Author: Thisaisankar

ஏழுகால் பூச்சி

ஏழு கால்களோடு பிறந்த எட்டுக்கால் பூச்சி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக்கொண்டிருக்கிறது  எட்டுக்கால் இருக்கும் மற்ற எட்டுக்கால் பூச்சிகளைப் போலவே.

காக்கா

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை, வானம் நீர்தெளித்த வாழையில் வைத்துச் சாப்பிட்டது ஒரு காகம் மரத்திலேயே எச்சில் ஆனது  அந்த இலை.  

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்: 2023 தமிழ் உயிர் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். உயிர் எழுத்துகளின் வரி வடிவங்களைச் சீராக்க வேண்டும். அப்போதுதான் அவை இனிவரும் தலைமுறையினருக்கு எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கும். தமிழில் மொத்தம் 12 உயிர் எழுத்துகள் உண்டு. அவையாவன:அ,ஆ, இ,ஈ,உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவற்றுள் “ஈ” யையும் “ஊ” வையும் “ஒள”வையும் மாற்ற வேண்டும்.—————————————————————-1) “இ” னாவுக்கு நெடிலான,”ஈ”யன்னாவை     என்று மாற்றினால் இயல்பான நெடிலாக…

திசை சங்கர் சிலேடைகள்

1) “எவன்டா இஞ்சினியரு  தண்டவாளத்த இவ்ளோ பெருசா போட்ருக்கான்”  என்றது இரயில் பூச்சி. 2) தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று பாடியது: “மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்  உந்தன் ஞாபகமே!” 3) ஒல்லியாக இருப்பவன் வாங்கினான் “குண்டாய்” கார். 4) தமிழில் அக்காவாய் இருந்து  ஆங்கிலத்தில் அம்மாவாய் ஆனது ஏலக்காய்.  

அன்பின் நிழலில்

அன்று என் நண்பனுக்கும் எனக்கும் சண்டை நடந்தது  எனக்குப் பிடித்த தலைவனுக்காக நான் விவாதம் செய்தேன்  அவனுக்குப் பிடித்த தலைவனுக்காக அவன் விவாதம் செய்தான்  சண்டை முற்றியது  நான் அவன் குடும்பத்தை இழுத்தேன்  அவன் என் குடும்பத்தை இழுத்தான்  ஐந்து வருடங்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை  இப்போது அவன் தலைவனும் என் தலைவனும் ஒரே கட்சியில்…                  

Contact Us

error: Content is protected !!