அனைவருக்கும் வணக்கம்,
வலஞ்சுழி இணையதளம் நடத்திய ‘கதம்பம் சிறுகதை போட்டி ஏப்ரல் – 2022’ போட்டி முடிவுகள் அறிவுக்கும் நேரம் வந்து விட்டது, போட்டியில் பங்கெடுத்து விட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு முதலில் நாங்கள் கூறி கொள்வது ஒன்று தான், போட்டிக்கு வந்த அனைத்து படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தன, அதில் உங்களின் படைப்பும் ஒன்று. ஆனால் அனைவருக்கும் பரிசு கொடுக்க முடியாத நிலை என்பதால் சிரமப்பட்டு எட்டு படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒருவேளை இதில் உங்கள் சிறுகதை இடம் பெறவில்லை எனில் அதற்கு காரணம் இப்போட்டிக்கு குறைவான பரிசு அறிவித்தது மட்டும் தான், அதனால் மனம் சோர்வுறாமல் உங்களின் எழுத்து பணியை தொடர்ந்து செய்யுங்கள், வாசகர்கள் உங்களின் எழுத்தை படித்து இன்புற தொடர்ந்து பணியாற்றுங்கள்.
ஏற்கனவே கூறியதை போல் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததால், அதில் இருந்து சில படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான வேலையாகவே இருந்ததது. போட்டி விதிமுறைகள், கூறப்பட்ட வார்த்தை எண்ணிக்கை, கதை கரு, கதையின் சாராம்சத்தை வாசகர்களுக்கு எடுத்து கூறிய நேர்த்தி, எழுத்து பிழையில்லாமல் இருத்தல், சிறுகதையை படித்தவர்களின் எண்ணிக்கை, தேர்வுக்குழுவினரின் மனதை தொட்ட விதம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்த்து தான் இந்த எட்டு கதைகளையும் தேர்ந்தெடுத்துள்ளோம். கதை தேர்ந்தெடுத்தலில் எந்த இடத்திலும் பாரபட்சமோ, விருப்பு வெறுப்புகளோ இடம் பெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
முதலில் ஆறு கதைகளுக்கு மட்டும் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம், ஆனால் கதைகளை வடிகட்டுவதில் எழுந்த சிரமத்தால் மொத்தம் எட்டு பரிசுகளாக மாற்றிவிட்டோம். பரிசு தொகை சிறிதாக இருந்தாலும் வலஞ்சுழி ஆரம்பித்து நடத்தும் முதல் போட்டி என்பதை நினைவுபடுத்துகிறோம். முதல் போட்டியிலேயே இத்தனை கதைகள் பங்கேற்று வெற்றிகரமாக போட்டி முடிவுகளும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
<<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4893218576531553″
crossorigin=”anonymous”></script>
<ins class=”adsbygoogle”
style=”display:block; text-align:center;”
data-ad-layout=”in-article”
data-ad-format=”fluid”
data-ad-client=”ca-pub-4893218576531553″
data-ad-slot=”8364840442″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>>
மொத்த பரிசு தொகை இரண்டாயிரம் ரூபாய், அதில் மூன்று கதைகளுக்கு தலா ஐநூறு ரூபாயும், ஐந்து கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா நூறு ரூபாயும் பரிசாக வழங்கவிருக்கிறோம்.
ஐநூறு ரூபாய் பரிசுதொகை பெறும் கதைகள்
ராஜாதிக்கு புரியவில்லை – சுசி கிருஷ்ணமூர்த்தி
அகம் – மீ.மணிகண்டன்
கட்டணக் கழிப்பறை – செ.பாரத்ராஜ்
நூறு ரூபாய் பரிசுதொகை பெறும் கதைகள்
எப்போதும் பெண்- ராம்பிரசாத்
அடுத்த பிறவி- பால சாண்டில்யன்
பத்மா மாமி(ச்)சாரி மாமா – சீதா ராமநாதன்
இன்னைக்கி போலாம் – சந்துரு மாணிக்கவாசகம்
தேர் – அலமேலு மங்கை
பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள், ஒரு வாரத்திற்குள் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வோம்.
இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து கதைகளும் வலஞ்சுழியை அலங்கரித்து புது பொலிவூட்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, தொடர்ந்து வலஞ்சுழி நடத்தும் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று வலஞ்சுழியோடு இணைந்திருக்குமாறு கேட்டு கொள்கிறோம். நன்றி.
(வலஞ்சுழியில் தொடர்ந்து எழுத விரும்பும் எழுத்தாளர்கள் editor@valanchuli.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)
1 comment