‘வாய்வு கூடங்கள்’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி. சாந்தி சரவணன்
வாய்வு கூடங்கள்
எலிகளும் குரங்குகளும் அமேசன் காட்டிற்குச் செல்ல அவர்கள் வாழும் வயல், வீடு, காடு, நிலம் என தேசம் வீட்டு பயண ஏற்பாட்டில் இருந்தனர்.
எலி வகையினர் மூஞ்சுறு வெள்ளை எலிகள், கால்கள் நீண்ட இனம், வால் நீண்ட இனம், பெருச்சாளி என பல தரப்பட்ட எலி இனத்தினர் வரிசை வரிசையாக குதூகலத்தோடு மாநாட்டிற்கு வந்த வண்ணம் இருந்தன.
குரங்கு வகையினர் என்றால் என்ன சும்மாவா? மரத்துக்கு மரம் தாவியே அமேசான் காட்டிற்கு ஆனந்தமாய் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் மூத்த குரங்குகள்.
மனிதர்கள், மரங்களை வெட்டி கட்டிடங்களை கட்டியதால் இளங்குரங்குகள் கட்டிடங்களை தாவும் பயிற்சி ஏற்கனவே எடுத்துள்ளனர். ஆதலால் அவர்களுக்கு கட்டிடங்களை தாவி தாவி அமேசன் காட்டிற்குள் வருவது சுலபமாகவே இருந்தது.
அமேசன் காட்டில் அப்படி என்ன விசேஷம்! என நீங்கள் ஆவலாக கேட்பது கேட்கிறது.
சொல்கிறேன்.
அவர்கள் தங்களின் விடுதலையை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆம் “வாய்வு கூடங்களில்* இருந்து அவர்கள் விடுதலை அடைந்து விட்டனர்.
மாநாட்டில் கிராமத்தில் வாழ்ந்த குரங்குகளின் தலைவன் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தது . “முன்பு எல்லாம் நம் இனத்தவர் சுவைக்க தேர்ந்தெடுத்த இளநீரை தான் மக்களே அருந்துவார்கள்.” “ஆரம்பத்திலிருந்தே நம்மை பின்பற்றுவதே இவர்களது வேலையாகிப் போனது. நம்மை வைத்தே அவர்கள் கற்றுக் கொ(ல்)ள்கின்றனர்”.
ஒரு காலத்தில் வேர்க்கடலை வெல்லம் வாழைப்பழம் என ஆரோக்கியமான பொருட்களை உணவாக கொண்ட இவர்கள் இப்போது பிசா பர்கர் என மேலை நாட்டவர் உணவை உண்ணுவது மட்டுமல்லாமல் நமது வாரிசுகளுக்கும் அதையே கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.
உணவில் மட்டுமா மாற்றம் செய்தார்கள். இயற்கையை அழித்தார்கள். நம் வீடான பச்சை பசேலென்ற காட்டை அவர்கள் தலை எப்படி பரட்டையாக இருக்கிறதோ அது போல வரண்ட தேசம் ஆக்கி விட்டார்கள். மர தாவிகளாக இருந்த நாம் கட்டிட தாவிகளாகி விட்டோம். எல்லா ஊர்களிலும் விசா இல்லாமல் பயணம் செய்தோம். இன்றோ விசா இருந்தாலும் இவர்கள் இருக்கும் இடத்தில் நம்மால் வாழ முடியவில்லை.
“பலத்த கை தட்டல் …….”
எலிகளின் தலைவன் மேடையில் ஏறி, “எங்களுக்கும் சற்று அவகாசம் கொடுங்கள்” என்றது..
சரி என குரங்குகளின் தலைவன் மைக்கை எலி தலைவனிடம் கொடுத்தார்.
“எலி இனத்தவருக்கும் குரங்கு இனத்தவருக்கும் முதற்கண் என் வணக்கங்கள் என பேசத் தொடங்கியது,” எலி தலைவன்.
முன்பெல்லாம் வயல்களில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தோம். பின்னர் வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் ஓடி விளையாடி வந்தோம்.. இப்போது நமக்கும் rat பிஸ்கட் பிரசிங் பேட் என பல சாதனங்கள் நம்மை பிடிப்பதற்கு கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் இதில் எல்லாம் சிக்காமல் எளிதாக நாம் தப்பித்துக் கொள்பவர்கள் என்பதை இத்தனை காலம் நம்மோடு பழகிய இவர்களுக்கு தெரியவில்லை.”
இப்பொழுது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி .
நமக்கு மட்டுமல்ல “வாய்வு கூடங்களில்” நடக்கும் சோதனைகளில் நம்மை போல பல உயிரினங்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தி.
நம்மை வைத்து இவர்கள் பல பல ஆராய்ச்சிகள் செய்து வந்தனர். பாதிப்புகளை காலக்குறைவோடு வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள் நாம் என்பதால், “வாய்வு கூடத்தில்” பல சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
அப்படி இருந்தும் அந்த மருந்துகள் அனைவரையும் காக்கும் என சொல்ல முடியாது.
இது நமக்கு தெரிகிறது. ஏன் என்றால் நம் நெட்டை மூக்கு எலிக்கு இந்த மருந்து ஒத்துக் கொள்ள வில்லை. அவன் இறந்து விட்டான்.
மறுபடியும் மாற்றங்கள் செய்தனர் அதுவும் நீண்ட வால் எலிக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. . அவனும் பரலோகம் சென்று விட்டான்.ஆனால் அதே சோதனை எனக்கு ஒத்துக் கொண்டது.
ஆம் என்று குரங்கு இனமும் ஒத்துக் கொண்டது.
செங் குரங்கு ஒன்று எழுந்து எனக்கும் என் காதலிக்கும் என் மகனுக்கும் ஒரே சமயத்தில் அவர்கள் கண்டுபிடித்த மருந்தை செலுத்தினார்கள்.
அவளுக்கு அது ஒத்துக் கொள்ளவில்லை. மூச்சு திணறல் ஏற்பட்டு உடனே இறந்து விட்டாள். எனக்கு ஒரு வாரத்தில் பக்கவாதம் வந்துவிட்டது. என் மகனுக்கு அது ஒத்துக் கொண்டது.
“நாம் அனைவரும் தனித்தன்மை உடையவர்கள். இது நமக்கு மட்டுமே புரிகிறது.” என்றது
எப்படியோ நம் பரம்பரையில் பலரை நாம் இந்த வாய்வு கூடங்களின் குறுக்கீட்டினால் இழந்து உள்ளோம்.
இனி நாம் பயமின்றி உலா வரலாம். கால மாற்றம் நமக்கு சுதந்திரம் அளித்துள்ளது.
பெருங் கரகோஷத்தோடு. கூட்டம் முடிந்தது. விஷேஷ உணவுகள் பரிமாறபட்டன. பல குடும்பங்கள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டார்கள்.
சுண்டெலி, மாநாடு முடித்து அறுவை உணவுகள் உண்டு கலப்பாறி அது வழக்கமாக கூடியிருக்கும் நந்தன் வீட்டு வரவேற்பை லாப்டில் பதுங்கியது.
மறுநாள் காலை நந்தினி அக்கா அடுப்பங்கரையில் பால் காய்ச்சி கொண்டு இருந்தார்.
நந்தன் குளித்து நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு நந்தினி காபி என்று ஒரு அறிவிப்பு விடுத்து வாசலில் இருந்த நாளிதழை விரித்து தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு வாசிக்க துவங்கினார்.
வழக்கமாக நந்தன் செய்தியாளர் போல் வாசிப்பார். நந்தினி கேட்பார்.
அன்றைய செய்திகளில்
தன்னார்வலர்கள் 175 சிறார் ஏலியன்ஸ் தேவைப்படுகிறார்கள் புதிய கண்டுபிடிப்புக்கு. சுண்டெலி மௌனமாக கட்சேவையில் அதனுடைய குருப்புக்கு மெஸேஜ் அனுப்பியது. “ மீன்டும் நாம் தப்பித்துவிட்டோம்” என!”
நிறைவு பெற்றது.
31 comments