காதல் கசிந்துருக
இரக்கமற்று இராப்பொழுதுகளிலும்இம்சிக்கிறாய்…உறக்கம் கெட்டு உன் நினைவுகளோடுகெஞ்சி கேட்கிறேன் இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே… உதடு குவித்துகாற்றின் வழி கள்ளத்தனமாய் முத்தம் நூறுஅனுப்புகிறாய்…தப்பி பிழைக்க வழியேதும் இல்லாமலேஅத்தனையும் உண்டு களித்துஉனக்குள் உருக்குலைந்து கிடக்கிறேன்மொத்தமாய் நான்… பேசி தீர்க்க ஆவல் இருக்கையில்மௌனம் கொள்வான்…மௌனம் கொண்டு பிணக்கில் இருக்கையில்முத்தம் வைத்து மொத்தமாய் கொல்வான்… இருள் பூசிக்கொள்ளும் வானம்உன்னையும் என்னோடுபூசிக்கொள்ள சொல்லும் தேகம்நீள்கின்ற நேரம்வீழாத மோகம் கலையாது வேண்டும் இத்தியானம்… மெல்ல தலையசைத்துகைகளில் கரிசனம் கோர்த்துதலைகோதி நீ கேட்கையிலேஆதிமுதல் அந்தம் வரை மறைப்பதற்கு ஏதுமில்லை…