பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!
உதடுக்கும் தேநீர் கோப்பைக்கும் இருக்கும் சாவதானம் பொதிந்த மாலை நேரத்தில் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவரக்ளின் வரிகளால் மனம் இயல்பை விட இலகுவாகிவிடுகிறது ; “பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே”, இவ்வரிகளுக்கேற்ப நம் நினைவில் வருவது “விவியன் மேயர்”. விவியன் டோரோதி மேயர் (1926 – 2009 ) , அமெரிக்க புகைப்பட கலைஞர். இவர் புகைப்படக் கலைஞர் என்று அறியப்பட்டதென்பது இவரின் மரணத்திற்கு பிறகே, புகைப்படங்களின் வகைமைகளில் மிக முக்கியமான வகைமை, “தெருப்…