Rani Govindh | 04 Nov 2025
Episode 21
எவ்வளவு நேரம் தான் தெரியாத கூட்டத்திற்கு நடுவில்
பயந்து பயந்து நின்று கொண்டிருப்பாள், எங்காவது ராமமூர்த்தி இருக்கிறாரா என இளமதியின் கண்கள் தேட ஆரம்பித்தது, ஆனால் அவளுக்கு தெரிந்த
வரை அவர் அங்கு இருப்பது போல் தெரியவில்லை, அட்லீஸ்ட் விஷ்வாவாது கண்ணில் சிக்கமாட்டானா என திக்
திக்கென்ற மனதோடு தேடினாள்.
நல்லவேளை அவன் அவள்புறமாக தான் வந்து கொண்டிருந்தான், தன்னை அழைக்க தான்
வருகிறான் என இளமதி ஆவலோடு பார்த்து கொண்டிருக்க அவனோ அவளை தாண்டி போகவும் வேகமாக
அவனிடம் ஓடினாள்.
“சார் நான் இங்க இருக்கேன்” என அவள் குரல் கொடுக்க அவளை
பார்த்த விஷ்வா “சார் அவரோட ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டு இருக்காரு மேடம், நீங்க வெயிட் பண்ணுங்க, அவரு உங்கள
கூப்ட்டாருன்னா நான் வந்து சொல்றேன், வேற எங்கயும் போய்ட வேண்டாம், இங்கயே வெயிட் பண்ணுங்க” என கூறி விட்டு
அவள்பதிலுக்கு கூட நிற்காமல் சென்று விட்டான்.
இளமதிக்கு அய்யோ என்று இருந்தது.
“சுத்தி நிக்கறவங்கள பார்க்கவே பயமா இருக்கு, இவங்களாம் எவ்ளோ பெரிய
கோடீஸ்வரங்களோ,
இவங்களுக்கு மத்தில நான் எப்படி நிக்க முடியும், யாராவது ஏதாவது கேட்டா கூட எனக்கு என்ன சொல்றதுன்னு
தெரியலையே” என இளமதி
பயந்து போய் நிற்க அவளிடம் செர்வர் ஒருவர் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை பார்த்தவள் “இது, இது
ஆல்கஹாலா” என திக்கி திணறி கேட் டாள்.
“எஸ் மேடம்” என அவன் கூறவும் “இல்ல, எனக்கு வேண்டாம்” என
மறுத்து விட்டாள்.
எல்லாரும் அவளையே பார்ப்பது போல் இளமதிக்கு தோன்ற ஒரு
ஓரமாக போய் நின்றவளுக்கு வயிறு வேறு பயங்கரமாக பசிக்க ஆரம்பித்தது, பசியில் மயக்கம் வருவது
போல் பீல் ஆனது.
“மதியம் சாப்ட்டது, இவ்ளோ நேரம் எப்படி தாங்கும், அம்மா அப்போவே சாப்ட்டு போக சொன்னுச்சி, பேசாம சாப்ட்டு
வந்திருக்கலாம், நான் தான்
விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன், இங்க சாப்பாடு போடற மாதிரி தெரியல, எப்போ சார பார்த்து பேசி இங்க இருந்து கிளம்பறது, அதுக்குள்ள மயக்கம்
போடாம இருக்கணும்னா ஜூஸ் குடிச்சி இப்போதைக்கு சமாளிச்சாகனும், ஆனா இங்க ஜூஸ் எங்க
வச்சிருக்காங்கன்னு தெரியலையே” என சுற்றும் முற்றும் பார்த்தாள்.
தூரத்தில் ஒரு டேபிளில் கிளாசில் ஆரஞ்சு நிறத்தில் ஜூஸ்
ஊற்றி வைக்கப்பட்டு இருக்க அதை பார்த்தவள் “அதோ அங்க இருக்கு, ஆனா அங்க வேற ஆளுங்க
நிக்கறாங்களே, அவங்க முன்னாடி எப்படி போறது, வேற எங்கயாவது இருக்கான்னு பார்ப்போம்” என திரும்பவும்
பார்வையை திருப்பினாள்.
அவளுக்கு கொஞ்சம் பக்கத்திலேயே இருந்த டேபிளில் சிவப்பு
நிறத்தில் ட்ரிங்க்ஸ் இருக்கவும் அதை பார்த்தவளுக்கு “பக்கத்துலையே வச்சிக்கிட்டு
தேடிட்டு இருக்கேன் பாரு, இங்க
யாரும் இல்ல, டக்குன்னு
போய் குடிச்சிருவோம்” என நினைத்து கொண்டு கேசுவலாக அந்த டேபிளுக்கு சென்றாள்.
போன வேகத்தில் யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை
கன்பார்ம் செய்து விட்டு டக்கென்று ஒரு க்ளாஸ் எடுத்து குடித்து முடித்தாள். அதை
குடித்த பிறகு தான் வயிற்றில் குளுமை பரவியது.
“என்ன ஜூஸ் இது, நல்லாவே இல்ல, ஆனாலும் இப்போ வேற வழி இல்ல, இத குடிச்சாலாவது கொஞ்சம் உடம்பு தெம்பா இருக்கும், இன்னொரு கிளாஸ்
குடிப்போமா, அடியே இளமதி, சோத்துக்கு செத்தவ மாதிரி அல்பமா பண்ற, யாராவது பார்த்தா என்ன
நினைப்பாங்க” என நினைத்து கொண்டவள் “ஒருவேள நான் மயக்கம் போட்டு விழுந்தா அதுவும்
அசிங்கமா தான போகும், அதுக்கு
இதுவே பெட்டர்” என நினைத்தவள் அடுத்து இரண்டு டம்பளர் ஜூசை காலி செய்து விட்டு நிம்மதி
பெருமூச்சி விட்டாள்.
அப்பொழுது தான் யாரோ பின்னால் தன்னை பார்ப்பது போல
இருக்கவும் டக்கென்று திரும்பி பார்த்தாள், அங்கே ஒரு மாடர்ன் கேர்ள் இளமதியை கேவலமாக பார்த்து
கொண்டிருந்தாள்.
“போச்சி இளமதி, முதல்ல அந்த பக்கம் போயிருவோம்” என நினைத்து கொண்டவள் அந்த பக்கமாக ஜன்னல்
ஓரத்தில் நின்று கொண்டாள்.
இளமதிக்கு சடனாக கண்கள் மயமயவென இருப்பது போல் இருந்தது.
அவளுக்கு முன்னால் இருப்பதெல்லாம் மங்களாக இருக்க, அவளுக்கு அந்த இடமே சுற்றுவது போல் தோன்றியது.
“ஏன் எனக்கு இப்படிலாம் ஆகுது, ஐயோ போச்சி, எனக்கு என்ன பண்ணுதுனே தெரியல, கடவுளே பத்திரமா என்ன வீடு கொண்டு போய் சேர்த்திடு” என இளமதி வேண்டி
கொண்டே தடுமாறவும் அருகில் இருந்த ஸ்க்ரீனை பிடித்து கொண்டு ஓரளவுக்கு கீழே
விழாதபடி நின்று கொண்டாள்.
அதே நேரம் அந்த பார்ட்டி ஹாலுக்குள் வேகநடை போட்டு வந்து
கொண்டிருந்தான் விக்ரமன். அவன் கெத்தான நடையும் அவன் அழகும் ஆண்மையும் அங்கிருந்த
சில பெண்களை ஈர்க்கவே செய்தது, ஆனால் வெளி உலகத்தை பொறுத்தவரை அவனுக்கு பெண்களை பிடிக்காது எனும்
பிம்பத்தை தான் விக்ரமன் உருவாக்கி வைத்திருந்தான்.
அதனாலே பெண்கள் அவன் அருகில் செல்ல தயங்கினர். உள்ளே
வந்த விக்ரமன் நேராக ராமமூர்த்தியை தேடி தான் சென்றான்.
“சாரி அங்கிள் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி”
“இட்ஸ் ஓகே விக்ரம், மீட் மை ப்ரென்ட் ஷாமு, மும்பைல
ஷோஸ் ப்ரோடுயூஸ் பண்றாரு.. ஷாமு இது என்னோட ப்யூச்சர் சன் இன் லா” என இன்ட்ரோ
கொடுத்து வைத்தார்.
விக்ரமனும் ராமமூர்த்தி இன்ட்ரோ செய்து வைத்தவர்களிடம்
பேசி கொண்டிருந்தான். பேசும் போதே விக்ரமனுக்கு ஒரு மாதிரி அனீசியாக தான் இருந்தது, அவன் கண்கள் எல்லாம்
சிவந்து அவன் முகமே பார்ப்பதற்கு ஒரு மாதிரி தெரிந்தது. அதை கவனித்த ராமமூர்த்தி
விக்ரமனை தனியாக அழைத்து வந்து “ஒன்னும் பிரச்சனை இல்லையே விக்ரம், ஏன் டிஸ்டர்பா இருக்க”
என விசாரித்தார்.
“அது பெருசா ஒன்னும் இல்ல அங்கிள், ஒரு சின்ன பிசினஸ்
ப்ராப்ளம், ஆமா அஜய்
எங்க, இன்னும்
பார்ட்டிக்கு வரலையா?” என
விக்ரமன் கேட்கவும் “இல்லையே, முன்னயே அஜய் வந்தாச்சே, இங்க தான் இருப்பாரு” என்று கூறி கொண்டிருந்தார்.
அப்பொழுது பார்த்து விஷ்வா ராமமூர்த்தியிடம் பேச வரவும்
விக்ரமன் இது தான் சேன்ஸ் என கொஞ்சம் நகர்ந்து போய் அஜய்க்கு போன் ட்ரை செய்தான்.
ஆனால் இந்த முறை அஜயின் நம்பர் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
விக்ரமனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“என் கைல சிக்கின செத்தடா, பொண்ணு அரேஞ் பண்றேன் ஹோட்டலுக்கு போன்னு அனுப்பி
வச்சிட்டு என்ன ஏமாத்திட்டல்ல, வந்தவ என்கிட்டே பணத்த திருடிட்டு எஸ்கேப் ஆகிட்டா, அஜய் ப்ளீஸ் சீக்கிரம்
வந்துரு, எதோ
டேப்ளட் போட்டு மேனேஜ் பண்ணிருக்கேன், இப்போ இருக்க கண்டிஷன்ல இன்னும் எத்தன நிமிஷம் தாக்கு பிடிப்பேன்னு
தெரியாது, சீக்கிரம்
வாடா” என கோபமாக தனக்குள் பேசி கொண்டிருந்தான்.
அந்த நேரம் இளமதியோ விட்டால் போதையில் தள்ளாடி கீழே
விழும் நிலைமையில் ஸ்க்ரீனை பிடித்து கொண்டு நின்றிருந்தாள். அதை பார்த்த ஒருவன்
அவளை நெருங்கினான்.
“வாவ், எவ்ளோ அழகா இருக்கா? புல்லா ட்ரிங்க்ஸ் பண்ணிட்டா போல தெரியுதே, யாரா இருப்பா, யாரா இருந்தா என்ன இந்த அழக இன்னைக்கு நான் ரசிச்சா தப்பா என்ன” என கணக்கு
போட்டான்.
அவளை தேடியும் யாரும் வரவில்லை, அதனால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட விரும்பாதவன் அவளை
தாங்கி பிடித்தான்.
“நீ. நீ யாரு, எ.. என்ன எதுக்கு பிடிக்கற” என அந்த நிலையிலும் இளமதி கேட்கவே செய்தாள்.
“உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் ட்ரை பண்றேன், மேல் ப்ளோர்ல கேர்ள்ஸ்
ரெப்ரெஷ் ஆக ரூம்ஸ் அலாட் பண்ணி இருக்காங்க, நீங்க அங்க போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, பெட்டரா பீல்
பண்ணுவிங்க” என அவன் கூறவும் “சரி நானே போய்க்கறேன்” என கூறியவள் அவன் கையை தள்ளி
விட்டு விட்டு ஒரு அடி எடுத்து வைத்தாள். ஆனால் அவளால் தனியாக நடக்க முடியும் நிலை
இருக்கவில்லையே, தள்ளாடி
விழ போனவளை தாங்கி பிடித்தவன் “இட்ஸ் ஓகே, வாங்க நானே கூட்டிட்டு போறேன்” என நல்லவன் போல் அவளை
அங்கிருந்து மேல் ப்ளோரிற்க்கு அழைத்து சென்றான்.
இளமதி கெட்ட நேரமோ என்னவோ அப்பொழுது தான் விஷ்வா அவளை
தேடி வந்தான். அவளை நிற்க சொன்ன இடத்தில் காணவில்லை என பார்ட்டி ஹாலையே சுற்றி
பார்த்தவன் அவள் எங்கும் இல்லை என்பதை கன்பார்ம் செய்து கொண்டு ராமமூர்த்தியிடம்
வந்தான்.
விக்ரமனோ அஜய்க்கு கால் செய்து சலித்து போய் “எனக்கு
சின்ன அர்ஜென்ட் வொர்க் இருக்கு அங்கிள், நான் கிளம்பட்டுமா, தப்பா
எடுத்துக்காதிங்க ப்ளீஸ்” என தன்மையான குரலில் பேசினான்.
அதற்கு ராமமூர்த்தி பதில் சொல்வதற்குள் அங்கு வந்த
விஷ்வா “சார், அந்த பொண்ண
எல்லா இடத்துலையும் தேடி பார்த்துட்டேன், எங்கயும் காணோம் சார்” என பதட்டமாக கூறினான்.
அதை கேட்டதும் “எங்க போயிருப்பா, என்கிட்ட சொல்லாம போக வாய்ப்பு இல்லையே, சொல்லாம போறான்னா அப்போ
அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமா?” என ராமமூர்த்தி தனக்கு தானே கேட்டு கொண்டிருக்க, விக்ரமனுக்கோ அங்கு என்ன நடக்கிறது என புரியாமல்
பார்த்தான்.
“என்ன ஆச்சி அங்கிள், ஏதாவது ப்ராப்ளமா? யார தேடறீங்க”
“என்னோட க்ளைண்ட் தான், நான் தான் இன்வைட் பண்ணிருந்தேன், இப்போ அந்த பொண்ண
காணோம்னு சொல்றான்”
“ஒருவேள அர்ஜென்ட் வொர்க் வந்திருக்கும், அதான் கிளம்பிருப்பாங்க,
ப்ரீயா விடுங்க அங்கிள்”
“இல்லப்பா, அந்த பொண்ணு என்கிட்டே சொல்லாம இங்க இருந்து போக வாய்ப்பு இல்லையே, அதான் யோசிக்கறேன்..”
என்றவர் “நீ கூட அந்த பொண்ண என் வீட்ல பார்த்திருக்கியே, உனக்கு நியாபகம் இருக்கா” என கேட்டார்.
“நானா, யார சொல்றிங்க?”
“இப்போ தான் ரீசண்டா நீ இன்விடேஷன் பத்தி பேச வரும் போது
ஒரு பொண்ணு ஹெல்ப் கேட்டு வந்ததே, சாரி கட்டிக்கிட்டு, யங் கேர்ள் தான், நியாபகம் வரலையா” என ராமமூர்த்தி கூறவும் விக்ரமனுக்கு
இளமதி நியாபகம் வந்தது.
“ஒருவேள அங்கிள் அவள பத்தி தான் சொல்றாரா?” என யோசித்தான்.
“என்ன விக்ரம், நியபகம் வந்துச்சா, அந்த பொண்ண
நீ பார்ட்டி ஹால்ல எங்கயாவது பார்த்தியா?” என விசாரித்தார்.
“இல்ல அங்கிள், எனக்கு அந்த பொண்ணு பேஸ் நியாபகமே இல்ல, எனிவே எதுக்கும் நீங்க அந்த பொண்ணுக்கு கால் பண்ணி
பாருங்களேன்” என்றான்.
“நான் பலமுறை கால் பண்ணிட்டேன் சார், அந்த பொண்ணு போன்
எடுக்கவே இல்ல” என விஷ்வா கூறவும் “அப்போ விடுங்க அங்கிள், ஏதாவது எமர்ஜென்சின்னு கிளம்பி போயிருப்பாங்க, எப்படியும் ப்ரீ
ஆகிட்டு திரும்பி கால் பண்ணுவாங்க, நீங்க உங்க பார்ட்டி மூட ஸ்பாயில் பண்ணிக்காதிங்க, எனக்கு டைம் ஆச்சி
அங்கிள் நான் கிளம்பறேன்” என விக்ரமன் கூறி விட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
விக்ரமன் அங்கிருந்து சென்று விடுவானா?
போதையில் இருக்கும் இளமதி அந்த ஆளிடம் இருந்து எப்படி
தப்பிக்க போகிறாள்?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.