Author: Tamil

நீயும் நானும் அன்பே!!

நான் நெருப்பு அவன் நீர் நான் எரிகையிலே அவன் அணைக்கிறான்… அவன் நீர் நான் நெருப்பு அவன் அணைத்திடவே நான் எரிகிறேன்… நான் நெருப்பு அவன் நீர் இருவேறு புள்ளிகள் இருந்தும் இணைகிறோம்…. அவன் நீர் நான் நெருப்பாய் இருக்கையிலும் ஒன்றென வாழ்கிறோம்….

அன்பு ஒன்றே..

வழக்கமாக ஜன்னல் இருக்கை கிடைக்காது, பெரிதாக ஆசைப்படுவதுமில்லை….அவ்வப்போது அமையும் ரயில் பயணங்களில் புத்தகத்தை அலசி ஆராயவே நேரம் போதுமானதாக இருக்கும்…பெரும்பாலும் தனித்த பயணங்களாகவே அமைவதால் கையில் ஒரு புத்தகம், ஒரு பாட்டில் தண்ணீர்…இருக்கையில் அமர்ந்ததும் வாசிப்பு ஆரம்பமாகிவிடும், சிறிது நேரத்தில் கண்களை மூடி மனதை வாசிக்க தொடங்கிவிடுவேன்…. இந்த முறை ஜன்னல் இருக்கை காத்திருந்தது, நண்பர் முன்பதிவு செய்துகொடுத்ததால் அமைந்திருக்குமோ, மனதுக்குள் ஒளிந்துகொண்டிருந்த குட்டிப்பையனுக்கு சின்னதாக சந்தோசம் போல, மெல்ல துள்ளி குதித்தான்….வழக்கம்போல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்….…

ஆயாவும் விழாவும்

அம்மோய் இன்னைக்குஸ்கூல்ல விழா எடுக்கறாங்கநீயும் வரியாஆர்வமாக கேட்டுவிட்டு விழிவிரிய நின்றாள்…அடி போடி இங்கன கிடக்கறவேலைய செய்யவே ஆளைக்காணோம்விழா காண தான் கண்ணுக்கிடக்குதோஅங்கன குருவிகிட்டுகிடக்கறகிழவியை கூட்டிட்டு போ…விழா காண கேட்டதற்கே வைய துவங்கியவளிடம்அந்த விழாவிலே ஆடப்போவதை சொன்னால்சீவகட்டை முதுகில் ஏற விளாசுவாள்..படிக்க அனுப்பினா ஆடிட்டு திரியறயோஎங்கயும் போகவேனா மீறிப்போனாகால உடைச்சிப்பிடுவேன் என்பாள்…ஆடுவதைப்பத்தி மூச்சி கூட விடாமல் ஆயாவைகிளப்பிக்கொண்டு போனாள்…ஏம்புள்ள, இன்னும் எவ்வளவு நேரம்காத்துகிட்டு கிடக்க…செத்த நேரத்துல ஆரம்பிச்சிருவாங்கயாஇங்கயே உக்காரு தோ வாரேன்..அலங்காரத்தோடு வந்தவள்ஆயாவிடம் கெஞ்சினாள் …என்னபுள்ள துணி இது…டீச்சரு…

அடைகாப்பான்

“ஏண்டி, இன்னும் என்ன பண்ற, நாம இப்போ கிளம்பினா தான் நேரத்துக்கு அங்க போய் சேர முடியும்”   “அட கொஞ்சம் இருங்க, சும்மா எப்போவும் மாட்டை விரட்ற கணக்கா விரட்டிட்டு இருப்பீங்களே, பசங்கள ரெடி பண்ண வேண்டாமா, இன்னும் பத்துநிமிஷத்துல கிளம்பிடலாம்”   “என்ன பிள்ளையை வளர்த்துருக்கிறியோ, ரெண்டும் ரெண்டு ரகம், ஒண்ணுங்களாச்சும் பொறுப்பா இருக்குதுங்களா, சரி சீக்கிரம் வா”   “அண்ணா, அண்ணி ரெடி பண்ணி கூட்டிட்டு வரட்டும், அதுக்குள்ள நாம லக்கேஜ் எல்லாம்…

நீயும் நானும்

மழையாக நீ கடலாக நான் வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்! இருள் வானிலே ஓர் புன்னகை நீ சிந்தினால் ஒளியாகுவேன்! இமை மூடியே சிறகை கடன் வாங்கியே நெடுந்தூரம் தாண்டி உனை காண்கிறேன்! ஒளி மாறலாம் இருள் ஆகலாம்.. உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா! உனக்காக நான் எனக்காக நீ நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா!

காதல் இதயம்…

வெற்று தாளுக்கும் கரு மை எழுத்திற்குமான இடைவெளியாய் நீள்கிறது எங்கள் காதல் பயணம்……. அவளின் நினைவுகளே வண்ணம் தருகிறது கேட்பாரற்று கிடக்கும் என் காதல் இதயத்திற்கு…..

காதல் பயணம்..

வெற்று தாளுக்கும் கரு மை எழுத்திற்குமான இடைவெளியாய் நீள்கிறது எங்கள் காதல் பயணம்……. அவளின் நினைவுகளே வண்ணம் தருகிறது கேட்பாரற்று கிடக்கும் என் காதல் இதயத்திற்கு…..

Contact Us

error: Content is protected !!