மயிலிறகு நோட்டு – போட்டி கதை எண் – 51

5
(4)

‘மயிலிறகு நோட்டு’ என்ற சிறுகதையை எழுதியவர் கவிதா ராம்குமார்

                                                                              மயிலிறகு நோட்டு

“சரிமா நா வர அப்புறமா தேடிபார்மா”

ராகவனின் முகம் எப்போதும் போல் மகிழ்ச்சியாக இல்லை. ஆம் வாடியிருந்தது.புத்தகபையை சைக்கிளின் பின்புறத்தில் வைத்தபடி சொன்னான்.

 

“சரிடா குட்டி அம்மா கண்டிப்பா தேடி வைக்கிறேன், சாருக்கும் போன்ல விஷயத்த சொல்றேன் ,அம்மா பீட்ரூட் அல்வாவும் காய்கறி சாதமும் வெஞ்சியிருக்கேன்.பத்திரமா போய்டு வா”என்று சொல்லிக்கொண்டே சைக்கிளின் முன்புறமாக இருந்த கூடையில் சாப்பாட்டுப்பையை வைத்தாள்

 

அம்மாவின் வார்த்தை சற்று ஆறுதலாக அவனுக்கு இருந்தது.

பாப்பா யாழ்னி கையசைத்தவாறு  அண்ணனை வழியனுப்பினால்.

 

சைக்கிள் கூட்ரோடை தாண்டி ஊருக்குள் நுழைந்தது .ஐயனார் கோயிலை தாண்டினால் சிறிது நேரத்திலே ஆங்கில எழுத்தான ‘ Y ‘ வடிவில் தார்ச்சாலை இரண்டாக பிரியும் இடதுபுறம்  ஊர் வழியாக டவுனுக்கும்,வலதுபுறம் பக்கத்தூரில் இருக்கம் பள்ளிக்கூடத்துக்குமான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெண் பிள்ளைகளை எட்டாம் வகுப்புக்கு மேல் டவுனுக்கு தான் அனுப்பவேண்டிருக்கும் என்று ஊர் தலைவரும், மக்களும்,பள்ளி ஆசிரியர்களும் அரும்பாடுபட்டு நடுநிலைப்பள்ளியாக இருந்த  பள்ளிக்கூடத்த்தை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தினர்…..ஜாதி மதம் என்று பாராமல், பணக்காரன், ஏழை என்ற பாகுப்பாடு இல்லாமல் அனைவரின் பிள்ளைகளும் அரசு பள்ளியில் தான் படிக்கின்றனர்…..

 

வேப்பமரத்தில் கூவிக்கொண்டிருந்த குயிலின் குரல் ராகவனின் மனதை மென்மையாக வருடிச்சென்றது…..

 

“டேய் ராகவா ஆச்சரியமா இருக்கு வழக்கமா நீ தான் மொத  ஆளாய் பள்ளிக்கூடத்துல இருப்ப இன்னைக்கு  என்னடா  னா கடைசி ஆளான நா போற நேரத்துல வர” என்று  கேட்டுக்கொண்டே மூச்சிரைக்க மிதிவண்டியை வேகவேகமாக மிதித்தான் கதிர்.

கதிரின் கேள்வி அவனது மனதில் இன்னும் என்ன நடக்குமோ என்ற யோசனை அவனை பாடாப்படுதியது. நெற்றியில் வடிந்த வேற்வையை இடது கைகளால் துடைத்துக்கொண்டு  ஒன்றும் இல்லை  என முனுமுனுத்தப்படி அவனது  தலையை இருபுறமாக அசைத்துக் காட்டினான் ராகவன்.

 

மலைகளும்,வயல்வெளிகளும்,

பல விதமான குறிவிகளும்,மரங்களும் ராகவனின் மனதை ஈக்கும் வகையில் பள்ளியின் பாதை அமைந்திருந்தன….அதற்க்காவே அவன் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு தினம்தோறும் செல்வான்….இதில் கதிர் கொரஞ்ச பச்சம் இரண்டு நாள் விடுப்பு எடுக்காவிட்டால் அவனது கெடிகாரம் நின்று போய்விடும் என்று சொல்வான்..

 

இருவரும் சைக்கிளில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் மட்டுமே பள்ளியை அடைய முடியும் இதில் ராகவனுக்கு ஒரு கிலோ மீட்டர் கூடுதல் தூரம் ….

 

ஊருக்கு பின்னால் ஒட்டியுள்ள பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வசிக்கும் இடமாக இருந்துவந்தது அதாவது காலனி என்று கூட சில பேர் கூறுவர். சித்திரை மாதத்தில அய்யனார் கோயில் திருவிழா கோலாகலமாக  நடத்துவர்……

 

காலம் போக போக வணிகம் நடத்த வசதியாக இருந்தபடியால் காலனி ஒட்டி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.ஊர் மக்கள் என்று சொல்லம்படும் மேல் ஜாதி சமுகத்தினர் காலனியை  கடந்து சென்ற பின்பு தான் ஊரை அடையமுடியும்….இதில் பலபேரின் மனதில் வெறுப்பை சுமந்து கொண்டு கடந்து செல்லுவர்…..சில பேர்  இந்த பக்கம் வர விரும்பாதவர் ஊருக்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த பழைய தார் சாலையை கடந்து டவுனுக்கு செல்லுவர்.

 

நெடுஞ்சாலை ஒட்டியே ராகவனின் வீடு அமைந்திருக்கும் .அப்பா தேவராஜ் நகர்ப்புற நெரிசலை பிடிக்காமல் இங்கு குடி பெயர்ந்தார் ,இந்த பகுதியை கூட்ரோட் என்று அழைப்பர்…மேல் ஜாதிசமுகத்தில் பிறந்தாலும் அவர் எப்பொழுதும் ஜாதி பார்த்து பழகமாட்டார் “பிறக்கும் போது  எல்லாருமே மனுஷன் தான்டா இதுல ஜாதி எங்கடா பிறந்திச்சுனு அடிக்கடி பேசிக்கொண்டுயிருப்பார்”. அதனாலேயே அனைத்து சமூகத்திலும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.

 

ராகவனின் வீடு கூட்ரோட்டில் இருப்பதால். அன்றாடும் ஆறு கிலோ மீட்டர் தூரம் காலனியை கடந்து ஊர் வழியாக பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் தனி சாலையை கடந்து செல்லவேண்டும்.

 

அய்யனார் கோயிலை ஒட்டி இருக்கும் மேடான செம்மண் நிறைந்த பாதையை கடந்தால் பரட்டைத் தலைப்போல் விரிந்திருக்கும் எலந்த மரத்தின் அருகே தான் கதிரின் வீடு .பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துல நல்லா சொல்லி தராங்க ..நம்ம ஊர்ல வேணாம் டீ உன்னோட பிள்ளைய படிக்கவிடமாட்டானுங்க.இங்க இருக்கிற பசங்க அவன கோவில் திருவிழா, சாவுனு மோலம் அடிக்க கூட்டிகிட்டு போய்டுவானுங்க. தகப்பன்  இல்லாத புள்ள ,நம்ம ஜாதி சனத்துல இவனாச்சும் நல்லா படிக்கட்டுமே னு  மோகனா அக்கா சொன்னதுனால கதிரை பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில்  சேர்த்தால் அவனின் தாய் நந்தினி.

ஆடுகளை மேய்ப்பது தான் அவர்களின் தொழில்…சொந்தமாக ஐம்பது ஆடுகளை வைத்திருந்தனர்.அதனாலேயே பள்ளிக்கு தாமதமாகவே செல்வான் கதிர். தன்னுடன் இருப்பவர்களை விடுகதைகள் கேட்டு அலறவிடுவான்.

இதன் காரணமாவே அவனிடத்தில் யாரும் செல்லமாட்டார்கள்…..இந்த இயல்பு தான் ராகவனை  ஈர்த்தது.அவன்கேட்கும் அனைத்து விடுகதைக்கும் பதில் வைத்திருப்பான்…..”என்னடா நம்மலையே அலறவிட்ரானே பயங்கரமான ஆளா இருப்பானோ” என்று நினைக்கும் அளவிற்க்கு அவனை அசரவைத்தான் ராகவன்.இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

 

கான்வென்ட்ல படிச்ச புள்ளைய இப்படி அரசு பள்ளிக்கூடத்துல சேர்த்து காச மிஞ்சம் பண்றீங்கலானு கேட்டவர்களின் நையாண்டி பேச்சுக்கு “பந்தயத்துல ஓடுற குதிரை மாதிரி எதுக்காக நாம ஓடிக்கிட்டே இருக்கோம்னு கூட தெரியாம நம்மள ஓட வைக்கிற   தனியார் பள்ளிக்கூடத்தை விட அரசுப்பள்ளி எவ்வளவோ மேல் இங்க என் மகன் நிம்மதியா படிக்கிறான் தமிழ்ல படிச்சாலும் அவனுக்கு அவனோட தாய்மொழி முழுசா தெரியுது இது போதாதா”…..என்ற அம்மா ரேவதியின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்தது.

 

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்….தமிழாசிரியர் கீதா அவர்களுடைய உதவியால் இப்போ ராகவன் சரளமாக தமிழை சிறப்பாகவே கையாள்கிறான்.

 

மீண்டும் கதிர்

 

“ஏன் டா சோகமா இருக்க,அம்மா யேதாச்சும் திட்டினாங்களா “.

 

” இல்ல டா நேத்து வீட்டுப்பாடம் முடித்த கணக்கு நோட்ட காணல  வீடு முழுக்க தேடிட கிடைக்கவே இல்ல மதியானம் கணக்கு வகுப்பு  இருக்கு சார் கண்டிப்பா கேட்பாரு என்ன சொல்றதுன்னே தெரியல”  என சைக்கிளின் பிடலை இன்னும் அழுத்தமாக”கர கர” வென்று சத்தம் வருமளவுக்கு மிதித்தான் ராகவன்.

 

ஒருவழியாக இருவரும் ஏரியைத்தாண்டி வீடுகள் நிறைந்த பகுதிக்கு வந்தடைந்தனர்,பள்ளியின் அருகில் தான் பளுக்கடை என்றழைக்கப்படும் பெட்டிக்கடை இருகிறது. கணக்கு வாத்தியார் இரண்டு பால் பேப்பர் அதாவது A4 ஷீட் வாங்கிவரச்சொன்னதை கதிர் நினைவுப்படுத்தினான் அதன்படி ஆளுக்கு இரண்டு பால் பேப்பர் வாங்கிக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தனர்…..

 

பள்ளிக்கு தாமதமாக வருபவர்கள் தலைமை ஆசிரியரை பார்த்துவிட்டு வகுப்புக்குள் வருவது வழக்கம்…..

 

அதன்படி இருவரும் அவர் அறைக்கு செல்லும்போது … ஆசிரியர்களுக்கான மீட்டிங்கில் அவர் பேசிக்கொண்டிருந்தார்…..

இருவரையும் வகுப்புக்கு போகும்படி கீதா டீச்சர் கையசைக்க கதிருக்கு ஒரே குஷி முகமெல்லாம் புன்னகையோடு வகுப்பறைக்குள் இருவரும் சென்றனர்..

 

“நோட் ல பாப்பா என்ன பார்த்துகிட்டு இருக்காங்க காட்டுங்க பார்க்கலாம்”என்று

அம்மா ரேவதி கேட்க

 

“மாட்டேன், காமிக்க மாட்டேன், நீங்க திட்டுவீங்க” என்றால் யாழ்னி பாப்பா.

 

“கண்டிப்பா  திட்ட மாட்டேன் காமிங்க பார்க்கலாம் “என்று ஆசையாய் அவளை அள்ளி மடிமீது வைத்து கேட்டாள் அம்மா

 

நோட்டை விரித்து அதனுள் இருந்த மயிலிறகை அம்மாவுக்கு காட்டினாள் “அழகா இருக்குல மா,மயில் கண்ண தெறந்து பாக்கிற மாதிரியே இருக்கல”என மகிழ்ச்சியாக தனது கை விரல் இடுக்கில் இருக்கமாக மயிலிறகை பிடித்துக்கொண்டு அசைத்து காட்டினாள் பாப்பா.

 

“ஆமா பாப்பா ,ரொம்ப அழகா இருக்குல ஏது இது “என்று அவளுக்கு பிடித்த பருப்பு சாதத்தை ஊட்டிக்கொண்டே கேட்டால் அம்மா ரேவதி

 

பாப்பா தொடர்ந்தால்

 

“போனவாரம் நாம முருகன் கோவிலுக்கு போனோம்ல  கூண்டுகிட்ட  அண்ணனும் நானும் விளையாடிட்டு இருந்தோம் மா அங்கதான் இது கிடைச்சுது மா” என்றவளிடம்” இதுக்காகவா அம்மா திட்ட போறேன்னு நெனச்ச சாயங்காலம்  பள்ளிக்கூடத்துல இருந்து அண்ணவருவாள அவனுக்கும் காட்டலாம் சூப்பர் பாப்பானு சொல்லுவான்”என்றபடி நோட்டை மூட அம்மா ரேவதிக்கு வந்ததே கோபம் அது வரைக்கும் பாப்பா என்று அழைத்தவள் யாழ்னி என்று பெயரிட்டு கூப்பிட்டதை கேட்டு பாப்பாவின் கண்களில் பயம் கண்ணீராக பொலபொலவென்று

கொட்டியது.

 

“அம்மா திட்ட மாட்டேன்னு சொன்னீங்க இப்ப திட்டுறீங்க” என்று உரக்கக் கத்திக் கொண்டு அழுதாள்.

 

“சரிடா சரிடா மா, அம்மா ஒன்னும் சொல்லலை” என்று  தோளில் போட்டு தட்ட தூங்கினால் குட்டி பாப்பா.

 

அம்மா ரேவதி போன் மூலம்  கணக்கு வாத்தியாரை தொடர்ப்பு கொண்டு புத்தகத்தைப் பற்றி கூறி முடிப்பதற்குள் அவர் “நீங்கள் ஏற்கனவே காலையில் புத்தகம் காணவில்லை என்ற விஷயத்தை சொல்லிவிட்டீர்களே” என்றார்

 

“சரிதான் சார் ஆனா புத்தகம் கிடைத்துவிட்டது சார். பாப்பா அவளுடைய பையில் வைத்திருந்தால், ராகவன் முடித்த வீட்டுப்பாடத்தை வாட்ஸ்அப் மூலம் தங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளேன் “என்ற செய்தியை அவருக்கு சொன்னதும் “சரிங்க மா நான் பாத்துக்கிறேன் “என்று கூறியபடி போனை துண்டித்தார்.

 

 

காலை வகுப்புகள் முடிந்து மதியம் ஆனது….

“சரிடா பாத்துக்களாம் கவலப்படாதடா நா உன்கூட இருக்கேன் ல ” என்றான் கதிர்.

 

ஒரு நிமிடம் யோசித்தபடி “ஏன்டா நீ முடிக்கலையோ” என்று அவன் முகத்தை பார்த்து கேட்டான் ராகவன்.

 

இருவரும் தன்னிலை மறந்து வெகுநேரம் சிரித்துக் கொண்டு இருந்தனர்……

 

“அங்க எண்டா இலிப்பு  வரிசையில் நில்லுங்கடா” என்ற அதட்டலான குரலுடன் அழைத்தால் சத்துணவு பாட்டி.

 

ஓ! இவனா”.,

 

“நானும் போனா போகட்டும்னு விட்டா, இதே வேலையா செஞ்சுக்கிட்டு இருக்க இன்னிக்கு உன்ன பெரிய வாத்தியார் கிட்ட சொல்றேன்னா இல்லையான்னு பாரு”  என்று உதட்டைக் கோணிக் கொண்டு சாப்பாட்டை தட்டில் போட்டால் சத்துணவு பாட்டி.

 

இருவரும் அரசமரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்….

 

இன்றும் அதே போல்,

 

கதிர் தட்டில் இருந்த சாப்பாட்டை கீழே வைத்தபடி அமர்ந்தான், “டேய் கதிர் என்னோட சாப்பாட்டு பையை பிடி இதோ வந்துருரேன்” என்று சொல்லிவிட்டு ராகவன்  பள்ளியின் வெளியே உள்ள வேப்ப மரத்தை நோக்கி வேகவேகமாக நடந்தான்.

 

 

கந்தல் துணியோடு, கலைந்த தலையும், சுருக்கம் விழுந்த முகமும், ஒரு கையை தலைக்கும் இன்னொரு கையை வயிற்றில் வைத்துக்கொண்டு யாரோ வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட கிழிந்த பாயின் மீது ஒருக்களித்து படுத்திருந்தார் அந்த மூதாட்டி.

 

” பாட்டி பாட்டி எழுந்திருங்க”  என்று உறங்கிக் கொண்டிருந்த பாட்டியை எழுப்பி தான் எடுத்து வந்த சத்துணவு உணவை அவர்களுக்கு கொடுத்து விட்டு, , ஒரே ஓட்டமாக பள்ளிக்குள் நுழைந்தான் ராகவன்.

 

“டேய் ராகவா”

 

ஏதோ ஒரு விஷயத்தை செய்யுற, அதுவும் எய கிட்ட கூட சொல்ல  மாட்டேங்கிற,

தினமும் சத்துணவு சாப்பாட்ட வாங்குற எனக்கு தாடானு கேட்டதுக்கு தர மாட்டேன்னு  கத்துற,

என்னடா உன்னோட பிரச்சனை?.,

சாப்பாடு வாங்கி என்னடா செய்ற

நீ என்னோட நண்பனா இல்லையாடா ?

எங்கிட்ட கூட சொல்ல மாட்டியா” என்று ஒரே பிடியாய் பிடித்தான் கதிர்.

 

“டேய் முதல்ல சாப்பாட்ட சாப்பிடு கண்டிப்பா நான் உனக்கு சொல்றேன் “என கூறிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தான் ராகவன்.

 

“அதான பார்த்தேன் தலைகீழா நின்னாலும் உன்கிட்ட விஷயத்தை லேசுல வாங்க முடியாது சாமி” என்று தட்டில் இருந்த சாப்பாட்டை ஒரு ஒரு வாயாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கதிர்.

 

அம்மா இன்று கொடுத்துவிட்ட உணவு டப்பாவை திறந்தான் ராகவன். .

 

“டேய்! வாசன ஆள தூக்குதடா எனக்கு கொஞ்சம் தாயேன் “என வசைபாடினான் கதிர்.

 

காய்கறி சாதம் என்றால் கதிருக்கு மிகவும் பிடிக்கும் என்று  அம்மாவிடம் என்றோ சொல்லிய நியாபகம் அதனாலோ என்னவோ , வழக்கத்துக்கு மாறாக இன்று சாப்பாடு அதிகமாகவே டப்பாவில் இருந்தது.

 

“இந்தாடா கதிர் உனக்கு

தராம நான் மட்டும் சாப்பிடுவேனு நெனச்சியா ” என்றபடி அவனது தட்டில் சாப்பாடு வைத்து கொடுத்தான் ராகவன்.

ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவினார்.

 

சாப்பாட்டு நேரம் முடிந்து, கணக்கு வாத்தியார் பாடம் எடுக்க மணி அடிக்கப்பட்டது.

 

கணக்கு வாத்தியார் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே நேற்று கொடுத்த வீட்டுப் பாடத்தை  ஒவ்வொருவரும் வரிசையாக வந்து மேஜை மீது வைக்கும்படி  சொன்னார்.

 

வாத்தியார் ஒவ்வொரு நோட்டாக எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

 

கைகளைப் பிசைந்து கொண்டு நேத்து விளையாடுவதற்கு கூட போகாமல் வீட்டு பாடத்தை முடித்த நோட்டை காணவில்லை என்று சொன்னால் சார் நம்புவாரா பொய் சொல்லுகிறேன் என்று சொல்வாரே இருந்தாலும் உண்மையை சொல்லுவது நல்லது என மனதில் நினைத்துக் கொண்டு அவர் பக்கத்தில் போய் நின்றான்.

 

வாத்தியார் அவனைப் பார்த்து “என்னடா ராகவா எனக் கேட்க?.”

“சார், நேத்து வீட்டுப் பாடம் முடித்து பையில் வைத்த நோட்டை  காலையில் பையை சரி பார்க்கும் போது காணவில்லை சார் வீடு முழுக்க தேடிப்பார்த்தேன்” என கண்களில் நீர் தழும்ப கூறினான்.

 

“டேய் ராகவா அழாதடா,காலையில உன்னோட அம்மா நோட்டு கிடைச்சிடுச்சுனு விஷயத்த சொன்னாங்க” என்று கூறிக்கொண்டிருக்கையில்  ராகவனை தலைமை ஆசிரியர் அழைத்ததாக எட்டாம் வகுப்பு சோமு அண்ணன் சொல்ல அரும்பாக மலர்ந்த மகிழ்ச்சி சட்டென்று மறைந்து போனது.ராகவன் அவர் அறைக்கு சென்றான்… அவனால் இன்று இயல்பாகவே இருக்கமுடியவில்லை .நிதானத்துடன் பொருமையாக அவரின் அறைக்குள் நுழைந்தவன் அங்கு சத்துணவு பாட்டி இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு போனான். “வாங்க நீங்க தான் ராகவனா.. ஏப்பா சத்தணவு சாப்பாட்ட சாப்பிட பிடிக்கலையோ” என்று அவர் கேட்க

 

“மன்னிச்சிடுங்க சார் வயசான பாட்டி ஒருதங்க வேப்பமரத்தடியில் இருக்காங்க, அவங்களாள நடக்க முடியாது சார்.பள்ளிக்கு வரும்போது  அவர் என்னிடம் பசிக்குது எதாச்சும் தரியானு கேட்டாங்க அதான் கொடுத்தேன் சார்.எனக்காக கொடுக்கிற உணவை நான் வீண்ணாக்கல சார்”என்றான் .இப்படி ஒரு பதிலை அவனிடத்தில் இருந்து சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அருகில் வந்தவர் அவன் தோளில் கைவைத்து வகுப்பிற்கு போகும்படி புன்னகையோடு அனுப்பினார். ராகவனின் கள்ளம் கபடமில்லா வாத்தையை கேட்ட சத்துணவு பாட்டி எதுவும் பேசாமல் அமைதியாக போய் விட்டார்.

 

வீடு திரும்பிய ராகவன் அம்மாவின் சேலை முடிவுக்குள் ஒளிந்திருந்த பாப்பாவை அன்போடு அணைத்துக்கொண்டான்.” இந்தா பாப்பா, இனிமே இந்த நோட்டு உன்கிட்டே யே இருக்கட்டும்” என்று சொன்னதும். பாப்பாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவளுக்கு என்றானது மயிலிறகு நோட்டு.

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

4 comments

  1. நேயா புதுராஜா - Reply

    குழந்தைகளின் அன்பு மட்டுமே நிறைந்த மனதை அழகாக சொல்லி இருக்கீங்க தோழர்…வாழ்த்துகள்…வளரும் போது ஏன் இதே மனது மாறிப்போகிறது…போட்டி பொறாமை என்று இந்த சமூகம் அவர்களின் அன்பு உள்ளத்தை மாற்றி விடுகிறதே என கவலையாக உள்ளது…

    • Ram - Reply

      இந்தக் கதைக்குள் பல யதார்த்த உண்மைகளை அழகாக கதை இயல்போடு கோர்த்து சொல்லி உள்ளீர்கள்.
      வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.

  2. திருமதி. சாந்தி சரவணன் - Reply

    அன்பான கதை தோழர். பிள்ளைகளை நாம் பிள்ளைகளாக பார்த்தால் அழகு
    . வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

  3. Seetha Ramanathan - Reply

    ஒரு மயிலிறகை வைத்து நல்ல ஒரு சிறுகதை. ஆனால் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், இலக்கண் பிழைகள், தாய் மொழியில் எழுதும் போது இவ்வளவு பிழைகளா?மயிலிறகு மனதை நெருடுகிறது.
    நேர்மையான விமரிசனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!