மாலை நேரம் என்
ஜன்னலின் ஓரம்
சாரல் மழையில்
நனைகிறேன்…!
பார்க்கும் தூரம்
நீ இருந்தாலும்
என்னை நீ
எதிர்பார்க்க வேண்டும்
என்றே மறைக்கிறேன்…!
நீயும் நானும்
சாலையோரம் சேர்ந்தே
நடக்கும் தூரம்
குறையாமல் இருக்க நினைக்கின்றேன்…!
வானில் போகும்
மேகம் ஒன்றாய்
சேர்ந்து கருமேகம்
ஆகும் நேரம்
நான் தனிமையில்
தவிக்கிறேன்…!
-கவி நிலா…!