Category: கவிதை

ஆயாவும் விழாவும்

அம்மோய் இன்னைக்குஸ்கூல்ல விழா எடுக்கறாங்கநீயும் வரியாஆர்வமாக கேட்டுவிட்டு விழிவிரிய நின்றாள்…அடி போடி இங்கன கிடக்கறவேலைய செய்யவே ஆளைக்காணோம்விழா காண தான் கண்ணுக்கிடக்குதோஅங்கன குருவிகிட்டுகிடக்கறகிழவியை கூட்டிட்டு போ…விழா காண கேட்டதற்கே வைய துவங்கியவளிடம்அந்த விழாவிலே ஆடப்போவதை சொன்னால்சீவகட்டை முதுகில் ஏற விளாசுவாள்..படிக்க அனுப்பினா ஆடிட்டு திரியறயோஎங்கயும் போகவேனா மீறிப்போனாகால உடைச்சிப்பிடுவேன் என்பாள்…ஆடுவதைப்பத்தி மூச்சி கூட விடாமல் ஆயாவைகிளப்பிக்கொண்டு போனாள்…ஏம்புள்ள, இன்னும் எவ்வளவு நேரம்காத்துகிட்டு கிடக்க…செத்த நேரத்துல ஆரம்பிச்சிருவாங்கயாஇங்கயே உக்காரு தோ வாரேன்..அலங்காரத்தோடு வந்தவள்ஆயாவிடம் கெஞ்சினாள் …என்னபுள்ள துணி இது…டீச்சரு…

நீயும் நானும்

மழையாக நீ கடலாக நான் வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்! இருள் வானிலே ஓர் புன்னகை நீ சிந்தினால் ஒளியாகுவேன்! இமை மூடியே சிறகை கடன் வாங்கியே நெடுந்தூரம் தாண்டி உனை காண்கிறேன்! ஒளி மாறலாம் இருள் ஆகலாம்.. உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா! உனக்காக நான் எனக்காக நீ நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா!

காதல் பயணம்..

வெற்று தாளுக்கும் கரு மை எழுத்திற்குமான இடைவெளியாய் நீள்கிறது எங்கள் காதல் பயணம்……. அவளின் நினைவுகளே வண்ணம் தருகிறது கேட்பாரற்று கிடக்கும் என் காதல் இதயத்திற்கு…..

ஹைக்கூ

ஒரு குரல் என்ன செய்யும்? தூர தேசமானாலும் துரத்தி அலைய சொல்லும்! வார்த்தைகளை மழுங்கடித்து கூர்வாள்வீசி கொல்லும்! அந்தகார பொழுதிலும் ரீங்காரமிட்டு செல்லும்! பிணக்கு கொள்ளும்போதெல்லாம் மௌனம் கொண்டு வெல்லும்…

Contact Us

error: Content is protected !!