Category: தொடர்கதை

மழை

மண்ணில் ஈரமில்லை விண்ணும் பொழியவில்லை மண்ணிலும் விண்ணிலும் மனிதர்களால் மாசு முடியவில்லை மரமும் அதை வாழ விடுவதில்லை மழையும் வந்தபாடில்லை மழையும் வாழ விடுவதில்லை  மரங்களை அழித்தால்

மழை

மண்ணில் ஈரமில்லை விண்ணும் பொழியவில்லை மண்ணிலும் விண்ணிலும் மனிதர்களால் மாசு முடியவில்லை மரமும் அதை வாழ விடுவதில்லை மழையும் வந்தபாடில்லை மழையும் வாழவிடுவதில்லை  மரங்களை அழித்தால்

ஏழுகால் பூச்சி

ஏழு கால்களோடு பிறந்த எட்டுக்கால் பூச்சி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக்கொண்டிருக்கிறது  எட்டுக்கால் இருக்கும் மற்ற எட்டுக்கால் பூச்சிகளைப் போலவே.

காக்கா

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை, வானம் நீர்தெளித்த வாழையில் வைத்துச் சாப்பிட்டது ஒரு காகம் மரத்திலேயே எச்சில் ஆனது  அந்த இலை.  

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்: 2023 தமிழ் உயிர் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். உயிர் எழுத்துகளின் வரி வடிவங்களைச் சீராக்க வேண்டும். அப்போதுதான் அவை இனிவரும் தலைமுறையினருக்கு எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கும். தமிழில் மொத்தம் 12 உயிர் எழுத்துகள் உண்டு. அவையாவன:அ,ஆ, இ,ஈ,உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவற்றுள் “ஈ” யையும் “ஊ” வையும் “ஒள”வையும் மாற்ற வேண்டும்.—————————————————————-1) “இ” னாவுக்கு நெடிலான,”ஈ”யன்னாவை     என்று மாற்றினால் இயல்பான நெடிலாக…

திசை சங்கர் சிலேடைகள்

1) “எவன்டா இஞ்சினியரு  தண்டவாளத்த இவ்ளோ பெருசா போட்ருக்கான்”  என்றது இரயில் பூச்சி. 2) தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று பாடியது: “மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்  உந்தன் ஞாபகமே!” 3) ஒல்லியாக இருப்பவன் வாங்கினான் “குண்டாய்” கார். 4) தமிழில் அக்காவாய் இருந்து  ஆங்கிலத்தில் அம்மாவாய் ஆனது ஏலக்காய்.  

அன்பின் நிழலில்

அன்று என் நண்பனுக்கும் எனக்கும் சண்டை நடந்தது  எனக்குப் பிடித்த தலைவனுக்காக நான் விவாதம் செய்தேன்  அவனுக்குப் பிடித்த தலைவனுக்காக அவன் விவாதம் செய்தான்  சண்டை முற்றியது  நான் அவன் குடும்பத்தை இழுத்தேன்  அவன் என் குடும்பத்தை இழுத்தான்  ஐந்து வருடங்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை  இப்போது அவன் தலைவனும் என் தலைவனும் ஒரே கட்சியில்…                  

அப்பா

உன் அன்பில் நான் இருந்த நாட்கள் கனவு என்று ஆகிவிட்டது…….. கனவு என்று ஆகிவிடதா என்று நான் நினைக்கும் அந்த ஒரு நாள் மட்டும் தினமும் என் நினைவில் நிற்கிறது………. “அது நீங்கள் எங்களை விட்டு நீங்கி சென்ற நாள்” 

பிரிவு

உனக்கென நானும்  எனக்கென நீயும்  தவித்திருந்த காலங்கள்  மாறி இருக்கலாம்…!  பார்வைகள் நம்மை  ரசிக்க வைத்த காலங்கள்  மாறி இருக்கலாம்..! நம் தேடல்களின்  காத்திருப்பு காலங்கள் குறைந்திருக்கலாம்…!  ஏனோ இன்னும்  நமக்குள் இருக்கும்  காதல் மட்டும்  குறையவில்லை..!  கானல் நீரின்  சாரலில் நனைந்த  உணர்வு போல்  பிரிவுநிலை கடந்து  விட்ட பிறகும்…! -கவி நிலா 

கரைந்து போகிறேன்

மாலை நேரம் என்  ஜன்னலின் ஓரம்  சாரல் மழையில்  நனைகிறேன்…!  பார்க்கும் தூரம்  நீ இருந்தாலும்  என்னை நீ  எதிர்பார்க்க வேண்டும்  என்றே மறைக்கிறேன்…!  நீயும் நானும்  சாலையோரம் சேர்ந்தே  நடக்கும் தூரம்  குறையாமல் இருக்க நினைக்கின்றேன்…!  வானில் போகும்  மேகம் ஒன்றாய்  சேர்ந்து கருமேகம்  ஆகும் நேரம்  நான் தனிமையில்  தவிக்கிறேன்…! -கவி நிலா…!

Contact Us

error: Content is protected !!