Author: Mago

இறுதிவரை உன்னோடு

இதயம் தொலைத்து தொலைதூரம் பயணத்திட ஆசை கொண்டேன் … கரம் பற்றி காதலோடு களித்திருந்த காலம் எல்லாம் கனவாய் போனது … கண் நிரம்பி வழியும் கண்ணீரெல்லாம் காதலை கரைத்திட முடியாமல் கனத்த இதயத்துடன் காலத்தை நகர்த்திடும் படி ஆனது … இருந்தாலும் இறந்ததாலும் உன் கரம்பற்றி இருந்து விடவே கனவு கொண்டேன் … நின் நினைவுகள் இல்லாது போனாலே மரணம் கொள்ளும் மனம் கொண்ட நான் , நீயில்லாது போனால் எப்படி உயிர் கொள்வேன் ……

வாழ்க்கையை வாழ பழகு …

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் மகனுடைய திருமண நிச்சயதாரத்திற்க்கு சென்றிருந்தேன். அங்கே மணமகன் மணப்பெண்ணின் கையில் மோதிரம் அணிவித்தும் எல்லோரும் பையனை பார்த்து “மாட்டிக்கிட்ட தம்பி ” அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சது. இனி சிரிக்க கூட மாட்ட என எல்லோரும் பேச அந்த பையன் முகம் வாட ஆரம்பித்தது . நான் அந்த பையனையும் , பெண்ணையும் கூப்பிட்டு அவங்க எல்லோரும் சொல்லுறமாதிரி திருமணம் என்பது அவ்வளவு கஷ்டமில்லை.அது வாழ்வின் அடுத்த பரிணாமம் தான் ,ஆனால்…

கல்யாணப்பரிசு

காதலித்த காதலி பரிசாககாதலித்து கல்யாணம் செய்பவனுக்கு… வாழ்க்கை பரிசாகவாஞ்சையாய் மனையாள் வாய்த்தவனுக்கு… இணையே பரிசாகநல்ல துணையாய் மனைவி பெற்றவனுக்கு… வரதட்சணை பரிசாகவாழ வக்கில்லாத மணமகனுக்கு … வாலிபம் பரிசாகவாளிப்பான வாழ்க்கை கிடைத்தவனுக்கு … வருத்தங்கள் பரிசாகவன்சொல்லும் வாழ்க்கைத்துணை வாய்தவனுக்கு … கல்யாணமே பரிசாககாலம் கடந்து காத்துயிருப்பவனுக்கும் ,முற்றி முதிர்கன்னியாய் முடி நிரைத்தவளுக்கும்,கைம்பெண்ணாய் காலத்தை தொலைத்தவளுக்கும்… ஆம் கல்யாணம் என்பதே பரிசு தான்எதிர்பார்ப்பில் ஏமாற்றம் கொள்ளும் ஏனைய மக்களுக்கு … இவன்மகேஸ்வரன் கோவிந்தன் – மகோ+91-98438-12650கோவை-35

என் காதல் கண்மணி ….

பாகம்-1 “என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் … எந்த இடம் அது எந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ….” மனசுக்குள் பாடினான் மதன் அவளை பார்த்ததும் .. ஏனோ மனுசுக்குள் பசை போட்டு ஒட்டி கொண்டது  அவள் முகம் … அன்று கல்லூரி சேர்க்கைக்கான முதல் நாள் …. கடவுளே கணநேரத்தில் களவு போன என் இதயத்தை திருடி போனவள் , என் குரூப்பாக இருக்கணும்  என மனசுக்குள் கண் …

விடைபெற்றுப்போகும் நேரம்

விடைபெற்றுப்போகும் நேரம்விம்மலாய் நீ சொன்ன வார்த்தைவிலகாமல் இன்னும் என்னுள் … விலகிப்போனது விதியின் சாபமா ? இல்லைவினை செய்யுத உறவின் பாவமா?எதுவென்று விளங்கவில்லை … விட்டுச்செல்வாய் என விளங்காமல்விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்… மீண்டும் கிடைப்பாயா ? எனைமீளாத்துயரில் இருந்து மீட்பாயா?… கடந்து போன காலம் எல்லாம்கடைசிவரை கிட்டாதோ ?… கவலையெல்லாம் தீர்த்து செல்லவாய்ப்பு தான் தராதோ ?… கண் மூடும் கடைசி காலம் வரைகலக்கம் தான் தீராதோ?… கையுக்கு கிடைத்த உன்னைகைவிட்டு போனதற்கு காலம் எல்லாம்கண்ணீர் தான் தண்டனையோ…

கல்வி என்பதே கனவாய்

கல்வி சேனல்ல பாடம் நடத்துறோங்கபாத்து படிச்சுக்கோங்க ….பள்ளிக்கூட வாத்தியாருதண்டோரா தான் போடுறாரு … கலைஞர் தாத்தா தந்த டிவி அதகஞ்சிக்கு வேணுமுன்னு வித்துட்டாரு எங்கப்பா…கஞ்சிக்கு கஷ்டப்படும் நாங்க எல்லாம்கல்வி சேனல் பார்ப்பதுவும்எப்படியோ … கடைக்கார அக்காவுக்கு கைக்குள்ள ஸ்கூலுகங்காணி வீட்டு அண்ணனுக்கு கம்ப்யூட்டர்ல ஸ்கூலுகஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு ???… பள்ளிக்கூடம் இல்லையில்லபண்ணையார் வீட்டு வேலைக்குவாரியான்னு கேக்கும் அம்மா … தம்பிக்கு பால் வாங்க காசுவேணும்,தனியா கஷ்டப்படும் எனக்குதுணையா இருக்குமுன்னுகஷ்டத்த சொல்லும் அப்பா … சோத்துக்காக ஸ்கூல் போகும்எங்களுக்கு…

அ முதல் ஃ வரை வாழ்க்கை

அன்பு அதை அனைவருக்கும் ,ஆசையாய் அளிக்க ,இன்பம் பெருகும் … ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி ,உயிர் காக்கஊர் புகழும் … எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,ஏற்றம் கொள்ள ,ஐயமின்றி அன்பு கொள் … ஒருவர் இடத்திலும் பகைமைஓங்காது , ஒட்டி வாழ்ந்து ,ஒளவியம் பேசாதிரு… ஃ ஐ போல் பிரிந்தின்றி ஒற்றுமையாய் ,ஒன்று கூடி வாழ்ந்திட ,வாழ்வு வளமாகிடும் ….   இவன் மகேஸ்வரன் கோவிந்தன் – மகோ +91-9843812650 கோவை-35

எதுவரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான் கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது …   காசு பணமுன்னு கண்டபடி திரிஞ்ச பய காத்து கிடைக்காம கட்டிலிலே கிடக்குறனே …   கண்ணு விழிக்கவில்ல கைகாலும் அசையவில்ல … கருப்பு துணிக்கொண்டு கட்டித்தான் வைக்குறாங்க …   காலன் வந்தானோ கயிறு வீசி போனானோ? கண்ட கனவெல்லாம் கண்வாத்தான் போயிடுச்சோ ?…   உடல் வாங்க யார் வருவா? உரத்த குரலொன்னு கேக்குது அங்க …  …

காணாமல் போன காதலி

கண்ணுக்குள்ள இருந்தவளைகாணாம தொலைச்சேனே!!!கைப்பிடிச்சு திருஞ்சவளகை கூப்பி தேடுறனே !நெஞ்செல்லாம் நிறைஞ்சவளவிட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !தேடி சலிச்சுப்புட்டேன்திசையேதும் தெரியலையே … நின்னா அவ நினைப்புநிக்காம சுத்துதுங்க ..நடந்தா அவ நினைப்புநிழலா என்னை தொடருதுங்க …படுத்தா அவ நினைப்புகனவா வந்து ஓடுதுங்க …கரையேதும் தெரியாமகண் கலங்கி நிக்கிறேங்க … காலம் கடத்துறேன்னுகழட்டி விட்டு போனாளோ ?காசு பணம் தேடிகடல் கடந்து போனாளோ ?கல்யாணம் கட்டிக்கிட்டுகணவனோடு போனாளோ ?எதுவும் புரியலையே !என்னாச்சு தெரியலையே… தெரிஞ்சவங்க சொல்லுங்களேதினம்தோறும் சகுறேன்னு !தின்னா இறங்கவில்லைதிரை மூடி…

குறியீட்டு காதல் …

முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் … அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(‘)மேன்மைப்பெறும் என இருந்தேன் … அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற என் நினைவு நீ போட்டசதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது … முன்னோக்கிய சாய்வு குறியாய்()உன் பால் ஆட்பட்ட மனதுபின்னோக்கிய சாய்வு குறியாய்(/) ஆனதுநீ என்னிடம் இருந்து விலகிப்போனதும் … அடிக்கோடிட்டு ( _ )நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம்பெருக்கல் குறியாய்(*) என்னை குழைத்துவாழ்வின் இன்பத்தை வகுத்தல்(/) குறியாய்வட்டி வதைத்தது ……

Contact Us

error: Content is protected !!