Category: கவிதை

Un Mel naan konda kadhal

unnal uruvana ulagam en ullathil unakaga uruvakkiya uruvam antha uruvathirku uyir koduthen un ullathil enaku idam koduthathal .. un ullathil mattum alla un ulagathilum idam vendugiren intha uyirulla oru pavai … Un anbirku ikkavithai samarpanam

இயற்கை

வனங்கள் அழித்துவளங்கள் பெற்றோம்நிலங்கள் அழித்துநிம்மதி இழந்தோம் மரங்கள் அழித்துமழையைக் குறைத்தோம்தொழில்நுட்பம் பெருக்கிதொல்லைக்கு ஆளாகினோம் தென்னை அழித்துத் தென்றல்தொலைத்தோம்இயற்கை மரித்துச் செயற்கை பிறந்ததால் இன்பங்கள் மறைந்தனதுன்பங்கள் பிறந்தனகாற்றை கடன்வாங்கும்கலியுக வாழ்க்கையில் கண்ணீருக்குக் கூடதண்ணீர் இல்லைஇன்னும் விழித்தெழவில்லைஎனில் இயந்திர விடியலில் இதயம் துடிக்கும் #சரவிபி ரோசிசந்திரா

தாய்மொழி

கொக்கரிக்கவில்லை கோழி கூவவில்லை சேவல் ஓடவில்லை ஆறு ஓடையில் இல்லை நீரு இதை அழித்தது யாரு கொஞ்சம் எண்ணி நீயும் பாரு   பாரம்பரியம் கட்டிக்காத்தது அந்தக்காலம் பாரும் போற்றியது சங்க காலம் பாவங்கள் தொடருது கலிகாலம் பாழாய்ப் போகுமா தற்காலம்   எல்லாம் தொலைஞ்சுப் போகுமா? என் தாய்மொழியும் பண்பாடும் மறையுமா? செயற்கை அரிதாரம் பூசுமா! இயற்கை தன்னிலை இழக்குமா?   கொக்கரிக்கவில்லை கோழி கூவவில்லை சேவல் ஓடவில்லை ஆறு ஓடையில் இல்லை நீரு இதை…

காதல் கசிந்துருக

இரக்கமற்று இராப்பொழுதுகளிலும்இம்சிக்கிறாய்…உறக்கம் கெட்டு உன் நினைவுகளோடுகெஞ்சி கேட்கிறேன் இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே… உதடு குவித்துகாற்றின் வழி கள்ளத்தனமாய் முத்தம் நூறுஅனுப்புகிறாய்…தப்பி பிழைக்க வழியேதும் இல்லாமலேஅத்தனையும் உண்டு களித்துஉனக்குள் உருக்குலைந்து கிடக்கிறேன்மொத்தமாய் நான்… பேசி தீர்க்க ஆவல் இருக்கையில்மௌனம் கொள்வான்…மௌனம் கொண்டு பிணக்கில் இருக்கையில்முத்தம் வைத்து மொத்தமாய் கொல்வான்… இருள் பூசிக்கொள்ளும் வானம்உன்னையும் என்னோடுபூசிக்கொள்ள சொல்லும் தேகம்நீள்கின்ற நேரம்வீழாத மோகம் கலையாது வேண்டும் இத்தியானம்… மெல்ல தலையசைத்துகைகளில் கரிசனம் கோர்த்துதலைகோதி நீ கேட்கையிலேஆதிமுதல் அந்தம் வரை மறைப்பதற்கு ஏதுமில்லை…

நீயும் நானும் அன்பே!!

நான் நெருப்பு அவன் நீர் நான் எரிகையிலே அவன் அணைக்கிறான்… அவன் நீர் நான் நெருப்பு அவன் அணைத்திடவே நான் எரிகிறேன்… நான் நெருப்பு அவன் நீர் இருவேறு புள்ளிகள் இருந்தும் இணைகிறோம்…. அவன் நீர் நான் நெருப்பாய் இருக்கையிலும் ஒன்றென வாழ்கிறோம்….

காதல் : எண்பது கவிதை – 5

பேசச் சொன்னால்  மௌனமாய் போகிறாய்  பழகச் சொன்னால்  விலகியே நடக்கிறாய்  திட்டச் சொன்னாலும்  மனமில்லை என்கிறாய்  வெறுக்கவும் மறுக்கிறாய். . .  பேசாமல் காதலித்து விடேன்? 

Contact Us

error: Content is protected !!