episode 16

Rani Govindh | 04 Nov 2025

அத்தியாயம் 16

மரகதம் பேசுவதை வைத்தே எதோ நடந்திருக்கிறது என இளமதிக்கு
புரிந்தது.

“என்னம்மா, என்ன ஆச்சின்னு சொல்லு.. நீ பேசறத பார்த்தா எனக்கு படபடன்னு வருது”

“ஏய், அதெல்லாம் ஒன்னும் இல்லடி, நீ அமைதியா சாப்டு”

“இப்போ சொல்ல போறியா, இல்ல தங்கச்சிங்கள எழுப்பி விசாரிக்கட்டுமா?” என எழுந்தாள் இளமதி.

“ஏய், நீ முதல்ல உட்காரு.. அவளுங்களே பாவம் அழுது அழுது சோர்ந்து போய்
தூங்கறாழுங்க, திரும்ப எழுப்பி அழ வைக்காத

“அப்போ என்னவோ நடந்திருக்கு, இப்போ என்னனு சொல்லும்மா.. என்ன கத்த வைக்காத”

“சரிடி, சொல்றேன்.. எல்லாம் உன் அப்பனால வந்தது தான்”

“அதான் சொல்லிட்டியே, அவரு என்ன பண்ணாரு”

“நீ போன் பண்ணப்போ வந்தான்ல, சும்மா இல்லாம அழகிகிட்ட உரண்டு இழுத்தான்”

“அழகிகிட்டயா, என்ன பண்ணாருன்னு சீக்கிரம் சொல்லுமா”

“எல்லாம் வழக்கம் போல தான், குடிக்க காசு கேட்டான், பாவம் புள்ள.. இல்லன்னு சொன்னதுக்கு அடிச்சிட்டான்”;
என்றதும் இளமதிக்கு தூக்கி வாரி போட்டது
,

“என்னம்மா சொல்ற, அடிச்சிட்டாரா? நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருந்தியாக்கும்”

“நான் உன்கிட்ட போன் பேசிட்டு வெளிய போய்
பார்க்கறதுகுள்ள அவன் ஏழரை இழுப்பான்னு எனக்கு எப்படிடி தெரியும்”

“சரி அழகிக்கு ஒன்னும் இல்லையே, இரு நான் அவள போய் பார்த்துட்டு வரேன்” என திரும்ப
இளமதி எழுந்திரிக்க “மதி
, நீ முதல்ல
உட்காரு
, அவ நல்லா
தான் இருக்கா..” என இழுத்தார் மரகதம்.

“நீ பேசறதுலையே எதோ பிரச்சனைன்னு தெளிவா தெரியுது, என்னன்னு ஒழுங்கா
சொல்லும்மா”

“அது வந்துடி.. அழகிய உங்கப்பன்காரன் அடிக்கவும்
கோபத்துல நான் சண்டை போட்டேன்
, ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கவும் சத்தமா இருக்குன்னு மேல் வீடு
கீழ் வீடு எல்லாரும் வந்து பார்த்தாங்க.. அப்போ நம்ப சேகர் தம்பி இருக்குல்ல அந்த
பையன் தான் எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க
, பேசாம இருக்க மாட்டிங்களான்னு உன் அப்பன பார்த்து
கேட்டுச்சி
, அதுக்கு
உன் அப்பன் இருக்கானே” என நிறுத்தவும் “ஐயோ அம்மா
, இப்படி பீடிகை போட்டுட்டு இருக்காத, என்னனு முழுசா சொல்லி
முடி” என்றாள்.

“அந்த புள்ளைய புடிச்சி தள்ளி விட்டுடுச்சி, விழுந்த வேகத்துல
மாடிபடில இடிச்சி அந்த புள்ளைக்கு தலைல அடிபட்டுடுச்சிடி. பாவம் அவங்க வீட்ல
யாரும் இல்லாத நேரம் இப்படி நடந்துருச்சி
, தலைல இருந்து ரத்தம் வேற வந்துச்சிடி.. இந்தாளு ரத்தத்த
பார்த்ததும் ஓடிட்டான்.. அக்கம்பக்கத்துல இருந்தவங்க தான் ஆஸ்பத்திரிக்கு
கூட்டிட்டு போனாங்க” எனவும் இளமதிக்கு எரிச்சலாக வந்தது.

“ஏன்மா, உன் புருஷன் சும்மா இருக்க மாட்டாரா, நம்மள இப்படி தினம் தினம் கொல்றதுக்கு ஒரேயடியா விசத்த
வச்சி கொன்னுட சொல்லு
,
நிம்மதியாவாது போய் சேரலாம்” என கத்தினாள்.

“மதி.. விடு, அவன பத்தி தான் தெரியுமே, அவனுக்குலாம் புள்ளைங்க
பத்தி கவலையா
, இல்ல குடும்பத்த
பத்தி கவலை இருக்கா
, விடிஞ்சா
குடிக்க காசு வேணும்
, இல்லாட்டியும்
ஓசி குடிக்கு போய் நாக்க தொங்க போட்டுட்டு எவன் கால்லயாவது விழுந்து கிடப்பான்..
அவன் வயித்துக்கு பார்த்துட்டு திரியற நன்றிகெட்ட ஜென்மம்.. அவன பத்தி பேசி என்ன
ஆக போகுது” என ஆற்றாமையில் பேசினார் மரகதம்..

“சரிம்மா, இப்போ சேகர் எப்படி இருக்காரு, அவரு நம்ம மேல இரக்கப்பட்டு உதவி செய்றதுக்கு நல்ல தண்டனை  கொடுத்திருக்கிங்க” என இளமதி அம்மாவிடமும்
கோபபட்டாள்.

“ஏய், நான் என்னடி பண்ணேன், எதுக்கு என் மேல இப்போ கோபபடற”

“நீ தானே அந்தாள கட்டிக்கிட்டு எங்கள பெத்துக்கிட்ட
அதுக்கு தான்” என சாப்பிடாமல் கோபமாக எழுந்தாள் இளமதி.

அவளுக்கு ஏற்கனவே தலைக்கு மேல் ஆயிரத்தி எட்டு பிரச்சனை, இதில் வீட்டுக்கு
வந்தால் இப்படி ஒரு பிரச்சனை என்றால் அவளும் என்ன தான் செய்வாள்.

“இப்போ நீ எதுக்கு என் மேல எரிஞ்சி விழற, அந்தாளு பண்ணதுக்கு
நான் என்னடி பண்ணுவேன்
,
கட்டிக்கிட்டப்போ நல்லவனா தான் இருந்தான்
, திடீர்னு இப்படி குடிச்சி குடிய கெடுப்பான்னு நான்
மட்டும் கனவா கண்டேன்
, எதோ உங்கள
கரையேத்தி விடற வரைக்கும் உயிரை பிடிச்சி வச்சிட்டு இருக்கேன்
, பேசாம நான் இப்போவே
போய் சேர்ந்துடட்டுமா
, அப்போவாது
நீங்கல்லாம் நிம்மதியா இருப்பிங்க” என அவருக்கு இருந்த மனவேதனை தாங்காமல் பேசினார்
மரகதம்.

அப்பொழுது தான் தேவை இல்லாமல் அம்மாவின் மீது கோபப்பட்டு
கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாள் இளமதி.

“ஐயோ அம்மா, நீ வேற ஏன் இப்படிலாம் பேசிட்டு இருக்க.. நான் எதோ கோபத்துல பேசிட்டேன், விடு.. ஆமா சேகரு இப்போ
எப்படி இருக்காரு
, ஒன்னும்
பிரச்சனை இல்லையே
, ஒருவேள
போலீஸ் கேஸ் ஏதாவது” என இளமதி பயப்பட “இல்லடி அதெல்லாம் ஒன்னும் இல்ல
, நான் ஆஸ்பத்திரிக்கு
போய் பார்த்துட்டு தான் வந்தேன்
, காலைல வந்துடுவாங்க.. அந்த புள்ள கேஸ் கொடுக்கற எண்ணத்துலலாம் இல்ல, எனக்கு ஒன்னும் இல்ல, பயப்படாம வீட்டுக்கு
போங்க
, புள்ளைங்க
பயப்படும்னு அதுதான் என்ன அனுப்பி வச்சிச்சி” என கூறி முடித்தார்.

“நல்லவேள, அவரா இருக்கவும் இத்தோட இது முடிஞ்சது” என பெருமூச்சி விட்டாள் இளமதி.

அதற்கு மேல் அதை பற்றி பேச இருவருக்கும் விருப்பம்
இல்லாமல் போக மரகதம் கதவை தாழ் போட்டு விட்டு தூங்க சென்றார். இளமதியும் விருப்பம்
இல்லா விட்டாலும் சாப்பிடாமல் தூங்கினால் மரகதம் விட மாட்டார் என புரிந்து கொண்டு
அறையும் குறையுமாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அவள் உடலும் மனமும் ஒருசேர
அசதியாகி இருக்க, அதற்கு மேல் அவளாலும் முழித்திருக்க முடியவில்லை. படுத்ததும்
தூங்கி போனாள்.

காலையில் அழகி தான் இளமதியை எழுப்பி விட்டாள்.

“அக்கா, எழுந்திரிக்கா, இன்னைக்கு
உனக்கு வேலை இல்லையா
?” என அழகி
எழுப்பிய பிறகு எழுந்தவள் கடிகாரத்தை பார்த்தாள்.

மணி எட்டு ஆகி இருந்தது.

“அச்சோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா, முன்னாடியே எழுப்ப மாட்டியா அழகி”

“முன்னையே எழுப்ப வந்தேன்க்கா, அம்மா தான் தூங்கட்டும் விடுன்னு சொன்னுச்சி” என
கூறியபடியே வந்தாள் வெண்ணிலா.

“நல்லா தூங்க விட்டிங்க, இன்னைக்கு வேலைக்கு சீக்கிரம் வேற போயாகனும்” என்றவள்
வேகமாக எழுந்து குளிக்க ஓடினாள்.

மரகதம் சமையலை முடித்து விட்டு வர அழகி ரெடியாகி  இருந்தாள்.

“ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டா, சாப்பிட்டு கிளம்புங்கடி” என கூறவும் “நான் இவ கூட போக
மாட்டேன்
, அக்கா
கூடவே போய்க்கிறேன்” என அழகி வெண்ணிலாவை பார்த்து முறைத்தாள்.

“ஆமா, இப்போ உன்ன யாரு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க, நீ அக்கா கூடவே போய்க்கோ” என ரெண்டு பேரும் சண்டை
போட்டு கொண்டிருக்க இதை கேட்டபடி குளித்து விட்டு வந்த இளமதி “வெண்ணிலா
, ஒருநிமிஷம் உள்ள வா” என
அழைத்தாள்.

“என்னக்கா, எதுக்கு கூப்பிட்ட” என வெண்ணிலா அறைக்குள் வர, அறைகதவை மூடியவள்
“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என விசாரித்தாள் இளமதி.

“எனக்கு என்னக்கா பிரச்சனை”

“எல்லாத்தையும் உனக்கு விளக்கி சொன்னா தான் புரியுமா, காலேஜ்ல விஷயம்
தெரிஞ்சிடுச்சா
, யாரும்
எதுவும் கேட்கலையே” என இளமதி விசாரிக்க “இல்லக்கா
, அப்படி எதுவும் நடக்கல.. இத பத்தி காலேஜ்க்கு ந்யூஸ்
போகல.. ஆனாக்கா என்னனு தெரியல
, நேத்து என்ன அந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு போனவங்க யாரும் என்கிட்டே பேசவே
இல்ல தெரியுமா
, ஒருவேள
அவங்க வீட்ல இருக்கவங்க என்கூட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ என்னவோ” என யூகத்தை
கூறினாள் வெண்ணிலா.

வெண்ணிலா கூறியதை கேட்டு அமைதியான இளமதி “அது எதனாலன்னு
எனக்கு தெரியும் வெண்ணிலா
, உன்ன வச்சி
அவங்க வேலை முடிஞ்சது
, அதான்
ஒதுங்கிட்டாங்க
, ஆனா இது
நிரந்தரம் இல்ல
, திரும்ப
உன்ன வச்சி பிரச்சனை ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க” என நினைத்து கொண்டாள்/

“என்னக்கா அமைதியா இருக்க”

“அது ஒன்னும் இல்லடி.. இங்க பாரு நேத்து நடந்தது எவ்ளோ
பெரிய பிரச்சனைன்னு உனக்கே தெரியும்
, அதுல இருந்து நாம தப்பிச்சதே பெரிய விசயம், இனி தேவை இல்லாத வேலை பார்க்காத, காலேஜ்க்கு போனியா
படிச்சியான்னு இரு
, வேற எந்த
பிரச்சனைலயும் தயவு செஞ்சு மாட்டிக்காத” என கெஞ்சாத குறையாக கூறினாள் இளமதி.

“சாரிக்கா, எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சி, இனி சத்தியமா சொல்றேன் திரும்ப எந்த தப்பும் பண்ண மாட்டேன், ஒழுங்கா படிச்சி
முடிச்சி நல்லவேலைக்கு போய் உனக்கு உதவியா இருப்பேன்
, ப்ராமிஸ்” என வெண்ணிலா உறுதி கொடுக்க அவள் தலையை வருடி
கொடுத்தாள் இளமதி.

“ம்ம்.. அப்புறம் நேத்து நீ காலேஜ்ல இருந்து வீட்டுக்கு
வர வழில உன்ன யாராவது பாலோ  பண்ண மாதிரி
தெரிஞ்சதா
?

“பாலோ.. இல்லக்கா அப்படி யாரும் வரல, ஏன்க்கா இப்படி
கேட்கற”

“காரணமா தான், ஒருவேள உன்ன யாராவது பாலோ பண்ற மாதிரி தெரிஞ்சா உடனே அத என்கிட்டே
சொல்லணும்
, எனக்கு
கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு மறைக்க கூடாது புரியுதா”

“சரிக்கா”

“அப்புறம் வெண்ணிலா அழகியோட சண்டை போடறத நிறுத்திக்கோ, அவ உன்ன விட சின்னவ, இனி அவள நீ தான்
பார்த்துக்கணும்
, பெரிய
பொண்ணாகிட்ட பொறுப்பா நடந்துக்கோ” என இளமதி தனக்கு நடக்கும் பிரச்சனையை மனதில்
வைத்து கொண்டு கூறினாள்.

வெண்ணிலாவோ இளமதி கூறியதற்காய் தலை ஆட்டி விட்டு வெளியே
வந்தாள். வெண்ணிலா சாப்பிட்டு முடிக்க “வெண்ணிலா நீ அழகிய ஸ்கூல்ல விட்டுட்டு
காலேஜ்க்கு போ” எனவும் வெண்ணிலா அழகியை பார்த்தாள்.

“அவ என் கூட வரமாட்டாம்மா”

“அதெல்லாம் வருவா, நீ கூட்டிட்டு போ” என மரகதம் கூற அழகியோ சம்மதம் என்பது
போல் நின்றாள்.

வேறு வழியில்லாமல் அழகியை கூட்டி கொண்டு வெண்ணிலா கிளம்ப
இளமதியும் வேக வேகமாக ரெடி ஆகி முடித்தாள். இளமதியிடம் எதையோ சொல்ல மரகதம்
தவிப்பது அவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது.

“என்னம்மா, ஏதாவது சொல்லனுமா”

“இல்லடி அது வந்து”

“உன் முகத்த பார்த்தாலே தெரியுது, என்னனு சொல்லு”

“காலைல சேகரு தம்பி வீட்டுக்கு வந்துடுச்சி”

“வந்துட்டாரா, சரி அப்போ நான் அவர போய் பார்த்துட்டு வந்துடறேன்” என கிளம்பிய இளமதியை
நிறுத்தினார் மரகதம்.

“நில்லுடி ஒரு நிமிஷம்”

“ஏன்மா, அவரு ஏதாவது சொன்னாரா”

“ஆமாடி”

“என்னவாம்”

“அவருக்கு உன்ன பிடிச்சிருக்காம், உன்ன கல்யாணம்
பண்ணிக்கனும்னு கேட்டாரு” என கூறவும் இளமதிக்கு தூக்கி வாரி போட்டது.

இளமதி என்ன சொல்ல போகிறாள்?

இருக்கும் பிரச்சனையில் இளமதி திருமணத்திற்கு
சம்மதிப்பாளா
?

அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

    No comments yet.