தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

0
(0)

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்: 2023

தமிழ் உயிர் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். உயிர் எழுத்துகளின் வரி வடிவங்களைச் சீராக்க வேண்டும். அப்போதுதான் அவை இனிவரும் தலைமுறையினருக்கு எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கும்.

தமிழில் மொத்தம் 12 உயிர் எழுத்துகள் உண்டு. அவையாவன:
அ,ஆ, இ,ஈ,உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றுள் “ஈ” யையும் “ஊ” வையும் “ஒள”வையும் மாற்ற வேண்டும்.
—————————————————————-
1)
“இ” னாவுக்கு நெடிலான,”ஈ”யன்னாவை

 

 

என்று மாற்றினால் இயல்பான நெடிலாக இருக்கும்.

காரணம்:

அ- ஆ , எ- ஏ, ஒ- ஓ போல “இ”யும் ஒத்த வடிவமாக இருக்க வேண்டும். மாத்திரை அளவு மட்டுமே வேறுபட வேண்டும். அவ்வாறு வந்தால் தேவையற்ற குழப்பங்கள் இரா.
————————————————————-

2)
“உ” னாவுக்கு நெடிலான “ஊ” வன்னாவை

என்று மாற்றினால் இயல்பான நெடிலாக இருக்கும். தனியாக “ள”(கொம்புக்கால்) போன்ற எழுத்துகள் தேவையில்லை.

காரணம்:

முதலெழுத்துகளான உயிரெழுத்துகள் எந்தக் கூட்டெழுத்தும் இல்லாது தனித்து இருத்தலே சிறப்பு. அதுவே உயிரின் தன்மை. உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்து போல உள்ளதால் மேலே காட்டிய நெடில் நல்லதொரு மாற்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
—————————————————————-
3)
ஒள“காரத்தை 

­

என்று மாற்றினால் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காரணம்:

உயிரெழுத்தானது இரண்டு தனித்தனி எழுத்துகளாக இருப்பதால் உச்சரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டு:

(ஒளவையார் – ஒ,ளவையார்)
என்று சிலர் வாசிக்க வாய்ப்பு உள்ளது. கொம்புக்கால்(ள)  ஆனது “ள”கரம் போலவே இருப்பதனால் குழப்பம் ஏற்படுகிறது.

ஆகையால், மேலே காட்டியது போல் ஒரே வடிவமாக மாற்றிவிட்டால் குழப்பம் இராது.
————————————————————-

ஒளகார உயிர்மெய் வரிசை:

ஒளகாரத்தை உயிர்மெய்யாய் மாற்றுவதில் சிறு குழப்பம் இருக்கிறது.

• ள்+எ= ளெ (குறில் – ஒற்றைக்கொம்பு)
• ள்+ஏ= ளே ( நெடில் – இரட்டைக்கொம்பு)
• ள்+ஐ=ளை( ஒரே நெடில் – இணைக்கொம்பு)
• ள்+ஒ= ளொ (குறில் – ஒற்றைக்கொம்பும் துணைக்காலும் இணைந்து வந்துள்ளன)
• ள்+ஓ=ளோ(நெடில் – இரட்டைக்கொம்பும் துணைக்காலும் இணைந்து வந்துள்ளன)
• ள்+ஒள= ளெள ( ஒரே நெடில்- ஆனால், ஒற்றைக் கொம்பும் கொம்புக்காலும் இணைந்து வந்துள்ளன)
————————————————————-
குழப்பம் என்னவென்றால்
ள்+ஒள= ளெள) இதை எப்படி உச்சரிப்பது?

ஐகாரம் போன்ற ஒரே நெடிலான ஒளகாரத்திற்கும் இணைக்கொம்பு வருவதே முறையாகும்.  மற்ற குறில் உயிர்மெய்களுக்குப் பயன்படுத்துவது போல ஒளகாரத்திற்கு ஒற்றைக்கொம்பைப் பயன்படுத்துவது தவறான முறை என்றே தோன்றுகிறது.

விளக்கம்:
(ள்+ஒள= ளெள) ஆனது,
(ள்+ஒள= ளைள) என்று மாற வேண்டும்.

ஒளகாரத்தின் வடிவத்தை மேலே சொன்னபடி மாற்றிவிட்டால் கொம்புக்காலான “ள”வுக்குப் பதிலாகத் துணைக்காலையே பயன்படுத்தலாம்.

எப்படி என்றால்,

என்று மாறும்.

இப்படியே மற்ற 17 மெய்களுக்கும் பயன்படுத்தலாம்.
உதாரணமாக,

என்றும்,

 

 

கௌரி என்பதை

என்றும் எழுதிவிடலாம்.

 

 

 

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!