‘தெய்வம் நின்று கொல்லும், அன்றே கொல்வாள் பத்தினி’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி.சீதா ராமநாதன்
தெய்வம் நின்று கொல்லும், அன்றே கொல்வாள் பத்தினி
அரவிந்த், “எனக்கு கிடைத்த தகவல் படி அடுத்த வாரம் நடக்க இருக்கற கல்லூரி மாணவர் தலைவர் எலெக்ஷன்ல உனக்கு வாக்குப் போட boys கூட்டம் தயாரா இருக்கு. ஆனா எதிர்பார்த்தபடி girls கிட்ட வரவேற்பு இல்லை , ‘என்று எலெக்க்ஷனில் வெற்றி பெற முழு முயற்சியில் களம் இறங்கி இருக்கும் நண்பன் வசீகரனிடம் சொன்னான்.
கேட்டு அதிர்ச்சி அடைந்த வசீகரன், ‘என்ன இப்படி ஒரு குண்ட தூக்கி போடற ?இன்னும் ஒரே வாரம்தான் இருக்கு.’
ஒண்ணு பண்ணு girls மத்தில popular ஆக இருக்கும் சாந்தியை பார்த்து ,நான் வெற்றி பெற நீங்க எல்லா விதத்துலயும் உதவணும்னு requestபண்ணு.
அப்போதே ஓடினான் சாந்தியை பார்க்க, ‘சாந்தி மேடம், ஒரு பெரிய உதவி உங்களிடம் இருந்து தேவை ,’என்று சொல்லி அவளிடம் வந்த விஷயத்தை சொன்னான்.
‘இவ்வளவுதானே , இது ஒரு பெரிய விஷயமே இல்லை. என்னால் முடிந்த உதவி நீங்கள் வெற்றி பெற செய்கிறேன். ஒரு நிபந்தனை, என்னை சாந்தின்னு மட்டும் கூப்பிடுங்க, மேடம் வேண்டாம்.’
Ok, Madam,இல்ல, இல்ல மன்னிச்சுடுங்க சாந்தி. அந்த நிமிடம் முதல் வசீகரனுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையை தீவிரமாக
தொடங்கினாள் சாந்தி.
பலன். மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றான் வசீகரன்.மகத்தான இந்த வெற்றியை கொண்டாட மறுநாள் சாயந்திரம் கல்லூரி கேன்டினில் ,தன் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தேநீர் விருந்து . அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறிக்க உழைத்த நண்பர்களுக்கு, வோட்டு போட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகு சாந்திக்கு திரும்ப, திரும்ப நன்றி சொன்னான்.
இந்த நன்றி நவிலல் எதில் முடியும் ?என்று வாசகர்கள் நினைக்கிறீர்களோ, அதில் தான் முடிந்தது.
வசீகரன் ,சாந்தி போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை, ஆனால் கடின உழைப்பு அவன் உடன் பிறப்பு. இரு குடும்பத்தினருக்கும் விஷயம் தெரிந்த பிறகு, படிப்பு முடித்து இருவரும் நிரந்தரமாக நல்ல வேலையில் சேர்ந்த பிறகே திருமணம் என்று ஒரு மனதாக முடிவெடுத்தனர் .
வேலையும் கிடைத்து, திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு இன்று மகள் ஆத்யாவின் முதல் பிறந்த தினம்.விழாவிற்கு வந்து இருந்த வசீகரன் மாமா கந்தசாமி. கடந்த பத்து வருடங்களாக மந்திரி பதவியின் சுகங்களை அனுபவித்து வருகிறார், இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் அவர் சார்ந்த கட்சி மாபெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று உளவுத்துறை அளித்த செய்தி அவரை மட்டும் இல்லை, முதலமைச்சர் தங்கவேலு உட்பட ,அனைத்து மந்திரிகள், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவரையும் பீதியில் உறைய வைத்தது.
பதவி போனால்அதிகாரம், சமூகத்தில் மதிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் பல வகைகளில் மக்கள் பணத்தை சுரண்ட முடியாது என்ற நினைப்பே, கந்தசாமியையும்,
தங்கவேலுவையும்,உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தது.என்ன செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்த கந்தசாமிக்கு, சட்டென்று வசீகரன் நினைவு வந்தது.
வசீகரன் மனதிலும் பல வருடங்களாக அரசியலில் அடி வைத்து பெயர், புகழ் பதவி .எல்லாவற்றிற்கும் மேல் பணம் சம்பாதிக்கும் ஆசையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தது.ஆத்யா பிறந்த நாளுக்கு வந்த மாமா கந்தசாமி, இந்த தேர்தலில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்ததால், பல வ்யூகங்கள் வகுத்து,யோசித்து ,செயல் படுத்த வசீகரானால் மட்டுமே முடியும். தற்சமயம் அவனுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் தர முதல்வர் தயார், தேர்தலில் வென்றால் மந்திரி பதவியும் கொடுக்க தயார் என்று உறுதி அளித்தார்.
குணசீலன்,
பெயருக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர். மக்கள் சேவையே ,மகேசன் சேவை என்பதில் உறுதியாக இருந்தார். அப்படிப் பட்ட நல்ல எண்ணம் கொண்ட கட்சிக்காரர்களை ,தமிழக மக்களின் முன்னேற்றத்தையே லட்சியமாக கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரவர் தொகுதியில் நியாயமாக என்ன குறைபாடு இருந்தாலும் அவற்றை செவி மடுத்து கேட்டு ஒரே மாதத்தில் அந்த தொகுதி M L A சரி செய்வார்.அப்படி செய்யத் தவறினால் அவர்கள் உடனே கட்சி, பதவி இரண்டில் இருந்தும் விலக்கப் படுவார்கள் என்று உறுதி மொழி அளித்தார்.
திருமணம் பற்றிய நினைவே அறவே மறந்து மக்கள் பணியே ,மகேசன் பணி என கருதி இவ்வளவு வருடங்கள் ,சமூக சேவையில் மட்டுமே கவனம் செலுத்தியவர், தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கும் தங்கவேலு ஊழலில் திளைத்து, தமிழகம் எல்லா விதத்திலும் பின் தங்கி இருப்பது கண்டு ,நெஞ்சு பொறுக்காமல் ஆறு மாதங்களுக்கு முன் தமிழர் முன்னேற்ற கட்சியை தொடங்கினார்.
குணசீலனை ,மறைந்த திரு. காமராஜரின் மறு பிறவியாக பார்த்தனர் மக்கள். நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகியது. குணசீலன் முதல்வரானால் தங்கள் துயர்கள் களையப்படும் என்று உறுதியாக நம்பினார்கள்.
குணசீலன் மக்களிடையே குறுகிய காலத்தில் இவ்வளவு செல்வாக்கு பெற்றது கண்டு பொறாமை என்னும் கொடிய நோயில் வீழ்ந்தார் தங்கவேலு.
இரண்டு நாட்கள் தீவிரமாக யோசித்த பிறகு, இப்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட அதிக ஊதிய உயர்வுடன் வேறு வேலை கிடைத்து இருப்பதாக சாந்தியிடம் சொல்லி விட்டு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் தங்கவேலுவின் உதவியாளராக சேர்ந்தான்.தங்கவேலுவின் எதிர்பார்ப்பிற்கு எல்லா வகையிலும் சரியானவனாக இருந்தான் வசீகரன்.சீக்கிரமே சாந்திக்கு அவன் புதிதாக ஏற்றுக் கொண்ட வேலை பற்றி தெரிந்தது.
அவளுக்கு தங்கவேலுவை பற்றியும் கந்தசாமியை பற்றியும் நல்ல அபிப்ராயம் இல்லாததால் வேலையை உதறும்படி சொன்னாள். தங்கவேலுவிற்கு உதவியாளராக சேர்ந்த குறுகிய காலத்திலேயே சுயநலம் மிக்க அரசியல்வாதிக்கே உரிய எல்லா தகுதிகளும் அவனுக்கு வந்து விட்டது. தங்கவேலுவின் வலது கையாக மாறினான்.
திடீரென்று ஒரு நாள் வீட்டு வாசலில் Audi Q5 கார் வந்து நின்றது, திடுக்கிட்ட சாந்தி “எப்படி இவ்வளவு விலைஉயர்ந்த கார் வாங்க முடிந்தது?”என்று கேட்டதற்கு “என் கடின உழைப்பிற்கு முதல்வர் அளித்த பரிசு “என்றான்.
“அடுத்த வாரம் ,இரண்டு நாட்கள் ஊட்டி போகிறேன். அங்கு ஒரு பங்களா வாங்கப் போகிறேன். பத்திரப் பதிவு முடிந்த பிறகு உன்னையும். ஆத்யாவையும்
அழைத்துப் போய் காண்பிக்கிறேன் “,என்றான். அவன் சொன்னதை கேட்ட சாந்திக்கு தூக்கி வாரிப் போட்டது. இவனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. நான் சொல்லி கேட்க மாட்டான் ,என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்.
ஊட்டியில் இருந்து திரும்பிய
அன்று இரவு வசீகரன் உறக்கம் கெட்டு, புரண்டு, புரண்டு படுப்பதையும், படுக்கை அறையை ஒட்டி இருந்த அவன் கணிணி அறைகக்கு இரண்டு, மூன்று முறை போய் வந்ததையும் கவனித்தாள் சாந்தி. ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.
காலையில் அவன் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தான். சப்தமில்லாமல் எழுந்தவள் ,அவன் கணிணி அறைக்கு சென்று தன்னிடமிருந்த மற்றொரு கை பேசியில் record வசதியை start செய்து கை பேசியை மறைவான இடத்தில் ஒளித்து வைத்தாள்.
இரவே அவளிடம், “எனக்கு முக்கிய வேலை இருக்கிறது. ஒன்பது மணிக்குள் கிளம்ப வேண்டும். நான் எவ்வளவு அயர்ந்து தூங்கினாலும் ஏழு மணிக்கு எழுப்பிவிடு. அலாரம் வைத்தால் ஆத்யா குட்டி விழித்துக் கொண்டு விடுவாள் “என்றான்.
சரியாக ஏழு மணிக்கு ,அவனை எழுப்பிய சாந்தி, அவன் டாய்லெட்டில் நுழையாமல், அவள் எண்ணியபடி கணிணி அறைக்குள் நுழைவதை பார்த்தவள் இன்று மிகப் பெரிய தவறு நடக்கப் போகிறது என்று பதறியவள், என்ன செய்வது என்று புரியாமல் சமையல் அறையினுள் நுழைந்தாள்.
படுக்கை அறையில் இருந்து குரல் கொடுத்தான் வசீகரன், சாந்தி, “எனக்கு வெள்ளை வேட்டி, கதர் சட்டை சலவையில் இருந்து வந்தது எடுத்து வை.சமையல் செய்யும் அம்மாவிடம் டிபன் சீக்கிரம் தயார் பண்ணச் சொல். நான் குளித்து விட்டு ,சீக்கிரம் ரெடி ஆகி வருகிறேன் “
அவன் குளியலறைக்கு்ள் நுழைந்ததும், அவசரமாக கணிணி அறைக்குள் சென்று ஒளித்து வைத்து இருந்த கை பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், படுக்கையின் மேல் இருந்த கைத்துப்பாக்கியை பார்த்து திடுக்கிட்டவள், அதையும் எடுத்துக் கொண்டாள்.
ஆத்யா, புரண்டு படுத்தாள். அவளை லேசாக தட்டி உறங்க வைத்து விட்டு , மற்றொரு அறைக்கு சென்று ,கதவை மூடிவிட்டு கைபேசியில் பதிவாகி இருந்ததை கேட்டாள். வசீகரன் ,யாரிடமோ சொல்லிக் கொண்டு இருந்தான், “குணசீலன், அவர் கட்சியின் முக்கிய தொண்டர்களுடன் அவர் மணிவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க சரியாக பதினோரு மணிக்கு விழா மேடைக்கு வருவார். அவர் நேரம் தவறாதவர். சரியாக பதினொன்றே கால் மணிக்கு குண்டு வெடிக்கும் படி செட் செய். மேடையில் இருக்கும் அனைவரும் அடையாளம் தெரியாமல் கருக வேண்டும்.
ஞாபகம் வைத்துக் கொள் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க நீ ஒரு கோடி ரூபா முன் பணம் வாங்கி இருக்க. காரியம் வெற்றிகரமாக முடிந்த பிறகு இன்னொரு கோடி ரூபா உன் வீடு தேடி வரும்.
குண்டை மேடையில் ஒளிக்க எதாவது உதவி தேவை என்றால் இன்ஸ்பெக்டர் .கோபிநாத் உதவி செய்வார். அவருக்கு இரண்டு கோடி பணம், பதவி உயர்வு பேரம் பேசப்பட்டு இருக்கிறது.நான் முதலமைச்சரை அவர் இல்லத்தில் சந்தித்து விட்டு மணி விழாவிற்கு பதினொன்றரை மணிக்கு ,முதல்வருடன் வருகிறேன்.
நான் நேற்று இரவு சொன்னதையே திரும்ப சொல்கிறேன். விஷயம் திட்டமிட்ட படி ஒரு தவறும் நடக்காமல் சரியாக முடிய வேண்டும் “
கேட்ட சாந்தி ஒரு முடிவுக்கு வந்தாள். ஆத்யாவை சமையல்கார அம்மாவிடம் கொடுத்து ,பால் கொடுக்க சொன்னாள்.
அவனுக்கு இருந்த பதட்டத்தில் கைத்துப்பாக்கி விஷயம் மறந்து விட்டது,
தயாராகி காரில் ஏறப்போன வசீகரனை பார்த்து “,நில்லுங்கள், முக்கியமானதை மறந்து விட்டீர்களே ?”என்றாள்.
“எதற்கு முக்கிய விஷயமாக டுத்துக் கொள்வெளியில் கிளம்பியவனை நிற்க சொல்கிறாய்?அபசகுனம் “என்று சொல்லிக் கொண்டே திரும்பிய வசீகரனின் மார்பில் சில நொடிகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தோட்டாக்கள் பாய ,குருதி பீறிட சரிந்து விழுந்தான் வசீகரன்.
கணவனை கொன்ற குற்றத்திற்காக, சாந்திக்கு தூக்கு தண்டனை கிடைக்கப் போகிறதா ?அல்லது சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக விருது கிடைக்கப் போகிறதா?
பொறுத்து இருப்போம், தெரிந்து கொள்வதற்கு.
நிறைவு பெற்றது.
32 comments