Rani Govindh | 04 Nov 2025
Episode 18
சுபாஷின் டிப்டாப் உடையை பார்த்து இளமதி
கேட்க சுபாஷ் ஒரு வினாடி ஆடி தான் போனான், ஆனால் சீக்கிரமே சுதாரித்து கொண்டான்.
“நான் சுபாஷ் சார்கிட்ட வேலை பார்க்கறேன்னு
சொன்னதும் ட்ரைவர் வேலைன்னு நினைச்சிங்களோ, நான் சாரோட பி,ஏவா வேலை
செய்றேங்க, இந்த அளவுக்கு கூட ட்ரெஸ் பண்ணாம இருந்தா எப்படி,
அத விட ஒரு
முக்கியமான காரணம் இருக்கு” என சுபாஷ் கூறவும் இளமதி அவனை என்ன என்பது போல்
பார்த்தாள்.
“என்னங்க பண்றது, இப்படிலாம் ட்ரெஸ் பண்ணா
தானே பொண்ணுங்க பார்வைல கொஞ்சமாவது படறேன்” என அவன் கூறவும் இளமதி அவனை
அப்பொழுதும் நம்பவில்லை.
“சீரியஸா தாங்க சொல்றேன், நான் ஒரு
எலிஜிபில் பேச்சுலர், எங்க வீட்ல எனக்கு பொண்ணு பார்க்க சொன்னா முடியாது
போடான்னு சொல்லாத குறை தான், இப்படியே விட்டா அப்புறம் நான் தாடி வளர்த்திட்டு தான்
சுத்தணும், அதான் நானே ஒரு பொண்ண பார்த்து பழகி லவ் பண்ணிற
வேண்டியது தான்னு முடிவு பண்ணிட்டேன், அதுக்கு தான் இந்த டிப்டாப் லுக்கெல்லாம்,
ஆனா
ஒன்னுங்க, இவ்ளோ பண்ணியும் மண்டைல இருக்க கொண்டைய மறைக்க முடியாத
குறை தாங்க” என அவன் சோகமாக கூற “என்ன ஆச்சி” என இளமதி புரியாமல் கேட்டாள்.
“பின்ன என்னங்க, ட்ரெஸ்ஸ மாத்தினாலும்
என் மூஞ்ச மாத்த முடியாது இல்லையா, ஒரு பொண்ணுங்க கூட திரும்பி பார்க்க மாட்டேங்குது,
என்னலாம்
யாருங்க பார்ப்பாங்க” என அவன் பாவமாக கூற இளமதி அவனை பரிதாபமாக பார்த்தாள்.
“உங்களுக்கு என்னங்க குறைச்சல், நீங்க அழகா
தானே இருக்கீங்க” என அவள் முதலில் பேச்சுக்கு தான் கூறினாள்.
“பொய் சொல்லாதிங்க, என்ன நல்லா ஒரு நிமிஷம்
உத்து பாருங்க, அப்புறம் நீங்களே சிரிச்சிடுவிங்க” என சுபாஷ் கூறவும்
இளமதி அவளையும் அறியாமல் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
அவன் உடை மட்டுமல்ல, அவன் முகத்திலும்
பணக்கார கலை தாண்டவம் ஆடி கொண்டிருந்தது, மாநிறமாக இருந்தாலும் அவனின் கூர் நாசியும்,
அகன்ற
நெற்றியும், அடர்த்தியான புருவங்களும், ஷேவ் செய்யப்பட்ட
முகமும் அவனை ஹீரோ போல காட்ட தான் செய்தது. இதில் அவனின் கட்டுமஸ்தான உடல் பெண்கள்
மனதில் சிறு தடுமாற்றத்தை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
“என்னங்க, நான் சொன்னது சரி தானே”
என அவன் கேட்ட பிறகு தான் இளமதி அவனை பார்ப்பதை நிறுத்தினாள்.
“நான் ஒரு உண்மைய சொல்லட்டுமா?” என இளமதி
சீரியஸாக கேட்க “பொய்ய விட உண்மை பெட்டர் தாங்க, சொல்லுங்க” என்றான்
சுபாஷ்.
“நிஜமாவே நீங்க சுபாஷ் சார்னு சொன்னா” என அவள்
கூறவும் சுபாஷ் பதறி போனான்.
“என்னங்க நீங்க, என் பேரு சுந்தர்” என
அவன் பதற “ஐயோ ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க, நீங்க சுபாஷ் சார்னு
சொன்னா கூட நான் நம்பிடுவேன், உங்க முகத்துல அப்படி ஒரு பணக்கார கலை தெரியுது, அது மட்டும்
இல்ல, பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க” என இளமதி வாயாலேயே அவனை புகழ சுபாஷ்
முகத்தில் வெட்கம் தானாக ஒட்டி கொண்டது.
சரியாக அந்த நேரம் பார்த்து லக்ஷ்மியிடம்
இருந்து கால் வந்தது.
“ஒரு நிமிசம்ங்க” என்றவன் கால் அட்டன்ட்
செய்து பேசினான்.
“சொல்லுங்க, இதோ வரேன்” என்று கூறி
விட்டு காலை கட் செய்தான்.
“சார் என்ன கூப்டறாரு, நான் கிளமப்றேங்க” என
அங்கிருந்து போக திரும்பியவன் “நாம இப்போ ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல” என சந்தேகமாக
கேட்டான்.
அவன் கேட்டது புரியாமல் இளமதி முழிக்க “ஏங்க
இவ்ளோ பேசிட்டோம், என்ன ப்ரெண்டா ஏத்துக்க மாட்டிங்களா, எனக்கு
பொண்ணுங்க ப்ரெண்ட்சே இல்ல தெரியுமா” என பாவமாக அவன் கூற இளமதிக்கு அவனை பார்த்து
சிரிப்பு தான் வந்தது.
“என்னங்க சிரிக்கறீங்க”
“அது சும்மா தாங்க”
“பார்த்தீங்களா, நீங்க கூட என்ன கிண்டல்
பண்றீங்க”
“ஐயோ அப்படிலாம் இல்லங்க, சரி இன்னைல
இருந்து நாம ப்ரெண்ட்ஸ்” என இளமதி கூற “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என குதூகலித்து விட்டு
சுபாஷ் அங்கிருந்து கிளம்பினான்.
அவனிடம் பேசியதில் இளமதி மனம் இனம் புரியாத
உற்சாகத்தில் மிதந்தது.
அதே நேரம் லாயர் ராமமூர்த்தி தன் மகளின்
ரூம் கதவை தட்டியபடி கெஞ்சி கொண்டிருந்தார்.
“தாரா டேடி சொல்றது கேளும்மா, கதவ திற” என
நீண்ட நேரம் அவர் கெஞ்சிய பிறகு தான் தாரா கதவை திறந்தார்.
“டேடி என்கிட்ட பேசாதிங்க, என்ன தனியா
விடுங்க” என்றவள் கோபமாக பெட்டில் போய் தொப்பென்று விழுந்தாள்.
தாராவை சமாதானபடுத்தும் நோக்கத்தில் அவள்
அருகில் போய் அமர்ந்தார் ராமமூர்த்தி.
“உன்மேல கோபப்பட்டதுக்கு சாரிம்மா, ஆனா நீ நம்ப
ட்ரைவர அடிக்க கை ஓங்கி இருக்க கூடாது தானே, அது தப்பு தானே” என
ராமமூர்த்தி கூறவும் தாரா வெடுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
“அப்போ அந்த டிரைவர் பண்ணது சரியா” என
கேட்டவளின் முகத்திலும் குரலிலும் அவ்வளவு கோபம்.
“டிரைவர் நான் சொல்லி தான் அந்த பொண்ண டிராப்
பண்ண போனாரு, இதுல அவரு மிஸ்டேக் எதுவும் இல்லம்மா”
“உங்க டிரைவர சேவ் பண்ண பேசாதிங்க டேடி” என
அப்பொழுதும் தாரா மனம் இளகவில்லை.
“சரி, இப்போ என்ன இந்த தப்புக்கு யார் காரணமோ
அவங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும், அதானே.. இந்த தப்ப செஞ்சது நான், நானே பனிஷ்மென்ட்
ஏத்துக்கறேன்” என்றவர் அவளுக்கு முன்னால் நின்று தோப்புகரணம் போட ஆரம்பித்தார்.
அதில் திடுக்கிட்டு போனவள் “ஸ்டாப் இட் டேடி”
என அவரை நிறுத்தி விட்டு கோபமாக அவரை முறைத்து நின்றாள்.
“அப்பாவ மன்னிக்க மாட்டியாம்மா” என அவள்
கொஞ்சல் குரலில் கேட்கவும் தாரா கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது. வேகமாக
ராமமூர்த்தியை கட்டி கொண்டாள்.
“அப்பா மேல கோபம் போய்டுச்சுன்னா நாம சாப்ட
போகலாமா, அப்பாக்கு ரொம்ப பசிக்குதுடா” என அவர் கூறவும் “நீங்களும் சாப்டலையா டேடி”
என தவிப்போடு கேட்டாள் தாரா.
“நீ சாப்டாம அப்பா என்னைக்கு
சாப்ட்டுருக்கேன்” எனவும் திரும்பவும் அவரை கட்டி பிடித்து கொண்டவள் மனதில்
இப்பொழுது அவர் மேல் இருக்கும் பாசம் மட்டுமே மிஞ்சி நின்றது.
தாரா இப்படி தான், அப்பா செல்லம் அவள்,
தாயில்லாத
பிள்ளை என ராமமூர்த்தி தாராவை செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார். அதே நேரம் தாரா
எல்லை மீறும் போது அவளை கண்டிக்கவும் அவர் தவறியது இல்லை. ஆனாலும் தாராவின்
விருப்பத்திற்கு அவர் குறுக்கே நிற்பது அரிதிலும் அரிது தான். அதனால் தான்
தாராவின் அண்ணன் வினோத்க்கு சம்பந்தம் பேசிய கையோடு மணப்பெண்ணின் அண்ணனான விக்ரமனை
தாரா பிடித்திருக்கிறது என கூறியதும் அந்த வீட்டில் சம்மந்தம் பேச சென்றார்
ராமமூர்த்தி. ஆனால் விக்ரமன் ஒரு வருடத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடியாது என
கூறி விட அப்போதைக்கு நிச்சயம் மட்டும் செய்து கொண்டனர்.
தாரா ஒருவழியாக சமாதானம் ஆகி விட அவளுக்கு
ஊட்டி விட்டு கொண்டிருந்தார் ராமமூர்த்தி.
அதை பார்த்த வினோத் “ஆரம்பிச்சிட்டிங்களா” என
கேட்டு கொண்டே வந்தான்.
“நீங்க தான்ப்பா இவளுக்கு ரொம்ப செல்லம்
கொடுத்து கெடுக்கறீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்க போகுது, அங்க இப்படி
யாரும் ஊட்டி விட மாட்டாங்க” என்றான்.
“அதுக்கு அங்கயும் ஆள் வச்சிருக்கேன் அண்ணா”
என தாரா கூற “அது யாரு” என்றான் வினோத்.
“நீதான் அது” என சிரித்தாள் தாரா.
“ வாய்ப்பே இல்ல”
“விக்ரமன்கிட்ட சொல்லி உன்ன வீட்டோட
மாப்பிள்ளையா கூட்டிட்டு போய்டுவேன், அப்புறம் என்ன, நீ அங்க வந்து எனக்கு
ஊட்டி விடு” என்று சிரித்தாள் தாரா.
“என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு, அது வேணா
ட்ரை பண்ணி பாரு” என வினோத் விடுகதை போட “ஐடியா சொல்லு, ஓகேன்னா அதையே
பண்ணிடுவோம்” என்றாள் தாரா.
“நான் அங்க வரத விட விக்ரமன வீட்டோட
மாப்பிள்ளையா இங்க கூட்டிட்டு வந்தா ஒன்னுக்கு மூணு பேர் உனக்கு சேவை செய்வோம்ல,
எப்படி என்
யோசனை” என கூறவும் ராமமூர்த்தியும் வினோத்தும் சிரித்து கொண்டனர், ஆனால் தாரா
முகம் மாறியது.
அதை கவனித்த ராமமூர்த்தி “என்ன ஆச்சுடா” என
விசாரித்தார்.
“என் விக்ரமன அப்படிலாம் கூட்டிட்டு வர
மாட்டேன்ப்பா, விக்ரமன் எப்போவும் கெத்தா இருந்தா தான் எனக்கு
பிடிக்கும், திரும்ப அவர இப்படிலாம் கிண்டல் பண்ணா அப்புறம் நான்
யாரோடையும் பேச மாட்டேன்” என பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றாள் தாரா.
“ஏண்டா நீ வேற, இப்போ தான்
சமாதானபடுத்தி ஊட்டி விட்டுட்டு இருந்தேன்”
“போகட்டும் விடுங்கப்பா, ஆனா இவள
விக்ரமன் எப்படி தான் சமாளிக்க போறாரோ, பாவம் அவரே சாது” என விக்ரமன் நிஜ முகத்தை
அறியாத வினோத் விக்ரமன்காக பாவபட்டான்.
ராமமூர்த்தி எதுவும் பேசாமல் இருக்கவும்
“இன்னைக்கு நைட் வர்மா டின்னர்க்கு விக்ரமன நீங்க இன்வைட் பண்ணிட்டிங்க தானேப்பா,
அவரு
வந்துருவாரு தானே, அங்க அவர இன்ட்ரோ பண்ணி வைக்கணுமே” என்றான் வினோத்.
“அதெல்லாம் சுயரா வரேன்னு சொல்லிட்டாருடா”
என்றவர் சாப்பிட ஆரம்பித்தார்.
அதே நேரம் விக்ரமன் அஜயிடம் கத்தி
கொண்டிருந்தான்.
“ஐ கான்ட் கண்ட்ரோல் மைசெல்ப்டா, எனக்கு
இன்னைக்கு நைட் கண்டிப்பா வேணும்” என மிருகம் போல் கத்தி கொண்டிருந்தவனை வழக்கம்
போல் சமாதானபடுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் அஜய்.
“ரிலாக்ஸ்டா, இன்னைக்கு நைட் வர்மா
டின்னர் பார்ட்டிக்கு நாம போயாகனும், மறந்துட்டியா,, அதுவும் இல்லாம
ராமமூர்த்தி அங்கிள் வேற இன்வைட் பண்ணிருக்காரு, இன்னைக்கு போகலைன்னா
பெரிய பிரச்சனை ஆகிடும்” என அஜய் எடுத்து சொல்லியும் விக்ரமனால் தன்னை கண்ட்ரோல்
செய்ய முடியவில்லை.
“அவ தான் இதுக்கு சொல்யூஷன், அவள
கூப்டறேன்” என விக்ரமன் இளமதிக்கு கால் செய்ய போக அஜய் விக்ரமனை நினைத்து கவலையும்
பயமுமாக நின்றிருந்தான்.
விக்ரமனின் சாதுவான முகத்திற்கு பின்னால்
இருக்கும் பிரச்சனை தான் என்ன?
விக்ரமனுக்கு இளமதி மருந்தாக இருக்க தாரா இதை
அறிந்தால் என்னவாகுமோ?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.