இதயம் தொலைத்து
தொலைதூரம் பயணத்திட
ஆசை கொண்டேன் …
கரம் பற்றி காதலோடு
களித்திருந்த காலம்
எல்லாம் கனவாய் போனது …
கண் நிரம்பி வழியும்
கண்ணீரெல்லாம் காதலை
கரைத்திட முடியாமல்
கனத்த இதயத்துடன் காலத்தை
நகர்த்திடும் படி ஆனது …
இருந்தாலும் இறந்ததாலும்
உன் கரம்பற்றி இருந்து விடவே
கனவு கொண்டேன் …
நின் நினைவுகள் இல்லாது
போனாலே மரணம் கொள்ளும்
மனம் கொண்ட நான் , நீயில்லாது
போனால் எப்படி உயிர் கொள்வேன் …
நீயில்லாத நாட்கள் எல்லாம்
நிசப்தத்துடன் நீளமாய் தொடர்கிறது
நீங்கியதின் காரணம் தெரியாமலே …
உன்னோடு இல்லாது போனாலும்
உன் நினைவுகள் உள்ளம் நிறைந்து
உயிர் தாங்கி உடல் கொண்டு
வாழ்கிறது …
இறுதிவரை உன்னோடு வாழ
ஆசை கொண்டேன் , ஆசை அது
நிராசை ஆனாலும் உன் நினைவுகளுடன்
வாழும் வாழ்க்கையது உன்னை
இன்றும் என்னோடுதான் வைத்திருக்கிறது
விட்டு விலகாமல் …
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் – மகோ
+91-98438-12650
கோவை-35
2 comments