episode 13

Rani Govindh | 04 Nov 2025

நேரம் ஆகி கொண்டிருக்க மகிக்கோ படபடப்பு அதிகமாகி கொண்டே
போனது.

“போச்சி மணி ஏழாகிடுச்சி, இதுக்கு மேல லேட் ஆனா கண்டிப்பா அவன் சொன்ன இடத்துக்கு
போக முடியாது, லக்ஷ்மி மேடம் வேர ஆள காணோம்
, அவங்க இருந்தாலாவது சொல்லிட்டு கிளம்பலாம், இப்போ என்ன பண்றதுன்னு
தெரியலையே” என பயத்தில் கைகளை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தாள் மதி.

“ஐயோ முருகா என்ன காப்பாத்து, எல்லாத்துலயும் சோதிச்சா நான் என்ன தான் பண்ணுவேன்” என
கதிகலங்கி போய் உட்கார்ந்திருந்தவள் லேண்ட்லைன் அடிக்கவும் எடுத்து பேசினாள்.

“ஹெலோ, யாரு”

அந்த பக்கம் இருந்து எந்த பதிலும் வராமல் போக மதிக்கு
என்னென்னவோ தோன்றியது.

“ஒருவேள அவனா இருப்பானோ, அவனுக்கு எப்படி ஆபிஸ் நம்பர் தெரிஞ்சது, அப்போ நான் இங்க தான்
வேலைபார்க்கறேன்னும் தெரிஞ்சிடுச்சா
, அப்போ இங்க அவன் வந்தா, ஐயோ கடவுளே, நினச்சி
பார்க்கவே பயமா இருக்கே” என வியர்த்து போய் உட்கார்ந்திருந்தவள் அந்த பக்கம்
இருந்து வந்த குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.

“மதி, நான் பேசறது கேட்குதா இல்லையா” என லக்ஷ்மி பேசிய பிறகு தான் மதிக்கு உயிரே
வந்தது.

“கே.. கேக்குது மேடம்”

“இவ்ளோ நேரமா கத்திட்டு இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்க, பதில் சொல்ல மாட்டியா?

“அது இப்போ தான் மேடம் நீங்க பேசினது கேட்டுச்சி, போன்ல
பிரச்சனை போல”

“ஆமா, இருக்கும்.. சரி நீ வீட்டுக்கு கிளம்பு, சேல்ஸ் டீடைல்ஸ் நாளைக்கு தான் வருமாம், காலைல சீக்கிரம்
வந்துடு
, இன்னைக்கு
மாதிரி பெர்மிஷன் கேட்டுட்டு டென்ஷன் பண்ணாத”

“சரிங்க மேடம்” என்றவள் போனை வைத்து விட்டு பெருமூச்சி
விட்டு கொண்டாள்.

ஆனால் இப்பொழுது அவளுக்கு பயம் இன்னும் அதிகமானது, அவனை கோபபடுத்தினால்
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அவள் உள்மனம் எச்சரித்தது.

“என்ன ஆனாலும் சரி, அவன போய் இன்னைக்கு பார்த்து பேசிட வேண்டியது தான், இன்னும் மோசமா நடக்க
என்ன பாக்கி இருக்கு” என விரக்தியாக புன்னகைத்து கொண்டவள் கம்பெனியில் இருந்து
கிளம்பினாள்.

பஸ்ஸை பிடித்து அவன் சொன்ன மூன் டிலைட் ஹோட்டல்
ஏரியாக்கு சென்றவள்
,
ஹோட்டலுக்கு வேக நடை போட்டு சென்று கொண்டிருந்தாள். போகும் வழியில் எல்லாம் அங்கு
என்ன நடக்க போகிறதோ என்கிற பயம் அவளை பிடுங்கி தின்று கொண்டிருந்தது.

மணி வேறு ஏழரை ஆகி இருக்க வீட்டில் இருந்து கால் வந்தது.

“ஹெலோ”

“அக்கா நான் தான் பேசறேன்என மதியழகி பேசினாள்.

“சொல்லு அழகி, எதுக்கு கூப்ட்ட, அம்மா கால்
பண்ண சொன்னுச்சா”

“இல்லக்கா, எனக்கு ஸ்கூல்ல ப்ரொஜெக்ட் கொடுத்திருக்காங்க, சாட்டும், கலர் ஸ்கெட்ச்சும் மட்டும் வாங்கிட்டு வர்ரயா, நைட்டே முடிக்கணும்க்கா”

“நைட்டேவா” என யோசித்தாள் மதி.

மதி செல்லும் இடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அவள் திரும்ப வருவாளா
என்பதே சந்தேகம் எனும் போது அவள் எதை நம்பி வாக்குறுதி கொடுக்க முடியும்.

“அழகி அக்கா வர லேட்டாகும், எனக்கு இங்க அவசர வேலை கொடுத்திட்டாங்க, இத முடிச்சா தான் நான்
கிளம்ப முடியும்
, ஒன்பது மணி
கூட ஆகும்.. நீ அம்மாவ வாங்கி தர சொல்லு”

“அம்மாகிட்ட கேட்டுட்டேன்க்கா, காசில்லாத நேரத்துல இதெல்லாம் வாங்க முடியாதுன்னு
சொல்லிடுச்சி”

“சரி நீ போன அம்மாகிட்ட கொடு, நான் வாங்கி தர சொல்றேன்” என இளமதி கூறவும் அழகி
மரகதத்திடம் விவரத்தை கூறி போனை கொடுத்தாள்.

“என்ன மதி, நீ வர லேட்டாகும்னு சொல்றா”

“ஆமாம்மா, அவசர வேலை வந்துடுச்சி”

“அதுக்குன்னு ஒன்பது மணியாகுமா, என்ன இப்படி பண்றாங்க?

“வேலைன்னா அப்படி தானேம்மா”

“அதுக்குன்னு வயசு பொண்ண இப்படி லேட்டா அனுப்பறதா” என
மரகதம் பேச மதிக்கு சிரிப்பு தான் வந்தது.

“இன்னும் என்னமா வயசு பொண்ணு, அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே” என மதி அவள் வாழ்கையில்
தற்போது நடப்பதை நினைத்து கூற
, மரகதமோ மதி தன் முதல் கல்யாணத்தை பற்றி பேசுகிறாள் என நினைத்து கொண்டார்.
இதை மேற்கொண்டு பேசி மதியை காயபடுத்த வேண்டாம் என நினைத்தவர் “சரிம்மா
, நீ பாத்து பத்தரமா
வந்து சேரு
, பஸ்
கிடைக்கலைன்னா ஆட்டோல கூட வந்துடு” என அக்கறையாக கூறினார்.

“அழகி, எங்க இருக்க, உன்ன
பெத்தவனுக்கு தண்ணி கொண்டு வந்து தாடி” என குடித்து விட்டு வாசலில் வந்து கத்தி
கொண்டிருந்தான் கந்தசாமி.

“என்னம்மா சத்தம்” என மதி கேட்க “வேற யாரு, என் தாலிய அறுக்கவே
ஒருத்தன் உசுரோட இருக்கானே அவன் தான்” என கடுப்பாக கூறினார்.

“சரி விடும்மா, நீ எதுவும் சண்டை போடாத”

“ஆமா, அந்தாளுக்கிட்ட சண்டை போட்டா மட்டும் திருந்திடுவான் பாரு”

“அவர விடும்மா, நீ அழகிக்கு போய் சாட்டும் கலர் ஸ்கெட்ச்சும் வாங்கி கொடுத்துடு, அவ ப்ரொஜெக்ட்
முடிக்கணுமாம்” என தங்கைக்காக பேசினாள்.

“ஆமாடி, காசில்லாத நேரத்துல இது ரொம்ப முக்கியம்” என சலித்து கொண்டார் மரகதம்.

“ஆமா உன் புருஷன் மட்டும் காசு வச்சிக்கிட்டு தான்
குடிச்சிட்டு வராரு பாரு
, சின்ன
புள்ள படிப்பு விசயமா கேட்குது
, அதுக்கு கணக்கு பார்த்துட்டு இருக்க” என மதி கோபப்பட “சரிடி, உடனே நீ சண்டைக்கு
நிக்காத
, நான்
வாங்கிட்டு வந்து கொடுக்கறேன்
, நீ பத்திரமா வீடு வந்து சேரு” என கூறி விட்டு போனை வைத்தார் மரகதம்.

போனை வைத்த பிறகு தான் மதிக்கு திரும்பவும் வயிற்றில்
புளியை கரைத்தது. போன் பேசிக்கொண்டே ஹோட்டல் அருகில் நெருங்கி இருந்தாள்.

வாட்சை பார்த்தாள், மணி ஏழு ஐம்பது என இருந்தது.

“ஹோட்டலுக்கு வர சொன்னாரு, ஆனா எந்த ரூமுக்குன்னு சொல்லலையே” என யோசித்தபடி இளமதி
ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.  இவ்வளவு பெரிய
ஹோட்டலுக்கு சென்று மதிக்கு பழக்கம் இல்லை.

முந்தைய நாள் இளமதி சென்ற ஹோட்டலுக்கு ப்ரோக்கரோடு சென்றதால்
 அவளை யாரும் கண்டு கொள்ளவில்லை
, ஆனால் இன்றோ தனியாக
திருதிருவென முழித்து கொண்டு அவள் நிற்க செக்யூரிட்டி அவளிடம் விசாரித்தார்.

“என்ன வேணும்”

அவள் வியர்த்து வடிந்த முகமும், கசங்கிய புடவையும் பார்த்து அவளை மேடம் என அழைக்க கூட
அந்த செக்யூரிட்டிக்கு மனம் வரவில்லை.

“அது, இங்க வர சொன்னாங்க”

“யாரு” என அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என
தெரியாமல் முழித்தாள் இளமதி.

“அவன் யாருன்னு சொல்றது, இப்போ என்னனு சொல்றது, ஒன்னும் புரியலையே”

“அது அவரு, அவரு பேரு”

அவள் முழிப்பதை வைத்து அவன் பெயர் அவளுக்கு தெரியவில்லை
என உணர்ந்த செக்யூரிட்டி “எந்த ரூம் நம்பர்னாவது தெரியுமா” என விசாரித்தான்.

“ரூம் நம்பர்” என யோசித்தவள் தலைகுனிந்தபடி நின்றாள்.

செக்யூரிட்டிக்கு கடுப்பானது.

“ஏதாவது திருட வந்திருக்கியா” என கடுப்பில் கேட்டார்.

 அந்த கேள்வியில்
பதறி போனாள் இளமதி.

“ஐயோ சத்தியமா நான் அப்படிப்பட்ட பொண்ணில்ல”

“அப்போ எதுக்கு வந்திருக்க, யார் உன்ன வர சொன்னது, ஒழுங்கா சொல்றியா, இல்ல போலீஸ்க்கு கால் பண்ணவா” என அவள் திருட தான்
வந்திருக்கிறாள் என முடிவு கட்டிய செக்யூரிட்டி மிரட்டலாக கேட்டான்.

“அது அது வந்து” என இளமதி திணறி கொண்டிருக்க அவள்
போனிற்கு ப்ரைவேட் நம்பரில் இருந்து கால் வந்தது.

அவனாக தான் இருக்கும் என நினைத்த மதி வேகமாக காலை
அட்டன்ட் செய்து பேசினாள்.

“ஹெலோ சார்,  நான் ஹொ.. ஹோட்டலுக்கு
வந்துட்டேன்
, ஆனா
செக்யூரிட்டி… செக்யூரிட்டி என்னை உள்ள விட மாட்டேங்கறாரு” என படபடப்போடு
பேசினாள்.

“செக்யூரிட்டிகிட்ட போனை கொடு” என அவன் கூறவும் மதி
வேகமாக போனை அவனிடம் கொடுத்தாள்.

போனில் அவன் என்ன சொன்னானோ தெரியவில்லை போனை கட் செய்து
கொடுத்த செக்யூரிட்டி “வாங்க மேடம்
, நான் உள்ள சொல்லி விட்டுட்டு வரேன்” என மரியாதையோடு அழைத்து சென்றான்.

மதி அவன் பின்னால் செல்ல மற்றொரு ஸ்டாபிடம் எதையோ
கூறியவன் அவரிடம் மதியை விட்டு விட்டு கிளம்பினான்.

லிப்டில் அவளை அழைத்து சென்ற ஸ்டாப் செவன்த் ப்ளோரில்
அவளை இறக்கி விட்டு விட்டு “இப்படி நேரா போனிங்கனா கடைசியா ஒரு ரூம் இருக்கும்
, அங்க போங்க” என கூறி
விட்டு அதே லிப்டில் சென்று விட்டாள்.

அந்த ப்ளோரே ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, கலர் கலரனான லைட்
வெளிச்சம் கூட மதியை பீதியாக்கி கொண்டிருந்தது. மெதுவாக நடந்து சென்றவள் கடைசி அறை
வாசலில் திருதிருவென முழித்தபடி அடுத்து என்ன செய்வது என புரியாமல் நின்று
கொண்டிருந்தாள்.

“ஏன் இந்த இடமே ஒரு மாதிரி இருக்கு, ஆள் நடமாட்டம் கூட இல்ல, ஒருவேள என்ன
கொன்னுடுவானா
, பேசாம
திரும்பி போய்டலாமா” என மதி யோசித்து கொண்டிருக்க அவளுக்கு திரும்பவும் ப்ரைவேட்
நம்பரில் இருந்து கால் வந்தது.

“டோர் ஓப்பன் பண்ணி உள்ள போ, கால் கட் பண்ணாத” என அவன்
கூறவும் மதி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அன்று போல் இன்றும் அந்த அறை இருட்டாக தான் இருந்தது.

“டோர் லாக் பண்ணிட்டு, உன் போன் டார்ச் அடிச்சி உனக்கு எதிர்ல நேரா போ, அங்க பாத்ரூம்
இருக்கும்
, அங்க போ”
என கூறவும் “பாத்ரூமுக்கு எதுக்கு சார்” என புரியாமல் கேட்டாள் இளமதி.

“கேள்வி கேட்காம சொல்றத செய்” என அவன் கூறவும்
பாத்ரூமிற்குள் சென்றாள் இளமதி.

“வந்துட்டேன் சார்”

“இப்போ ஷவர் ஓபன் பண்ணி நல்லா குளிச்சி முடிச்சி, அங்க உனக்காக இருக்க
ட்ரெஸ் போட்டுட்டு ரெடி ஆகி பெட்ல வெயிட் பண்ணு
, திரும்ப கால் பண்றேன்” என கூறி விட்டு விக்ரமன் காலை
கட் செய்து விட்டான்.

இளமதிக்கோ அவன் எதற்காக இதெல்லாம் செய்ய சொல்கிறான் என
ஒன்றும் புரியவில்லை.

“ஒருவேள, இன்னைக்கும்.. ஆனா எதுக்காக குளிக்க சொல்றாரு, ஒருவேள அன்னைக்கு நடந்தத விட வேற ஏதாவது நடக்க
போகுதா”  என நினைக்கும் போதே மதிக்கு
திக்கென்று இருந்தது.

“இல்ல, அவரு சொல்றத நான் எதுக்கு செய்யணும்” என நினைத்தவள் பாத்ரூமை விட்டு
வெளியே செல்ல பார்க்க
, கதவு லாக்
ஆகி இருந்தது
, எவ்வளவு
முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை.

அப்பொழுது தான் இளமதிக்கு ஒன்று புரிந்தது, இன்று அவன் சொன்னதை
கேட்டால் மட்டும் தான் இங்கிருந்து வெளியே செல்ல முடியும் என உணர்ந்தவள் அவன்
சொன்னது போலவே குளிக்க துவங்கினாள்.

விக்ரமனின் ப்ளான் தான் என்ன?

நேற்று போலவே இன்றும் இளமதியை வைத்து தன் ஆசையை தீர்த்து
கொள்ள போகிறானா
?

    No comments yet.