‘தொ(ல்)லைபேசி’ என்ற சிறுகதையை எழுதியவர் ரா.கல்பனாதேவி
தொ(ல்)லைபேசி
என் நெருங்கிய நண்பரின் மகன் தன் பள்ளிப் படிப்பு நிறைவடைந்து, கல்லூரி செல்ல இருந்த நிலையில் தன் மகனுக்காகவும் தனக்காகவும் புதிய செல்பேசிகளை அந்த தந்தை வாங்கி வந்தார். அந்தநாள் முதல் தொடங்கியது இவர்களது கெட்ட காலம் அதாவது நாம் என்ன செய்தாலும் எதுவாக இருந்தாலும் ஓர் அளவோடுதான் இருக்கவேண்டும். என்றுட “நம் முன்னோர்கள்”கூற கேட்டிறிக்கிறோம் இல்லையா!
அதற்க்கு சற்றும் மாறாமல் தந்தை ஒருபுறமும் மகன் ஒரு புறமும் செல்பேசியுடன் தன் நேரத்தை செலவிட்டுக்கொண்டிறுந்தனர்.. இல்லை இல்லை தங்கள் நேரத்தை தொலைத்துக்கொண்டிருந்தனர்!!! தந்தைக்கோ மகனை பார்கையில்தான் புரிகிறது தன்மேல் உள்ள தவறு என்னவென்று அதனை சரி செய்யவும் முயற்சிக்கிறார் இதற்க்காக செல்பேசியினை பயண்படுத்தும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறார் மகனிடம் பழையபடி உரையாட தொடங்குகிறார். அவனுக்காக சற்று கூடுதலாகவே நேரத்தை செலவிடுகிறார். மகனும் தன் தந்தையோடும் சுற்றத்தாரோடும் தன் நேரத்தை செலவிட துவங்குகிறான். சிறிது காலத்திற்க்குப்பிறகு செல்பேசி தேவைக்காக மட்டுமே பயன்படத் தொடங்கியது.
இந்த தந்தை தான் செய்வது தவறு என்பதனை உணர்ந்து தக்க சமயத்தில் தன் பிள்ளையையும் காப்பாற்றினார் அந்த தந்தை/ இல்லையென்றால் அந்த தொலைபேசி தொ(ல்)லைபேசியாக மாற அதிக வாய்ப்புண்டு இன்றைய சூழ்நிலையில்
எனவே எதையும் அளவோடு அறிந்துகொள்வதே சிறப்பு!!!!
கரு:அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு…….
நிறைவு பெற்றது.