
, இத தவிர வேற எனக்கு எதுவும் தெரியாது, நான் வேற எதுவும் பண்ணல”

இளமதி சொன்ன பதில் அவனை திருப்திபடுத்தவில்லை, அவள் திரும்ப திரும்ப
பொய் சொல்கிறாள் என்று அவன் கோபம் அதிகமானது.

“ஏய், என் மண்டைய சூடேத்தாத, என்ன வாழபழ கதையா சொல்லிட்டு இருக்க, அதெப்படிடீ அந்த ப்ரோக்கர் கூட போனாளாம், ரூமுக்கு போய் மாடலா
நின்னு பணம் வாங்கிட்டு வந்தாளாம்
, அப்போ நீ அந்த ரூமுக்கே வரலன்னு ப்ரோக்கர் சொன்னது பொய்யா? சொல்லுடி, அவன் சொல்றது பொய்யா?

இன்ஸ்பெக்டர் சைக்கோ மாதிரி கோபத்தில் அந்த லாக்கப்பில்
அதற்கும் இதற்கும் நடக்க இளமதிக்கோ பயத்தில் அடிவயிறு எல்லாம் கிர்ரென்று ஷாக்
அடிக்க ஆரம்பித்தது. கை கால் எல்லாம் நடுங்கி போய் பயத்தோடு நின்று
கொண்டிருந்தாள்.

“யோவ் திவா, எங்க இருக்க”  இன்ஸ்பெக்டர் குரல்
கேட்டதும் எப்பொழுது சான்ஸ் கிடைக்கும் என்று காத்திருந்தவன் போல் பாய்ந்து
லாக்க்பிற்கு ஓடி வந்தான்.

“சொல்லுங்க சார், உண்மைய சொல்லிட்டாளா?

“இவ அவ்ளோ லேசுல சொல்றவ இல்ல திவா, அழுத்தகாரியா இருக்கா, நாம நினைக்கற மாதிரி இவ
அப்பாவிலாம் இல்ல
, நம்மளையே
கிறுக்கனாக்கிடுவா
, அந்த
அளவுக்கு விவகாரமானவ. இதுக்கு மேலயும் பொய் சொல்லி தப்பிக்க முடியாதுன்னு
தெரிஞ்சும் பொய் சொல்றான்னா இவ எப்படிப்பட்ட பொம்பளையா இருக்கணும்
, இவளுக்கு இப்படி வாய்ல
விசாரிச்சாலாம் வேலைக்காகாது
,.. இவ துணிய உருவி கட்டி போட்டு விசாரிச்சா தான் நாம யாருன்னு இவளுக்கு
புரியும்
,
ஆம்பளைங்களே நம்மள கண்டு பயத்துல மூச்சா போய்டுவானுங்க
, இவ எப்படி நிக்கறா பாரு, இதுக்கு மேல பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது, நான் சொன்னத செய், நான் போய் ஒரு தம்
போட்டுட்டு வந்துடறேன்”

இன்ஸ்பெக்டர் அந்த பக்கம் போனதும் si ஒரு மாதிரி வழிந்து
கொண்டு இளமதியை மார்க்கமாக பார்த்தான். அவள் உடல் மேல் அவனுக்கு மோகம் இருந்ததை
அவன் கண்களே காட்டி கொடுத்தது. அவளை இன்ஸ்பெக்டர் சொன்ன மாதிரி பார்க்க ஏங்கி
கிடந்தவன், தான் நினைத்தது நடக்க போகிறது என்கிற சந்தோஷத்தில் அவள் அருகில்
நெருங்கினான்.

இளமதிக்கோ இவ்வளவு நேரம் இருந்ததை விட இப்பொழுது தான்
பயத்தில் உயிரே போய் விடும் போல் இருந்தது. மோசமானவர்கள் கையில் மாட்டினாலே
நரகத்தை காட்டி விடுவார்கள் என்பது தெரிந்த கதை தான்
, இதில் அதிகாரம் படைத்த மோசமானவர்கள் கையில் மாட்டினால்
நடப்பதை கற்பனை கூட பண்ணி பார்க்க 
முடியாதே
, அதை
உணர்ந்தவள் சடாரென்று அவன் காலில் விழுந்தாள்.

“ப்ளீஸ், என்ன ஒன்னும் பண்ணிடாதிங்க, நான் உண்மைய தான் சொல்றேன், நான் அந்த ப்ரோக்கர் கூட தான் போனேன், அவன் காட்டின ரூம்ல தான் மாடலா இருந்தேன், இது தான் உண்மை, சத்தியம். என்ன
நம்புங்க.. இதுக்கு மேல.. இதுக்கு மேலயும் உங்களுக்கு நம்பிக்கை வரலன்னா
, அந்த ஹோட்டலுக்கே போய்
விசாரிச்சி பாருங்க
, அப்படி
இல்லனா கூட பரவால்ல
, இங்கயே
என்ன கொன்னு எரிச்சி போட்டுடுங்க
, இந்த கொடுமைய விட சாகறது எவ்ளோவோ மேல்” என்று சாவிற்காக
அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.

“என்னது சாகனுமா? நீயெல்லாம் செத்துட்டா அப்புறம் நாங்க சொகத்துக்கு எங்க
போவோம் சொல்லு
, இந்த வேலைல
எவ்ளோ ஸ்ட்ரெஸ் இருக்கு தெரியுமா
, அதெல்லாத்தையும் உன்ன மாதிரி பொண்ணுங்க தான சரி பண்ண முடியும்..
மக்களுக்காக உழைக்கற எங்களுக்காக இந்த செர்வீஸ் கூட பண்ண மாட்டியா
? இதெல்லாம் ஒரு சோசியல்
செர்வீஸ்” என்று வாய் கூசாமல் பேசினான்.

“இல்ல, என்னால முடியாது, என்ன
விட்டுடுங்க”

“சரி உன் வழிக்கே வரேன், நீ சொன்ன மாதிரியே அந்த ஹோட்டல்ல நாங்க சொன்ன ஆளுங்க
முன்னாடி ஷோ காமிச்சிட்டு நின்னன்னே வச்சிக்கலாம்
, அப்போ மட்டும் உனக்கு உடம்பு கூசலையா, எட்டு லட்சம் பணம்னு
சொன்னதும் ஈன்னு இளிச்சிட்டு போயிட்டியே
, அப்போ நீ எந்த மாதிரி ஆளா இருப்ப, இப்போவும் உன்ன சும்மா இதெல்லாம் பண்ண சொல்லல, எனக்கு வேண்டியத நீ
கொடு
,
இன்ஸ்பெக்டர் சார்கிட்ட பேசி உன்ன விட்டுட சொல்றேன்
, நான் சொல்ற மாதிரி பண்ணா உனக்கும் சுகம், எனக்கும் சுகம்..
முடியாதுன்னு முரண்டு பிடிச்சா இன்ஸ்பெக்டர் சொன்ன மாதிரி கட்டி போட்டு அவர்
வச்சிருக்க லத்தி இருக்குல்ல
, அத.. அதெல்லாம் வேண்டாம்டீ.. பாரு, உன்கிட்ட அத பத்தி சொல்றதுக்கே எனக்கு கஷ்டமா
இருக்கு
, நீ பூ
மாதிரி, உன்ன அப்படிலாம் கசக்க கூடாது
, அதுக்கு தான் சொல்றேன்.. நீ ம்ன்னு சொல்லு, மீதிய நான் பாத்துக்கறேன்”

இன்ஸ்பெக்டர் சொன்ன வேலையை விட்டு si அவன் இச்சையை
தீர்க்கும் வேலைக்கு அவளிடம் பேசி கொண்டிருந்தான்.

இளமதிக்கோ இங்கிருந்து மானத்தோடு தப்பிக்க முடியாதோ
என்கிற பயம் மனதை ஆட்கொண்டது. அவன் காலில் விழுந்தபடி தரையில் தலையை கவிழ்த்து
கொண்டிருந்தவள் மெதுவாக தலையை நிமிர்த்தி அந்த லாக்கப்பை ஆராய்ந்தாள்
, அங்கு சாகவாவது ஏதாவது
கிடைக்குமா என்று அவள் கண்கள் தேடியது
, இப்போதைக்கு அவளுக்கு அங்கிருந்து தப்பிக்க இருக்கும்
ஒரே வழி அது தானே. அந்த தேடலில் அந்த லாக்கப்பில் ஒரு மூலையில் கிடந்த சுத்தியலை
கவனித்தாள். எதோ வேலைக்காக உள்ளே கொண்டு வந்தவர்கள் மறந்து விட்டு சென்றது
அவளுக்கு சாதகமாகி போனது. அந்த ஒற்றை சுத்தியலை வைத்து இளமதி என்ன செய்ய போகிறாள்
? அவள் உயிரை மாய்த்து
கொள்ள போகிறாளா
? இல்லை
தப்பிக்க போகிறாளா
?

    No comments yet.