‘தந்தையே தாயுமானார்’ என்ற சிறுகதையை எழுதியவர் விஜயா சுப்ரமணியம்
தந்தையே தாயுமானார்
பிறந்த உடனேயே தாய் பெண்
குழந்தையா ? அதுவும் கருப்பாக பிறந்து
இருக்கு, அன்று வெறுக்க ஆரம்பித்த அம்மா கடைசி வரை அவளை தன் மகளாய் ஏற்றுக் கொள்ளவில்லை, கறுப்பாக பிறந்தது அவள் தப்பா?
முதல் பெண் ஜெயஶ்ரீ சிவப்பாக
சுருண்ட முடியுடன் அழகாக இருந்தாள்
இரண்டாவது பிள்ளை குழந்தை
வேண;டும் என்று தாய் வேண்டிக் கொண்டு இருந்தாள், இரண்டாவதும் பெண் அதுவும் கறுப்பாக பிறந்தவுடன் அவள் அம்மாவுக்கு ஏமாற்றம், அவள் அந்த குழந்தையை தூக்ககூட இல்லை, தந்தை தான் பார்த்துக் கொண்டார்,
லலிதா என்ற தேவியின் பெயரை வைத்தார், அவள் பிறந்த நேரம் பிஸினஸில் உயர ஆரம்பித்தார்,அதனால் லலிதா என்றால் அலாதி பிரியம் தந்தைக்கு, தாயின் அரவணைப்பு இல்லாத
லலிதாவுக்கு தந்தையின் மேல் அலாதி பாசம், தாயின் வெறுப்பு அவளை அவள் தாயிடமிருந்து விலக்கி வைத்தது,
,இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தந்தையின் வரவுக்காக காத்து
இருர்தாள், தந்தை வந்த பிறகு பள்ளியில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டு தான் தூங்குவாள். மூத்த பெண்ணை ஹாஸ்டலில் படிக்க வைத்து தாய் வேலைக்கு போக ஆரம்பித்தாள், வேலைக்கு மாத்திரமா”?பெரிய கம்பெனி, ஐந்து நஷத்திர ஓட்டல்களில் ஸேல்ஸ் மீட்டிங் இருக்கும், குடி பார்ட்டியும் இருக்கும்,
ஒரு நாள் லலிதாவின் பள்ளியில் இருந்து அவள் தாய்க்கு கால் வந்தது, அவள் மீட்டிங்கில் இருந்ததால் கால் எடுக்கவில்லை, தந்தை வாகீசனின் ஆபீஸுக்கு போன் வந்தது, பள்ளிக்கு உடனே வாருங்கள்” அவர் அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடினார், இது பதிமூணு வயதில் எல்லா பெண்களுக்கும் வரும் ப்ரச்னை தான், இவளுக்கு கூடுதலாக காய்ச்சலும் வந்து விட்டது, லலிதா பயந்து விட்டாள, தாயின் அரவணைப்பு தேவை பட்ட நேரத்தில் தாய் இல்லை,
வீட்டுக்கு கூட்டி வந்து வேலக்காரி உதவியால் செய்ய வேண்டியது எல்லாம் செய்தார் வாகீசன் ,மனைவிக்கு போன் பண்ணினார் ,அவள் எடுக்கவே இல்லை,
மீட்டிங் முடிந்து,பார்ட்டியும் முடிந்து அவள் போனை எடுத்து பார்க்கிறாள், அதில் நிறைய மிஸ்கால்கள் இருப்பதை பார்த்து பயந்து வீட்டுக்கு வருகிறாள், மணி பன்னண்டு, முன் ஹாலில் லைட் எரிகிறது, கதவை தட்டுகிறாள்,
கோபத்துடன் கதவை திறந்த வாகீசன் குடித்து விட்டு ஆடிக் கொண்டு நிற்கும் மனைவியை பார்த்து அருவருப்பால் முகம் சுளிக்கிறான், மனைவியை மேலே போகுமாறு சைகை காட்டுகிறான், சுயநினைவில்லாமல் ஆடிக் கொண்டு மேலே போகிறாள்,
இரவுபூரா ஜீரத்தில் கொதித்த லலிதா “அம்மா அம்மா என்று அரற்றுகிறாள், காலையில் குளித்து விட்டு கீழே வந்த மனைவி கணவனிடம் என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு தடவை போன் பண்ணினேள்? அப்பொழுது தான் ,கணவன் நடந்ததை சொல்கிறான், அவள் மனது ,தான் கல்லாகி விட்டதே”? இது எல்லோருக்கும் நடப்பது ,தானே ? ,அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம், ?எப்பொழுது ஒரு ,பெண்ணுக்கு தாயின் அருகாமை வேணுமோ அப்பொழுது இந்த மாதிரி விட்டேத்தியா பேசினால்? வாகீசனுக்கு கோபம் தலைக்கேறியது, “இனி லலிதாவை நான் பார்த்துக் கொள்கிறேன், ஒரு தாய் ,தன்மகளை ஆறுதல் சொல்லி அவளுடைய பயத்தை போக்கி புது வாழ்வுக்கு தயார் பண்ண வேண்டிய தாய் இந்த மாதிரி அவஷியமாக சொல்லி; விட்டு செல்வதை பாரத்து அவர்வேதனையோடு தலை குனிந்தார் அதற்குப் பிறகு லலிதா ஒரு நாளும் தாயிடம் போகவில்லை
காலங்கள் யாருக்கும் காத்துக் கொண்டு இருப்பதில்லை ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது, தாய் கூட வேலை செய்யும் ஒருவனை விரும்பி வாகீசனை விட்டு பிரிய விரும்பினாள், இருவரும் டைவோர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள், பெண்ணை தன்கூட வைத்துக் கொள்ள விரும்பினாள் தாய்,இத்தனை நாள் பிரிந்து இருந்தது போதும் ,இந்த வயதில் தாயின் அண்மை தேவை,
லலிதா தந்தையை பிரிய விரும்பவில்லை, ஆனால் தாய் விடாப்பிடியாக அவளை தன்னுடன் வைத்துக் கொண்டாள்,
வாகீசன் வேறு வீடு மாறி விட்டான், பழைய வீட்டில் தாய், புதுக்கணவன் லலிதா மூவரும் தான், இப்பொழதும் அம்மா குடியை விடவில்லை,”லலிதா இப்பொழுது 15 வயது அழகு பெண்ணாக மாறி இருந்தாள், கிரேக்க சிலை போல் நல்ல அழகு,
கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் லலிதாவின் அழகு புது கணவனின் ,கண்களில் உறுத்தியது,, சேர்ந்து சாப்பிடும் பொழுது ,கையை பிடிப்பது,,காலால் உரசுவது போன்ற கேவலச் செய்கைகள் செய்தார், தாயிடம் சொல்ல முடியாமல் ,தவித்தாள்,
இரவு தனியாக படுக்கும் பொழுது லலிதாவுக்கு யாரோ தம் அறையில் வருவது போல் தோன்றும்,,முகத்தை தடவுவது போல் தோன்றும், அலறி அடித்துக் கொண்டு எழுந்தால் யாரோ ஓடுவது போல் ,தோன்றும்,
இந்த புது தொந்தரவை எப்படி தாயிடம
சொல்வது? லலிதாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை,இதை தந்தையிடம் சொல்லி அவரை மேலும். வருத்தத்துக்கு உள்ளாக்க முடியாது,
இரவு குடித்து விட்டு வரும் தாயிடம் என்ன பாதுகாப்பு எதிர்ப்பார்க்க முடியும்? தன்னையே காப்பாற்றி கொள்ள முடியாத ஒரு தாய் தன் பெண்ணின் மானத்தை காப்பாற்ற ,முடியுமா? தாயிடம் தான் உன் கணவர் இரவில் என் ரூமுக்கு வருகிறார் என்று சொல்ல முடியுமா? சொன்னால் தான் ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் பக்குவமும் உள்ளதா? நீ பொய் சொல்கிறாய்? வேணும் என்றே அவர் மேல் பழி போடுகிறாய்? உனக்கு உங்க அப்பா தான் வேணும், இவரை தந்தையாக ஏற்றுக் கொள்ள,,உன் மனது இடம் கொடுக்கவில்லை, அதனால் தான் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறாய்? “கூடவே முதுகில் இரண்டு அடியும் கிடைக்கும்,
இரவு கதவை நன்றாக தாழ்ப்பாள் போட்டு படுத்து கொள்கிறாள், இப்படி பயந்து பயந்து தூங்காமல் எத்தனை நாள் கழிப்பது?
,ஒரு நாள் கதவை மூடாமல் தூக்கக் கலக்கத்தில் தூங்கி விட்டாள்,,இரவு அவன் ,அவள் “ரூமில் நுழைந்து அவளை பலாத்காரம் பண்ண முனைந்தான், இவள் கையில் கிடைத்த டார்ச்சை அவன் முகத்தில் தூக்கி அடித்தாள், இவள் கத்தின கத்தலில் அவன் ஓடி விட்டான் ,இது ஒன்றும் தெரியாமல் அம்மா குடி மயக்கத்தில், தூங்கி கொண்டு இருக்கிறாள்
,மறு நாள் தாய் கணவனிடம் அவன்; நெற்றியில் பட்ட காயத்தை விசாரிக்கிறாள் அவனோ கதவில் இடித்து கொண்டதாக சொல்கிறான் அவன் சொன்ன எதையும் யோஜிக்காமல் நம்பினாள் அம்மா,
ஒன்று மட்டும் புரிந்தது அந்த வீட்டில் இனி இருக்க முடியாது, எந்த நேரமும் ஆக்ரமிக்க தயாராக இருக்கும் மிருகம் அவன், இருவரும் ஆபீஸ் போன பிறகு லலிதா இபுக்ஸ்,துணிமணி, எல்லாவற்றையும் எடுத்து கொண்டு தந்தையிடம் போகிறாள் காலிங் பெல் அடிக்கிறாள், தந்தை தளர்ந்த நடையுடன் வந்து கதவை திறக்கிறார்,,
தூககமில்லாமல், சாப்பாடும் சரியாக சாப்பிடாமல்,, மயங்கி விழும் நிலையில் இருந்த லலிதாவை மெள்ள தாங்கி பிடித்து உள்ளே கூட்டி வந்து படுக்க; வைக்கிறார் ,ஒரு தாய்க்கு தான் தெரியும் தன் குழந்தை பசியாக இருக்கிறாள் என்று, இங்கு தந்தையே தாயுமாகிறார், ஒரு தட்டில் ரசம் சாதம் பிசைந்து ,வந்து வாயில் ஊட்டுகிறார், ,கண்களில் கண்ணீருடன் சாதத்தை வேகமாக விழுங்குகிறாள், அதிலிருந்து தந்தைக்கு தெரிகிறது அவள் எவ்வளவு பசியாக இருக்கிறாள் என்று,,பிறகு தந்தையின் மடியில் தலை வைத்து இத்தனை நாள் தூங்காத தூக்கம் தூங்குகிறாள்,,இரவில் யாரும் வந்து ஆக்ரமிப்பாளோ என்ற பயம் இல்லாமல் தூங்குகிறாள்,
காலையில் எழுந்தவுடன் லலிதா நடந்ததை எல்லாம் தந்தையிடம் கூறுகிறாள், ,அந்த அயோக்யன் தன் மகளை மானபங்கம் பண்ண பாரத்தான் என்று கேட்டவுடன் தந்தையின் இரத்தம் கொதித்தது, இனி அந்த வீட்டுக்கு போக கூடாது, என்கூட இருந்தால் போதும், மனைவியிடம் நான் பேசுகிறேன்
வாகீசன் மனைவிடம் நடந்ததை சொல்கிறான், அதை ,கேட்கும் மன நிலையில் அவள் இல்லை, அதை நம்பவும் இல்லை, லலிதா பொய் சொல்கிறாள் எனறாள், அவளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம், நல்லதாச்சு என்று தந்தையின் கூட வாழ ஆரம்பித்தாள் லலிதா,
, லலிதா நன்றாக படித்து ஒரு பாஷன் டிசைனிங் கம்பெனியில் வேலை பார்க்கிறாள், புது புது துணிகளை டிசைன் பண்ணி மற்றவரை அழகாக அலங்கரித்து வெற்றி பெற வைப்பது அவளுடைய கடமை, இந்த வேலை அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று,, அவளுக்கு என்று, ஒரு குழு இருக்கிறது, அதில் டைலர், ஒப்பனையாளர் என்று பலபேர் வேலை செய்கிறார்கள், எல்லோருக்கும் இனிமையாக பழகும் லலிதா மேல் மரியாதை உண்டு, கருப்பாக இருந்தாலும் ஒரு மாடலுக்கு வேண்டிய உடல்கட்டு லலிதாவிடம் உண்டு,டைலர் புதிய டிரஸ்களை லலிதாவிற்கு அணிந்து பார்த்து விட்டு அதில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால் செய்வார்கள்
அவர்கள் அலுவலகத்தில் இருந்து பாரிஸில் நடக்கும் உலக அழகிப் போட்டிக்கு பங்கெடுக்கும் இந்திய மாடல்களுக்கு உதவி ,செய்ய லலிதாவின் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது, எல்லோரும் சந்தோஷமாக பாரிஸ்க்கு போனார்கள்
போனதிலிருந்து நிறைய வேலை, பல மாடல்கள் பங்கெடுத்தனர், மாடல்கள் எல்லாம் தாங்கள் எஜமானர்கள் மற்றவர் எல்லாம் வேலைக்காரர்கள் என்று நடந்து கொள்வார்கள்,
இங்கும் மாடல்களுக்கு இடையில் பொறாமையும், சண்டையும்,சச்சரவும் உண்டாகும், லலிதா முடிந்த மட்டும் அதில் தலை இட மாட்டாள் இதில் ஒரு மாடல் அழகி லலிதா கவனித்துக் கொண்டு இருக்கும் மாடல் மேல் பொறாமை, அவளை எப்படியாவது போட்டியில் கலந்து கொள்ள முடியாத படி ,செய்யணும் என்று நினைத்தாள், ஒரு ஆளிடம் பணம் கொடுத்து அந்த மாடலின் கணவன் ஸீரியஸ் என்று தந்தி வந்து இருக்கு ” என்று சொன்னான், அவள யாரிடமும் சொல்லாமல் திரும்பி போய்விட்டாள்
லலிதா இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தாள், இந்தியாவில் இருந்து; ஒரு மாடலும் வரலை என்பது கம்பெனிக்கு பெரிய அவமானம்,
அந்த சமயத்தில் லலிதாவில்; உதவியாளர் “உங்களுக்கு நல்ல உடல்கட்டு இருக்கு, நீங்களே மாடல்
ஆகுங்கள், வேறு வழி இல்லாமல் மிக அழகாக ஒப்பனை செய்து ஒரு கிரேக்க சிலை நடந்து வருவது போல் நடந்து வந்தாள், அவள் ஒய்யார கொண்டையும், சிக்கென்று உடம்பை பிடித்த தேவதை போல் ஆடையும், அவளை மற்ற மாடலிருந்து வித்தியாசமாக காட்டியது,
, “இந்தியாவின் கனவுக்கன்னி” என்று; பட்டமும்,கிரீடமும் கிடைத்தது” “கறுப்பு கறுப்பு “என்று எல்லோராலும் கரிச்சுக் கொட்டிய பெண இன்று
இந்தியாவின் கனவுக் கன்னி” என்ற கிரீடம் சூட்டிக் கொண்டு நிற்கிறாள், “உலக கறுப்பு அழகி”என்ற பட்டமும் சூட்டினார்கள், “கறுப்பும் ஒரு அழகு தான் “என்று உலகமே ஒப்புக் கொண்டது,
இந்தியாவின் ஒரு மூலையில் டி,வி யில் இதை பார்த்துக் கொண்டு இருந்த தந்தை பெருமையுடன் கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்,
விஜயா சுப்ரமணியம்
“தந்தையே, தாயுமானார்”
நிறைவு பெற்றது.
10 comments