கீழே கிடந்த ஏடி.எம்.கார்டு – போட்டி கதை எண் – 46

4
(1)

‘கீழே  கிடந்த  ஏடி.எம்.கார்டு’ என்ற சிறுகதையை எழுதியவர் சி.க.வசந்தலெட்சுமி

                              கீழே  கிடந்த  ஏடி.எம்.கார்டு

ராகவனுக்கு தலைவலி அதிகமாகிக்  கொண்டிருந்தது. மணி    மாலை     ஐந்தினை நெருங்கிக் கொண்டிருந்தது.  ராகவன் அழைப்பு மணியை அழுத்த, அந்த வங்கியின் பியூன்  மணி  விரைந்து அவரது அறைக்கு வந்தான்.

” சொல்லுங்க சார்..” பவ்யமாய்
கேட்டபடி எதிரில் வந்து   நின்றான்.
” மணி ….நான் வீட்டுக்கு கிளம் பறேன்…! இந்த ரூம்ல இருக்கற
ஏசி, கேமரா, லைட் எல்லாத்தையும்
நிறுத்திடு…” , மேலாளர்  ராகவன்
சொல்ல  ,  பியூன்  மணி  தயங்கிய
படி  நின்றான்.
” சார்…! ஒரு சேதி…” , மணி இழுத்
தான்.
“என்ன  மணி …… சீக்கிரம் சொல்லு..”
“நம்ப பேங்க்   வாசல்ல  ஒரு  ஏடி.எம்  கார்டு  கீழே  கிடந்துச்சு  சார்….” மணி  சொல்ல, அந்த  வங்கியின்  மேலாளர்  ராகவன்
 உடனே  பரவசமானார். தலைவலி
கூட  அவருக்கு  பறந்து  விட்டது.
” அப்படியா…!  எங்கே  அந்த  கார்டு….? ராகவன்  கேட்க,  மணி
அந்த கார்டை  மேலாளர்   ராகவனிடம் கொடுத்தான்.
ராகவன் அந்த    ஏடிஎம்  கார்டை
ஆர்வமாய்    வாங்கிப்        பார்த்துவிட்டு   அவசரமாய்
 கணினியை    உயிர்பித்தார்.
கணினி திரையில் அந்த ஏடிஎம்
கார்டின் பதினாறு இலக்க எண்க
ளை தட்டிய , அந்த வங்கியின்
மேலாளர் ராகவனின் முகம் ஏகத்
துக்கும் பிரகாசமானது.  அந்த  ஏடி.
எம்.  கார்டுக்கு  உரியவரின், பெயர்
முகவரி,  வங்கி  இருப்புத்தொகை,
ஆகியவை  உடனடியாய்  கணினி
திரையில்  ஒளிர்ந்தன.
உடனடியாய்  அலைபேசியினை
எடுத்த  ராகவன் , தன்  நண்பன்
ரவிக்கு  அவசரமாய்  போன்  செய்
தார்.
ரவி  அவரின்  நெருங்கிய  நண்
பன்.  அவரைவிட  பத்து  வயது
குறைவாக  இருந்தாலும்,  ராகவனை  பேர்  சொல்லி  கூப்பிடும்  அளவுக்கு  நெருங்கிய
பழக்கம்.  கம்பியூட்டர்   சென்டர்
நடத்தி  வரும்  ரவி,  அந்த  கம்பியூ
ட்டரை  பயன்படுத்தியே ,  பல
திரைமறைவு  வேலைகளை  செய்
பவன்.  ஒரு  சில  சட்டத்துக்கு  புறம்
பான  வேலைகளை,   ராகவனுக்
கும்  ,  அவ்வப்போது  செய்து  கொடுப்பான்  ரவி.
” ஹலோ ரவி..!  ஒரு  கார்டு வந்தி
ருக்கு..” , ராகவன் சொல்ல, எதிர்
முனையில் இருந்த  அந்த ரவி உடனே  ஆர்வமானான்.
” எவ்வளவு தேறும்…?” ரவியின்
குரலில் ஆர்வம் தெரித்தது.
” மூணு இலட்சம்யா…!”
“மை  காட்…!  எந்த பேங்க்…?”
” நம்ம பேங்க்தான். ஆனா…வேற
பிராஞ்ச்…”
“இன்னைக்கு  நரி  முகத்துல  தான்
யா,   ரெண்டுபேரும்  முழிச்சிருக்
கோம்…!  ஆஹா…ஆஹா…!  மூணு
இலட்சம்…! ஜாக்பாட்டே  அடிச்ச  மாதிரில  எனக்கு  இருக்கு.
சரி…சரி..! கார்டுல இருக்கற அந்த
பதினாறு நம்பரை உடனேச் சொல்
லு. வேலைய சீக்கிரம் முடிப்போம்..”
 ” சரி…! என்னுடைய பங்கு  எவ்வள
வு…ரவி…?”
” வழக்கம்போல   மூணுல ஒரு பங்கு உனக்கு..”,  ரவி  சொல்ல
சொல்ல,  மேனேஜர்  ராகவன்
அதீத  உற்சாகத்தில்  மிதக்க ஆர
ம்பித்தார்.
” பிரச்சனை  எதுவும்  ஆகாதில்லே
ரவி…?”
” ஏய்யா…எப்பவும்  நாம  செய்யற
அதே  தப்புதான்  இன்னிக்கும்
பண்ணப்  போறோம். இவ்வளவு
நாளும்  எந்த  பிரச்சனையும்  வந்த
தில்லையே…! இன்னிக்கு  ஏன்…
நீ  இவ்வளவு  பயப்படறே…?”
” இல்ல  ரவி..!   பணம்  அதிகமா
இருக்கே..? அதான்  பயப்படறேன்..”
” அதெல்லாம்…கச்சிதமா  நான்
வேலையை  முடிக்கறவன். அந்த
ஏடி.எம்.  கார்டுல  இருக்கற  மூணு
இலட்சத்தையும் , பத்து நிமிசத்துல
பத்து  கணக்குக்கு  மாத்திடுவேன்.
ஒரு  பயலும்  கண்டுபிடிக்க  முடி
யாது…”, ரவி  திட்டவட்டமாய்  சொல்
லி  விட்டு  “ஹாஹா”  வென  எக்கா
ளமாய்  சிரித்தான்.
” சரி..நம்பரைச் சொல்றேன். ஒரு
பேப்பர்ல  எழுதிக்க….”, குரலைத்
தாழ்த்தி , மிக மிக ரகசியமாய்
சொன்ன ராகவன், மூக்கு கண்
ணாடியைத் தேட  , அந்த  பாழாய்  போன     மூக்கு கண்ணாடி அந்த
நேரம் பார்த்து  தான்  அவரது
 மேசையில்  இல்லை.
” இருய்யா..! கண்ணாடிய லாக்கர்
ரூம்லேயே…வச்சிட்டு வந்துட்டேன்.
இரண்டு நிமிசம் பொறு. எடுத்துட்
டு வந்திடறேன்..”, பதற்றமான ராக
வன், நாற்காலியில் இருந்து எழ
முற்பட்ட போதுதான், மணி அங்கே
யே நிற்பதைக் கண்டு   மேலும்  பதற்றமானார்.
” என்ன மணி.. ! நீ  இன்னும் போக
லையா..?”
“இல்லீங்க சார்..! அந்தக் கார்டு…”
மணி இழுத்தான்.
” ஓ…..அந்த  கார்டா…?  நான்…
அந்த கார்ட்டுக்கு உரியவர்க்குத்
தான் போன் பண்ணினேன். நாளைக்கு வந்து வாங்கிக்கறதாச்
சொல்லியிருக்காங்க.  நீ…போய்
வேலையப்  பாரு   மணி…”,
“அப்படீங்களா  சார்..!”  பியூன்  மணியின்  குரலில்  அவநம்பிக்
கை  அப்பட்டமாய்  வெளிப்பட்டதை
ராகவனும்  கவனித்தார்.
” மணி…,  நீ  போய்…எனக்கு  ஒரு
டீ  வாங்கிட்டு  வாயேன்…”
” சரிங்க  சார்…”,  மணி  சொன்னா
னே  தவிர  டீ  வாங்க  செல்லாமல்
அப்படியே  நின்றபடி  ராகவனை
வெறித்துக்  கொண்டிருந்தான்.
அவன்  அவ்வாறு  அவரை  பார்ப்
பது  ராகவனுக்கு  நெருடலாக  இருந்தது.
” சரி…சரி..! மச மசன்னு நிக்காம
நான் சொன்ன வேலைகளைப் பாரு..” , ராகவன் சொல்லிவிட்டு
லாக்கர் அறைக்குள் புகுந்து தன்
மூக்குக்  கண்ணாடியைத் தேடத்  தொடங்கினார்.   எவ்வளவு  தேடியும்  அந்த   மூக்கு கண்ணாடி  லாக்கர்  அறையில்  கிடைக்கவில்
லை.
அதற்குள் அலைபேசி அவசரமாய்
ஒலிக்க, அலைபேசி  எண்ணை   கவனித்தார். ரவிதான். அலைபேசியை  உயிர்பித்து  காதருகில்  வைத்துக்  கொண்டார்.
 “ஹலோ….ரவி…” ,  ராகவனின்
குரல்  மிக  ரகசியமாய்  வெளி  வந்
தது.
“என்னய்யா  ஆச்சு..? கார்டை தொலைச்சவன் அந்த கார்டை…
பிளாக் பண்றத்துக்குள்ள அந்த
பதினாறு நம்பரை சொல்லித்
தொலைய்யா…” ,  எதிர்முனையில் ரவி    எரிச்சலடைந்து
  கத்திக்  கொண்டிருந்தான்.
” கண்ணாடியக்  காணலையே…”
ராகவன் பரிதாபமாய்  சொன்னா
ர்.
” கைக்கை எட்டினது வாய்க்கு எட்
டாம போயிடும் போலிருக்கே…!
மூணு  இலட்சம்யா…! சீக்கிரம்
ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்அப்
லயாவது அனுப்புய்யா…”, ரவி பல்
லை கடித்தபடி   கத்த  ஆரம்பித்
தான்.
” கார்டு என் ரூம்ல இருக்கு. இரு…
ரெண்டே நிமிசத்துல சொல்றேன் “
மேலாளர் ராகவன் தன் அறைக்கு
அவசரமாய்  ஓடி வந்து அலைபேசியின்  வாட்ஸ்அப்பை திறந்தார். மேசைமீது வைத்து
விட்டுச் சென்ற ‘அந்த’ ஏடிஎம் கார்
டை   போட்டோ  எடுக்க  தேடியப் போது அந்தக்  கார்டை  இப்போது
 காணவில்லை.  அந்த  அறையே
இருட்டாக  இருந்தது.
” ஐயையோ….!   ஏடி.எம்….           கார்டைக்   காணோமே….” ராகவன்
தன்னுடைய   ஏ.டி.எம்.  கார்டையே
தொலைத்ததுப்    போல், பதறிப்
போய்  துடிக்க  ஆரம்பித்தார்.
” நாசமாப்  போச்சு…”,  ரவி போனிலேயே  காட்டு  கத்தாய்
கத்திக்   கொண்டிருந்தான்.
”  மேசைல  தானே  வச்சிட்டு  லாக்
கர்  ரூமுக்கு  போனேன்….”, ராகவன்  பரிதாபமாய்  சொன்னார்
.
” சீக்கிரம்  தேடித்தான்  தொலை
யேன்…”, ரவி  சிடுசிடுத்தான்.
ராகவனுக்கு  தலையே  கிறுகிறு
வென  சுற்றுவது  போல்  வந்தது.
“மூணு  இலட்சம்  ஆச்சே…!  அந்த
ஏடி. எம். கார்டை  யார்  எடுத்து
எங்கே  வைத்தார்கள்…?”, ராகவன்
மூளையை  கசக்கி  , கசக்கி  யோசி
த்தார்.
மணி  மீது  தான்  ராகவனுக்கு
சந்தேகம்  வந்தது. அவன்  தான்
அந்த  அறையில்  நின்றபடி  எல்
லாவற்றையும்  கவனித்துக்  கொண்டிருந்தான்.  மணியை  ராக
வனின்  கண்கள்  தேட  ஆரம்பிக்க
இப்போது  மணியும்  அங்கில்லை.
” மணி” ராகவன் அலறிய அலறலி
ல் அந்த வங்கியின்  அனைத்து ஊழியர்களும் அவரை   அவசர  மாய்  திரும்பிப்  பார்த்தனர்.
மணி பதற்றமாய் மேலாளர் ராகவன்   அறைக்கு ஓடி வந்தான்.
” கூப்பிட்டீங்களா…சார்…”
“என்னய்யா…ரூமே இருட்டா இருக்கு….?” , மணியை  எரித்து  விடுவதுப்  போல்   நோக்கினார்.
” நீங்கத் தானே சார் எல்லாத்தையு
ம்  நிறுத்தச் சொன்னீங்க…”
“சரி..சரி…! மேசை மேலே இருந்த
அந்த ஏடிஎம் கார்டு எங்கேய்யா…?”
ராகவனின் குரலில் உஷ்ணம் எகி
றிக்   கொண்டிருந்தது.
” எனக்கு தெரியாது சார்..! நான்  வேலையை   முடிச்சிட்டு  அப்பவே  வெளியே  வந்துட்டேன். வள்ளித்
தான் கடைசியா ரூமை கூட்டுச்சு..”
மணி தயக்கமாய் சொல்ல, மேலா
ளர் ராகவன் கோபத்தின் உச்சிக்கு
சென்றுக்  கொண்டிருந்தார்.
” அந்த  வள்ளி  எங்கே…?”
” தெரியலீங்க  சார்…”
” வள்ளீளீளீ…” , ராகவனின் கர்ண கடூர குரலோசைக் கேட்டு , துப்புர
வுப் பெண் வள்ளி, பதறிப் போய்
ஓடி வந்து  நின்றாள்.
” ஏம்மா…! இந்த மேசை மேலே ஒரு
ஏடிஎம் கார்டு இருந்துச்சே…! அதை
பார்த்தியா..?”
” பாக்கலீங்க சார்..” , வள்ளி கைக
ளை கட்டியப்படி பயந்துப் போய்ச்
சொன்னாள். அதற்குள் அலைபே
சி அலற, ராகவன் எரிச்சலாய் எடு
த்து நம்பரைப் பார்த்தார். ரவி
தான்.
” என்னதான்யா அங்கேப் பண்றே.
சீக்கிரம் அந்த பதினாறு நம்பரை
சொல்லேன்யா..” எதிர்முனையில்
ரவி  பல்லை  நறநறவென்று  கடித்
தப்படி  சிடுசிடுத்தான்.
” நீ…வேற ரவி. என் நிலைமைப் புரி
யாம பேசாதே. இப்ப அந்த ஏடிஎம்
கார்டையே  காணோம்யா…”
” பரதேசி…!  உன் ரூம்ல இரு
க்கற கேமராவை  சீக்கிரம் ஆன்
பண்ணிப் பாரு. கார்டு எங்கேப்
போச்சுன்னு தெரிஞ்சிடும்…”, ரவி
பரபரத்தான்.
” ஐயோ…! இந்த முட்டாள் பியூன்
பயத்தான் நான் லாக்கர் ரூம்லேர்
ந்து வரத்துக்குள்ள… எல்லாத்தை
யும் ஆஃப் பண்ணிட்டானே…”, ராக
வன் பரிதாபமாக  சொல்லியபடி
வள்ளியை கூர்ந்து  நோக்கினார்.
” வள்ளி…குப்பைய எங்கே கொட்டி
னே வள்ளி..? ப்ளீஸ் வள்ளி…! சீக்கி
ரம் சொல்லும்மா…”, ராகவன் கெஞ்
ச ,    பியூன்   மணிக்கு மேலாளர்   ராகவனை  பார்க்கவே மிகவும்  பரிதாபமாய் இருந்தது.
”  வாசல்ல இருக்கற முனிசிபாலிடி
குப்பைத் தொட்டியிலேத் தான் சார்
கொட்டினேன்…”,  வள்ளி சொல்லி
முடிக்கும்  முன்னே, ராகவன் தட தடவென்று வாசலை நோக்கி அதி
வேகமாய் ஓடினார். மூணு  இலட்சமாச்சே…!
வாசலில் அந்த முனிசிபாலிட்டி குப்
பைத் தொட்டியை நெருங்கியவர்
அப்படியே உறைந்துப் போய் நின்
றார்.
அந்தக் குப்பைத் தொட்டி திகு திகு
வென்று  அப்போது தான்   எரியத்
தொடங்கியிருந்தது.
” போச்சே…போச்சே…! மூணு இலட்சமும்  போச்சே…”, வாய்க்குள்
 புலம்பிய   ராகவன்  மிகுந்த
ஆங்காரமாய் அந்த குப்பைத் தொட்டியையே  வெறித்து  பார்த்த
படி  வெகு  நேரம்  நின்றுக்
கொண்டிருந்தார். அலைபேசி அல
றியது.   அலைபேசி  எண்ணை கவ
னித்தார்.  ரவியேதான்.
மேலாளர்   ராகவன்  அலைபேசி
யை   இந்த  முறை  உயிர்பிக்க
வில்லை.  ரவி  கண்டிப்பாக  கெட்ட
வார்த்தைகளில்  திட்டினாலும்
திட்டி விடுவான்  என்ற  பயம் தான்
அவரது  மௌனத்திற்கு  காரணம்.
…………
    மாலை ஆறு மணி. வங்கியிலிரு
ந்த அனைத்து ஊழியர்களும் ஒவ்
வொருவராய்  வெளியேறிக் கொண்டிருந்தனர்.  பியூன் மணி,
எதிரிலிருந்த   டீக்கடைக்கு   டீ குடிக்க   சென்றான். அந்த                 வங்கியின்   காசாளர்
ரமேஷ்  அந்த டீக்கடையில் டீ குடித்
துக் கொண்டிருந்தார். பியூன் மணி
யைப் பார்த்ததும் ஸ்நேகமாய்
பற்களை காட்டினார். மணியின்
அருகில்  வந்து  நின்றார் ரமேஷ்.
” என்ன மணி…! கேம் ஓவரா…?” காசாளர்    ரமேஷ்  மிக  மிக  சவகாசமாய் கேட்க  மணி பதறிப் போனான்.
” என்ன சார் சொல்றீங்க..? எனக்கு
ஒன்னும் புரியலையே…!”
” மேனேஜர் டேபிள்ல இருந்த ….அந்
த ஏடி.எம் . கார்டை …..கமுக்கமாய்
 எடுத்து , வள்ளி  கொண்டு வந்த டஸ்பின்ல… அவசரமா நீ  தூக்கி
  போட்டதை,  நான் பார்த்துட்டேன் மணி…..”  ரமேஷ்  நிதானமாய்  சொல்ல  பியூன் மணி வெளிறிப் போனான். அவனது   முகம் உடனே
குப்பென   வியர்க்க  ஆரம்பிக்க,      அவசரமாய்    தன்னுடைய
பேண்ட்   பாக்கெட்டில்  இருந்த
கைக்குட்டையை  எடுத்து  முகத்
தை  துடைத்த  பியூன்  மணி
நிதானமாய்   பேச  ஆரம்பித்தான்.
“ஆமா…சார்.  ஏடி.ஏம்  கார்டு  கீழேக்  கிடந்ததுன்னு…நம்ம  பேங்க்….
மேனேஜர் கிட்ட கொடுத்தேன். அந்த  கார்டுக்கு  உரியவங்க  யாருன்னு  கண்டுபிடிச்சி…..,
 உரியவங்க கிட்ட  கார்டை  கொடு
ப்பார்னு பார்த்தேன் .ஆனா அந்த
ஏ.டி.எம்.கார்டுல  இருந்த  மூணு
இலட்சத்தையும்   ஆட்டையப் போட… இவரும் , அந்த  பிராடு  ரவியும்  பக்காவா     பிளான்
போட்டாங்க…! பாவம் சார் அந்த
கார்டை தொலைச்சவன். முகமே
தெரியாத அவன் மேலே… எனக்கு
பரிதாபம் தான் சார் வந்துச்சு.
அந்த மூணு இலட்சத்தை …அவன்
எவ்வளவு கஸ்டப்பட்டு, சம்பாதிச்சி
ருப்பான். இந்த  கொள்ளைக்  கூட்டத்துகிட்டேயிருந்து ,  அந்த  மூணு  இலட்ச  ரூபாயையும் , எப்படியாவது  காப்பாத்தியே  ஆகனும்னு  முடிவு    செஞ்சேன்.             எனக்கு…என்ன செய்ய
றதுன்னு தெரியலே. அதான் அந்த  ஏடி.எம்.  கார்டை  வள்ளி
கொண்டு  வந்த  டஸ்பின்ல  தூக்
கிப்  போட்டுட்டேன்….”,
” ஓகே…ஓகே…! அந்த  குப்பைத்
தொட்டி  எப்படி  எரிஞ்சுது…?”
” வேற  யார் கைக்கும் அந்தக் கார்டு கிடைக்க  கூடாதுன்னுத் தான்…   நானே   குப்பைத்
தொட்டிக்கும் நெருப்பு வெச்சேன்.
அந்தக் கார்டை தொலைச்சவன்
இனி புதுக் கார்டு வாங்கிக்குவான்
அவன் பணமும் இப்ப பத்திரமா
இருக்குதுல்லே…! வேலியே  பயிற
மேயக்கூடாது சார்…”,
” எல்லா  பேங்க்  மேனேஜரும்…
நம்ம  மேனேஜர்  போல ,   கெட்டவ
ங்க  இல்லை  மணி.  ஏதோ  ஒரு
சிலர்  தான்  இப்படி   இருக்காங்க..”
ரமேஷ்  நீண்ட  பெருமூச்சினை
வெளியிட்டபடி  சொன்னார்.
” இந்த  மாதிரி  நம்பிக்கை  துரோ
கிகளெல்லாம்….என்னைக்கு
திருந்தப்  போறாங்கன்னு
தெரியலையே  சார்…”
”  தப்பு  பண்றவன்,  எப்பவும்  அதே
தப்பை  பண்ணிகிட்டே….இருக்க
முடியாது  மணி.  அவன்  செய்யற
தப்பே…அவனை  ஒருநாள்  மாட்டி
விடத்  தான்  செய்யும்…! இது  உலக  நியதி  மணி…”
“ஆமா சார்..! உப்பை  தின்றவன்
     கண்டிப்பா  தண்ணிய  குடிப்பான்…..”, பியூன் மணி  நிதானமாகவும், அழுத்தமாகவும்
சொல்லச் சொல்ல , காசாளர் ரமேஷ் அவனை பெருமிதமாய்
பார்த்துக் கொண்டிருந்தார்.
” ஏன்  சார் அப்படி  பார்க்குறீங்க.
  நான்  செஞ்சது  தப்பா  சார்…?”
பியூன்  மணி  அப்பாவியாய்  காசா
ளர்  ரமேசிடம்  கேட்க,  ரமேஷ்
மென்மையாய்  புன்னகை  பூத்தா
ர்.
”  நீ…செஞ்சது  தப்பேயில்லை.
நல்ல  காரியம்  தான்  பண்ணியி
ருக்கே…மணி…”,  காசாளர்  ரமேஷ்
மணியின்  கைகளை  பிடித்து
குலுக்க  ஆரம்பித்தான்.
நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

7 comments

  1. திருமதி. சாந்தி சரவணன் - Reply

    அருமை தோழர். மனமார்ந்த வாழ்த்துகள்

  2. ந.ஜெகதீசன். - Reply

    சுவாரஸ்யமாக செல்கிறது கதை. கார்டை மணியோ வெற்றியோ தான் எடுத்தார்கள் என்பதை முன்னமே உணர முடிந்தாலும் எப்போது எடுத்தார்கள் என்ன செய்தார்கள் போன்ற ஆவலுடன் சிறப்பாக நகர்கிறது. சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் மேடம்..

    • வசந்தலெட்சுமி - Reply

      தங்களின் விமர்சனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல..!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!