episode 22

Rani Govindh | 04 Nov 2025

Episode 22

போதையில் இருந்த இளமதியை தாங்கி பிடித்தபடி அந்த ஆள்
மேல் ப்ளோரில் இருந்த அறைக்கு இளமதியை அழைத்து சென்றான்.

“இப்போ எங்க இருக்கேன்” என இளமதி திக்கி திணறி கேட்க
“இதோ ரூமுக்கு வந்துட்டோம்” என நல்லவன் போல் அவன் கூறினான்.

“நான் இங்கயே இருக்கேன், நீ போ” என இளமதி அவனை தள்ளி விட முயற்சி செய்ய அவனோ
இளமதியை பெட்டில் தள்ளி விட்டான்.

“ஏய் என்ன பண்ற நீ” என பெட்டில் குப்புற விழுந்தவள்
தட்டு தடுமாறி எழுந்து கொள்ள முயற்சி செய்தாள்.

“ஹே ப்யூட்டி, இன்னைக்கு நீ எனக்கு தான், கோல்டன் ஆப்பர்சுனிட்டி கிடைச்சிருக்கு, மிஸ் பண்ணுவேனா” என்றவன் டோரை லாக் செய்து விட்டு
ஆசையோடு இளமதியிடம் வந்தான்
, இளமதியோ எதையும் எதிர்க்கும் நிலையில் இல்லை, தனக்கு தவறு நடக்க போகிறது என்பதை  உணர்ந்தவள் தெளிவில்லாத நிலையில் பெட்டில்
கிடந்தாள்
, அவளுக்கு
எல்லாமே மங்கலாக தான் தெரிந்தது.

அவனோ வேகமாக கோட்டை கழட்டி விட்டு அவளை நெருங்கினான், சடனாக அந்த நேரம் யாரோ
கதவை தட்டும் சத்தம் கேட்கவும் ஆசையோடு இருந்தவனுக்கு ஆத்திரம் வந்தது. கதவை தட்டி
விட்டு சென்று விடுவார்கள் என நினைத்தவனுக்கோ திரும்ப திரும்ப கதவை தட்டும் சத்தம்
கேட்கவும் “எவன் இந்த நேரத்துல
, ப்ளடி இடியட்” என திட்டியபடி கோட்டை போட்டு கொண்டு கதவை திறக்க சென்றான்.

கதவை திறந்து பார்க்க அங்கே விக்ரமன் தான் நின்று
கொண்டிருந்தான்.

“என்னோட வொய்ப் இந்த பக்கமா வந்ததா சொன்னாங்க, நீங்க பார்த்திங்களா? ப்ளாக் கலர் சேரி” என
விக்ரமன் கேட்கவும் அவன் பதட்டமானான்.

“அந்த ப்யூட்டியோட ஹஸ்பன்ட் இவனா, நோ, இதுக்கு மேல ரிஸ்க்
எடுக்க வேண்டாம்” என நினைத்தவன் “எஸ்
, எஸ்.. நீங்க தான் அவங்க ஹஸ்பண்டா, அவங்க பார்ட்டில மயங்கி விழற ஸ்டேஜ்ல இருந்தாங்க, சோ சேபா இங்க
கூட்டிட்டு வந்தேன்
, நல்லவேள
நீங்களே தேடி வந்துட்டிங்க
, சரி இனி
நீங்க டேக் கேர் பண்ணிகோங்க
, நான் பார்ட்டி அட்டன்ட் பண்ண போறேன்” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல்
வேக வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவன் போனதை சிவக்கும் கண்களோடு பார்த்த விக்ரமன்
அறைக்குள் நுழைந்து கதவை லாக் செய்தான்.

அதே கோபத்தோடு உள்ளே வந்து பார்த்தவனுக்கு இளமதி பெட்டில்
கிடக்கும்  நிலைமையை பார்த்து பாவமாக
இருந்தது.

அவளை தூக்க முயற்சி செய்யும் போது இளமதியோ போதையில்
“என்ன விடு
, நான் அந்த
மாதிரி பொண்ணு இல்ல
, விடுடா” என
சிரமப்பட்டு கூறி கொண்டிருந்தாள்.

“ஷட் அப், நான் உன்ன சேவ் பண்ண தான் வந்திருக்கேன்” என்றவன் இளமதியை தூக்க போக அவள்
முரண்டு பிடித்ததில் இருவரும் சேர்ந்து பெட்டில் விழுந்தனர். அவ்வளவு நேரம் அடம்
பிடித்து கொண்டிருந்த இளமதியோ விக்ரமன் பெட்டில் விழுந்ததும் அவன் மார்பின் மேல்
படுத்து குழந்தை போல் தூங்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏய், எழுந்திரி, உன்ன தான்
சொல்றேன்” என விக்ரமன் எவ்வளவு உசுப்பியும் அவள் எழுந்து கொள்வதாக இல்லை.

“உன்ன காப்பாத்த வந்தேன் பாரு, எல்லாம் என்னோட தப்பு தான்.. அந்த செர்வர் இப்படி ஒரு
பொண்ண மாடிக்கு ஒருத்தன் கூட்டிட்டு போனான்னு பேசிட்டு இருக்கும் போது கண்டுக்காம
போயிருக்கனும்
, எதோ என்னோட
பிரச்சனைக்கு நீ மெடிசனா இருக்கியேன்னு பாவப்பட்டு வந்தா
, இப்போ என்னையே டென்ஷன் பண்ற” என வாய் விட்டே புலம்பி
கொண்டிருந்தான்.

அப்பொழுதும் இளமதி நகராமல் இருக்க கடுப்பானவன்
“எழுந்திரிக்க போறியா இல்லையா” என அவளை நகர்த்த முயற்சி செய்தான். அவளோ இந்த முறை
அவன் மேல் கை காலை போட்டு கொண்டு அவன் முகத்தின் மீது தன் முகத்தை உரசியபடி
படுத்திருந்தாள்.

அவளின் இதழ்கள் அவன் இதழ்களுக்கு தொட்டு விடும்
தூரத்தில் தான் இருந்தது. விக்ரமனுக்கோ இந்த நிலை இதுவரை கொடுத்திராத உணர்வை
கொடுத்தது. இவ்வளவு நேரம் கத்தி கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது பேச்சு கூட
வரவில்லை.

தனக்குள் நடக்கும் மாற்றத்தை அவனால் புரிந்து கொள்ள கூட
முடியவில்லை
, இதுவரை
பெண்கள் அவனை நெருங்கும் போது அவனுக்குள் உருவாகும் அதிதீவிரமான வெப்பம்
, அவர்களை ருசிக்க
வேண்டும் என்கிற வெறி
,
முரட்டுத்தனம் எதுவும் இப்பொழுது விக்ரமனிடம் இருக்கவில்லை. இதை எல்லாம் தாண்டி
அவனுக்குள் ஒரு மென்மையான உணர்வு ஏற்பட்டது. தன்னையும் மீறி விக்ரமன் இளமதியின்
தலையை தடவி கொடுத்தான்.

அதற்கு பிறகு தான் அவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே
புரிந்தது.

“எப்படி இது பாசிபிள், நானா இவ்ளோ சாப்டா நடந்துக்கறேன், எனக்கு இவள இப்போவே
அடையணும்னு எந்த பீலுமே வரலையே
, அதுக்கு மாறா இவள இப்படியே நெஞ்சோட அணைச்சி இவளோட நெருக்கத்த உணரனும்னு
தான தோணுது
, ஆனா
இதுவரைக்கும் எனக்கு இப்படி ஒரு பீல் வந்ததே இல்ல” என குழம்பி போனான்.

அவள் முகத்தை பார்த்தவன் “யாருடி நீ, எப்படி உன்னால
இதெல்லாம் பண்ண முடியுது
, அப்போ
உண்மையிலேயே உன்னோட உடம்பு அன்னைக்கு என்ன கண்ட்ரோல் பண்ணல
, உன்கிட்ட வேற என்னவோ
இருக்கு
, அது தான்
என்ன கண்ட்ரோல் பண்ணுது” என போதையில் இருந்தவளிடம் பேசி கொண்டிருந்தவனுக்கு போன்
கால் வரவும் நார்மல் மோடிற்கு வந்தான்.

இளமதியோடு உருண்டு புரண்டதில் அவனின் போன் பெட்டுக்கு
கீழே கிடந்தது. போனை எடுக்க வேண்டும் என்கிற அவசரத்தில் இளமதியை தள்ளி பெட்டில்
படுக்க வைத்தவன்
, எழுந்து
போனை எடுத்து பார்த்தால்
, அஜய்
தான்  கால் செய்திருந்தான்.

விக்ரமன் காலை அட்டன்ட் செய்த வேகத்தில் அஜயோ “எங்கடா
இருக்க
, பார்டிக்கு
வராம எங்க தான் போன” என அவசரகுரலில் கத்தினான்.

அவனை பேச விட்ட விக்ரமன் “பேசி முடிச்சிட்டியா, நான் இப்போ பார்ட்டில
தான் இருக்கேன்
, நீ முதல்ல
எங்க இருக்கேன்னு சொல்லு” என கேட்கவும் பார்ட்டி ஹாலில் இருந்த அஜயோ விக்ரமனை
கண்ணாலேயே தேடி கொண்டிருந்தான்.

“நானும் பார்ட்டில தாண்டா இருக்கேன், ஆனா உன்ன காணோமே”

“நான் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன் அஜய், அதெல்லாம் அப்புறம்
சொல்றேன்
, இப்போ நீ
பண்ண வேண்டியது எல்லாம்
, அங்கிள்
பார்ட்டிய விட்டு வெளிய வராம பார்த்துக்கறது தான்
, நான் சொல்ற வரை அவர பார்ட்டிலையே பிடிச்சி வை, அங்க இருந்து வெளிய
அவர் வர கூடாது, புரிஞ்சதா” என்றவன் அதற்கு மேல் எதையும் கூறாமல் காலை கட் செய்து
விட்டான்.

“எங்க இருக்கான் இவன், என்ன சொல்றான்னே புரியலையே, இப்போ திரும்பவும் அங்கிள்கிட்ட போய் மாட்டணுமா, சரி வேற வழி” என்றவன்
ராமமூர்த்தியை சமாளிக்க சென்று விட விக்ரமன் பெட்டில் கிடக்கும் இளமதியை
தூக்கினான்.

யாரும் சந்தேகபடாதபடி கேசுவலாக ரூமில் இருந்து வெளியே அவளை
தூக்கி கொண்டு வந்தவன் ஹோட்டல் என்ட்ரன்ஸ்க்கு வந்து விட்டான். 

அஜயை பார்த்த ராமமூர்த்தியோ “ஹாய், என்னப்பா இது, பார்ட்னர்ஸ் ரெண்டு
பேரும் ஒரே நேரத்துல ஒரு இடத்துல இருக்க மாட்டிங்க போலேயே
, இப்போ தான் விக்ரம் அவசரமா கிளம்பி போனாரு” என பேச
ஆரம்பித்தார்.

அஜயோ ஏதேதோ பேசி அவரை சமாளித்து கொண்டிருந்தான். இந்த
கேப்பில் விக்ரமன் இளமதியை தூக்கி கொண்டு போய் காரில் படுக்க வைத்தான்.

“ஒருவழியா ப்ராப்ளம் சால்வ்ட், போதை தெளியற வரை இவள சேபா வச்சிருந்தா போதும், எழுந்ததும் பார்ட்டில
நடந்தத சொல்லி புரிய வச்சிடலாம்
, ஆனா அங்கிள் இவள தேடினா, இவ போன்ல இருந்து அங்கிளுக்கு ஒரு மெசேஜ் பண்ணிடுவோம்” என நினைத்தவன்
அப்பொழுது தான் அவளிடம் போன் பர்ஸ் எதுவும் இல்லை என்பதை கவனித்தான். அவளின்
பேக்கை கொடுக்க தான் அந்த செர்வர் கூட அவளை தேடி கொண்டு வந்து
, அவள் இல்லை என்றதும்
இதை பற்றி வேறு ஒருவனிடம் பேசி கொண்டிருந்தான்
, ஆனால் இளமதியை காப்பாற்ற போகும் அவசரத்தில் விக்ரமன்
பேக் விசயத்தையே மறந்து விட்டான்.

“இப்போ எப்படி இவளோட போன கண்டுபிடிக்கறது, திரும்ப பார்ட்டிக்கு
போக முடியாதே” என யோசித்தவன் அவனுக்கு இருக்கும் ஒரே வழியான அஜய்க்கு கால்
செய்தான்.

“சொல்லுடா, எல்லாம் ஓகே தானே”

“எஸ், ஆனா அகைன் ஒரு ப்ராப்ளம்”

“ஏற்கனவே வந்த ப்ராப்ளம் என்னனே எனக்கு இன்னும் புரியலடா, இதுல திரும்ப ஒண்ணா”

“நான் சொல்றத மட்டும் செய் அஜய், அங்க செர்வர் யாருக்கிட்டயாவது போய் கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி ஒரு பொண்ணோட பேக் பார்ட்டில கிடந்தத பார்த்திங்களான்னு விசாரி
, பேக் கிடைச்சதும்
எனக்கு கால் பண்ணு” என அவன் போனை வைத்து விட அஜய்க்கு சுவற்றில் போய் முட்டி
கொள்ளலாம் போல் இருந்தது.

நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து ராமமூர்த்தி சிலரோடு பேசி
கொண்டு பிசியாக இருந்தார்.

அவருக்கு தெரியாதவண்ணம் அங்கிருந்து எஸ்கேப் ஆகிய அஜய்
அங்கிருந்த செர்வர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான்
, விசாரித்தவரை பார்க்கவில்லை என்கிற பதில் வரவும்
அவனுக்கு கடுப்பாக இருந்தது.

அந்த வழியாக ட்ரிங்க்ஸ் எடுத்து கொண்டு வந்த செர்வரிடம்
விசாரிக்க போக நல்லவேளை அது பேக்கை எடுத்த அதே செர்வர் தான்.

“எஸ் சார், ப்ளேக்கலர் சாரி போட்டிருந்த மேடம் தான் பேக் விட்டுட்டு போய்ட்டாங்க, பேக் கொடுக்க நான்
எடுத்துட்டு போறதுக்குள்ள சார் ஒருத்தர் மேல் ப்ளோருக்கு அவங்கள கூட்டிட்டு
போயிட்டாரு
, மேல போக
எங்களுக்கு பெர்மிஷன் இல்ல
, அதனால
ரிஷப்ஷன்ல எங்க மேனேஜர் மேடம்கிட்ட கொடுத்திட்டேன் சார்” எனவும் அஜய் “அந்த
பேக்கோட ஓனருக்கு இப்போ பேக் அவசரமா தேவைபடுது
, அந்த பேக்க எங்க கொடுத்திங்கன்னு காட்ட  கொடுக்க முடியுமா?” என அவசரகுரலில் கேட்டான்.

உடனே செர்வர் பேக்கை யாரிடம் கொடுத்தானோ அவரிடம் அழைத்து
சென்று காட்டவும் ஒருவழியாக இளமதியின் பேக் அஜய் கைக்கு வந்து விட்டது.

அஜய் விக்ரமனுக்கு கால் செய்து விசயத்தை கூறினான்.

“சூப்பர்டா” என நிம்மதி பெருமூச்சி விட்டான் விக்ரமன்.

“டேய் இப்போவாது என்ன பிரச்சனைன்னு சொல்லுடா, டென்ஷன்ல நானே ஏதாவது
ப்ராப்ளம் கிரியேட் பண்ணி விட்ருவேன் போல”

“அஜய் ரிலாக்ஸ், எல்லாத்துக்கும் காரணம் அந்த பொண்ணு தான்”

“யாருடா” என அஜய் புரியாமல் கேட்க விக்ரமன் நடந்ததை
சுருக்கமாக கூறி முடித்தான்.

“ஹோ, ஷெட், இவ்ளோ
நடந்துருச்சா
, அவ சேபா
தான இருக்கா” என்றதும் விக்ரமன் காரில் தூங்கி கொண்டிருந்தவளை பார்த்து விட்டு
“அவளுக்கென்ன நல்லா இருக்கா” என வெறுப்பாக கூறினான்.

“சரி இப்போ என்ன பண்ண போற”

“இதுக்கு மேல இவளோட நான் இருக்கறது சேப் இல்லடா, நீ பேக் எடுத்துட்டு
கார் பார்க்கிங் வா
, போதை
தெளியற வரைக்கும் உன்னோட கெஸ்ட்ஹவுஸ்ல வச்சிருந்துட்டு மார்னிங் அவ வீட்டுல டிராப்
பண்ணிடு”

“என்னது நானா?

“எஸ்டா, நான் இந்த பொண்ணோட இருக்கறத யாராவது பார்த்துட்டா ந்யூஸ் தாராவுக்கு
தெரிஞ்சிடும்
, தாரா பத்தி
உனக்கு தெரியுமே
, ஐஷூ மேரேஜ
ஸ்டாப் பண்ணிட்டு தான் அவ நார்மல் மோடுக்கே வருவா
, அதுக்கு தான் சொல்றேன்” எனவும் விக்ரமன் பயம் அஜய்க்கு
புரிந்தது.

“சரி, நான் வரேன்” என்றவன் காலை கட் செய்து விட்டு
கார்பார்க்கிங் செல்ல லிப்டிற்கு சென்றான்.

அஜய்க்கு அவன் மனதிற்கு பிடித்த நிலா தான் இளமதி என
தெரிய வருமா
?

அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

    No comments yet.