தாமதமான அறிவிப்புக்கு மன்னிக்கவும்.
நம் வலஞ்சுழி இணையதளம் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது, சொல்ல போனால் தத்தி தவழும் குழந்தையை போல தான் இப்பொழுது வலஞ்சுழியின் நிலை. முதல் போட்டி தற்பொழுது தான் நிறைவடைந்துள்ளது, புதிதாக ஒரு முயற்சி செய்கிறோம் எனில் அதில் தவறுகளும், தடுமாற்றங்களும் இருப்பது சகஜம் தான் என்பதை இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களும் அறிவார்கள் என்று நம்புகிறோம், அப்படி ஒரு தடுமாற்றம் தான் போட்டி முடிவு அறிவிப்பதில் ஏற்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களின் மனநிலை புரியாமல் இல்லை, போட்டியில் கலந்து கொண்டு முடிவிற்காக காத்திருக்கும் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எங்கள் குழுமம் நன்கு உணர்வோம். இங்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறோம், இந்த தளம் அடுத்த கட்டத்திற்கு செல்வது உங்களை போன்ற எழுத்தாளர்களால் மட்டும் தான், அதனால் அறிவிப்பு தாமதம் ஆவதால் யாரும் தளத்தை பற்றி அவநம்பிக்கை வளர்த்து கொள்ள வேண்டாம், போட்டி முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அறிவித்த பரிசு தொகையோ அதை வழங்குவதிலோ எந்த மாற்றமும் இருக்க போவதில்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறோம்.
அதனால் எழுத்தாளர்கள் அவநம்பிக்கை கொள்ளாமல் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
‘கதம்பம்’ போட்டியின் முடிவு அறிவிக்கும் தேதி – 26.6.2022
38 comments