episode 15

Rani Govindh | 04 Nov 2025

அத்தியாயம் 15

இளமதி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.

“இன்னைக்குன்னு பார்த்து ஒரு பஸ் கூட வர மாட்டேங்குதே”
என இளமதி புலம்பியபடி போய் கொண்டிருக்க
, பஸ் சத்தம் பின்னால் கேட்கவும் வேகமாக திரும்பி பார்த்தாள்.

அவள் செல்ல வேண்டிய பஸ் தான், பஸ்ஸை நிறுத்த கையை காட்டியவள் அவளை தாண்டி சென்று பஸ்
ஸ்லோவாக செல்லவும் பஸ்ஸை பிடிக்க ஓடினாள். ஆனால் பஸ்ஸோ நிற்காமல் சென்று விட்டது.

மூச்சிரைக்க குனிந்தபடி இளைப்பாறியவள் “இன்னைக்கு வீடு
வரைக்கும் நடந்தே போக வேண்டிய நிலைமை வந்துடுமோ” என பரிதவித்தாள். அந்த நேரம்
அவளுக்கு பின்னால் காரின் ஹாரன் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள் அவளை இடிக்க
வந்த அதே கார் போல இருக்கவும் பதறினாள்.

“அந்த கார் தான, இவரு எதுக்கு என் பின்னாடியே வந்துட்டு இருக்காரு, யார்னு தெரியலையே, பொண்ணுங்கள கடத்தறவனா
இருக்குமா
, நைட்டு
நேரம் வேற
, ஐயோ முருகா
எப்படியாவது என்ன காப்பாத்தி வீடு வரை கொண்டு போய் சேர்த்திரு” என வேண்டியபடியே
வேகமாக முன்னோக்கி நடந்தாள்.

அவளுக்கு முன்னால் சென்ற கார் சடன் ப்ரேக் போட்டு
நின்றது, அதிலிருந்து இறங்கிய அஜய் இளமதியை நோக்கி வந்தான்.

இளமதி பயந்து போய் “ஐயோ என்கிட்டே நகை பணம் எதுவும் இல்ல, என்ன எதுவும்
பண்ணிடாதிங்க” என கத்தி விட்டாள்.

“ஹெலோ, ஹெலோ.. ரிலாக்ஸ், என்ன
பார்த்தா கொள்ளைகாரன் மாதிரியா தெரியுது
, என்ன பார்த்து எதுக்காக இவ்ளோ பயப்படறீங்க.. இந்த ரூட்ல இன்னைக்கு பஸ்
வராது
, நீங்க என்
காருல ஏறுங்க
, நான் உங்கள
டிராப் பண்ணிடறேன்” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“ஏன் பஸ் வராது, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இந்த ரூட்ல தான் பஸ்ல
வந்தேன்”

“இப்போ வராதுன்னு தான் சொன்னேன், அங்க பாலத்துல எதோ ப்ராப்ளம், சோ பஸ் ரூட் திரும்பி விட்ருக்காங்க, அதனால தான் சொல்றேன்”

“அப்படியா, ஆனா இப்போ கூட ஒரு பஸ் என்ன தாண்டி போச்சே” என சந்தேகமாக அஜயை பார்த்தாள்
இளமதி.

“ஆனா நின்னிருக்காதே” என அவன் சரியாக கேட்க “ஆமா”
என்றாள்.

“பிக்காஸ் அது இந்த பக்கமா போற பஸ்” என அவன் பதில்
கொடுக்க “அப்படி தான் இருக்குமோ” என இளமதி நினைத்து கொண்டாள்.

“அதனால தாங்க சொல்றேன், இந்த நைட் நேரத்துல நீங்க இப்படி நடந்து போறது சேப்
இல்ல
, நீங்க என்
கார்ல ஏறுங்க
, நீங்க எங்க
போகணும்னு சொன்னா நானே டிராப் பண்ணிடறேன்” என அஜய் கூற இளமதி நம்பிக்கை வராமல்
பார்த்தாள்.

“புரியுது, இப்போவும் உங்களுக்கு என் மேல டவுட் இருக்கு, அதானே.. இந்தாங்க இது தான் என்னோட பிசினஸ் கார்டு” என
அவள் கையில் கொடுத்தவன் “ விஜே மல்டி டைனமிக் கம்பெனி கேள்விபட்டிருக்கிங்களா
?” என கேட்க இளமதி
பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு இல்லை என தலையாட்டினாள்.

“அவமானபட்டான் அஜய்” என நினைத்து கொண்ட அஜய் “இட்ஸ் ஓகே, அந்த கம்பெனியோட எம்டி
நான்” என பாதி உண்மையை கூறினான்.

இளமதியோ இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்லிட்டு இருக்க
என்பது போல பார்க்க “இத ஏன் உங்ககிட்ட சொல்றேன்னு தான பார்க்கறீங்க
, இவ்ளோ பெரிய கம்பெனிய
ரன் பண்ற நான் கண்டிப்பா ஒரு கொள்ளைகாரனாவோ கடத்தல்காரனாவோ இருக்க மாட்டேன்ல
, அத உங்களுக்கு புரிய
வைக்க தான்
என்றான்.

இளமதிக்கு என்ன செய்வது என புரியாமல் அவன் கொடுத்த
விசிடிங் கார்டையே பார்த்து கொண்டிருந்தாள்.

“இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா, சரி விடுங்க.. எனக்கும்
லேட் ஆச்சி
, என்னால
நீங்க கீழலாம் விழுந்திங்க
, அதுக்காக
தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண நினச்சேன்
, ஆனா நீங்க நம்பாதப்போ நான் என்ன பண்ண முடியும்” என அஜய் போலியாக பேசி
விட்டு காரை நோக்கி செல்ல இளமதி மைண்ட் வாய்ஸ் “இளமதி
, யோசிக்காத.. இவர விட்டா அப்புறம் அவ்ளோ தூரம் நடந்து
போயாகனும்
, ஏற்கனவே
லேட் ஆகிடுச்சி
, உனக்கு
இருக்க பிரச்சனைக்கு இதெல்லாம தேவையா” என அவளை உசுப்பி விட்டது.

அந்த உத்வேகத்தில் “ஒரு நிமிஷம் சார், நான் உங்க கூட வரேன்”
என இளமதி கூற அஜய் முகமெல்லாம் பல்ப் எரிந்தது.

“எஸ், ப்ளீஸ்” என அவளுக்காக கார் கதவை திறந்து விட்டவன் “அஜய் நீயும் சீக்கிரம்
கமிட் ஆகிருவ போலடா” என குதூகலமாகி கொண்டு காரில் ஏறினான்.

இளமதி எங்கே செல்ல வேண்டும் என கூறிய பிறகு அஜய் காரை
ஸ்டார் செய்து விட்டு மெலடி சாங்கை ப்ளே செய்தான்.

“உங்களுக்கு எந்த மாதிரி சாங் பிடிக்கும்” என அஜய் கேட்க
இளமதியோ பதட்டமாக வாட்சை பார்த்து கொண்டிருந்தாள்
, அவளுக்கு இப்படி சொகுசு காரில் எல்லாம் போய் பழக்கம்
இல்லை.

அவள் பதட்டமாக இருக்கிறாள் என புரிந்து கொண்ட அஜய்
“டென்ஷன் ஆகாதிங்க.. சீக்கிரம் போய்டலாம்” என கூறியபடி வேகமாக காரை ஓட்டினான்.

காரில் ஏறியதில் இருந்து இளமதி அஜய் என்ன பேசினாலும்
வாட்சையே பார்த்து கொண்டிருக்க அஜய் முடிந்த வரை அவளோடு பேச முயற்சி செய்து
தோற்றவனாக காரை ஓட்டி கொண்டிருந்தான்.

கார் ஜன்னல் வழியாக தங்களை க்ராஸ் செய்து போகும் பஸ்ஸை
பார்த்த இளமதி “இந்த பஸ்.. ஏங்க இந்த பஸ் அந்த ரூட் வழியா தான வருது.. அப்போ அந்த
பக்கம் பஸ் போகுது போல இருக்கே” என்றாள் அவசர குரலில்.

அவள் கூறியதை கேட்டு முழித்த அஜய் “டேய் ஏதாவது சொல்லி
சமாளிடா” என நினைத்து கொண்டு “அதெப்படிங்க
, அதான் சொன்னேனே அந்த ரூட்ல பஸ் வராதுன்னு, இது வேற ரூட் வழியா வர
பஸ்..” என சமாளித்தான்.

“ஓ.. அப்படியா” என இளமதி திரும்பவும் வாட்சை பார்க்க
ஆரம்பித்து விட்டாள். கார் அவள் சொன்ன ஏரியாவில் நுழைந்ததும் “இங்கயே
நிறுத்துங்க.. வண்டிய நிறுத்துங்க” என பதறினாள் இளமதி.

“இன்னும் கொஞ்ச தூரம் தானே, நான் வீட்லயே ட்ராப் பண்ணிடறேன், எப்படி போகணும்னு
மட்டும் ரூட் சொல்லுங்க” என அவளின் வீட்டை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்
அஜய்.

“அய்யோ அதெல்லாம் வேண்டாம்ங்க.. யாராவது பார்த்தா
பிரச்சனை ஆகிடும்.. நீங்க இங்கயே இறக்கி விட்டுடுங்க”

அதற்கு மேல் கட்டாயபடுத்தினால் அவள் தவறாக நினைத்து
கொள்வாள் என நினைத்த அஜய் காரை ஓரமாக நிறுத்தினான்.

காரில் இருந்து இறங்கிய இளமதி “ரொம்ப தேங்க்ஸ்ங்க”
என்றாள்.

“இட்ஸ் ஓகே” என அவன் கூறிய அடுத்த நொடி இளமதி வேகமாக
அங்கிருந்து கிளம்ப போக அவள் பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த அஜய் “ஏங்க
ஒரு நிமிஷம்” என அவசர குரலில் அவளை நிறுத்தினான்.

“சொல்லுங்க”

“உங்க பேரு சொல்லலையே”

“என் பேரா” என அவனிடம் பேரை சொல்லலாமா வேண்டாமா என
யோசித்தாள் இளமதி.

“என்ன நம்பி பேர கூட சொல்ல கூடாதாங்க” என இளமதி கூறவும்
“அப்படி இல்ல
, என் பேரு”
என இளமதி தயங்கினாள்.

“ஒரு நிமிஷம், நானே கெஸ் பண்ணட்டுமா” என கேட்ட அஜய் “ம்ம்.. உங்க பேரு நிலா தானே” என
அவனாகவே ஒரு பேரை கூறினான்.

“நிலாவா” என யோசித்தவளின் மைன்ட் வாய்ஸ் “ஒருவகைல இவரு
சொல்றதும் கரெக்ட் தானே
, மதின்னா
நிலா தானே
, பேசாம
ஆமான்னு சொல்லிடு” என கூறவும் “ஆமாங்க, எப்படி கண்டுபிடிச்சிங்க” என கேட்டாள்.

“அதெல்லாம் அப்படி தாங்க, சரி நான் கொடுத்த விசிட்டிங் கார்ட் பத்திரமா
வச்சிருக்கிங்க தானே” என அவன் கேட்கவும் தான்
,  விசிட்டிங்
கார்டை காரிலேயே விட்டு விட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“அய்யோ கார்லயே மறந்து வச்சிட்டேங்க”

“இருங்க நான் எடுத்து தரேன்” என்றவன் விசிட்டிங் கார்டை
எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“பத்திரமா வச்சிக்கோங்க, ஏதாவது உதவி தேவைபட்டா இந்த செகன்ட் நம்பருக்கு
கூப்டுங்க.. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு வேலை ஏதாவது தேவைபட்டா கூட எனக்கு
சொல்லுங்க
, நான்
வாங்கி தரேன்” என சலுகை மேல் சலுகையாக கொடுத்து கொண்டிருந்தான்.

“ம்ம்.. சரிங்க, எனக்கு லேட் ஆச்சி.. நான் கிளம்பட்டுமா”

“ஓ, எஸ்.. பை” என்றவன் வேகமாக நடந்து செல்லும் இளமதியையே கண் கொட்டாமல்
பார்த்து கொண்டிருந்தான்.

“எவ்ளோ அழகா இருக்கா.. இன்னொசன்ட் லுக், புடவைல தேவதை மாதிரி
இருக்காளே.. அஜய் பிக்ஸ் பண்ணிக்கோ
, இவ தான் உனக்கானவ” என குதூகலமாக கூறி கொண்டான்.

சரியாக அந்த நேரம் விக்ரமனிடம் இருந்து கால் வந்தது.

“ஹெலோ, சொல்லுடா”

“டேய் எங்கடா இருக்க.. உன்ன எப்போ வர சொன்னேன், இன்னும் என்ன பண்ணிட்டு
இருக்க”

“அங்க தான் மச்சான் வந்துட்டு இருக்கேன், நடுவுல ஒரு அர்ஜென்ட்
வேலை வந்துடுச்சி”

“அப்படி என்ன அர்ஜென்ட் வேலை” என விக்ரமன் கோபமாக கேட்க
“சொன்னா உனக்கு புரியாதுடா
, சரி இரு..
நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன்” என கூறி விட்டு அஜய் காலை கட் செய்தான்.

“கொஞ்ச நேரம் நம்மள லவ் மூடுல இருக்க மாட்டானே” என
நினைத்து கொண்டவன் காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.

அஜய் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்ததும் அவன் மீது எதோ
ஒன்று வேகமாக வீசி எறியப்பட வழக்கம் போல லாவகமாக நகர்ந்து கொண்டான்.

“சாரிடா, நிஜமாவே இங்க தாண்டா வந்தேன்”

“இங்க வரதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா” என கோபமாக கேட்டான்
விக்ரமன்.

“அது நடுவுல ஒரு பொண்ணு” என முகம் சிவக்க அஜய் கூறவும்
விக்ரமன் அவனை வித்தியாசமாக பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தத்தை கணித்த அஜய் “டேய் நீ
பாட்டுக்கு உன் லிஸ்ட்ல அவள யோசிக்காத
, இது வேற மாதிரிடா” என விளக்கம் கொடுத்தான்.

“வேற மாதிரின்னா”

“லவ்வுடா”

“இது எப்போல இருந்து”

“உன்ன பார்க்க வந்துட்டு இருந்தேன்ல அப்போ தான்” என அஜய்
கூற விக்ரமன் அவனை முறைத்தான்
, சொல்லபோனால் அஜய் சொல்வதை அவன சீரியசாகவே எடுத்து கொள்ளவில்லை. அஜய்க்கும்
அவனிடம் விளக்கமாக சொல்ல இப்போதைக்கு எதுவும் இருக்கவில்லை.

“சரி அத விடுடா, ஆமா அந்த பொண்ணு என்ன சொன்னா, எதுக்காக உன் அங்கிள பார்க்க போனாளாம்” என அஜய் கேட்க
விக்ரமன் நடந்த அனைத்தையும் கூறினான்.

அதை கேட்டு அஜய் பேயறைந்தது போல் அவனை பார்த்தான்.

“என்னடா நீ, எப்போல இருந்து இவ்ளோ மோசமானவனா மாறின, அந்த பொண்ணு குளிக்கறத வீடியோ எடுத்தியாடா நீ, உனக்கே இதெல்லாம் தப்பா
தெரியல” என விக்ரமனை அறுவெறுப்பாக பார்த்தான்.

அஜயின் குற்றசாட்டை ஏற்று கொள்ள முடியாதவனாய் “ஷட்அப்டா, நான் அப்படி பண்ணுவேனா, அவள மிரட்டறதுக்காக
சும்மா சொன்னேன்
, நிஜமாலாம்
வீடியோ எடுக்கல” என உண்மையை கூறினான்.

“நம்ப முடியலையே”

“ப்ராமிஸ்டா, உனக்கே என்ன பத்தி தெரியாதா, நான் பொண்ணுங்க விசயத்துல வீக் தான், அதுக்காக இப்படி வீடியோ எடுத்து மிரட்டற அளவுக்கு
கீழ்த்தரமானவன்லாம் கிடையாது”

“சரி சரி நம்பறேன், அந்த பொண்ணு நம்பிட்டாளா, அது தான் இப்போ மேட்டர்”

“அவ நம்பிட்டா, நான் எப்போ கூப்ட்டாலும் வரேன்னு சொல்லிருக்கா”

“அப்போ நீ அவள தொடர்ந்து யூஸ் பண்றதுன்னு முடிவு
பண்ணிட்டியா”

“அவ தாண்டா என்னோட பிரச்சனைக்கான மெடிசன், அவள எப்படி நான் மிஸ்
பண்ண முடியும்”

“சரிடா, ஆனா அந்த பொண்ணு உன் அங்கிள பார்க்க ஏன் போனான்னு தான் தெரியலயே, அவளுக்கு எதோ பிரச்சனை
இருக்குன்னு புரியுது
, ஆனா அத நாம
தெரிஞ்சிக்க வேண்டாமா” என அஜய் யோசனையாக கூறினான்.

“அத எதுக்கு நாம தெரிஞ்சிக்கணும் அஜய்”

“ஒருவேள அவ உன்ன அங்கிள்கிட்ட மாட்டிவிட நினச்சா, அவள நாம லாக் பண்ண
ஸ்ட்ராங் பாயின்ட் இருக்கனும்ல அதுக்கு தாண்டா.. அவள டீப்பா வாட்ச் பண்ணியாகணும்”

“அதுக்கு தான் நீ இருக்கியேடா” என விக்ரமன் கூலாக கூற
அஜயோ “நோ வே டா
, எனக்கு அத
விட முக்கியமான ஒரு வேலை  இருக்கு, நீ
வேணும்னா நம்ம ஆளுங்கள விட்டு வாட்ச் பண்ண சொல்லு” என இளமதியை மனதில் வைத்து
கொண்டு கூறினான்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் டாப்பிற்குக்கு உரிமையான இளமதியோ
அவளின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் கால் வைக்கும் போதே வாட்சை
பார்த்தாள். மணி பத்து என காட்டியது.

“போச்சி, அம்மா கத்த போகுது” என பதறியபடி உள்ளே வந்தவளுக்காக தூங்காமல்
காத்திருந்தார் மரகதம்.

உள்ளே நுழைந்த இளமதி ஹேன்ட்பேக்கை ஒரு பக்கமாக வைத்து
விட்டு தண்ணீரை கடகடவென குடித்து கொண்டிருந்தாள்.

கிச்சனுக்கு வந்த மரகதம் சாப்பாடு போட்டு அவள் கையில்
கொடுத்தார்.

“வைம்மா, நான் கை கால் கழுவிட்டு வரேன்” என்றவள் அறைக்கு செல்ல பாயில் அழகியும்
வெண்ணிலாவும் கட்டி பிடித்து தூங்குவதை பார்த்து புன்னகைத்து விட்டு நைட்டியை
எடுத்து கொண்டு பாத்ரூமிற்கு சென்றாள். ரெப்ரஷ் ஆகி விட்டு நைட்டியை போட்ட பிறகு
தான் எதோ விடுதலை கிடைத்தது போல் உணர்ந்தாள்.

சாப்பிட உட்கார்ந்தவள் அவள் அப்பாவை காணாததால் “என்னம்மா, அப்பா எங்க போனாரு” என
வீட்டை பார்வையிட்டபடி கேட்டாள்.

“ஆமா, அவன் எங்க போவான்.. அந்தாள பத்தி விசாரிக்கறத நிறுத்திட்டு  நீ முதல்ல சாப்டு” என்ற மரகதம் தண்ணீர் சொம்பை
வைத்து விட்டு சோர்வாக அமர்ந்தார்.

“ஏன்மா, ஏதாவது பிரச்சனையா?

“ஆமா, பிரச்சனைக்கு என்ன குறைச்சல், அந்தாளு இன்னைக்கு பண்ண வேலைக்கு அவன கொலலாம
விட்டேனே அதுவே தப்பு” என மரகதம் சலித்து கொள்ள இளமதிக்கு பதட்டமானது.

இளமதிக்கு அடுத்ததாக காத்திருக்கும் பிரச்சனை என்ன?

இளமதியை நிலாவாக நினைத்து உருகும் அஜய் என்ன
கிறுக்குதனம் செய்ய போகிறானோ
?

அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

    No comments yet.