பிரிவு
உனக்கென நானும் எனக்கென நீயும் தவித்திருந்த காலங்கள் மாறி இருக்கலாம்…! பார்வைகள் நம்மை ரசிக்க வைத்த காலங்கள் மாறி இருக்கலாம்..! நம் தேடல்களின் காத்திருப்பு காலங்கள் குறைந்திருக்கலாம்…! ஏனோ இன்னும் நமக்குள் இருக்கும் காதல் மட்டும் குறையவில்லை..! கானல் நீரின் சாரலில் நனைந்த உணர்வு போல் பிரிவுநிலை கடந்து விட்ட பிறகும்…! -கவி நிலா