கள்ளச்சாராயம் இழப்பு பெண்கள் வலி..!

0
(0)

கள்ளச்சாராயம் இழப்பு 

பெண்கள் வலி..!

 

 

அடேய் நான் வீடுவீடாக சென்று பாத்திரம் ,

கழுவிய பாத்திரம் இன்னும் காயவில்லையே ,

 

முந்தானை முடிச்சில் கட்டியா பத்து ரூபாயை மார்போடு அத்து போரானே ,

 

தாலாட்டி தூங்க வைக்க என் புள்ள என்ன சிறு புள்ளையா 

வளர்ந்து வயது வந்துருச்சு ,

 

இரத்தம் இன்னும் நிக்கல டா ,

 

துணி வாங்க இன்னும் நாலு வீடு ஏரனும்மே ,

 

காசு கொஞ்சம் கொடுத்து போயா 

 

உன் சோகத்துக்கு நான் படுத்து தொலைகிறேன் ,

உன் சாராய போதைக்கு நான் வத்தலு ஆகுறேன் ,

 

என் பிள்ளைக்கு காக்கஞ்சி வாங்க 

காசு கொஞ்சம் கொடுத்து போயா ,

 

நா பெத்த கடைசி பையன் பெஞ்சு குட்சி வாங்க எட்டணாவது கொடுத்து போயா ,

 

சர்க்கார் சார் நீங்க வளர்ந்து பெரியாலு ஆகி போனீங்க ,

என் பிள்ளையை வளர்க்க நாதி கெட்டு நடு வீதி வந்தேனே ,

 

என்ன செஞ்சு நான் தொலைச்ச .!

என்ன செஞ்சு நான் தொலைச்ச .!

என்ன செஞ்சுட்டு போச்சு .!

என்ன செஞ்சுட்டு போச்சு. !

 

தினமும் சாராயம் குடுட்ச்சு வந்து வைருக்கு கீழ பொத்தலா வீங்கிருச்சு ,

 

மாமன் தான்னு நான் பொறுத்து போனேன் ,!

மாமன் தான்னு நான் பொறுத்து போனேன் ,!

 

மாமா என்ன கொஞ்சம் பாருயா ,

 

உன் சோம்பல் முறிக்க சாராயக் கடைக்கு போனா ,

என் சோம்பல் முறிக்க நான் அங்கேயே கிடக்கனும் ஐயா ,

உன் சோம்பல் முறிக்க சாராயக் கடைக்கு போனா ,

என் சோம்பல் முறிக்க நான் அங்கேயே கிடக்கனும் ஐயா ,

 

போனால் போதும் பொறுத்துப்போன தெருவோரம் நாயோ உன் மேல் மூத்திரம் போகுதய்யா ,

 

நான் வழுட்சு போட்டு உன்ன நான் தூக்கி வாந்தா ,

பக்கத்து வீட்டு காரணுக 

நா நடத்த கெட்டு போனெண்ணு சொல்லி கேலி கிண்டல் செய்றாங்க ,

 

மாமா நீ குடிச்சு செத்து போன ஊரு காரணுக பேசுற பேச்சுல நானும் கூடவே வந்துறுவே ,

 

என் பிள்ளைகள் என்ன பாவம் செஞ்சு நம்ம செஞ்ச பாவதுல .

 

 

கு.கிருஷ்ணன்

பழனி

9585152416

 

 

 

 

 

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!