episode 19

Rani Govindh | 04 Nov 2025

Episode 19

 

பெண்டிங் இருந்த வேலையை எல்லாம் வேகமாக
முடித்த இளமதிக்கு சடனாக எதோ ஒரு பயமும் பதட்டமும் மனதில் ஒட்டி கொண்டது.

“ஏன் மனசு இப்படி அடிச்சிக்குது, என்னவோ மாதிரி இருக்கே, கடவுளே தயவு செஞ்சு
திரும்ப ஒரு பிரச்சனையை கொடுத்துடாதப்பா
, என்னால இதுக்கு மேல தாங்க முடியாது” என இளமதி வேண்டி கொண்டிருக்க லக்ஷ்மி
அவளை அழைத்தார்.

“மதி, மதி” என லக்ஷ்மி அழைப்பதை கூட கவனிக்காமல் இளமதி
சோகத்தில் ஆழ்ந்திருக்க “ஏய்
, மதி, மேடம் உன்ன
தான் ரொம்ப நேரமா கூப்ட்டுட்டு இருக்காங்க , சீக்கிரம் போய் பாரு” என சுமதி தான்
அவளை உசுப்பி அனுப்பி வைத்தார்.

இளமதி வேகமாக லக்ஷ்மி முன்னால் போய் நின்றாள்.

“எஸ் மேடம்”

“எவ்ளோ நேரமா உன்ன கூப்டறது, ஆமா சேல்ஸ் டேட்டா டேலில பீட் பண்ணல்ல, பண்ற வேலைய ஒழுங்கா
பண்ண மாட்டியா
, நாலஞ்சு
டேட்டா மிஸ் ஆகி இருக்கு
, அப்படி
என்ன தான் வேலை செய்றீங்களோ
, உங்கள வச்சிக்கிட்டு நான் இங்க போராடிட்டு இருக்கேன், இதுல என்ன ஆயிரத்தி
எட்டு குறை சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க” என கோபமாக கத்தினார் லக்ஷ்மி.

“அது, நான் செக் பண்ணி பார்க்கறேன் மேடம்” என்ற இளமதி வேகமாக அவள் சீட்டுக்கு
வந்து அமர்ந்தாள். அடுத்த ஒரு மணி நேரம் அந்த வேலையில் மூழ்கியவளுக்கு எதை பற்றி
யோசிக்கவும் நேரம் இருக்கவில்லை. போனை வேறு சைலென்ட்டில் போட்டு வைத்திருக்க
விக்ரமன் அழைப்பை அவள் கவனிக்க கூட இல்லை.

இளமதிக்கு கால் செய்த விக்ரமன் அவள் போனை எடுக்காமல் போக
கோபத்தில் சேரை ஒரு உதை விட்டிருந்தான்.

“என்ன ஆச்சுடா” என அஜய் பயந்து போய் கேட்டான்.

“அவ போன எடுக்க மாட்டேங்கறாடா, அவ்ளோ தூரம் சொல்லியும்
அவ இப்படி பண்றான்னா இனி அவள சும்மா விட மாட்டேன்”

“விக்ரம், ப்ளீஸ் காம்டவுன், அவ வேற
ஏதாவது வேலைல இருப்பா
, அதனால போன
எடுக்காம விட்டிருக்கலாம்
, அவ
சிச்சுவேஷன் என்னனு தெரியாம நீ பாட்டுக்கு ஏதாவது பண்ணி வச்சிடாத, உனக்கு கோபம்
வந்தா எல்லாமே மறந்து போய்டுதுடா.. ஒருத்தர டார்கெட் பண்றதோ டார்ச்சர் பண்றதோ
பெருசுல்ல
, ஆனா அவங்கள
நம்ப கண்ட்ரோல்ல வச்சிருக்கணும்
, அந்த கண்ட்ரோல் தாண்டி அவங்க போக துணிஞ்சிட்டா அதுக்கு பிறகு நாம என்ன
செஞ்சாலும் நோ யூஸ்.. அவ உன் கண்ட்ரோல் தாண்டி போகாத வரைக்கும் தான் நீ இழுக்கற
இழுப்புக்குலாம் வருவா
, ஏற்கனவே
பார்த்தல்ல
, வீடியோ
லீக் பண்ணிருவேன்னு சொன்னப்போவே இங்கயே செத்துருவேன்னு உன்னையயே மிரட்டினா,
அப்போவே தெரியலையா
, அவ சாக கூட
துணியற நிலைமைல தான் இருக்கா
, நீ ஓவரா டார்ச்சர் பண்ண அவ சாகறது மட்டும் இல்ல, உன்னையும் சேர்த்து எக்ஸ்போஸ் பண்ணிடுவா, அதனால தான் சொல்றேன், அவள கொஞ்சம் விட்டு
புடி” என தன் நண்பனுக்காக கிரிமினலாக ராஜதந்திரங்களை சொல்லி கொடுத்தான் அஜய்.

அவன் சொல்வதும் சரி தான் என விக்ரமனுக்கு புரியவே
செய்தது. ஆனால் அவனுக்குள் இருக்கும் பிரச்சனை அதை புரிந்து கொள்வதாக இல்லை.

“அதெல்லாமே சரி தாண்டா, ஆனா இப்போ என்னால அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்க
முடியாது
, நைட்
பார்ட்டிக்கு போறதுக்கு முன்னாடி நான் என் மைண்ட ஸ்டேபுல் பண்ணியாகனும்
, அதுக்கு அவ எனக்கு
தேவை”

“இப்போ உனக்கு என்ன, ஒரு பொண்ணு வேணும் அவ்ளோ தானே, நான் அரேஞ் பண்றேன், நீ ஹோட்டலுக்கு போ..”

“இல்ல அஜய், அவ இருந்தா சீக்கிரம் சரி ஆகிடும்”

“விக்ரம், சொல்றத புரிஞ்சிக்கோ.. இவ்ளோ நாள் அவள வச்சா நீ காம் ஆன, அவ உனக்கு மெடிசனா
இருக்கலாம்
, ஆனா அத
யூஸ் பண்றதுக்கான டைம் இது இல்ல
, நான் வேற பொண்ண அரேஞ் பண்றேன், இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணாம ஹோட்டலுக்கு போ, பார்டிக்கு முன்னாடி உன் வேலைய முடிச்சிடு, நான் க்ளைண்ட் மீட்டிங்
முடிச்சிட்டு நேரா பார்ட்டிக்கு வந்துடறேன்
, நீயும் டைம்க்கு வந்து சேரு, இல்லைன்னா உன் அங்கிள என்னால சமாளிக்க முடியாது” என
அவசரபடுத்தினான் அஜய்.

அஜய் பேச்சை கேட்டு விக்ரமனும் அங்கிருந்து கிளம்பினான்.
அஜயால் விக்ரமனிடம் இருந்து தப்பித்தது கூட தெரியாமல் இளமதி வேலை செய்து
கொண்டிருந்தாள்.

“வேலை முடிஞ்சதா மதி, எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்ட போகலாமா?

“முடிஞ்சதுக்கா, ஒரு அஞ்சு நிமிஷம், நீங்க சாப்ட்டுட்டு இருங்க, நான் வந்துடறேன்”

“அதெல்லாம் வேண்டாம், நான் வெயிட் பண்றேன், நீயும் வா” என சுமதி நிற்க இளமதி வேலையை முடித்து
விட்டு லஞ்சுக்கு சென்றாள்.

“அக்கா இன்னைக்கு கூட்டு பிரமாதம், யாரு உங்க அத்தையா
செஞ்சது”

“ஏய், சும்மா இரு மதி, அந்த கிழவி
பத்தி மட்டும் பேசாத
,
கடுப்பாகிடுவேன்”

“ஏன்க்கா, போன வாரம் தான் என் மாமியார போல உண்டான்னு புகழ்ந்து தள்ளினிங்க, இன்னைக்கு என்னனா
இப்படி பேசறீங்க”

“ஆமா அப்படி புகழ்ந்ததுக்கு தான் எனக்கு நல்லா ஆப்பு
வச்சிட்டு போயிருச்சே”

“அத என்னனு சொல்லுங்க கேப்போம்” என இளமதி கதை கேட்கும்
மோடுக்கு வந்தாள்.

“ஆமா, உனக்கு கதை கேட்கற ஆர்வமா?

“அட சொல்லுக்கா”

“ம்க்கும், என்னத்த சொல்ல.. அதான் அவங்களோட செல்ல புள்ளை இருக்கே”

“யாரு உங்க வீட்டுகாரரோட தம்பியா”

“ம், அதே தான்.. அவங்க வாஷிங்மெஷின் வாங்க இந்த கிழவி காசு கொடுத்திருக்குடி”

“இவ்ளோ தானாக்கா, இதுக்கா இவ்ளோ டென்ஷன்”

“மதி கடுப்பேத்தாத, காசே இல்லன்னு எவ்ளோ சீன் போட்டுச்சி
தெரியுமா
, நான் கூட
நம்பிட்டேன்னா பார்த்துக்கோயேன்
, என் ஏமாளி புருஷன் இருக்காருல்ல, அவரு வேற செலவுக்கு காசு இந்தான்னு கடன் வாங்கி கொடுத்து விட்டாரு.. அந்த
கிழவி இந்த பக்கம் போகுது
, அந்த
பக்கம் எனக்கு இந்த ந்யூஸ் வருது
, எப்படி இருக்கும்.. அது மட்டும் இருக்கும் போது தெரிஞ்சிருக்கணும்” என
கண்ணை சுருக்கி கொண்டு வாட்டர் பாட்டிலை வேகமாக தரையில் குத்தினாள் சுமதி.

அதை பார்த்து இளமதிக்கு சிரிப்பு தான் வந்தது.

“இதெல்லாம் தெரிஞ்ச கதை தானக்கா, எப்போவும் அவங்க இளைய புள்ளைக்கு தான் எல்லாம்
பண்ணுவாங்கனு நீங்களே சொல்லிருக்கிங்க தானே
, என்னவோ புதுசா நடந்தது மாதிரி எதுக்கு இவ்ளோ டென்ஷன்”

“அது வேணா உண்மை தான் மதி, ஆனா என்ன பண்றது, என் புருஷனுக்கு தான் அந்த கிழவி நடிப்பு தெரிய
மாட்டேங்குதே
, அது வந்து
ஒரு டிராமா பண்ணா அவரு உருகி கரைஞ்சிடராறு
, போதாகுறைக்கு என்ன விடிய விடிய உட்கார வச்சி அவங்க
அம்மா பாடுபட்ட கதையெல்லாம் சொல்லி என் மனசையும் கரைச்சிடராறு
, அதுல தான் நானும்
ஏமாந்துடறேன்”

“சரி விடுங்கக்கா, அவங்க எப்படி வேணா இருந்துட்டு போறாங்க, பெத்தவங்களுக்கு
செய்றது பிள்ளைங்க கடமை
, அத நீங்க
செஞ்சா உங்களுக்கு நல்லது தான் நடக்கும்”

“அந்த ஒத்த காரணத்துக்காக தான் என் வீட்டுக்காரர
வெளுக்காம இருக்கேன்”

“யாரு நீங்களா? அவரு செல்லக்குட்டின்னு கொஞ்சினா போதும்
நீங்க கண்ணுகுட்டி மாதிரி அவரு பின்னாடியே போயிருவிங்க
, எனக்கு தெரியாதா?

“ஆமா, பின்ன புருஷன் கொஞ்சினா பிடிக்காத பொண்டாட்டி யாராவது உண்டா, உனக்கு கல்யாணம்
ஆகட்டும்
, அப்போ தான்
அந்த பீல் தெரியும்”

“அதான் ஆகிருச்சே, அப்படி ஒரு பீலும் எனக்கு தெரிஞ்சது இல்ல” என இளமதி
கேசுவலாக சொல்ல சுமதிக்கு கஷ்டமாகி போனது.

“சாரி மதி, நான் சாதாரணமா தான் சொன்னேன், உன்ன கஷ்டபடுத்திட்டேனா”

“ஐயோ அக்கா, அதெல்லாம் இல்ல, இன்னுமா
இதுக்குலாம் நான் வருத்தப்பட்டுட்டு இருக்க போறேன்
, அதெல்லாம் ஒன்னும் இல்ல”

“நீ வேணா பாரேன், உன்ன கண்ணுக்குள்ள வச்சி தாங்கர மாதிரி ஒருத்தன் உனக்கு
புருஷனா வர தான் போறான்
, அப்போ
நீயும் என்ன மாதிரி
, இல்ல இல்ல
என்ன விட பலமடங்கு அதிகமா உன் புருஷன் பின்னாடியே காதல் கிறுக்கு பிடிச்சி சுத்த
போற”

“ஐயோ அக்கா, போதும்… என்ன சமாதானபடுத்தறேன்னு நீங்க கதை கதையா சொல்லாதிங்க, நான் சாப்ட்டு
முடிச்சிட்டேன்
, நீங்க
சீக்கிரம் சாப்டுங்க.. நமக்கு வேலை இருக்கு” என அந்த பேச்சுக்கு முழுக்கு போட்டாள்
இளமதி.

சுமதியும் சாப்பிட்டு முடித்திருக்க அந்த நேரம்
சுமதியின் அருகில் இருந்த இளமதியின் போன் அடித்தது
, போன் அடிக்கும் சத்தம் கேட்காததால் இளமதி அதை
கவனிக்கவில்லை
, ஸ்க்ரீன்
வெளிச்சம் பார்த்து சுமதி கவனித்து விட்டாள்.

“மதி உனக்கு யாரோ போன் பண்றாங்க” என போனை எடுத்தவள்
“லாயர்னு போட்டிருக்கு” என ஸ்க்ரீனில் தெரிந்த பேரை பார்த்து கூறினாள்.

அதை கேட்டதும் பதறி போன இளமதி அவசர அவசரமாக போனை எடுத்து
கொண்டு தனியாக அந்த பக்கம் சென்றாள்.

“ஹெலோ சார், சொல்லுங்க சார்”

“இளமதி தானம்மா பேசறது”

“ஆமா சார்”

“இன்னைக்கு ஈவ்னிங்க்கு மேல நீ ப்ரீயாம்மா”

“ஈவ்னிங்கா” என யோசித்தாள் இளமதி.

அவள் யோசனையை அறிந்தவர் போல் “இன்னைக்கு நைட் ஒரு
பார்ட்டி இருக்கு
, பெரிய
ஆளுங்க எல்லாம் அந்த பார்ட்டிக்கு வராங்க
, உன் பிரச்சனையை பத்தி விளக்கமா நான் யாருக்கிட்டயும்
இப்போதைக்கு சொல்ல முடியாது
, அது உனக்கு சேப் இல்ல.. ஆனா முடிஞ்ச வரைக்கும் பெரிய ஆளுங்க அறிமுகம்
உனக்கு கிடச்சா நமக்கு தேவைப்படும் போது அது யூஸ் ஆகும்
, அதனால தான் கூப்டறேன்”

“ஆனா அவ்ளோ பெரிய ஆளுங்க வர பார்ட்டிக்கு நான் எப்படி
சார்”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, யாராவது கேட்டா நீ
என்னோட கெஸ்ட்ன்னு சொல்லிடு”

“அது”

“யோசிக்காதம்மா, நீ மாட்டி இருக்க பிரச்சனை அவ்ளோ சாதாரணமானது இல்ல, உன்ன பழிவாங்க
துடிக்கறவனும் லேசுபட்டவன் கிடையாது
, அவன விட பெரிய ஆளுங்க தயவு உனக்கு இப்போ தேவை, அதுக்கு தான் சொல்றேன்” என இளமதி மேல் இருக்கும்
அக்கறையில் ராமமூர்த்தி கூற இளமதிக்கு அது புரியவே செய்தது. அதற்கு மேல் அவளால்
மறுக்க முடியவில்லை.

“சரிங்க சார், நான் வந்துடறேன்”

“உன் போனுக்கு லொகேஷன் அனுப்பறேன், அங்க வந்துட்டு என்
அசிஸ்டன்ட்டுக்கு கால் பண்ணு
, பார்ட்டில நான் பிசியா இருந்தாலும் விஷ்வா உனக்கு ஹெல்ப்பா இருப்பான்” என
கூறி விட்டு கால் கட் செய்தார்.

இளமதிக்கு ஒரே யோசனையாக இருந்தது.

“அவ்ளோ பெரிய பார்ட்டிக்கு என்ன கூப்டறாரே, நான் எப்படி அங்கலாம்
போக முடியும்” என யோசித்து கொண்டே இளமதி சுமதியிடம் வந்தாள்.

இளமதி இவ்வளவு சீரியஸாக யாரிடம் பேசி கொண்டிருக்கிறாள்
என பார்த்து கொண்டிருந்த சுமதியோ அவள் வந்ததும் “என்ன மதி
, யாரு போன்ல.. லாயர்னு வேற இருந்ததே” என விசாரித்தாள்.

சுமதி கேட்டதும் இளமதி முதலில் ஜெர்க் ஆகி பிறகு
சுதாரித்து கொண்டாள்.

“அது.. அது வந்து” என யோசித்தவள் “ஏற்கனவே அம்மா அவங்க
ஆபிஸ சுத்தம் பண்ண ரெண்டு நாள் போயிருக்காங்க
, இப்போ வீட்டு வேலைக்கு ஆள் தேவையாம், அதான் அம்மா வீட்டு
வேலைக்கு வராங்களான்னு கேட்க கூப்ட்டாங்கக்கா” என சமாளித்தாள் இளமதி.

“நல்ல விசயம் தான, அதுக்கு எதுக்கு இப்படி உன் முகம் வேர்த்து வெளிறி
இருக்கு”

“ஆமா போங்கக்கா, எது நல்ல விஷயம், அம்மா என்ன சொல்வாங்களோ”

“என்ன மதி நீ, வேலை கிடைக்கறதே பெரிய விசயம், அதுவும் இப்போ உங்க வீடு இருக்க நிலைமைல அம்மா வேலைக்கு போனா உனக்கும்
உதவியா இருக்குமே
, தானா நம்மள
தேடி ஒன்னு வரதுன்னா அத அலட்சியபடுத்த கூடாது
, கிடைக்கற நல்லத அனுபவிச்சிக்கணும், ஒருவேள உன் அம்மாக்கு
அங்க செட் ஆகுதா இல்லையான்னு போய் பார்த்தா தான தெரியும்
, ரெண்டு நாள் 
வேலை செய்யட்டும், செட் ஆகலைன்னா வந்துரட்டும்
, நீ அம்மாகிட்ட போய் சொல்லு, எனக்கு தெரிஞ்சி அவங்க போக தான் செய்வாங்க” என சுமதி
இளமதி கூறியதை உண்மை என நம்பி பேசி கொண்டிருக்க இளமதிக்கோ அவள் மனதில் இருந்த
குழப்பத்திற்கு பதில் கிடைத்தது போல் இருந்தது.

“சுமதி அக்கா சொல்றதும் சரி தான், அவரு நமக்காக தானே
இவ்ளோ தூரம் பேசனாரு
, அவர
மதிச்சி போறது தான் நல்லது
, ஒருவேள
அங்க ஏதாவது பிரச்சனை வரும்னு தோணினா கூட டக்குன்னு கிளம்பி வந்துட வேண்டியது
தான்” என நினைத்து கொண்டாள் இளமதி.

பார்ட்டிக்கு செல்லும் இளமதிக்கு அங்கு என்ன பிரச்சனை
காத்திருக்கிறதோ
?

விக்ரமன் எதை மறைக்க துடிக்கிறானோ அது இளமதி மூலம்
வெளிவருமா
?

அடுத்த எபிசோடில் பார்க்கலாம். 

    No comments yet.