Rani Govindh | 04 Nov 2025
Episode 14
விக்ரமன் சொன்னதை போலவே இளமதி குளித்து முடித்து விட்டு
அவளுக்குக்காக வைக்கபட்டிருந்த ட்ரெஸ்சை பார்த்தாள். லைட் க்ரீனில் நெட்டட் லாங்
டாப் அது.
அதை பார்த்த இளமதியோ “எதுக்காக இந்த நைட்டிய போட
சொல்றாரு, ஒன்னும்
புரியலையே” என நினைத்து கொண்டாள்.
அதை போட்டு தன்னை கண்ணாடியில் பார்த்த பிறகு தான் அந்த
உடையின் அழகே அவளுக்கு புரிந்தது. ஒரு வினாடி தன்னை மறந்து கண்ணாடியில் தன் அழகை ரசித்து
கொண்டாள்.
பிறகு சுயநினைவுக்கு வந்தவளாக “ச்சி, என்ன இளமதி நீ, என்ன
பிரச்சனைக்காக வந்திருக்க, என்ன
பண்ணிட்டு இருக்க” என நினைத்தவள் அடுத்து அவன் என்ன செய்ய சொல்ல போகிறானோ என
நினைத்து திகிலடைய ஆரம்பித்தாள்.
“நான் ரெடியா இருக்கேன்னு எப்படி அவனுக்கு
தெரியபடுத்தறது” என யோசித்து கொண்டிருக்க நல்லவேளையாக அவனிடம் இருந்து கால்
வந்தது.
வேகமாக காலை அட்டன்ட் செய்தவள் “ஹெலோ சார், நான் ரெடி ஆகிட்டேன்”
என அவசர குரலில் கூறினாள்.
“குட், போனை அங்கேயே வச்சிட்டு பெட்ல போய் உட்காரு” என அவன்
கூறவும் “இந்த டோர் ஓப்பன் பண்ண முடியல சார்” என்றாள் பதட்டமாக.
“இப்போ ஓப்பன் ஆகும்” என கூறி விட்டு அவன் காலை கட்
செய்து விட இளமதி யோசனையோடே கதவை திறந்தாள். இப்பொழுது கதவு திறந்து கொள்ள போனை
அங்கிருந்த கண்ணாடி திட்டில் வைத்தவள் நிம்மதி பெருமூச்சி விட்டபடி வெளியே
வந்தாள். அறை இருட்டாக இருந்து, தட்டுதடுமாறி பெட்டை நோக்கி நடந்தாள். அவள் வெளியில் வந்ததும் பாத்ரூம்
கதவு மூடி கொண்டது.
நேரம் வேறு போய் கொண்டிருக்க இளமதி மனம் திக் திக்கென்று
அடித்து கொண்டது.
“எதுக்கு வர சொன்னாரு, இந்த ட்ரெஸ் எதுக்கு போட சொன்னாரு.. என்ன நடக்க போகுது, ஒன்னுமே புரியலையே, டைம் வேற எத்தனன்னு
தெரியல, வாட்சும் பாத்ரூம்லையே இருக்கு, போன் வேற உள்ள வைக்க சொல்லிட்டான், ஒருவேள ஏதாவது
பிரச்சனைன்னா யாருக்கும் தகவல் கூட சொல்ல முடியாதே” என நினைத்தவளுக்கு பயம்
அதிகமாகி கொண்டே இருந்தது.
இளமதி இப்படி பயந்து கொண்டு உட்கார்ந்திருக்க எதோ கதவு
திறக்கும் சத்தம் கேட்டது. அந்த அறையில் மற்றொரு ரூம் இருப்பதை அப்பொழுது தான்
இளமதி கவனித்தாள். முந்தைய நாள் போல டார்ச் அடித்தபடி ஒருவன் அவளை நெருங்கி வந்து
கொண்டிருந்தான். ஏற்கனவே இருட்டு, இதில் போதாகுறைக்கு டார்ச் வேறு அவன் அடித்ததில் இளமதியால் அவனை கொஞ்சமும்
பார்க்க முடியவில்லை.
ஐந்தடி இடைவெளி விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் எதுவும்
பேசாமல் இருக்கவே “எ.. என்ன எதுக்காக வர சொன்னீங்க?” என்றாள் பயத்துடன்.
“உனக்கு தெரியாதா?” என அவன் பதில் கேள்வி கேட்டான்.
“எ.. எனக்கு எப்படி தெரியும்”
“அக்ரிமென்ட் நீ தானே சைன் பண்ண”
“அது.. அது வந்து”
“நான் எப்போ கூப்ட்டாலும் வரணும்ங்கறது தானே
அக்ரிமென்ட்” என அவன் கேட்கவும் இளமதி தலைகுனிந்து கொண்டாள்.
“இங்க பாரு, இனி ஒவ்வொரு முறையும் உன்ன ப்ளாக்மெயில் பண்ணிலாம் என்னால கூப்ட்டுட்டு
இருக்க முடியாது, இனி நான்
கால் பண்ணா ஏன் எதுக்குன்னு கேட்காம நீ வரணும், அப்படி இல்லைன்னா” என அவன் நிறுத்தவும் இளமதி
திடுக்கிட்டு போய் அவனை பார்த்தாள். ஆனால் அவள் கண்ணுக்கு டார்ச்லைட் வெளிச்சம்
மட்டுமே தெரிந்தது.
“உன்ன நான் எதுக்காக குளிக்க சொன்னேன்னு தெரியுமா?” என அவன் சம்மந்தமே
இல்லாமல் கேட்க அவள் “தெரில” என திக்கி திணறி கூறினாள்.
“குளிக்கும் போது கூட நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா” என
அவன் கூறவும் இளமதி இதயம் ஒரு வினாடி நின்றது போல் உணர்ந்தாள்.
“என்ன சொல்றீங்க”
“ஏன் நம்பலையா, வீடியோல பார்க்கறையா” என அவன் கூறவும் இளமதி கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அவள் புரிந்து
கொண்டாள்.
“இனி நான் கூப்ட்டா நீ வரணும், புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்” என அவன் கூற இளமதி
கண்ணீரோடு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“ஆமா, எதுக்காக என்ன இப்படிலாம் ப்ளேக்மெயில் பண்ண வைக்கற, என்கிட்டே எய்ட் லேக்ஸ்
வாங்கிட்டு என்ன ஏமாத்த நினைக்கலாமா, அது தப்பில்ல” என அவன் கூறவும் இளமதி பதறினாள்.
“இல்ல நான் அப்படி நினைக்கல”
“அப்படியா, நீ நேத்து ஹோட்டல்ல இருந்து கிளம்பினதுல இருந்து என் ஆளுங்க உன்ன பாலோ
பண்ணிட்டு இருக்காங்க, ஏமாத்த
நினைக்காதவ எதுக்காக போலீஸ்கிட்ட போன” என அவன் இளமதி கூறியதை வைத்தே அவளிடம்
உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கில் போட்டு வாங்க முயற்சி செய்தான்.
“இல்ல, நான் உங்கள பத்தி சொல்ல போலீஸ் ஸ்டேஷன் போகல”
“அப்போ எதுக்காக போன”
“அது, அது வந்து” என அவனிடம் உண்மையை கூற நினைத்தவள் “வேண்டாம் இளமதி, இவன்கிட்ட உண்மையை
சொல்லாத, ஏற்கனவே
உன்ன வீடியோ எடுத்து மிரட்டறவன் உன் பிரச்சனைய தெரிஞ்சிக்கிட்டான்னா நிச்சயம் அத
அவனுக்கு சாதகமாக்கிட்டு உன்ன டார்ச்சர் பண்ணுவான், எதையாவது சொல்லி சமாளி” என அவள் உள் மனம் அறிவுறுத்த
அமைதியானாள்.
“டெல் மீ டால், எதுக்காக ஸ்டேஷன் போன”
“நான் உங்கள பத்தி கம்ப்ளைன்ட் பண்ண போகல, அவ்ளோ தான் சொல்ல
முடியும்”
“அப்படியா, தென் லாயர பார்க்க எதுக்கு போன” என்றதும் இளமதிக்கு பகீர் என்றது.
“இது கூட இவனுக்கு தெரிஞ்சிருக்கு” என பதறியவள் “அது, அவரு” என தடுமாறினாள்.
“உனக்கு இன்னும் என்ன பத்தி சரியா புரியலைன்னு
நினைக்கறேன், இப்போ நீ
உண்மைய சொல்லல, உன் வீடியோவ” என அவன் மிரட்டும் போதே இளமதி அவனை கண்ணீரோடு ஏறிட்டு
பார்த்தாள்.
“என்ன பண்ணுவீங்க, யாருக்கு அனுப்புவிங்க, யாருக்கு வேணாலும் அனுப்பிக்கோங்க, அதுக்கு பிறகு உங்களால
என்ன மிரட்ட முடியாது, ஏன்னா
என்னோட பிணம் தான் இந்த ஹோட்டல விட்டு வெளிய போகும்” என்றாள் உறுதியான குரலில்.
அந்த வார்த்தையை அவள் கூறியதும் விக்ரமன் ஆடி தான்
போனான்.
பின் என்ன, இளமதியும் எவ்வளவு தான் தாங்குவாள், மிரட்டுவதற்கும் பயப்படுவதற்கும் ஒரு எல்லை
இருக்கிறதல்லவா.
விக்ரமன் அமைதியாகி விட, இளமதியே மேற்கொண்டு பேசினாள்.
“உங்களுக்கு என்ன, நீங்க கூப்டும் போதெல்லாம் நான் வரணும், அவ்ளோ தானே.. வரேன், சத்தியமா சொல்றேன், உங்கள மாட்டி
விடறதுக்காக எங்கயும் போகல, என்னோட வேற
பிரச்சனைக்காக போனேன், இது தான்
உண்மை.. இத நீங்க நம்பலைன்னா நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க, ஆனா நான் இங்க இருந்து
உயிரோட போக மாட்டேன்” என அழுத்தம் திருத்தமாக கூற விக்ரமன் சில வினாடி யோசித்தான்.
இவ்வளவு தீர்க்கமாக தன் உயிரையும் துச்சமாக நினைத்து
ஒருத்தி பேசுகிறாள் என்றால் அவள் கூறுவது உண்மையாக தான் இருக்கும் என அவனுக்கு
நம்பிக்கை வந்தது.
“சரி நீ கிளம்பலாம்” என அவன் கூறியதும் இளமதிக்கு தான்
கேட்டது உண்மை தானா என சந்தேகம் வந்தது.
“நீங்க என்ன சொன்னீங்க, எனக்கு கேட்கல”
“ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு நீ கிளம்பலாம்னு சொன்னேன்” என
கூறி விட்டு அவன் அந்த அறையில் இருந்து கிளம்பி விட, அந்த இருட்டில் அவனின் முதுகை மட்டுமே அவளால் பார்க்க
முடிந்தது.
நிஜமாகவே அவன் தன்னை போக சொல்லி விட்டானா என்பதை உணரவே
அவளுக்கு சில வினாடிகள் எடுக்க “ஆமா இளமதி, அவன் கிளம்பிட்டான், நீ இப்போதைக்கு தப்பிச்சிட்ட” என தனக்கு தானே கூறி
கொண்டாள்.
“ஐயோ ஏற்கனவே நேரமாச்சி, சீக்கிரம் வீட்டுக்கு வேற போயாகனும்” என நினைத்தவள்
வேகமாக பாத்ரூமிற்குள் சென்று அவள் புடவையை வேகமாக கட்டி கொண்டாள்.
வாட்சில் மணியை பார்த்தாள், மணி ஒன்பது என காட்டியது.
“ஏற்கனவே லேட் ஆகிருச்சி” என நினைத்து கொண்டே போனை
எடுத்து பார்த்தவள் அவளின் அம்மா நம்பரில் இருந்து பல முறை அழைப்பு வந்ததை
பார்த்ததும் பதறி போனாள்.
அவசர அவசரமாக அந்த அறையில் இருந்து வெளியே வந்தவள்
லிப்ட் வரை எப்படியோ வந்து விட்டாள். லிப்ட் மூடி இருக்க “லிப்ட் கீழ இருக்கு
போலயே, இப்போ
எப்படி மேல வர வைக்கறது, ரெண்டு
பட்டன் இருக்கு, எந்த
பட்டன் ப்ரெஸ் பண்ணனும்” என திணறி கொண்டு அவள் நிற்க நல்லவேளையாக அந்த நேரம்
பார்த்து லிப்ட் மேலே வந்தது, லிப்ட் கதவு திறந்ததும் அதில் ஸ்டாப் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
“மேம் கீழே தானே போகணும்”
“ஆமாங்க”
“சரி உள்ள வாங்க” என்றவள் இளமதி லிப்டிற்குள் சென்றதும்
கீழே அழைத்து சென்றவள் வாசல் வரை கொண்டு போய் விட்டு விட்டு வந்தாள்..
ஹோட்டலுக்கு வெளியில் வந்தவள் வேகமாக அவளின் அம்மா
நம்பருக்கு கால் செய்தாள்.
“என்னடி இன்னும் கம்பெனில தான் இருக்கியா, என்ன தான் அப்படி வேலை,
நான் வேணும்னா கிளம்பி வரட்டுமா” என எடுத்த எடுப்பிலேயே அவள் அம்மா கோபமாக
கேட்டார்.
“அம்மா அதெல்லாம் வேண்டாம், வேலை முடிஞ்சது, நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல
வந்துடுவேன்” என்றவள் உடனே போனை கட் செய்து விட “ஆமா, என் வாயடைக்கறதுக்கு தான் கத்து வச்சிருக்கா, இவ்ளோ நேரம் வேலை செய்ய
சொன்னா முடியாது அங்க சொல்ல வாய் வராது” என புலம்பி விட்டு மரகதம் சமையல் வேலை
பார்த்து கொண்டிருந்தார்.
வேக நடைபோட்டு இளமதி வந்து கொண்டிருக்க பஸ் எதுவும் அந்த
பக்கம் வருவது போல் இல்லை.
“ஷேர் ஆட்டோ வந்தா கூட அதுல போய்டலாம், ஆனா என் நேரம் எதுவும்
வரல” என புலம்பி கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
சிறிது தூரம் சென்றவள் ரோட்டை க்ராஸ் செய்ய முயற்சி
செய்ய வேகமாக எதிரில் வந்த கார் அவளை இடிப்பது போல் வந்து சடன் ப்ரேக் போட்டு
நின்றது.
கார் தன்னை இடித்து விட்டது, எல்லாம் முடிந்தது என பயந்தே விட்டாள் இளமதி. பயத்தில்
இளமதி கீழே விழுந்திருக்க, தனக்கு
எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்து மெல்ல எழுந்தாள். காரில் இருந்து இறங்கிய அஜய் வேகமாக
ஓடி வந்து அவளை பதட்டமாக பார்த்தான்.
“ஒன்னும் ஆகலையே, அடி ஏதாவது பட்டுருச்சா” என அவசர குரலில் கேட்டான்.
மெல்ல எழுந்தவள் “அதெல்லாம் இல்ல சார், நான் நல்லா இருக்கேன்”
என்றாள்.
“எதுக்கும் ஹாஸ்பிட்டல் போகலாம், நீங்க வாங்க” என அக்கறையாக கூறினான் அஜய்.
“ஐயோ சார் அந்த அளவுக்குலாம் எதுவும் ஆகல, எனக்கு ஏற்கனவே லேட்
ஆகிடுச்சி, நான்
கிளம்பறேன் சார்” என இளமதி அங்கிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தாள்.
“எங்க போகணும்னு சொல்லுங்க, நானே உங்கள டிராப் பண்ணிடறேன்” என இளமதி கூற “இல்ல சார், அதெல்லாம் வேண்டாம்” என
இளமதி அதற்கு மேல் அவனுக்கு பதில் சொல்லி கொண்டிருக்க விரும்பாமல் வேகமாக நடக்க
ஆரம்பித்தாள்.
அஜயோ விடாமல் காரை எடுத்து கொண்டு அவள் பின்னால்
சென்றான்.
அஜய் எதற்காக இளமதி பின்னால் செல்கிறான்?
இதுவும் விக்ரமன் ப்ளானா?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.