Rani Govindh | 04 Nov 2025
Episode 23
அஜய் கார்பார்க்கிங்கிற்கு அவசர அவசரமாக சென்றான். அவனை
பார்த்ததும் தான் விக்ரமிற்கு நிம்மதி பெருமூச்சே வந்தது.
“நல்லவேள அஜய், இன்னைக்கு ரொம்ப பெரிய பிரச்சனைல இருந்து நான் ஜஸ்ட்
மிஸ்ல எஸ்கேப் ஆகி இருக்கேன், முதல்ல அவ போன குடு, அங்கிளுக்கு அவ பண்ண மாதிரி நான் ஒரு மெசேஜ் போட்டறேன்” என்று விக்ரமன்
கேட்க அஜய் இளமதி போனை அவனிடம் கொடுத்தான்.
மெசேஜில் சடனாக எமெர்ஜென்சி சிச்சுவேசன், அதனால் தான் சொல்லாமல்
வீட்டுக்கு கிளம்பி விட்டேன் என டைப் செய்து ராமமூர்த்திக்கு அனுப்பியவன் போனை
இளமதியின் பேக்கில் வைத்து பின் சீட்டில் போட்டான்.
“நான் போன்ல சொன்ன மாதிரி இவள இன்னைக்கு நைட் உன் கெஸ்ட்
ஹவுஸ்ல வச்சிட்டு போதை தெளிஞ்சதும் பார்ட்டில நடந்தத சொல்லி அனுப்பி வச்சிரு” என
விக்ரமன் கூற “சரிடா, நான்
பாத்துக்கறேன்” என காரில் ஏற போனான் அஜய்.
அந்த நேரம் ராமமூர்த்தியின் பி.எ அங்கு வந்து
கொண்டிருக்க அவனை பார்த்ததும் விக்ரமன் வேகமாக அஜயை நகர்த்தி விட்டு காரில் ஏறி
அமர்ந்து கொண்டான்.
“அங்கிளோட பி.ஏ வரான், இதுக்கு மேல நான் இங்க இருந்தா அங்கிள்கிட்ட
மாட்டிப்பேன், அவரு
கேள்வி கேட்டே டென்ஷன் பண்ணிடுவாரு, இவள நான் பார்த்துக்கறேன், நீ பாரட்டிய அட்டன்ட் பண்ணு ” என கூறியவன் கார்
கண்ணாடியை ஏற்றி விட்டு அங்கிருந்து காரை கிளப்பினான்.
விக்ரமன் கார் அங்கிருந்து செல்வதை பார்த்த அஜய் “அட
பாவி, அங்கிள்
கேட்கற கேள்விக்கு பயந்து நீ எஸ்கேப் ஆகிட்ட, இப்போ நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன், சரி சமாளிப்போம்” என
நினைத்து கொண்டான்.
காரை எடுத்து கொண்டு விக்ரமன் அஜய் கெஸ்ட் ஹவுசை நோக்கி
தான் சென்று கொண்டிருந்தான். கொஞ்ச தூரம் செல்லும் போதே பின் சீட்டில் இருந்து
முனங்கல் சத்தம் கேட்டது.
“என்ன விடு, என்ன விடு” என இளமதி உளறி கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு போதை
தெளிந்திருக்கவில்லை, இந்த
நிலையில் அவளை எங்கு விட்டாலும் அது பிரச்சனையில் தான் முடியும் என்பதால்
திட்டமிட்டபடி அஜய் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று கொண்டிருந்தான்.
அதே நேரம் விக்ரமனுக்கு தாராவிடம் இருந்து வேறு கால்
வந்து கொண்டிருந்தது.
“தாரா எதுக்கு இந்த நேரத்துல கூப்டறா” என நினைத்தவன்
இப்பொழுது கால் அட்டன்ட் செய்தால் அவள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல
முடியாது, எப்படியும்
மாட்டி கொள்வோம் என போனை சைலண்டில் போட்டான்.
சைலண்டில் இருந்த அவன் போனோ பலமுறை அடித்து பின்
ஓய்ந்தது.
“இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியல எல்லா
பக்கமும் பிரச்சனையா இருக்கு” என பெருமூச்சி விட்டு கொண்டவன் காரை ஓட்டி
கொண்டிருக்க அப்பொழுது தான் கார் கண்ணாடி வழியாக பின்னால் வரும் தாரா காரை
கவனித்தான்.
அவ்வளவு தான், அவனுக்கு எங்கயாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.
“மை காட், தாரா மட்டும் இப்போ கார்ல இவ இருக்கறத பார்த்தா அவ்ளோ தான், என்ன பண்றது” என
யோசித்தவன் முதலில் அவள் கண்ணில் இருந்து தப்பிக்க வேண்டும் என காரை ஜெட்
வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தான். ஆனால் தாராவும் அவனை விடுவதாக இல்லை, கார் ரேஸ் நடப்பது போல்
அவனை துரத்தி கொண்டிருந்தாள்.
எப்படியோ சில சாகசங்கள் செய்து அவள் கண்ணில் இருந்து
தப்பித்து வந்த விக்ரமன் முதலில் தாராவை சமாளித்தாக வேண்டும் என முடிவு செய்தான்.
விக்ரமனை பார்த்து பேசாமல் தாரா ஓய மாட்டாள். அவள் பிடிவாத குணம் பற்றி
விக்ரமனுக்கு தெரியும், அதனால்
முதலில் தாராவை பார்த்து பேசி சமாளித்து பின் இளமதி விசயத்தை பார்த்து கொள்ளலாம்
என முடிவுக்கு வந்தவன் அங்கு பஸ் ஸ்டாப் இருக்கவும், இளமதியை இறக்கி அங்கிருந்த
பெஞ்சில் அமர வைத்தான். அவள் இன்னுமும் மயக்க நிலையில் தான் இருந்தாள். இந்த
நிலையில் அவளை அப்படி விட்டு செல்வது பாதுகாப்பானது இல்லை என அவனுக்கு தெரியும்
தான், ஆனால் அவன்
தங்கை வாழ்க்கையை விட அவனுக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை.
தாரா மனம் கூலானால் தான் விக்ரமனின் தங்கை கல்யாணத்தில்
எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடக்கும், இந்த விசயத்தில் விக்ரமன் பக்கா சுயநலவாதி தான். அதனால்
அவளை சேபாக அமர வைத்தவன் காரை எடுத்து கொண்டு வேண்டுமென்றே தாரா கண்ணில் சிக்கும்
ரூட்டில் சென்றான்.
அவன் யூகித்தபடியே அடுத்த சில வினாடிகளில் விக்ரமன் காரை
முந்தி கொண்டு வந்த தாராவின் கார் அவனை இடைமறித்து நின்றது.
ருத்ரதாண்டவம் ஆடும் எண்ணத்தில் காரில் இருந்து கோபமாக
இறங்கி வந்தாள் தாரா.
விக்ரமனோ அதை விட கோபமாக “வாட் ஆர் யூ டூயிங் தாரா” என
கேட்டபடி அவள் அருகில் வந்தான்.
“எதுக்காக காரை இப்படி வந்து முன்னாடி நிறுத்தி இருக்க, டோன்ட் யூ நோ இட்ஸ்
வெரி டேஞ்சரஸ்” என அவன் கோபமாக கேட்கவும் தாரா சட்டென்று அமைதியானாள்.
“அது, விக்ரமன்.. சாரி, நீங்க என்ன
கண்டுக்காம போயிட்டு இருந்திங்க, அதான்” என தாராவின் கோபம் தணிந்து அவள் பதட்டமாக பேச ஆரம்பித்தாள்.
“வாட், நான் எப்போ உன்ன கண்டுக்காம போனேன்” என ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்
விக்ரமன்.
“இவ்ளோ நேரமா நான் உங்க பின்னாடி தான் வந்துட்டு
இருந்தேன், உங்களுக்கு
கால் கூட பண்ணேன், பட் நீங்க
எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணல” என சிறுகுழந்தை போல் குற்றம் சுமத்தி கொண்டிருந்தாள்
தாரா.
“கால் பண்ணியா?” என கேட்டவன் காரில் இருந்த போனை எடுத்து பார்த்து விட்டு “போன் சைலன்ட்ல
இருக்கு, அதான்
கவனிக்கல, அதுக்காக
இப்படி தான் பண்ணுவியா, உனக்கு
ஏதாவது அடிபட்டுருந்தா என்ன ஆகிருக்கும், இதல்லாம் யோசிக்க மாட்டியா?” என அவன் அவள் மேல் கரிசனத்தோடு பேசுவது போல் பேசவும் தாரா மனம் மேலும்
இளகியது.
“சாரி விக்ரமன், நீங்க என்ன கவனிக்கலன்னதும் நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன், உங்களுக்கு ஒன்னும்
ஆகலையே” என அவனுக்கு அடிபட்டு விட்டதோ என பார்த்தவள் அவன் நன்றாக இருக்கிறான் என
தெரிந்ததும் பெருமூச்சி விட்டு கொண்டாள்.
“சரி தாரா, நீ முதல்ல சொல்லு, ஏதாவது
இம்பார்டன்ட் விஷயம் பேசணுமா, எதுக்காக என்ன சேஸ் பண்ணிட்டு வந்த”
“அத இங்க சொல்ல முடியாது, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன், நீங்க முதல்ல என் கூட
வாங்க” என்றவள் அதற்கு மேல் அவனை பேச கூட விடாமல் அவன் காரில் ஏறி கொண்டாள்.
“ஹே, உன்னோட கார்”
“அத ஆள விட்டு எடுத்துக்கலாம், நீங்க முதல்ல வந்து கார்ல ஏறுங்க”
“இல்ல, எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு, நான் உடனே அங்க போயாகனும், அத முடிச்சிட்டு வந்து
நான் உன்ன மீட் பண்றேனே” என அவன் எவ்வளவோ கூறியும் கூட அவள் காது கொடுத்து
கேட்கவில்லை.
வேறு வழியில்லாமல் அவன் அவளோடு செல்ல வேண்டியதாகி போனது.
இளமதியை மீட்டு அழைத்து செல்ல வேண்டியவனோ அங்கிருந்து
சென்று விட பெஞ்சில் அமர்ந்திருந்த இளமதி லேசாக போதை தெளிந்து கண் விழித்து
பார்த்தாள்.
இப்பொழுதும் அவள் தன்னை சுற்றி நடப்பதை உணரும் நிலையில்
இருக்கவில்லை.
“அம்மா.. அம்மா, எனக்கு தலை சுத்துது” என திக்கி திணறி உளறி
கொண்டிருந்தவள் மெதுவாக எழுந்து முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
அவள் நேரம் அந்த பக்கம் பஸ், கார் என ஓட்டம் எடுத்து கொண்டிருந்தது, இன்னும் இரண்டு அடி
எடுத்து வைத்தால் ரோட்டின் முன் வந்து ஏதாவது வண்டி அவளை இடிக்க பெருமளவு
சாத்தியம் இருக்கிறது, இப்படி ஒரு
இக்கட்டான நிலையில் தள்ளாடி கொண்டு வந்தவள் நடு ரோட்டில் சென்று கொண்டிருக்க
வேகமாக அவளை நோக்கி வந்த காரின் லைட் வெளிச்சத்தில் கண் கூசி அப்படியே நின்று
விட்டாள்.
நல்லவேளையாக அவளை இடிக்கும்படி வந்த கார் சடன் ப்ரேக்
போட்டு நின்றது. அதில் இருந்து இறங்கி வந்தவன் வேறு யாருமல்ல சுபாஷே தான்.
அவனுக்கு முதலில் அது இளமதி என்றே தெரியாது.
“ஹெலோ, பார்த்து வர மாட்டிங்களா, இப்படி நடு ரோட்ல நின்னுட்டு இருக்கீங்க” என கேட்டவனை திரும்பி பார்த்தாள்
இளமதி.
அவளை அடையாளம் கண்டு கொண்டவன் “இளமதி, நீங்க, நீங்க எப்படி” என
திடுக்கிட்டு நின்றவனுக்கு ஒரு பார்வையிலேயே அவள் நிலை புரிந்து விட்டது.
அவன் பேசுவதை அவள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை
என்பதை உணர்ந்தவன் அவளை கைத்தாங்கலாக காருக்கு அழைத்து சென்றான்.
“என்ன விடு, நான் அம்மாகிட்ட போகணும்” என பிணாத்தியவளை கண்டு கொள்ளாமல் காரில் அமர
வைத்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.
சுபாஷின் கார் ஒரு பங்களா முன் நின்றது. இளமதியோ அந்த
ட்ரேவல் நேரத்தில் ஆழ்ந்த தூக்கதிற்கே சென்று விட்டாள். காரில் குழந்தை போல்
தூக்கி கொண்டிருப்பவளை பார்த்து “அழகி” என முணுமுணுத்துக் கொண்டவன் சில வினாடிகள்
ரசித்து விட்டு அவளை தூக்கி கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
சுபாஷ் யாரோ ஒரு பெண்ணை தூக்கி கொண்டு வருவதை
பார்த்ததும் அங்கு வேலை செய்யும் ரத்தினா ”தம்பி, அது இந்த பொண்ணு” என அடுத்து
என்ன கேட்பது என புரியாமல் தடுமாறினார்.
“இந்த பொண்ணு ரோட்ல சடனா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, அதான் வேற வழி இல்லாம, கொஞ்ச
நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என மட்டும் கூறி விட்டு ரூமிற்கு தூக்கி
சென்றான். ரத்தினாவுக்கோ இந்த விசயத்தை சுபாஷின் அப்பாவிடம் சொல்லி விடுவோமா,
சொல்லாமல் விட்டால் பெரியவருக்கு பின்னாட்களில் இந்த விசயம் காதுக்கு சென்றால்
நம்மை வேலை விட்டு தூக்கி விடுவாரோ, ஒருவேளை இதை பற்றி சொல்லி பிரச்சனை ஆனால் சுபாஷ் கோபத்திற்கு ஆளாகி
விடுவோமோ என பல குழப்பங்கள் மனதிற்குள் வட்டமடித்து கொண்டிருந்தது.
இளமதியை பெட்டில் படுக்க வைத்தவன் ஒரு சில வினாடிகள்
தன்னையும் அறியாமல் அவளை ரசித்து பார்த்து கொண்டிருந்தான், அவளோ தூக்கத்தில் எக்குதப்பாக திரும்பி படுக்க, ஆடை கலைந்த அவளின்
அங்கங்கள் சுபாஷின் கண்ணுக்கு ஷாக் கொடுத்தது. உடனே பார்வையை திருப்பி கொண்டவன்
ஒரு போர்வையை அவள் மேல் போர்த்தி விட்டு இதற்கு மேல் அந்த அறையில் இருப்பது
நாகரிகம் அல்ல என கீழே இறங்கி வந்தான்.
ரத்தினம் குழப்பத்தோடு நிற்பதை பார்த்தவன் “என்ன
ரத்தினம்மா, இத பத்தி
அப்பாகிட்ட சொல்லணுமா, வேண்டாமான்னு யோசிச்சிட்டு நிக்கறிங்களா?” என அவள் மன
குழப்பத்தை கண்ணால் கண்டது போல் அவன் கேட்கவும் ரத்தினம் பே என விழித்தாள்.
“நீங்க நினைக்கற மாதிரி இது ஒன்னும் அவ்ளோ பெரிய விசயம்
இல்ல,
விடிஞ்சதும் அந்த பொண்ணு வீட்டுக்கு போய்டும், ஜஸ்ட் இது ஒரு உதவி தான், அந்த பொண்ணா எழுந்து வர வரைக்கும் ரூமுக்கு போய்
டிஸ்டர்ப் பண்ணாதிங்க, காலைல
எழுந்து வந்து என்ன ஆச்சின்னு கேட்டா ரோட்ல மயக்கம் போட்டு விழுந்துட்டிங்க, சார் கூட்டிட்டு வந்து
இங்க தங்க வச்சாரு, ஒரு
இம்பார்ட்டன்ட் வொர்க் இருந்ததால சார் உங்கள விட்டதும் உடனே கிளம்பி
போயிட்டாருன்னு சொல்லுங்க, என்ன பத்தி
வேற எதுவும் சொல்லிக்க வேண்டாம்” என கூறியவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அது கூட தன்னால் இளமதிக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விட
கூடாது என்னும் நல்ல நோக்கத்தில் தான்..
சுபாஷ் அங்கிருந்து சென்ற பிறகு தான் அவன் சொன்னது போல்
இது பெரியய்யாவிடம் கூறும் அளவுக்கு பெரிய விசயம் இல்லை என ரத்தினாவுக்கும்
புரிந்தது.
இளமதியோ இத்தனை நேரம் விதி அவளை ஒவ்வொருவரிடமாக கைமாற்றி
மாற்றி விளையாட்டு காட்டி கொண்டிருந்தது என்பது
கூட தெரியாமல் சலனமில்லாமல் தூங்கி கொண்டிருந்தாள், அவளின் போனோ ஸ்விட்ச்
ஆப் மோடில் தூங்கி கொண்டிருக்க, பொண்ணை காணாமல் தவித்து கொண்டிருந்த மரகதமோ ஸ்விட்ச் ஆப் ஆன இளமதியின் போனுக்கு
திரும்ப திரும்ப கால் செய்து நொந்து போயிருந்தார். விடியல் பொழுது இளமதிக்காக இன்னும்
என்னென்ன சிக்கலை வைத்து கொண்டு காத்திருக்கிறதோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடரும்…
No comments yet.